Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பிரிவு போன்று இலங்கை - ஈழம் பிரிவு தவறில்லை! பொன்.ராதாகிருஷ்ணன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பிரிவு போன்று இலங்கை - ஈழம் பிரிவு தவறில்லை! பொன்.ராதாகிருஷ்ணன்

 

இலங்கை பிரச்சினையில் பாஜக இரட்டை நிலைப்பாடு-

bjp_CI.jpg

பாகிஸ்தான் மீது போர் தொடுத்து பங்களாதேஷத்தை பிரித்துக் கொடுத்தது போல் இலங்கையிலும் நடந்தால் அது தவறில்லை என பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

இந்திய ஊடகமொன்று அவர் அளித்த பேட்டியில் இலங்கை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விளும் அவர்    அளித்த பதில்களும்,

இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என்ன வென்று நினைக்கிறீர்கள்? 

இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு அந்த நாட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையில்தான் உள்ளது. தங்களது உரிமையைப் பாதுகாக்கக் கோரி கிழக்கு பாகிஸ்தான் இந்தியாவை அணுகியபோது, 1971-ம் ஆண்டு பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்து பங்களாதேஷத்தைப் பெற்றுக் கொடுத்தது. 

அதுபோல, இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து கொடுமைப் படுத்தப்பட்டால், அவர்களது உரிமை மறுக்கப்பட்டால், வேறுவழியில்லாமல் தனிஈழம் வேண்டுமென கோரி அவர்கள் இந்தியாவை நாடினால், பங்களாதேஷம் போல இலங்கையிலும் நடந்தால் அதில் எந்தத் தவறும் இல்லை. 

பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர்களின் உரிமைகள் மீட்கப் படுமா? 

நரேந்திரமோடி பிரதமர் ஆகிவிட்டார் என்ற செய்தி கிடைத்ததும், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசு தன்னை அடக்கிக் கொள்ளும். தமிழக மீனவர்களின் உரிமைகள் தக்க வைக்கப்படும். 

இதேவேளை, இந்தியாவில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் வாக்குகளை பெறவென வேட்பாளர்கள் பலரும் இலங்கை பிரச்சினையை பிரசார மேடைகளில் பேசி வருவதுடன் இலங்கை தமிழர் பிரச்சினையில் கூடிய கவனம் செலுத்தி வருகின்றனர். 

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடு அண்மையில் கருத்து தெரிவிக்கையில், தனி ஈழத்தை பாஜக ஒருபோதும் ஆதரிக்காது என்றார். அப்படி இருக்கையில் பொன்.ராதாகிருஷ்ணனின் இந்த கருத்து சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை பிரச்சினையில் பாஜக இரட்டை நிலைப்பாட்டில் இருப்பதை இது காட்டுகிறது. 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/105312/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.