Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தான் இன்னும் பலமாகத் தான் இருக்கிறேன் என்கிறார் பிரதி அமைச்சர் கருணா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தான் இன்னும் பலமாகத் தான் இருக்கிறேன் என்கிறார் பிரதி அமைச்சர் கருணா! 

[Tuesday, 2014-04-01 08:06:14]
karuna-010414-150.jpg

சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்களையே முதன்முதலில் விசாரிக்கப்பட வேண்டும் என்று மீள்குடியேற்ற பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உபதலைவருமாகன வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை திட்டமிடல் பிரிவின் புதிய அலுவலக திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதியமைச்சர்.

  

இலங்கையிலே நடைபெற்ற அழிவுகளுக்கு மிகவும் பெரும் பங்காற்றியவர்கள் இன்று த.தே.கூட்டமைப்பில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களுமே. அவர்களே அனைத்து அழிவுகளுக்கும் காரணம். இந்திய படை இலங்கைக்கு வந்தபோது அதனோடு சேர்ந்து எமது இனத்தினை கொன்றொழித்ததில் இவர்களுக்கு பெரும் பங்கு உண்டு. இப்படிப்பட்டவர்களுக்கு என்ன அருகதை இருக்கின்றது சர்வதேச விசாரணை ஒன்றினை கோருவதற்கு?

இவர்கள் புனிதமானவர்கள் என்றால் அவர்கள் சர்வதேச விசாரணையைக் கோரலாம். அன்று மண்டையன் குழு என்று தங்களை அடையாளப்படுத்தி தமிழ், முஸ்லிம் மக்களை கொன்றொழித்தவர்கள் இன்று த.தே.கூட்டமைப்பென்ற பெயரில் பாராளுமன்றத்தில் ஆசனங்களை அலங்கரிக்கின்றார்கள். அரசாங்கம் என்பது மக்கள் சக்தி கொண்ட அமைப்பு யார் அரசாங்கத்திற்கு சக்தியைக் கொடுக்கின்றார்களோ அவர்களுக்குத்தான் அரசாங்கம் உதவி செய்யும். அதனை விடுத்து சக்தியை கொடுக்காதவர்களுக்கு எப்படி உதவி செய்ய முடியும் என்பதனை நீங்கள் அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும்.

முஸ்லிம் மக்கள் இந்த நாட்டு ஜனாதிபதிக்கு தங்களது முழு ஆதரவினையும் வழங்குகின்றார்கள். ஆனால் தமிழர்களோ 100 வீதம் எதிர்ப்பினையே காட்டி வருகின்றார்கள் அப்படி இருக்கும் போது எப்படி அவரிடம் சென்று உதவி கேட்க முடியும். இலங்கையிலே 4 தமிழர்கள்தான் அமைச்சர்களாக இருக்கின்றார்கள். அதில் ஒருவனாக நான் இருக்கின்றேன். நான் பலமான அமைச்சராகத் தான் இருந்து வருகின்றேன் என்னை சிறந்த முறையில் பயன்படுத்தினால் நீங்கள் அடைய வேண்டிய அனைத்தையும் அடையலாம்.

நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உபதலைவராக இருப்பதன் காரணத்தினால் அடிக்கடி ஜனாதிபதியினை சந்தித்து கலந்துரையாடுவேன். அப்போது எமது பிரச்சனைகள் தொடர்பாகவும் எடுத்துரைத்து அதற்கான தீர்வினையும் பெற்றுக்கொள்ள முடியும். 30வருட காலப் போராட்டத்தில் மூன்று இனங்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். இந்த யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்ததன் மூலம் இன்று எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன.

வாழ்க்கைக்காகத்தான் நான் போராடச் சென்றிருந்தேன். ஆனால் போராட்டமே வாழ்க்கையாக மாறிவிட்டது. இதன் மூலம் எத்தனையோ தாய்மார்கள் ஆயிரக்கணக்கில் தங்களது பிள்ளைகளை இழந்திருக்கின்றார்கள். இவர்களுக்கெல்லாம் தற்போது விடிவு கிடைத்திருக்கின்றது. அதன் மூலம் அவர்கள் இன்று அமைதியான வாழ்க்கை வாழ்கின்றார்கள்.

நாம் ஒவ்வொருவரும் 30வருட காலத்திற்கும் முற்பட்ட அரசியலை சிந்திக்கவேண்டி இருக்கின்றது. அப்போதுதன் நாம் சரியான இலக்கை நோக்கி பயணிக்க முடியும். அந்தக்காலத்தில் தமிழர்கள் எத்தனையோ பேர் அமைச்சர்களாக இருந்திருக்கின்றார்கள். அதனைக் கருத்தில் கொண்டு இன்று செயற்பட வேண்டிய காலம் வந்திருக்கின்றது.என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=106887&category=TamilNews&language=tamil

முழு பூசணிக்காயை சோத்துக்குள் மறைக்கலாம் ஆனால் ரெண்டு பாண் துண்டுக்குள் மறைப்பதற்கு திறமை வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

முழு பூசணிக்காயை சோத்துக்குள் மறைக்கலாம் ஆனால் ரெண்டு பாண் துண்டுக்குள் மறைப்பதற்கு திறமை வேண்டும்.

 

பாவம்

வேறு யாரும் சொல்லவில்லை

இருந்து

இருந்து

பார்த்துவிட்டு தானே  வந்து சொல்லவேண்டிக்கிடக்கு

நான் இன்னும் பலமாகத்தான் இருக்கின்றேன்  என்று.

 

பாவம்

எப்படி இருந்தவர்

இப்படி..............?

முழுதமிழினத்தின் வாழ்க்கையை நேர்மையற்ற சுயனலத்திற்கு அடகுவைத்த சாத்தானின் கதைகள்.. காக்கைவன்னியன் வரிசையில் காட்டிகொடுத்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் மூனாக்களுக்கு நல்ல பிள்ளையாக நடிக்கிறார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.