Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு - லக்கிலுக்கின் பார்வையில்!

Featured Replies

சென்னையில் கடந்த 1ஆம் திகதி வலைப்பதிவாளர் சந்திப்பு நடந்தது.... அதுகுறித்த எனது வர்ணனையை நண்பர் குருவியாரின் வேண்டுக்கோளுக்கிணங்கி இங்கே பதிகிறேன்.... அடுத்த சந்திப்பில் யாழ்களத்து நண்பர்களையும் சந்திக்க முடிந்தால் மகிழ்ச்சியடைவேன் :D

* சில நாட்கள் முன்னர் நண்பர் முத்து (தமிழினி) தொலைபேசியில் சென்னை வருவதாகவும் சில நண்பர்களை நேரில் சந்தித்துப் பேச இருப்பதாகவும் சொல்லியிருந்தார்.... அது ஒரு வலைப்பதிவர் சந்திப்பாக இருக்கும் என நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை....

* இந்த சந்திப்பு குறித்த பதிவினை அண்ணன் பாலபாரதி தகுந்த கால அவகாசம் இல்லாமல் புதன் அன்று தான் அறிவித்தார்.... பின்னூட்டம் மூலமாக நான் கண்டிப்பாக வருவதாக வாக்களித்து என் தொலைபேசி எண்ணையும் கொடுத்திருந்தேன்....

* சரியாக மாலை 6 மணிக்கு பாலபாரதி என் கைத்தொலைபேசியில் அழைத்தார்.... "எல்லாரும் வந்துட்டாங்க.... சீக்கிரம் வாங்க" என்றார்.... என் குதிரையை வேறு சர்வீசுக்கு விட்டிருந்ததால் வேக வேகமாக ராயப்பேட்டை நோக்கி ஆட்டோவில் சென்றேன்.... (மவுண்ட் ரோட்டில் இருந்து மணிக்கூண்டுக்கு போக 25 ரூபாய் அநியாயம்).... சர்வீஸ் சென்டரில் வேறு போட்டு தீட்டி அனுப்பி வைத்ததால் கொஞ்சம் டென்ஷனாகவே குதிரையை ஓட்டிக் கொண்டு நாகேஸ்வரராவ் பூங்காவுக்குச் சென்றேன்.... அறிவிக்கப்பட்ட நேரத்தை விட 10 நிமிடம் தாமதமாகவே அங்கு போய்ச் சேர முடிந்தது....

* நான் போய் சேர்ந்தபோது சுமார் 15 பேர் கூடியிருந்தனர்.... அறிமுகப் படலம் நடந்து கொண்டிருந்தது....

* அண்ணன் பாலபாரதி பார்ப்பதற்கு மீசையில்லாத விக்ரம் மாதிரி செம இளமையாக தெரிகிறார்.... முத்து (தமிழினி) ஆரம்பக் காலத்து அஜித் மாதிரி நல்ல சிகப்பாக, அழகாக கொஞ்சம் உயரமாக இருக்கிறார்.... கவுதம் மூத்தப் பத்திரிகையாளர் என்பதால் காதோர நரையோடு, மூக்குக் கண்ணாடி போட்டிருப்பார் என்று நினைத்திருந்தேன்... ஆனால் ரமணா விஜயகாந்த் மாதிரி ஸ்மார்ட்டாக இருக்கிறார்....

* வரவணையான் கறுப்பாக இருந்தாலும் செம களையாக இருக்கிறார்.... ரோசா வசந்த் எழுத்துக்கும் அவர் தோற்றத்துக்கு எந்த சம்பந்தமும் இல்லை... ஆள் செம அமைதியாக இருந்தார்.... பரஞ்சோதி நான் எதிர்பார்த்த தோற்றத்திலேயே இருந்தார்... முத்துக் குமரன் அவர் வலைப்பூவில் இருக்கும் வண்ணப் படத்தைக் காட்டிலும் நேரில் கொஞ்சம் பூசினாற்போல தெரிகிறார்... கறுப்புச் சட்டை அணிந்து வந்திருந்தார்...

* பாரதி கண்ட புதுமைப் பெண்ணைக் காண வேண்டுமா? பொன்ஸைப் பாருங்கள்.... கவிதா அணில்குட்டியுடன் வந்திருந்தாரா தெரியவில்லை... அவரை சுற்றி சுற்றி வந்துக் கொண்டிருந்த அணில்குட்டி அவருடையதா இல்லை பூங்காவில் வசிப்பதா என்று தெரியவில்லை....

* நான் சென்றபோது இருந்தவர்களை மட்டுமே வர்ணித்திருக்கிறேன்.... பிறகு ரொம்பவும் இருட்டி விட்டதால் லேட்டாக வந்தவர்களை சரியாக "கவனிக்க" முடியவில்லை....

* என்னை நேரில் பார்த்ததுமே முகத்தில் மூன்று குத்து விட வேண்டும் என திட்டமிட்டிருந்ததாக ஒரு வலைப்பதிவாளர் என்னிடம் தனியாகத் தெரிவித்தார்.... அதிர்ஷ்டவசமாக குத்து எல்லாம் விடவில்லை....

* ஒரு வலைப்பதிவாளர் இன்றிலிருந்து உனக்கு ஒரு சகோதரன் இருப்பதாக நினைத்துக்கொள் என்றார்.... சகோதரன் இல்லாமல் பிறந்த என்னை ரொம்பவும் உணர்ச்சிவசப்பட வைத்து விட்டார்....

* அய்யா சிவஞானம்ஜி பேசும்போது வலை பதியும் போது மட்டுமல்லாமல் கமெண்டுகள் போடும்போதும் கொஞ்சம் பொறுப்புணர்ச்சியோடு இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.... ஒரு கேடுகெட்ட கமெண்டைப் படித்து விட்டு ஒரு நாள் முழுக்க உறக்கம் வராமல் தவித்ததாகச் சொன்னார்....

* தோழர் சந்திப்பு உலகமயமாக்கல் மற்றும் இந்துத்துவாவை எதிர்த்து தான் எழுதுவதாக அறிமுகப்படுத்திக் கொண்டார்.... வலைப்பூக்களில் குழு மனப்பான்மை வந்துவிட்டதாகவும் அது நல்லதா என்பது ஆய்வுக்குரியது என்றும் சொன்னார்....

* பாலபாரதி பேசும்போது அனானி கமெண்டுகளைப் பற்றி ரொம்பவும் ஆவேசமாகப் பேசினார்....

* பார்வையாளராக வந்திருந்த தோழர் ஒருவர் வலைப்பதிவர் சந்திப்பினை திராவிடத் தமிழர் சந்திப்பாக நினைத்து திராவிட கருத்துக்களை சொற்பொழிவாற்ற தொடங்கிவிட்டார்.... அப்போது குறுக்கிட்ட Stimulation இது வலைப்பதிவர் சந்திப்பு என்பதை நினைவுறுத்தினார்....

* வலைப்பதிவர் சந்திப்பில் நான் வாய் திறந்தது மசால் வடை சாப்பிட மட்டுமே... எதுவும் பேசாமல் மற்றவர்கள் பேசுவதை உன்னிப்பாக கவனித்தேன்...

* படங்கள் எடுக்கும்போது மட்டும் சில வலைப்பதிவர்கள் தர்மசங்கடமாக நெளிந்தனர்.... படங்கள் வலைப்பூவில் ஏற்றப்பட மாட்டாது என உறுதியளிக்கப்பட்டது....

* வலைப்பதிவர் சந்திப்பு சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்தது....

* அதன்பின் டீ சாப்பிட ஒரு குரூப் கிளம்பியபோது அதில் நானும் ஒட்டிக்கொண்டேன்....

* சாலையில் பைக் பில்லியன்களில் பெண்கள் ஒட்டிக்கொண்டு போவதைப் பற்றி பேச்சு வந்தது.... அப்போது சென்ற ஒரு ஜோடியைப் பார்த்து திராவிடத் தமிழர்கள் வலைப்பூவின் அமைப்பாளர்களில் ஒருவரான முத்து (தமிழினி) அடித்த கமெண்டு... "எவனோ திராவிடப் பிகரைத் தள்ளிக்கிட்டு போறான்யா"

* பாலபாரதி எனக்கு நிறைய அட்வைஸ் கொடுத்தார்.... என் எழுத்துக்களின் (?) ப்ளஸ், மைனஸ்களை அக்குவேறு ஆணிவேறாகச் சொன்னார்....

* நிறைய வலைப்பூ நண்பர்கள் ஒரு சர்ச்சைக்குரிய பதிவு நான் போட்டதற்காக என்னை கடிந்துக் கொண்டார்கள்.... ஒவ்வொருவரிடமும் என் "சுயமரியாதை" புராணத்தை பாட வேண்டி இருந்தது....

* நண்பர் வரவனையான் கள்ளங் கபடமில்லாமல் பழகுகிறார்.... ஈழப் பிரச்சினை குறித்த எல்லா விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கிறார்....

* முத்துக் குமரன் கொள்கைக் குன்றாக நெருப்பு போல இருக்கிறார்.... பெரியார் குறித்து பெரும் மதிப்பு கொண்டிருக்கிறார்.... திராவிடம் குறித்து நிறையப் பேசுகிறார்....

* டீ குடிக்கும் வைபவம் முடிந்தவுடன் சிலர் தாகசாந்தி செய்துக் கொள்ள வேண்டும் என்றார்கள்.... எனக்குத் தாகம் வந்தால் ப்ரிட்ஜில் இருந்து தண்ணீர் எடுத்துக் குடிப்பேன்... சில நண்பர்கள் பொன்னிற திரவம் எதையோ உள்ளே தள்ளினார்கள்....

* என் நினைவில் இருந்ததை மட்டுமே எழுதியிருக்கிறேன்.... சந்திப்பில் கலந்துகொண்ட நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை இருக்கும்.... அனைவருமே சந்திப்பு குறித்து அவரவர் பதிவில் ஏதாவது எழுத வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்....

(http://madippakkam.blogspot.com)

ஆனாலும் உங்களுக்கு அதிகப்படியான ளொள்ளுப்பா...! போய் வந்தீங்க நட்பு பாராட்டினீங்க.... அதுக்காக அவை குடித்த பொன்னிற பாணத்தை பற்றி எல்லாமா சொல்லுறது...???

கடைசில சொல்லி இருக்கிறதால அது மட்டும்தான் ஞாபகத்தில் நிக்கப்போகுது....!

எண்டாலும் இது அனியாயம்...

தமிழ்மணம்..குருவிகள் தமிழில் வழங்கும் விஞ்ஞானச் செய்திகளுக்கு ஆரம்ப காலந்தொட்டு..தகுந்த இடம் வழங்கி வந்த வலைப்பூக்கள் பூத்துக் குலுங்கும் ஓர் நந்தவனம். அதில் சிறகடித்துப் பறந்த வலைப்பூ வண்ணாத்துப்பூச்சிகளின் ஒன்று கூடல் எப்படி அமைந்திருந்தது,,ஜாலியா...அமைந்

லக்கிலுக்கு

நடந்த சந்திப்பை மிகவும் சுவையாக நேரில் பார்ப்பது

போன்ற உணர்வு ஏற்படும் வண்ணம் அருமையாக கூறியுள்ளீர்கள். நன்றி

¬õ «Ð ´Õ þÉ¢¾¡É ºó¾¢ôÒ. ¿øÄ ÀÄ ¯È׸ÙìÌ Å¢ò¾¢ðÎûÇÐ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாற்ற மாடும் ஓடுதெண்டு...... :oops: :cry: மிகுதியை சின்னப்பு மப்பில வந்து சொல்லுவார்,, கேளுங்க.. :evil: :evil: :evil:

எல்லாற்ற மாடும் ஓடுதெண்டு...... :oops: :cry: மிகுதியை சின்னப்பு மப்பில வந்து சொல்லுவார்,, கேளுங்க.. :evil: :evil: :evil:

எல்லாரும் ஏதோ சொல்லுறாங்க எண்டிட்டு தானும் எதியோப்பியாவில இருந்து எதையோ தட்டித் தட்டி சொல்ல வெளிக்கிட்டார். :twisted: மப்பில்லாட்டி கூட்டத்துக்குப் பேச்சே வராதோ :roll:

எல்லாற்ற மாடும் ஓடுதெண்டு...... :oops: :cry: மிகுதியை சின்னப்பு மப்பில வந்து சொல்லுவார்,, கேளுங்க.. :evil: :evil: :evil:

இவங்க கொஞ்சம் சுயநலத்துக்கு வெளில..சுய தேவைகளுக்கு வெளியில...சுயவிளம்பரத்துக்கு வெளில..தமிழ்மணம்..வலைப்பூக்கள

யாராவது எங்காவது எதுக்காவது சந்திச்சா ஓடியோவில பதிஞ்சுகொண்டுவந்து குடுங்ககைய்யா குருவியிட்ட இதுதான் கதைச்சனாங்க எண்டு. முதல்ல ஏதோ தன்னப்பற்றி கதைச்சாங்க எண்டது இப்ப ஏதோ மாடு மேய்க்கிற கதை கதைக்குது. இதத்தான் மேல்மாடி தட்டீற்று எண்டுறதா. ஆனா தனக்கும் தான்சார்ந்ததற்கும் நல்லாவே விளம்பரம் குடுக்குது. வீட்டில கதைக்க யாரும் இல்லப்போல கணினில வந்து கொட்டிட்டுக் கிடக்கு :roll:

சுடரக்கா..நீங்கள் ஏன் இதுக்க வந்து சம்பந்தம் சம்பந்தமில்லாமல்...ஏதேதோ...சொல

சுடரக்கா..நீங்கள் ஏன் இதுக்க வந்து சம்பந்தம் சம்பந்தமில்லாமல்...ஏதேதோ...சொல

லக்கி இன்றைய (09-09-2006) பிபிசி தமிழோசையில் சென்னையில் நடைபெறும் வலைப்பதிவாளர் மாநாட்டில்..தமிழ் வலைப்பதிவுகள் பற்றிப் பெருமிதமாகவும்..தமிழ்மணம்..அக

20060909165652bolg-conf_203.jpg

சென்னையில் 'வலைப்பூக்கள்' குறித்த மாநாடு

வலைப்பதிவுகளை உருவாக்குபவர்கள் சென்னையில் தான் அதிகம் என கூறப்படுகிறது

இணையதளத்தில் தகவல்பரிமாற்றம் நடைபெறும் முறையின் எதிர்காலநிலையை பிரதிபலிக்கும் விதமாக, தமிழக தலைநகர் சென்னையில் இன்று சனிக்கிழமை தேசிய அளவிலான இரண்டு நாள் மாநாடு ஒன்று துவங்கியது.

அதாவது, தகவல் தொழில்நுட்பத்துறையில் மிகப்பெரிய புரட்சியாக கருதப்படும் இன்டர்நெட் எனப்படும் இணையத்தில் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் முறைகளில் பிளாக்கிங் என்கிற நடைமுறை தற்போது அதிவேகமாக பிரபலமடைந்துவருகிறது. இதை தமிழில் வலைப்பதிவுகள் என்றும் வலைப்பூக்கள் என்றும் வலைப்பின்னல்கள் என்றும் பல பெயர்களில் அழைக்கிறார்கள்.

பத்திரிகைத்துறையின் ஆரம்பகாலகட்டத்தில் கையெழுத்துப்பிரதிகள் நடத்தப்பட்டன. அதாவது தனிமனிதர் ஒருவர் தனக்கு பிடித்த விடயங்கள் பற்றிய தனது கருத்துக்களை கையால் எழுதி தனிச்சுற்றுக்கு விடுவது கையெழுத்துப்பிரதியாக விளங்கிவந்தது. ஏறக்குறைய அதேபோன்றதொரு விடயம் தான் இணையத்தில் வலைப்பதிவுகளாக உருவெடுத்திருக்கிறது.

அதாவது, இணையத்தில் உலவத்தெரிந்த யார் வேண்டுமானாலும் இந்த வலைப்பதிவுகளை உருவாக்கலாம். இதற்கு கட்டணம் எதுவும் இல்லை. இதற்கு பெரிய தொழில்நுட்ப அறிவும் தேவையில்லை. பேசுவதில், எழுதுவதில் மற்றவர்களோடு கருத்துப்பரிமாறுவதில் ஆர்வம் இருக்கும் யாரும் இந்த வலைப்பதிவுகளை உருவாக்கலாம்.

ஒருவகையில் இந்த வலைப்பதிவுகள், தனிமனிதர்களின் இணையதள தகவல் மற்றும் கருத்துப்பரிமாற்றத்திற்கான எதிர்கால தனிமனித ஊடகங்களாக உருவெடுத்து வருகின்றன.

இந்திய அளவில் இப்படிப்பட்ட வலைப்பதிவுகளை உருவாக்குபவர்கள் அதிகம்பேர் சென்னையில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இப்படியான வலைப்பதிவாளர்களின் தேசிய அளவிலான இரண்டு நாள் மாநாடு ஒன்று இன்று சனிக்கிழமை சென்னையில் துவங்கியுள்ளது.

bbc.com/tamil

---------------------

யாழிற்கு வலைப்பூக்களை அறிமுகம் செய்தவர்..யாழ் அண்ணா என்று அழைக்கப்படும் சுரதா அண்ணாவே..! வலைப்பூ என்ற பதம் திசைகளில் மாலனின் குறிப்பில் தான் முதன்முதலில் சொல்லப்பட்டது என்று நினைக்கின்றோம்.!

  • தொடங்கியவர்

வலைப்பூ என்ற பதம் திசைகளில் மாலனின் குறிப்பில் தான் முதன்முதலில் சொல்லப்பட்டது என்று நினைக்கின்றோம்.!

நானும் அப்படித்தான் கேள்விப்பட்டிருக்கிறேன்.... மாலன் ஆரம்பகாலங்களில் வலைப்பூக்களில் தீவிரமாக இருந்தவராம்.... நிறைய எழுத்தாளர்கள் வலைப்பூக்களில் அமெச்சூர் எழுத்தாளர்கள் வந்தவுடன் விலகிவிட்டார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன்....

20060909165652bolg-conf_203.jpg

சென்னையில் 'வலைப்பூக்கள்' குறித்த மாநாடு

வலைப்பதிவுகளை உருவாக்குபவர்கள் சென்னையில் தான் அதிகம் என கூறப்படுகிறது

இணையதளத்தில் தகவல்பரிமாற்றம் நடைபெறும் முறையின் எதிர்காலநிலையை பிரதிபலிக்கும் விதமாக, தமிழக தலைநகர் சென்னையில் இன்று சனிக்கிழமை தேசிய அளவிலான இரண்டு நாள் மாநாடு ஒன்று துவங்கியது.

அதாவது, தகவல் தொழில்நுட்பத்துறையில் மிகப்பெரிய புரட்சியாக கருதப்படும் இன்டர்நெட் எனப்படும் இணையத்தில் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் முறைகளில் பிளாக்கிங் என்கிற நடைமுறை தற்போது அதிவேகமாக பிரபலமடைந்துவருகிறது. இதை தமிழில் வலைப்பதிவுகள் என்றும் வலைப்பூக்கள் என்றும் வலைப்பின்னல்கள் என்றும் பல பெயர்களில் அழைக்கிறார்கள்.

பத்திரிகைத்துறையின் ஆரம்பகாலகட்டத்தில் கையெழுத்துப்பிரதிகள் நடத்தப்பட்டன. அதாவது தனிமனிதர் ஒருவர் தனக்கு பிடித்த விடயங்கள் பற்றிய தனது கருத்துக்களை கையால் எழுதி தனிச்சுற்றுக்கு விடுவது கையெழுத்துப்பிரதியாக விளங்கிவந்தது. ஏறக்குறைய அதேபோன்றதொரு விடயம் தான் இணையத்தில் வலைப்பதிவுகளாக உருவெடுத்திருக்கிறது.

அதாவது, இணையத்தில் உலவத்தெரிந்த யார் வேண்டுமானாலும் இந்த வலைப்பதிவுகளை உருவாக்கலாம். இதற்கு கட்டணம் எதுவும் இல்லை. இதற்கு பெரிய தொழில்நுட்ப அறிவும் தேவையில்லை. பேசுவதில், எழுதுவதில் மற்றவர்களோடு கருத்துப்பரிமாறுவதில் ஆர்வம் இருக்கும் யாரும் இந்த வலைப்பதிவுகளை உருவாக்கலாம்.

ஒருவகையில் இந்த வலைப்பதிவுகள், தனிமனிதர்களின் இணையதள தகவல் மற்றும் கருத்துப்பரிமாற்றத்திற்கான எதிர்கால தனிமனித ஊடகங்களாக உருவெடுத்து வருகின்றன.

இந்திய அளவில் இப்படிப்பட்ட வலைப்பதிவுகளை உருவாக்குபவர்கள் அதிகம்பேர் சென்னையில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இப்படியான வலைப்பதிவாளர்களின் தேசிய அளவிலான இரண்டு நாள் மாநாடு ஒன்று இன்று சனிக்கிழமை சென்னையில் துவங்கியுள்ளது.

bbc.com/tamil

---------------------

யாழிற்கு வலைப்பூக்களை அறிமுகம் செய்தவர்..யாழ் அண்ணா என்று அழைக்கப்படும் சுரதா அண்ணாவே..! வலைப்பூ என்ற பதம் திசைகளில் மாலனின் குறிப்பில் தான் முதன்முதலில் சொல்லப்பட்டது என்று நினைக்கின்றோம்.!

ஓய் லக்கீ படத்தில உம்மட முகத்தை கானேல்லையே :oops: :oops: ஓய் நீர் பார்க்க நம்ம மாப்பிள்ளை விஐய் போலத்தானே

:wink: :wink: :wink: :wink:

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் சின்னப்பதாஸ் எல்லாரும் முதுகை காட்டிக்கொண்டு நிற்கினம் அதுல நீர் வேற விஜய் என்டு சொல்லிக்கொண்டு

லக்கிலுக்: தற்ஸ்தமிழ் இனையத்தளம், கருத்துகளத்தை மூடக் காரணம் என்ன?

  • தொடங்கியவர்

லக்கிலுக்: தற்ஸ்தமிழ் இனையத்தளம், கருத்துகளத்தை மூடக் காரணம் என்ன?

அவர்களால் பராமரிக்க முடியவில்லை.... களத்திலும் சாதி, சமயச் சண்டைகள் அதிகமாக இருந்தது இன்னொரு காரணம்....

  • கருத்துக்கள உறவுகள்

ஆ மூடிட்டிடாங்களா

அவர்களால் பராமரிக்க முடியவில்லை.... களத்திலும் சாதி, சமயச் சண்டைகள் அதிகமாக இருந்தது இன்னொரு காரணம்....

அதற்கும் காரணம் லக்கிதான் என்று ஒரு குரூப் சொல்கிறதே. (அவருடன் சண்டையிட முடியவில்லை என்பதால்) :wink:

அதற்கும் காரணம் லக்கிதான் என்று ஒரு குரூப் சொல்கிறதே. (அவருடன் சண்டையிட முடியவில்லை என்பதால்) :wink:

நல்ல காலம் யாழ் இல ஒருவரும் நம்மட லக்கீஸ் ஓடை சண்டை இல்லை

(ஓய் சும்மா நகைச்சுவை பிறகு என்னில பாயிறேல்லை )

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

  • தொடங்கியவர்

அதற்கும் காரணம் லக்கிதான் என்று ஒரு குரூப் சொல்கிறதே. (அவருடன் சண்டையிட முடியவில்லை என்பதால்) :wink:

:D :P :D :P

தட்ஸ் தமிழில் எனக்கு தாத்தாக்கள் எல்லாம் இருந்தார்கள்.... :lol:

:D :P :D :P

தட்ஸ் தமிழில் எனக்கு தாத்தாக்கள் எல்லாம் இருந்தார்கள்.... :lol:

:lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

நல்லதொரு கண்ணோட்டத்தை வழங்கியிருக்கிறீர்கள் லக்கி!

அருமை..........

நானும் இத்தகவலை பீபீசீ தமிழில் கேட்டு விட்டு என் வலைப்பூவிலும் அதை இட்டிருந்தேன்.

http://ajeevan.blogspot.com/2006/09/blog-post.html

மகிழ்ச்சி!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் யாழ் இல ஒருவரும் நம்மட லக்கீஸ் ஓடை சண்டை இல்லை

(ஓய் சும்மா நகைச்சுவை பிறகு என்னில பாயிறேல்லை )

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

என்ன சின்னா!

புதுசாக ஏதும் சண்டை தொடங்க வேணும் என்கின்றீர்களா? லக்கி, என்ன தலைப்பில் தொடங்கலாம் என்று யோசியுங்கள்! தொடங்கின பிறகு, ஒழுங்காக வரவேணும் சரியா? :wink: :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.