Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசாங்கம் வட மாகாண சபையை இயங்கவிடாது தடுக்கின்றது : சி.வி. விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
(ஆதவன்)
 
இலங்கை அரசாங்கமானது  வடக்கு மாகாண சபையை இயங்கவிடாது பல முட்டுக்கட்டைகளை போட்டுவருகின்றது என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சரிடம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
c.v1_8.jpg
 
சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகம் யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை விஜயம் செய்து பல தரப்பினருடனும் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார்.
 
முன்னதாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறியை  காலை 9 மணிளவில் ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்த அவர் வட மாகாண முதலமைச்சரை யாழ். கோவில் வீதியிலுள்ள முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் முற்பகல் 10 மணியளவில்  சந்தித்து கலந்துரையாடினார்.
 
இச்சந்திப்பு குறித்து வடக்கு மாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
 
அரசியல் ரீதியாக எதனையும் அறியும் நோக்கம் அவரிடம் இருக்கவில்லை. இருப்பினும் வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெற்று அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ள நிலையில் இலங்கை அரசாங்கமானது இந்த மாகாண சபையை சிறப்பாக இயங்க விடாது பல தடைகளை ஏற்படுத்திவருவதாக அவரிடம் எடுத்துக்கூறியிருந்தேன்.
 
இதேவேளை  கடந்த காலத்தில் ஆங்கில மொழியை இங்குள்ளவர்கள் கற்க அதி களவில் விருப்பம் காட்டவில்லை.இதனால் சிறிய இடைவெளியொன்று ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சண்முகம் என்னிடம் கூறியிருந்தார்.
 
அதேவேளை ஆங்கில மொழியை கற்கும் மாணவர்களை ஊக்கப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் கூறினார். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டால்  ஒத்துழைப்பு வழங்க நாம் தயாராக உள்ளதை அவருக்கு வெளிப்படுத்தினேன் என்றார் 
 
இச்சந்திப்பனையடுத்து யாழ்.பொது நூலகத்திற்கு சென்ற சிங்கப்பூர் நாட்டின் வெளிவிவகார அமைச்சர், சிங்கப்பூர் நாட்டின் நிதியுடன் நடமாடும் நூலகத்தையும்  யாழ.; பொது நூலகத்தில் ஆரம்பித்து வைத்தார்.
 
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர், யாழ்.மாநகர சபையின் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, ஆணையாளர் செ.பிரண வநாதன் மற்றும் பலர் பங்கு கொண்டிருந்தனர்.
 
அதேவேளை யாழ். பொதுநூலகத்திற்கு  10 ஆயிரம்; நூல்களை அன்பளிப்பு செய்து ள்ளதுடன் அந்த புத்தகங்களை 38 பாடசாலை மாணவர்களிடத்தில் கொண்டு செல்லும் பேருந்தையும் அறிமுகப்படுத்தி அதனை நடமாடும் நூலகமாகவும் செயற்படு த்தியுள்ளனர்.
 
மேலும் இந்த நடமாடும் நூலகத்திற்கு ஆங்கிலம் மற்றும் கணனி அறிவுடைய புத்தகங்கள் அதிகளவில் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளதுடன் முப்பதாயிரம் மாணவர்கள் இதனூடே பயனடைவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது என அமைச்சர் கூறினார்.
 
இதேவேளை இங்கு  அமைச்சர் சண்முகம் மேலும் தெரிவிக்கையில், 
யாழ்ப்பா ணத்திற்கு ஒரு சிறந்த கலாசாரப் பாங்கு உண்டு என்றால் அது கல்வியே என்பதை அனைவரும் அறிந்து வைத்திருக்கின்றனர். யாழ்ப்பாணத்து மக்கள் கல்வியை தமது சொத்தாக கருதுபவர்கள்.
 
நான் யாழ்ப்பாணம் வருவது இரண்டாவது தடவையாகும்.முதல் முறை கடந்த 2012 ஆம்ஆண்டு யாழிற்கு வருகை தந்த போது யாழ்ப்பாணத்து மக்கள் தமது தேவைகளை என்னிடம் கூறினர்.அதில் எம்மால் ஆன உதவிகளை செய்தும் கொடுத்திருக்கின்றோம்.
 
இப்போது  இங்கு வந்ததன் நோக்கம் ஆங்கிலம் மற்றும் கணனி அறிவை யாழ் மாணவர்களிடையே வளரச் செய்வதற்கே. அதுமட்டுமல்லாது,நம்மால் இந்த யாழ் பொதுநூலகத்திற்கு என பத்தாயிரம் புத்தகங்களை வழங்கி அதனை அங்கு பயன் பாட்டிற்கு வைப்பதை விட பேருந்து சேவையொன்றை வழங்கி அதனூடாக அந்த புத்தகங்களை யாழிலுள்ள பாடசாலைகளுக்கு எடுத்துச் செல்வதால் அதிகமான பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும் என தாம் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 

இதை ஆங்கிலத்தில் உலக ஊடகங்களுக்கு சொல்லுங்கள்.

எங்களுக்கு பல காலமாக தெரிந்த விடயம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.