Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜயின் 'கத்தி'க்கு ராஜபக்ஷ நிதியுதவி?

Featured Replies

984029_605618232856354_1096880749_n.jpg

தென்னிந்திய நடிகர் விஜய நடிப்பில் புதிதாக தயாரிக்கப்பட்டு வரும் 'கத்தி' திரைப்படத்தை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பரான லைக்கா மொபைல் நிறுவனம் தயாரித்து வருவதால் அத்திரைப்படத்துக்கு புதிய சிக்கல் தோன்றியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சில தினங்களுக்கு முன் சந்தோஷ் சிவன் என்ற கேரள சினிமா இயக்குநர் இயக்கிய 'இனம்' என்ற திரைப்படத்துக்கு தென்னிந்திய தமிழர்களால் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து அத்திரைப்படம் வெளியிடுவதை அதன் தயாரிப்பாளர் லிங்குசாமி தடைவிதித்தார்.

இலங்கைத் தமிழர்களை அத்திரைப்படம் மோசமாக சித்தரிப்பதாகக் கூறியே அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருந்த இனம் திரைப்படம் வெளியீட்டை நிறுத்திக்கொண்டது.

இந்நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பரான லைக்கா மொபைல் நிறுவனம், விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் கத்தி திரைப்படத்தைத் தயாரிக்கின்றது.

லைக்கா மொபைல் நிறுவனமானது, ஐரோப்பிய நாடுகளில் மிகப் பிரபலமான தொலைத் தொடர்பு நிறுவனமாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ, இந்நிறுவனத்தின் பங்குதாரர் ஆவார். லைக்கா மொபைல் நிறுவனத்தின் தலைவராக சுபாஷ்கரன் அல்லி ராஜா தமிழர் என்றாலும், ஜனாதிபதிக்கு மிகவும் நெருங்கிய நண்பர் என்று இந்திய செய்திகளில் சுட்டிக்காட்டிப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதலில் ஐங்கரன் நிறுவனம் தயாரிப்பதாகச் சொல்லப்பட்ட விஜய்யின் கத்தி திரைப்படத்தில், இப்போது லைக்கா மொபைல் நிறுவனமும் இணைந்துள்ளது.

'தன்னை இலங்கைத் தமிழர்களின் காவலனாகச் சித்தரித்துக்கொண்ட விஜய்க்கு இந்த உண்மை தெரியாதா? அல்லது தெரிந்தே இப்படியொரு துரோகத்துக்கு துணை போகிறாரா?' என்ற கேள்விகளோ இந்த திரைப்படத்தை எதிர்க்க தமிழர்கள் தயாராகி வருவதாக அச்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இது குறித்து லைக்கா மொபைல் நிறுவனத்தின் செயல் அலுவலர் ரவீந்திரன் கூறுகையில், 'எங்கள் குழுமத்தின் ஒரு அங்கம்தான் இந்த படத் தயாரிப்பு நிறுவனம். கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரியதான் எங்கள் சேர்மனின் நண்பர்.

எங்களை இனத்துரோகி என்று ஒரு சிலர் சொல்வது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அரச தரப்போடு இணைந்து போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, உதவிகளைச் செய்து வருகிறோம். இது இனத் துரோகம் அல்ல. மேற்கொண்டு பேச முடியாது' என்று ரவீந்திரன் கூறியுள்ளார். (தற்ட்ஸ்தமிழ்)

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/106226-2014-04-08-06-09-44.html

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பிரச்சானையாக்காமல் விடுவது நல்லது என நினைக்கின்றேன். ஏனெனில் இப்படிப் பிரச்சனை கிளப்புவது, இலகுவான பிரச்சனைகளை உருவாக்கி அதை நோக்கிப் போராடி வெற்றி பெறுவது என்ற நோக்கில் செல்வது போலுள்ளது. கத்திப் படம், ஈழத்தமிழர்களை,தமிழர்களைக் கொச்சைப்படுத்துகின்றதா? அல்லது, அதனால் ஏதும் தவறான செய்தி பரப்பப்படுகின்றதா ? இரண்டும் இல்லை எனும்போது, லைக்காவுக்குக் கிடைக்கப் போவது, பணம் மட்டுமே. அப்படிப் பார்த்தால் வெளிநாடுகளில் நம்மவர்கள் லைக்காத் தொலைபேசியைப் பாவிப்பதை நிறுத்தியிருக்க வேண்டும். அதை ஏன் செய்யவில்லை.... மற்றும்படி லைக்கா இதில் பங்கேற்பதால் பிரச்சனை உருவாகுவது போலில்லை. தவிர, இப்படிப் பிரச்சனை கிளப்புவதால், விஜய், அவர் ரசிகர்கள், இயக்குனர் மற்றும் இதர குழுமத்தோடு பிரச்சனைக்கு உள்ளாகப்போவது தமிழர்களே...

தமிழர்களுக்குள் பிரச்சனை வேண்டும் என்ற சிங்கள அரசின் செயலை நாங்களே செய்விப்பது போலுள்ளது. இது தான் சிங்கள அரசின் தேவையாகக் கூட இருக்கலாம்.

போராடவிரும்புவர்களுக்கு நிறையத் தெரிவுகள் இருக்கின்றன. நிறையப் பிரச்சனைகள் உள்ள. அவற்றினை நோக்கிக் கவனத்தைத் திருப்புவது தான் சிங்கள அரச பயங்கரவாதம் தண்டிக்கப்பட உதவும்...

உண்மை, இப்படியான பிரச்சனைகளை கிளப்புவதில் எமது ஊடகங்கள் மன்னர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.