Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிட்சர்லாந்தில் இளம் தலைமுறையின் தமிழர்கள் கட்டாய இரட்டை வாழ்க்கை! -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சுவிட்சர்லாந்தில் இளம் தலைமுறையின் தமிழர்கள் கட்டாய இரட்டை வாழ்க்கை! - விபரணப் படம் (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 29 மார்ச் 2014, 11:01.53 மு.ப GMT ]
சுவிட்சர்லாந்தில் வாழும் இரண்டாம் தலைமுறை தமிழர்கள் இரட்டை வாழ்க்கை வாழ வேண்டிய நிர்பந்தத்திற்குள் இருப்பதாக சுவிட்சர்லாந்தில் இருந்து ஒளிப்பரப்பாகும் எஸ்ஆர்எவ்  தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ஒரு மணிநேர விபரணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 30 வருடங்களாக சுவிட்சர்லாந்தில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் இரண்டாம் தலைமுறையினர் இங்கு பிறந்தவர்கள், அல்லது இலங்கையில் பிறந்து சிறுவயதில் இங்கு வந்தவர்கள். இவர்கள் தாங்கள் வாழும் சுவிஸ் நாட்டின் கலாசாரத்திற்குள்ளும், தங்களின் பெற்றோரின் கலாசாரத்திற்குள்ளும் வாழ நிர்பந்திக்கப்படுகிறார்கள் என அந்த விபரணப்படத்தில் தெரிவிக்கப்படுகிறது.
 
பெற்றோர் தங்கள் விருப்பத்தை புரிந்து கொள்வதில்லை என்றும் தங்கள் பாரம்பரிய கலாசாரத்தை பேணுமாறும் திருமண விடயத்தில் தங்கள் விரும்பங்களை விட பெற்றோரின் விருப்பம் சில வேளையில் முக்கியத்துவம் பெற்று விடுவதாகவும் அவர்கள் இரண்டாம் தலைமுறை தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.
 
வீட்டிற்குள் தமிழ் மொழியை தமிழ் கலாசாரத்தை பேண வேண்டிய நிலை, வீட்டை விட்டு வெளியில் வந்தால் வேறு ஒரு மொழி, வேறு ஒரு கலாசாரம், இந்த இரட்டை வாழ்க்கை பற்றி விபரிக்கிறது இந்த விபரணப்படம்.இந்த ஆவணப்படம், தமிழர்களின் பெற்றோர்களுடைய கலாச்சார பராம்பரிய கட்டுப்பாடு மற்றும் கட்டுக்கோப்புகளைக் காணும் தமிழ் பிள்ளைகள், வாலிப வயதினர் சுவிட்சர்லாந்தின் மேற்கத்திய முற்றிலும் சுதந்திரமான கலாச்சாரத்தைக் கண்டு வியந்து அதன்மேல் ஆவல் கொண்டுள்ளனர் என்று 22 வயதுடைய சட்டக்கல்லூரி மாணவி லாவண்யா சின்னத்துரை அவர்கள் கூறியுள்ளார்,
 
சுவிட்சர்லாந்தில் உள்ள புதிய தலைமுறை இளைஞர்கள் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை எதிர்க்கின்றனர், ஜாதி, மதம், மொழி தொடர்பில் திருமணத்தை வெறுக்கின்றனர். இதனால் இளைய சமுதாய புதிய தலைமுறையினர் பெற்றோர்களை திருப்திபடுத்த கட்டுப்பாடான வாழ்க்கையையும், தங்களை தாங்களே திருப்திப்படுத்திக்கொள்ள சுவிட்சர்லாந்தின் சுதந்திரமான மேற்கத்திய ஜரோப்பிய கலாச்சாரத்தை மேற்கொள்கின்றனர் என்பதை இந்த ஆவணப்படம் எடுத்துரைக்கின்றது.
swiss_girl_002.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது தலைமுறை தமிழர்களின் இரட்டை வாழ்க்கை, சுவிசில் மட்டுமல்ல... புலம்பெயர் நாடுகள் பல‌வற்றிலும் இதே நிலைமை தான். இதனைப் பற்றி... யாழில் ஒரு ஆரோக்கியமான விவாதம் இடம் பெற்றால்... பல‌ருக்கும் பிரயோசனமாக இருக்கும்.

புலம் பெயர்ந்த நாடுகளில் முதலாம் தலைமுறையினராகிய எம்மிடையே காலம் காலமாக ஊறிபோயிருக்கும் ஒரு சில பிற்போக்கு தனமான  ஒரு சில பழக்கவழக்கங்களையாவது கைவிட்டு விட்டு புதிய தலைமுறையை எமது கலாச்சாரத்திற்குள் வாழ வற்புறுத்தினால் அதில் ஒரளவாவது நியாயம் இருக்கும். ஆனால் எமது மனச்சாட்சிக்கு தவறானது என வெளிப்படையான தெரியும் பலவேறு  பிற்போக்குதனங்களில் எதையும்  கைவிட மனமில்லாமல் மேற்குலகில் பிறந்து வளர்ந்த தலைமுறையைக்கு கலாச்சார போதனை செய்யவதில் எந்த நியாயமும் இல்லை என்பது எனது கருத்து. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாக் காலத்திலும் எல்லா இடமும் இதுதான்.

 

முன்னர் ஊரில கலியாணம் கட்டிட்டு.. வேலைக்குப் போற இடத்தில இன்னொரு குடும்பம் நடத்தல்லையா.. எம்மவர்கள்.

 

ஏதோ.. புதிசா நடக்கிறது மாதிரி.. மேற்குலகில்.. ஒன்றும் விசித்திரமா நடக்கல்ல. எல்லாம் எங்கும் உள்ளது. மேற்குலகிலும் கட்டுப்பாடான குடும்பங்கள்.. மனிதர்கள் உள்ளார்கள். எம்மூரிலும் கட்டுப்பாடற்ற மனிதர்கள்.. குடும்பங்கள் உள்ளன. எல்லோரும் மனிதர்கள்.. என்ற அடிப்படையில்.. இவற்றை அணுக வேண்டுமே தவிர.. இது ஒன்றும் புதிதல்ல. :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.