Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐநாவில் இந்திய நிலைப்பாட்டின் எதிரொலி: இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஐநாவில் இந்திய நிலைப்பாட்டின் எதிரொலி: இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதி
30 மார்ச் 2014
 
இலங்கைக் கடற்படையினர் இனிப்பு - மென்பானம் வழங்கி மீனவர்களை உபசரித்தனர்:-
 
ஐநாவில் இந்திய நிலைப்பாட்டின் எதிரொலி: இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதி
 
இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
இன்றைய தினம் கச்சத்தீவிற்கு அருகாமையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் அன்பாக உபசரித்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
 
கச்சத்தீவிற்கு அருகாமையில் மீன்பிடிக்க அனுமதித்ததுடன் இலங்கைக் கடற்படையினர் இனிப்பு மற்றும் மென்பானம் வழங்கி மீனவர்களை  உபசரித்தனர் என குறிப்பிடப்படுகிறது.
 
ராமநாதபுரம், ஜெகதா பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களுடன் இலங்கைக் கடற்படையினர் பரிவுடன் நடந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இலங்கைக் கடற்படையினர் தம்மை தாக்கி வருவதாகவும், மீன்களை அபகரித்துக் கொண்டதாகவும், வள்ளங்களை சேதப்படுத்தியதாகவுமே மீனவர்கள் முறைப்பாடு செய்கின்றமை வழமையானது என்பது குறிப்பிடத்தக்கது.
 
எனினும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இந்தியா இலங்கைக்கு ஆதரவளித்துள்ள நிலையில் இலங்கைக் கடற்படையினர் இவ்வாறு இந்திய மீனவர்களை பரிவாக நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
யாழ்.குடாநாட்டில் மீன்பிடிக்க மீண்டும் பாஸ் நடைமுறை! – கரையோரக் காவலரண்களும் புனரமைப்பு. 
[Monday, 2014-03-31 09:29:24]
 
வடமராட்சியின் வடக்கு மற்றும் கிழக்கு கரையோரப் பகுதிகள் உள்ளிட்ட குடாநாட்டின் பல பகுதிகளிலும், மீன்பிடிக்கச் செல்வதற்கு மீண்டும் பாஸ் நடைமுறை அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்று மீனவ சங்கப் பிரதிநிதிகளை படைமுகாம்களிற்கு அழைத்துள்ள படை அதிகாரிகள் இவ்வறிவித்தலை விடுத்துள்ளனர். புதிய நடைமுறைகளின் பிரகாரம் தொழிலுக்கு செல்லும் படகுகள் மற்றும் மீனவர்கள் அனைவரும் புறப்படும் போதும் தொழில் முடிந்து திரும்பும் போதும் படையினரது காவலரண்களில் பதிவு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் விடிந்த பின்னரே படகுகள் கரை திரும்பமுடியுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  
இதனிடையே வடமராட்சி வடக்கின் தொண்டமனாறு முதல் கற்கோவளம் வரையில் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ள படையினர், கைவிடப்பட்ட காவலரண்கள் மற்றும் மினி முகாம்களை புனரமைக்கும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2005 ம் ஆண்டு காலப்பகுதிகளிலிருந்தது போன்ற சூழலை பேண முயற்சிகள் இடம்பெறுவதாக மீனவ சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
  • கருத்துக்கள உறவுகள்

அனேகமாக இனிச் 'சிதம்பரமும்' டிராலர் ஒன்று அல்லது இரண்டு வாங்கி விடுவார் என நம்புவோம்! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.குடாநாட்டில் மீன்பிடிக்க மீண்டும் பாஸ் நடைமுறை! – கரையோரக் காவலரண்களும் புனரமைப்பு. 

[Monday, 2014-03-31 09:29:24]
Jaffna-pass-310314-150.jpg

வடமராட்சியின் வடக்கு மற்றும் கிழக்கு கரையோரப் பகுதிகள் உள்ளிட்ட குடாநாட்டின் பல பகுதிகளிலும், மீன்பிடிக்கச் செல்வதற்கு மீண்டும் பாஸ் நடைமுறை அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்று மீனவ சங்கப் பிரதிநிதிகளை படைமுகாம்களிற்கு அழைத்துள்ள படை அதிகாரிகள் இவ்வறிவித்தலை விடுத்துள்ளனர். புதிய நடைமுறைகளின் பிரகாரம் தொழிலுக்கு செல்லும் படகுகள் மற்றும் மீனவர்கள் அனைவரும் புறப்படும் போதும் தொழில் முடிந்து திரும்பும் போதும் படையினரது காவலரண்களில் பதிவு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் விடிந்த பின்னரே படகுகள் கரை திரும்பமுடியுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே வடமராட்சி வடக்கின் தொண்டமனாறு முதல் கற்கோவளம் வரையில் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ள படையினர், கைவிடப்பட்ட காவலரண்கள் மற்றும் மினி முகாம்களை புனரமைக்கும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2005 ம் ஆண்டு காலப்பகுதிகளிலிருந்தது போன்ற சூழலை பேண முயற்சிகள் இடம்பெறுவதாக மீனவ சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.seithy.com/breifNews.php?newsID=106813&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இது இன்னொரு  ஆபத்தான நாடகம்

தமிழர்களை

தமிழர்களுக்கெதிராக திருப்பும் நரித்தனம்

இதற்கு இந்திய

சிறீலங்கா அரசுகள் தயாராகிறார்கள்

பெரும் அழிவை

சிறு சலுகை மூலம் மறைத்துவிடலாம்  என  எலும்புத்துண்டுகளை  வீசுகின்றார்கள்

வரலாறு இதனையும் கடந்து எழுதப்படும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.