Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முகநூலில் ரசித்தவை

Featured Replies

தலைவர் மஹிந்த அவர்கள் ஒரு முறை இந்திய சென்ற போது அங்கு அப்துல் கலாம் அவர்களை சந்தித்து பேசினார். அப்போது மஹிந்த அவர்கள் அப்துல் கலாம் அவர்களை பார்த்து கேட்டார்
எப்படி ஒரு சிறந்த அரசியல் தலைவரை அடையாளம் கண்டு கொள்வது என்று.

அதற்கு அப்துல் கலாம் அவர்கள் அதை அவரை சுற்றி உள்ள அறிவாளிகளில் தங்கியுள்ளது என்றார்.

அவர்கள் அறிவாளிகள் என்று அவர் எப்படி அடையாளம் கண்டு கொள்வர்? என்று கேட்டார் மஹிந்த அவர்கள்.

அதற்கு அப்துல் கலாம் அவர்கள், அதை அவர்களிடம் சிறந்த கேள்விகளை கேட்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம் என்றார் அப்துல் கலாம் அவர்கள்.

உடனே மன் மோகன் சிங்குக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி அவரிடம் கேட்டார்.

உங்கள் அம்மாவிற்கு ஒரு பிள்ளை இருக்கிறது...... உங்கள்அப்பாவிற்கு ஒரு பிள்ளை இருக்கிறது...... அனால் அது உங்கள் சகோதரரோ சகோதரியோ இல்லை....... அப்படியானால் அவர் உங்களுக்கு யார் என்று கேட்டார்?

அதற்கு மன் மோகன் சிங் உடனே அது நான் தான் என்று பதில் கூறினார்.

அதற்கு அப்துல் கலாம் அவர்கள் சரியாக சொன்னீர்கள் என்று வாழ்த்துக்கள் சொல்லி விடைகூறினார்.

அப்துல் கலாம் மஹிந்தவை பார்த்து புரிந்ததா என்று கேட்டார்.

மஹிந்த, ஆம் புரிந்தது நானும் இதை பயன் படுத்துவேன் என்று நாடு திருப்பினார்.

நாடு திருப்பிய பின் மஹிந்த அவர்கள் மேர்வின் சில்வாவை அழைத்து நான் கேட்கும் கேள்விக்கு விடை கூற முடியுமா? என்று கேட்டார்.

அதற்கு மேர்வின் சில்வா நிச்சசயமாக..... என்று பதில் கூறினார்.

தலைவர் மஹிந்த அவர்கள், உங்கள் அம்மாவிற்கு ஒரு பிள்ளை இருக்கிறது...... உங்கள்அப்பாவிற்கு ஒரு பிள்ளை இருக்கிறது...... அனால் அது உங்கள் சகோதரரோ சகோதரியோ இல்லை....... அப்படியானால் அவர் உங்களுக்கு யார் என்று கேட்டார்?

மேர்வின் சில்வா நீண்ட நேரம் யோசித்து விட்டு தனக்கு சிறிது நேரம் தரும்படி கேட்டார். மேர்வின் சில்வா அவர்கள் எல்லா அமைச்சர்களையும் அழைத்து விடை தெரியுமா என்று கேட்டார்? எல்லோரும் யோசித்தார்கள்.................

இறுதியாக மேர்வின் சில்வா அவர்கள் ரணிலுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி நான் கேட்கும் கேள்விக்கு விடை கூற முடியுமா? என்று கேட்டார்.

உங்கள் அம்மாவிற்கு ஒரு பிள்ளை இருக்கிறது...... உங்கள்அப்பாவிற்கு ஒரு பிள்ளை இருக்கிறது...... அனால் அது உங்கள் சகோதரரோ சகோதரியோ இல்லை....... அப்படியானால் அவர் உங்களுக்கு யார் என்று கேட்டார்?

அதற்கு ரணில் விக்கரமசிங்கே உடனே அது நான் தான் என்று பதில் கூறினார்.

மேர்வின் சில்வா அவர்கள் மீண்டும் மஹிந்தவிடம் வந்து எனக்கு அது யார் என்று தெரியும் என்று சொன்னார்.

மஹிந்த யார் என்று கேட்ட போது....

அது எங்களுடைய ரணில் விக்கரமசிங்கே என்று பதில் கூறினார்.

அதற்கு மஹிந்த அது தவறு............

அது ................. மன் மோகன் சிங்................. என்று கூறினார்...........................

 

 

Edited by BLUE BIRD

  • Replies 178
  • Views 29.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

க்ருன்ட்லான்ட் ...

 

எந்தப்

புள்ளியிலும் 

சேராமல் 

விலகுகிறோமென்பது

 தெரியாமல் 

நினைவில் நிற்கும்

கதைகளோடு 

தள்ளிக்கொண்டே 

போகிறது 

க்ருன்ட்லான்ட் 

புறம்போக்குகளின்  

நடுநிசி நகரம் ..

 

பாகிஸ்தானியர்

டாக்சி ஓடிக்

காசைத் திரத்த

 ஆபிரிக்க அகதிச்

சோமாலிகள்

வேலை செய்யாமலே

அலுப்பில்

ஓய்வு எடுக்க

ஜெகோவாவின் சாட்சிகள்

ராச்சியத்தை அறிவுக்கும்  

வாசல்ப் படி...

 

தந்தூரிக்

கோளிக் கால்

வாசம் காற்றில்

மிதக்க

தள்ளி விழுத்தி 

நிழல்கள்

மிதிபட்டு 

நெரிபடும்

நடை பாதைகள்..... 

 

வார இறுதிகளில் 

எப்படி விடியும்

என்ற

கவலையில்லாதவர்களின் 

பிரிவிற்கு வருந்தத் 

தேவையற்ற

கொண்டாட்டம்

நம்பிக்கை தரும் 

சினேகிதங்களின் 

கற்பனைகளுக்கும்   

உத்தரவாதங்கள் உண்டு.. 

 

மனிதர்களை 

எழுதிச் செல்லும் 

க்ருன்ட்லான்ட் 

நடந்து கடக்கும் 

எல்லாருக்கும்

இனம்

மதம் 

மொழி 

நிறம் 

இல்லாத ஒரு 

ஆசிர்வதிக்கப்பட்ட

நாளாகும்.

 

நாவுக் அரசன் 

ஒஸ்லோ 

1454681_10205455818576094_37435262080452

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

10978620_1065701740113988_49833878611742

  • தொடங்கியவர்

''நான் 'குறிப்பிட்ட' விடயத்தில் திறமையானவன்'' என்று சந்தோசத்துடன் சொல்லிக்கொள்ளும் துணிவு எங்களில் பலருக்கும் இருப்பதில்லை. அப்படி யாராவது சொன்னால் ''நீரென்ன பெரிய வித்துவானா?" என்று மட்டந்தட்ட முயற்சிப்பது ஒரு பழக்கமாகப் பரவியிருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு மனிதனும் ஆகக்குறைந்தது ஒரு விடயத்திலாவது திறமை மிகுந்தவனாக இருக்கிறான். அதை வெளிப்படையாகச் சொல்லிக்கொள்ளவும் வேண்டும். அதேசமயம் அவ்விடயத்திலும் இன்னும் வேறு விடயங்களிலும் இன்னும் உயரங்களை எட்ட முயற்சி செய்யவும் வேண்டும்.

தனது திறமைகளைச் சொல்லிக் காட்டமுடியாத சமூகத்தில் வாழ்வது ஒரு மனிதனுக்குச் சாபம், அதை உடைத்தெறிந்துவிட்டுத் தன்னம்பிக்கையில் உயர்வது ஒவ்வொருவருக்கும் மிகவும் அவசியம்!

 

 

Charles J Forman

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

மட்டக்களப்பு வரலாறு History of Batticaloa

 

மட்டக்களப்பின் பண்டைய வரலாற்றினை. பூர்விகக் குடிகள், பின்னர் ஏற்பட்ட குடியேற்றங்கள் என இரண்டாக வகைப்படுத்தி நோக்க வேண்டும் எனவும், நாட்டாரியல் வழக்காறுகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வரலாற்றை ஆராய வேண்டும் எனவும். இதற்காதராமாக கலாநிதி சி. மௌனகுரு அவர்களின் “மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள்” தரும் தகவல்களைக் கொள்ளலாம் எனவும், அவ்வாறு பெறப்படும் தகவல்களை “மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்” உட்பட ஏனைய மட்டக்களப்பு வரலாற்று நூல்கள் கூறும் தகவல்களுடன் இணைத்து நோக்க வேண்டும் எனவும் முன்னய கட்டுரையில் வரையறுத்திருந்தேன்.

 

மட்டக்களப்பு வரலாற்று நூல்கள் வேடர், புலிந்தர்-புலியர், இயக்கர், நாகர், திமிலர், கழுவந்தர், முக்கியர் ஆகிய குலக்குழுக்களை அல்லது சாதிகளை மட்டக்களப்பின் பூர்விகக் குடிகளாக குறிப்பிட்டுள்ளன. வேடர்களை இயக்கருடன் தொடர்பு படுத்தியும் இயக்கர்களை திமிலர்களுடன் தொடர்பு படுத்தியும் குறிப்பிடப்பட்டுள்ளன. வேடர்கள் மட்டக்களப்பின் பூர்விகக் குடிகள் என அனைத்து நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களை குவேனி வம்சத்துடன் தொடர்பு படுத்தி நோக்கியிருப்பதுடன், கி.மு. 500 ஆண்டளவில் இவர்கள் மட்டக்களப்பில் குடியேறியதாகவும் கூறப்படுகிறது. மட்டக்களப்பில் வாழ்ந்த வேடர்;, புலியர், முக்கியர் எனப்படுவோர் தமது அடையாளங்களை மறந்து தமிழராகிவிட்டனர் எனவம் கூறப்படுகிறது.
 
 
கலாநிதி சி. மௌனகுரு அவர்கள்: மட்டக்களப்புப் பகுதியில் வாழும் வேடர், வேட வெள்ளாளர் எனப்படும் சாதியினரிடம் காணப்படுகின்ற தெய்வங்களையும் வணக்க முறைகளையும் பிற தகவல்களையும் கொண்டு வேடர்களை மட்டக்களப்பின் பூர்விகக் குடிகளாக தக்க ஆதாரங்களுடன் கூறியுள்ளார். அத்துடன் தற்காலத்தில் மட்டக்களப்பில் வேடர்கள் வாழ்கிறார்கள் என்ற கருத்தை மௌனகுரு அவர்கள் மட்டுமே உணர்த்தியிருக்கிறார். ஆனால் வேடர்கள் எப்போதிருந்து இங்கு வாழ்கிறார்கள் என்பது குறித்து அவர் எந்த தகவலையும் குறிப்பிடவில்லை. தற்கால களத்ததகவல்கள் மௌனகுரு அவர்களின் கருத்துக்களை மேலும் சான்றுபடுத்தக் கூடியதாக அமைகிறது என்பதனைக் கூறியாக வேண்டும். மட்டக்களப்பு வேடர்கள் மற்றும் அவர்களுடைய தெய்வ-வணக்க முறைகள் குறித்த தகவல்கள் அடுத்த கட்டுரையில் விபரிக்கப்படும். இக்கட்டுரையில் வரலாற்று நூல்கள் விபரித்துள்ள விபரங்கள் தொகுத்து முன்வைக்கப்படுகிறது.
 
 
கலாநிதி சி. மௌனகுரு அவர்கள், மட்டக்களப்பின் பூர்விக குடிகளாக வேடர், புலிந்தர், இயக்கர் ஆகிய சாதியினரைக் குறிப்பிடுகிறார். ஆயினும் வேடர்கள் பற்றிய விபரங்களையே விபரித்துள்ளார். அவர், “மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள்”(1998) எனும் ஆய்வு நூலில், மட்டக்களப்பின் பூர்விகக் குடிகள் குறித்து, “…சுருக்கமான வரலாற்றிலிருந்தும், கிடைக்கும் சான்றுகளிலிருந்தும் மட்டக்களப்பில் ஆரம்பத்தில் பூர்விகக் குடிகள் இருந்தனரென்று…”(பக்.86)ம் “மட்டக்களப்பு பகுதியிலே குடியேற்றங்கள் ஏற்பட முன்னர் இங்கு சில சாதியினர் வாழ்ந்தனர் என்பது கர்ண பரம்பரைக் கதைகளாலும், மட்டக்களப்பின் தெய்வ,வணக்க முறைகளாலும் அறிய முடிகிறது”(பக்.100) எனவும் “…இப்படி வாழ்ந்தோர் வேடர், புலிந்தர், இயக்கர் ஆகிய சாதியினராக இருக்கலாம்”. எனவும் “இவர்கள் தமக்கென சில தெய்வங்களையும் வணக்கமுறைகளையும் கொண்டிருக்க வேண்டும் என்பதை இன்றும் மட்டக்களப்புப் பகுதியில் வாழும் வேடர், வேட வெள்ளாளர் எனப்படும் சாதியினரிடம் காணப்படுகின்ற தெய்வங்களையும் வணக்க முறைகளையும் கொண்டு அறிய முடிகிறது” எனவும் குறிப்பிடுகிறார். இவர்களை “புராதான குலக்குழு”வாக அவர் இனங்காட்டுகிறார்.
மேலும் “வேடருக்கு குமாரர் பிரதான தெய்வமாகவும்” , “வம்சாவழியாக வந்த தெய்வமாகவும்”(பக்.111) குறிப்பிடுகிறார். வேடர் மரபில் வந்தோரால் அதாவது வேட வெள்ளாளரால் கடைப்பிடிக்கப்படும் குமார தெய்வத்தினை மையமாகக் கொண்ட பல புராதன தெய்வ – வணக்கமுறைகளை கள ஆய்வுத் தகவல்கள் மூலம் (கள ஆய்வு தளவாயில் உள்ள பிரதான கோயிலை மையமாகக் கொண்டமைந்தது. விபரம் (பக்.110-119)) விபரித்து, அது புராதான வாழ்க்கை முறையைக் காட்டுகிற முறையினையும் விபரித்துள்ளார்.
 
“இச்சடங்கு முறைகள் அவர்களின் முன்னோர்களின் புராதான வாழ்க்கை முறையின் நினைவுகளாகும். பூச்சி பிடித்தல், தேனி கொட்டுதல், யானை பிடித்தல் ஆகிய சடங்கு முறைகளில் அவர்களின் தொழில் சார்ந்த கிரியைகளையும், ஏனையவற்றில் நோய்தீர்க்க ஏனைய தெய்வங்களை வேண்டும் கிரியைகளையும் காணுகிறோம்” (பக.;118) என அவர் குறிப்பிடுகிறார்.
மேலும் “இறந்த முன்னோரை வணங்கும் வழக்கம்(உத்தியாக்கள்) இவர்களிடம் இருப்பதும் இவர்களின் புராதானத் தன்மைக்கு உதாரணமாகும்.”(பக்.100) எனவும் , மட்-அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் கோயிலில் வேடர்களே முன்பு வேல் வைத்து வணங்கினர் என்ற கதையும், கொக்கட்டிச்சோலைத் தான்தோன்றீஸ்வரர், மண்டூர்க் கந்தசாமி ஆகிய கோயில்கள் முன்பு வேல் வைத்து வேடர்களால் வணங்கப்பட்ட கோயில்கள் என்ற கர்ணபரம்பரைக் கதையும் ஆரம்பத்தில் இவ்வணக்க முறைகளே மட்டக்களப்பில் இருந்தன என்பதை மேலும் வலியுறுத்துகின்றன”;(பக்.101) எனவும் மௌனகுரு அவர்கள்; குறிப்பிடுகிறார்.
 
எஸ்.ஓ. கனகரெத்தினம் அவர்களும் மட்டக்களப்பில் பூர்விக குடிகளாக வேடர்கள் வாழ்ந்தனர் எனக் குறிப்பிடுவதுடன், “மட்டக்களப்பு ஆதிக்குடிகளின் இராச்சியம்(வேடர்களின் இராச்சியம்)” என வரோஸ் குறிப்பிடுவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.(வெல்லவூர்க்கோபால்pன் மட்டக்களப்பு வரலாறு-ஒரு அறிமுகம். பக்.49) மேலும், எஸ்.ஓ. கனகரெத்தினம் அவர்கள் குறிப்பிடும் மட்டக்களப்பிலுள்ள சாதிகள் 17 இல் வேடுவரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
வி.சி.கந்கையா அவர்கள் “மட்டக்களப்புத் தமிழகம்”(1964) என்னும் நூலில், “விஜயன் கி.மு. 540இல், பாண்டிய நாட்டிலிருந்து கொண்டு வந்த தமிழ் மக்களைக் ‘கதிராகல’ என்னும் மலைச்சாரலிற் குடியேற்றினான் என்றும், இப்பகுதி அக்காலத்து வேடராற் குடியிருக்கப் பெற்றதென்றும் சிங்கள சரித்திர நூல்கள் கூறுகின்றன. அவற்றுட் குறிப்பிடப்பெற்ற ‘கதிராகல’ மலைப்பகுதி ஏறக்குறைய 1200 அடி உயரமுள்ள குன்றுகளாக இத் தமிழகத்திலே மட்டுநகரின் தென்மேல் திசையில் 17 மைல் தூரத்தே இன்றும் உள்ளது”(பக்.6-7) எனக்குறிப்பிட்டுள்ளார்.
 
மட்டக்களப்பு பூர்வ சரித்தம் (2005) , சிறிகுலசேனனுடைய புத்திரன் கூத்திகன் மட்டக்களப்பில் குடியேற்றங்களை முதன் முதலில் உருவாக்கியவனாகக் குறிப்பிடுவதுடன், கூத்திகன் பின், மட்டக்களப்பை இரசதானியாக்கி அரசியற்றிய சேனனுடைய வமிசம் அருகிப்போக, நாகர் இயக்கர் என்னும் இரு குலத்தவர்கள் மேலெழும்பி, காலிங்கர், சிங்கர், வங்கர் என்னும் முக்குலத்தவரையும் அடக்கி, விண்டு அணையை இரசதானமாக்கி முப்பது வருச காலமாகக் கொடுங்கோல் செலுத்தினன் என (பக்13) குறிப்பிடப்படுகிறது. இக்காலத்தில் அனுரதன்புரியை அரசு செய்தவன் சோரநாகன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இச்சோரநாகன் இயக்கர் துணைப்பிரியன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விபரிப்புக்களிலிருந்து, இங்கு “இரு குலத்தவர்கள் மேலெழும்பி” எனும் வரியானது அவர்கள் அங்கு ஏற்கனவே வாழ்ந்து வந்தனர் என்ற கருத்தினையே குறிப்பாய் உணர்த்துகிறது.
 
மேலும், மட்டக்களப்பிலுள்ள முற்குலத்தவரில் சில நிதியத் தலைவர்கள் வேண்டுகோளின் படி இயக்கர், நாகரை அகற்ற கலிங்க தேசத்து மதிவரகாகுணன் புத்திரன் ரணாசலன்(ரணாசல்-ரஞ்சன்-நிரஞ்சன்) சைனிய வீரர் முந்நூறுடன் இங்கு வந்தான் எனவும், இவன் நாகரைச் சிநேகம் பிடித்து, இயக்கர் என்னும் திமிலரை வாளுக்கிரையாக்கி, விண்டு அணையிலுள்ள இராசமாளிகையை உடைத்து, இயக்கர் அரசனையும் அவன் பிரதானிகளையும் வெட்டிக் கொன்று, மேற்கு வடக்கு மகாவலி கங்கையால் இயக்கர் குலத்திலுள்ள யாவரையும் துரத்தி எல்லைக்கல்லும் நாட்டி..”(பக்.14) எனவருங் குறிப்புக்கள் இயக்கரை திமிலராகக் காட்டுகிறது. பின்னால் வரும் ரணாசலன் கூற்றானது, “நான் காலிங்கதேசம் போய்க் குடிகள் கொண்டு வந்து இயக்கரிருந்த இடமெல்லாம் குடியேற்ற வேண்டும்” என வருகிறது. இதிலிருந்து இயக்கர்கள் பெரும் பிரதேசத்தில் வாழ்ந்து வந்தார்கள் என்ற கருத்து புலப்படுத்தப்படுகிறது.இதேவேளை, ரணாசலன் அனுரதன்புரியை அரசு செய்த சோரநாகனுடன் இணைந்து, “இலங்கையை பன்னிரெண்டு பாகமாய்ப் பிரித்து, எட்டுப்பங்கை விசயதுவீபத்தோடு சேர்த்து மண்ணாறு, மணற்றிடரிரண்டையும் குருகுல நாகருக்கீந்து, தெட்சனாபதியை இயக்கர் குலத்திமிலருக்கீந்து, மட்டக்களப்பை ரணாசலனேற்றுக் கொண்டு…” எனவரும் செய்திகள் கவனத்தில் கொள்ளத்தக்கன. இதன் மூலம் பின்னாளில் இயக்கர் வாழிடம் தெட்சனாபதியாக இருந்தது எனக் காட்டப்படுகிறது.
 
இதே வேளை இந்நூலிலுள்ள குலவிருதக் கல்வெட்டில் “நாணி வில்லம்பு நாட்டிலுள்ள வேடுவர்க்கு” என்ற குறிப்பும், சாதித்தெய்வக் கல்வெட்டில் “வேடருக்கு கன்னிகளாம்” (மௌனகுரு அவர்கள் குமார தெய்வச் சடங்கில் இணைந்துள்ள சடங்கில் கன்னிமார் சடங்கு நிகழ்வதனையும் குறிப்பிடுகிறார்.பக்.118) என்ற குறிப்பும் (பக்77) காணப்படுகிற போதும் சாதிகள் பற்றிய குறிப்பில், வேடர்கள் பற்றி எதனையும் குறிப்பிடவில்லை. அதாவது சிறைக்குடிகள்-ஊழியம் செய்யும் சாதிகளில் வேடர்கள் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. இதன்மூலம் அவர்கள் தனித்துவமான சாதிகளாக இனங்காட்டப்படுவதாக தெரிகிறது.
வெல்லவூர்க்கோபால் அவர்கள் மட்டக்களப்பு வரலாறு-ஒரு அறிமுகம் (2005) எனும் நூலில், மட்டக்களப்பின் பூர்விக் குடிகளாக இயக்கர், நாகரைக் குறிப்பிடுவதுடன், அவர்கள் காலத்தினை கி.மு.500க்கு முற்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். (பக்.27,45) இலங்கைக்கு புத்தரின் முதலாவது வருகை என மகாவம்சம் கூறும் காலத்துடன் தொடர்பு படுத்தியே இக்காலக்கணிப்பை அவர் குறிப்பிடுகிறார்.
 
 
மேலும், “இயக்கர் குடியிருப்புக்கள் நாடு முழுக்கப் பரவியிருந்தமையும் மட்டக்களப்புப் பிரதேசத்தே மாணிக்க கங்கை(கதிர்காமம்) மற்றும் விந்தனைப் பகுதிகளில் அவர்கள் பரவலாக வாழந்துள்ளமையும் தெரிகின்றது”(பக்.23) எனவும், நாகர்களின் இருக்கைகளாக “…மட்டக்களப்புப் பிரதேசத்தே நாகர்பொக்கணை(மன்னம்பிட்டி) , நாகர்முனை(திருக்கோவில்) , நாகன்சாலை(மண்டூர்) , சூரியத்துறை(மட்டக்களப்புப் பெருந்துறை) என்பனவும் குறிப்பிடப்படுகின்றன”(பக்.23) எனவும் வெல்லவூர்க்கோபால் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பில் இயக்கர், நாகர் குழுநிலை ஆட்சி அதிகாரத்தில் இருந்தனர்(பக்.45) எனவும் அவர் குறிப்பிடுகிறார். இவர்கள் ஈழம் முழுவதிலும் வாழ்ந்தவர்களாகவே இவ்வாசிரியர் குறிப்பிடுகிறார்.இலங்கை வரலாற்றில், கி.மு.454 தொடக்கம் கி.மு.437 வரையான காலப்பகுதி சரியான தகவல்கள் குறிப்பிடப்படாத போதும், உள்நாட்டுக் கலகக் காலம் என வரலாற்றில் சொல்லப்பட்டாலும் மீண்டும் இயக்கர், நாகர் வலிமை பெற்ற காலமாக கருதமுடியும் எனவும் வெல்லவூர்க்கோபால் குறிப்பிட்டுள்ளார்.வெல்லவூர்க்கோபால் அவர்கள் பல தகவல்களைக் குறிப்பிட்டுள்ள போதும் , குறிப்பிடும் தகவல்கள் எவ்வாறு பெறப்பட்டது என்பதனையம் அதன் உன்மைத்தன்மை பற்றியும் அறிய முடியவில்லை. ஆதாரங்கள் சரியான முறையில் காட்டப்பவில்லை.
 
 
க.த.செல்வரசகோபல் அவர்கள் “மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டை வரலாற்று அடிச்சுவடுகள்”(2005) எனும் நூலின் முதன்மைப் பதிப்பாசிரியன் உரையில், “ விந்தனை வேடரும் தம்பானையில் தாம் புலம்பெயர்ந்த தம்பன்னை எனும் இடத்தின் பெயரை மறந்து போகாமல் தாம் வாழும் இடத்திற்கு இட்டுக் கொண்ட தம்பானை வேடரும், புலிந்தரும், திமிலரும், கழுவந்தரும் முக்கிய பண்டை மட்டக்களப்பின் குடிகளராக வாழ்ந்தனர்”(இணையப்பிரதி-பக்.15) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேடர்கள் பற்றி விபரிக்கையில், “விஜயனின் இன அழிப்புக்கு அஞ்சிய இயக்கர்கள் எனும் பண்டைய தேசிய இனத்தவர்கள்”(இணையப்பிரதி-பக்.61) , “மகியங்கனையை அடுத்த விந்தனை எனும் இடத்திலும் மட்டக்களப்பு வாழைச்சேனையை அண்மித்த கழுவன்கேணியிலும் அம்பாரையை அடுத்த தம்பானை எனும் இடத்திலும் வாழ்ந்து வந்தனர்” , எனவும் “இவர்களை விட பெருந் தொகையானோர் இத்திசை வழியே கூட்டமாகச் சென்று மட்டக்களப்பைச் சார்ந்த சமவெளியில் தங்கலாயினர் (இணையப்பிரதி பக்.62) , எனவும் விபரிக்கப்படுகிறது.
 
தொடர்ந்து இவ்வாறு புலம்பெயர்ந்து குடியேறியவர்கள் பற்றிய விபரிப்பில், “விந்தனை தம்பான எனும் இடங்களிற் சென்றவர்கள் இருப்பிடம் மலைக் குன்றுப் பகுதிகளாக இருந்தபடியாலும் தமது சொந்த நாட்டில் அரச உத்தியோகங்களிலும் படைகளிலும் பணிபுரிந்தவர்களாதலால் தாம் முன்னர் வாழ்ந்த இயல்பு வாழ்க்கையை நடத்த முடியாத நிலையை அடைந்தனர். நாளடைவில் தம்மைச் சுற்றியுள்ள காட்டு வளத்திலேயே தமது வாழ்க்கையை நடத்தத் தொடங்கினர், அதாவது வேட்டை ஆடுவதைச் சீவனோபாயத் தொழிலாகக் கொள்ளலாயினர். இதனால் வேடர் என்ற காரணப் பெயரையும் பெற்றனர்.”(இணையப்பிரதி-பக்63) எனக் விபரிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் “1911ம் ஆண்டு குடிசன மதிப்புக் கணிப்பின்படி வேடர்களின் தொகை முழு இலங்கையிலும் 5312 பேர் மட்டுமே. மற்றக் குலங்களான திமிலர், புலியர், முக்கியர் எனப்படுவோர் தமது அடையாளங்களை மறந்து தமிழராகிவிட்டனர். அந்தக் காலகட்டத்தில், வேடக் குடியிருப்புகள் மகியங்கனை(விந்தனை) , தம்பானை, கழுவன்கேணி எனும் இடங்களில் மட்டும் இருந்தன. நாளடைவில் கழுவங்கேணி வேடர்களும் தமிழர் என்ற என்ற தேசிய அடையாளத்தைப் பெற்றுக் கொண்டனர்.” (இணையப்பிரதி-பக்.17) எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பின் தொல்குடிகளாக இன்றும் வாழ்ந்து வரும் வேடர்களின் வரலாற்று மூலம் தெளிவாக கண்டறியப்படாத நிலையிலும் ஆரியக் குடியேற்றத்தினால் துரத்தப்பட்ட இயக்கர்கள் (இயக்கர்களை இராவணனுடன் தொடர்பு படுத்தியும் நோக்கப்படுகிறது) பற்றிய தெளிவு ஏற்படுத்தப்படாத நிலையிலும் இவ்வாறு ஒரு முடிவுக்கு வருவது தவிர்க்க இயலாதது என்றே கருதலாம்.
 
 
இவரும் பல தகவல்களைக் குறிப்பிட்டுள்ள போதும் , குறிப்பிடும் தகவல்கள் எவ்வாறு பெறப்பட்டது என்பதற்கும் முடிவுகளுக்கும் ஆதாரங்கள் சரியான முறையில் காட்டப்பவில்லை. பெருமளவு ஊக முறையிலேயே முடிவுகள் காட்டப்படுகின்றன.வெல்லவூர்க்கோபால் அவர்கள், மட்டக்களப்பின் பூர்விக் குடிகளாக இயக்கர், நாகரைக் (வேடர்) குறிப்பிடுவதுடன் அவர்கள் காலத்தினை கி.மு.500க்கு முற்பட்டதாகவும் குறிப்பிடுகிறார்.
 
இவ்விளக்கங்களினால், மட்டக்களப்பின் பூர்விக மக்கள் வேடர்கள் என்ற முடிவிற்கு வரமுடிகிறது. ஆனால் பின்வரும் விடயங்கள் தொடர்ந்தும் சரிதிட்டமாக விளக்க முடியாத வினாக்களாக எஞ்சியிருப்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
மௌனகுரு அவர்களின் “குமார சடங்கினைச் செய்பவர்கள் வேடர் மரபில் வந்தோராவர்” என்ற குறிப்பும்(பக்.110) “வேட வெள்ளாளரிடம் நடைபெறும் இச்சடங்கு முறைகள்”(பக்.118) என்ற குறிப்பும், இது குறித்த கள ஆய்வும் தளவாயில் உள்ள பிரதான கோயிலை மையமாகக் கொண்ட அமைந்தது என்பதுவும் வேடர் மரபில் வந்த ஆனால் தற்போது அச்சமூகநிலையில் இருந்து வேறுபட்ட நிலையில் வாழுகின்ற சமூகத்தினையே அவர் குறிப்பிடுகிறார் என்பதனைக் காட்டுகிறது. அதாவது வேடர் மரபில் வந்தோர் அல்லது வேட வெள்ளாளர் பற்றியே அவர் குறிப்பிடுகிறார். மௌனகுரு அவர்கள், “ சில இடங்களில் முக்குவரிடையே வேட வேளாளர் என்ற ஒரு குடியும் காணப்படுகிறது. இது வேடரோடு முக்குவரிற் சிலர் கலந்தமையால் ஏற்பட்ட குடி என்று கூறலாம்”(பக்.93)எனவும் குறிப்பிடுகிறார்.
 
அப்படியாயின் இன்று வேடுவர்களாக அறியப்படுகின்ற சமூகங்களில் காணப்படும் தெய்வ-வணக்க முறைகள் எவை? அவற்றில் வெளிக்காட்டப்படும் அம்சங்கள் அவர்களின் வராலற்றினை அறிய உதவுகிறதா? என்பவை முக்கியமான வினாக்களாகும். இது குறித்து தற்போதைக்குப் போதிய தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை.
அடுத்து தொல்பொருள் சான்றுகள் மூலம் “வேடர்கள் மட்டக்களப்பின் பூர்விகக் குடிகள்” என்பதையும் நிருபிக்க முடியாமலும் உள்ளது. வேடர்கள் மட்டக்களப்பின் படுவான்கரைப் பிரதேசங்களில்தான் வாழ்ந்திருக்க முடியும் என்ற நிலையில், அப்பகுதியில் உள்ள தொல்பொருள் தடயங்கள் கண்டறியப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
 
வேடர்களுக்கும், இலங்கையின் பூர்விகக் குடிகளான இயக்கர் மற்றும் நாகருக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதுவும் மற்றொரு வினாவாகும். அதே வேளை, இவ் வேடர்களுக்கும் இராவணன் காலத்து அரக்கர்களுக்கும், புராதான ஈமத்தாழிகள் மூலம் அறியப்பட்ட தொல்குடியினருக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பதுவும் மற்றொரு வினாவாகும்.
 
அடுத்து குவேனி குலத்திற்கும் மட்டக்களப்பின் தொல்குடிகளான வேடர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் ஆராயப்படல் வேண்டும்.அடுத்து மட்டக்களப்பின் வரலாற்றில் வேடர்களையடுத்து ஆரம்பகால குடியேற்றவாசிகளாக கருதப்படும் திமிலருக்கும் வேடருக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதுவும் விளக்கப்படுத்தப்படவேண்டும்.
10982473_1595015064043641_79220899698374
 
 
10959628_1595015110710303_73251816973741
 
 
10387392_1595015140710300_52666030194469
 
 
10991173_1595015194043628_30185534477630
 
10968558_1595015264043621_28817083827133
 
 
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
திமுக நிறுவனர் அண்ணாவின் புகழ்பெற்ற உதாரணங்களில் ஒன்று:
 
"வெறும் கரண்டியை பிடித்திருப்பவர் அதை எப்படிவேண்டுமானாலும் ஆட்டி அசைத்து ஆவேசம் காட்டலாம். ஆனால் தன் கைக்கரண்டிக்குள் சீனியோ பருப்போ வைத்திருப்பவர் அப்படியெல்லாம் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கைக்கரண்டியை விரும்பியபடி ஆட்டி அசைத்து ஆவேசமெல்லாம் காட்டிவிட முடியாது".
 
காரணம் தன் கைக்கரண்டியில் இருக்கும் சீனியையும், பருப்பையும் கொட்டாமல் இருக்கவேண்டும் என்கிற கவலையுடனான பொறுப்புணர்வு. எனவே பருப்புக்கரண்டியை பிடித்திருப்பவர் தன் கைக்கரண்டியை கவனமாகத்தான் அசைக்க வேண்டும். அசைக்கவும் முடியும்.
 
தொலைவில் இருப்பவருக்கு இந்த சூட்சுமம் தெரிவதில்லை. வெறும் கரண்டிகளின் வெற்று ஆட்டம் அவர்களுக்கு வீரம் மிக்கதாகவும், பருப்புக்கரண்டிகளின் பொறுப்புணர்வு பயந்தாங்கொள்ளித்தனமாகவும் தோன்றும். அது பார்ப்பவருக்கு ஏற்படும் தோற்ற மயக்கமே தவிர, பருப்புக்கரண்டிகளின் போதாமையல்ல.
பொறுப்பில் இருப்பவர்களும், தம் செயல்களின் விளைவுகளுக்கான முழு பொறுப்பு ஏற்பவர்களும் வாய்வீரம் காட்டமாட்டார்கள். அவர்களின் சிந்தனை, சொல், செயல் எல்லாமே, பொறுமையுடனும், பொறுப்புடனும் இருக்கும். வெறும் கரண்டிகளின் வீராவேசத்தை மட்டுமே பார்த்துப் பழகி வளர்ந்த தலைமுறைக்கு வெறும் கராண்டி எது, பருப்புக்கரண்டி எது என்று பாகுபடுத்திப் பார்க்கத் தெரியவில்லை.
 
அது அவர்களின் குற்றமல்ல. எது வெறும் கரண்டி? எது பருப்புக்கரண்டி என்று பிரித்துப்பார்க்கும் பயிற்சியை அவர்களுக்கு அளிக்கத்தவறிய பருப்புக்கரண்டிகளின் பொறுப்பு தவறியமையே முதன்மைக் காரணம்
  • தொடங்கியவர்

11043227_678546948941694_281012182734267

வீடு வாங்கினால் மனைவி இலவசம் என ஆன்லைனில் வினோத விளம்பரம் !

ஜகர்த்தா : வீடு வாங்கினால் மனைவி இலவசம் என வினோத விளம்பரம் ஆன்லைனில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இந்த வினோதமான விளம்பரம் தரப்பட்டுள்ளது வேறு எங்கும் அல்ல இந்தோனேஷியாவில் தான். இரண்டு படுக்கை அறைகள், கார் பார்கிங் வசதிகள், மீன் குளம் ஆகிய வசதிகளை கொண்ட வீட்டை வாங்குபவர்கள் இலவசமாக அந்த வீட்டின் உரிமையாளரை மணந்து கொள்ளலாம் என இந்தோனேஷியாவில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. 40 வயதாகும் விதவை பெண்ணான வினா லியா என்ற அழகுகலை நிபுணர் தான் அந்த வீட்டின் உரிமையாளர். அவர் தான் இந்த வித்தியாசமான விளம்பரத்தை அளித்துள்ளார்.

 

10430454_389385434566885_618912765773616

  • தொடங்கியவர்
 நாதஸ்வர மேதை அளவெட்டி என்.கே.பத்மநாதன்
 
10429461_10205777420015929_1767767942157
 
யாழ்பாணத்தில் நாதஸ்வரம் வாசித்தவர்களில் இலங்கை, இந்திய, மலேசிய, சிங்கப்பூர் அளவில் பிரபலம் ஆகிய பலருள் ஒரு நாதஸ்வர மேதை அளவெட்டி என்.கே.பத்மநாதன் என்று சொல்லுறார்கள். அப்படி பலர் சொல்வதில் நிறைய அசைக்கமுடியாத உண்மை இருக்கு என்பதை அவர் வாசிக்கும் போது ஸ்வரம்களை மரத்தால் செய்த ஒரு நீண்ட ஊதுகுழலில் வழிய விட்ட நாதஸ்வரம், அதில் அவர்கள் வாசித்து அசத்திய கர்நாடக சங்கீதம் என்றால் என்ன எண்டு தெரியாத காற்சட்டை போட்டுக் கொண்டு விடலையாக அலைந்த சின்ன வயசிலேயே அந்த இசை பலமுறை மயக்கிய விதத்தில் அறிய முடிந்தது.
 
என்.கே.பத்மநாதன் தந்தையார் கந்தசாமியும் ஒரு நாதஸ்வரக் கலைஞரே. இவர் கும்பழாவளை என்ற ஒரு சின்னப் பிள்ளையார் கோவிலோடு நெருங்கிய தொடர்புடைய ஒரு கலைஞர். மகன் பத்மநாதனும் இளம் வயது தொடக்கம் வலிகாமம் வடக்கில் இருந்த கும்பழாவளைப் பிள்ளையாருக்கு நாதஸ்வர ஓசையிலே ஆண்டவனை அனுதினமும் ஆராதிக்க வைத்ததால் அளவெட்டி என்.கே.பத்மநாதன் என்று அவரை எல்லாரும் அழைக்க வைத்தது.
 
பத்மநாதன் அவரோட இளம் வயது தொடக்கமே மிகவும் ஒழுக்கத்துடன், கும்பழாவளைப் பிள்ளையாருக்கு அவரின் தந்தையார் நாதஸ்வரக் கலைஞர் கந்தசாமியுடன் சேர்ந்து வாசித்து இருக்கிறார். அவருடைய மூத்த சகோதரர் பாலசுப்பிரமணியம் என்பவர்தான் இவரை விடவும் நாதஸ்வர ஞானம் அதிகமாக சிறு வயதில் இருந்த போதும், அவர் ஆங்கிலங் கற்று இலங்கை நிர்வாக சேவையில் அரசாங்க உத்தியோகம் கிடைத்ததால் நாதஸ்வரத்தை தொடரவில்லை என்கிறார்கள். தன்னைவிடவும் தன்னுடைய தமையனார் சிறந்த சங்கீத அறிவு இயற்கையாகவே உள்ளவர் என்று என்.கே.பத்மநாதன் தன்னடக்கமாகச் சொல்லி இருக்கிறார்.
பத்மநாதன் இளவயதிலேயே இசைக் கலையில் ஈடுபாடுள்ளவராக தமது தந்தையாரையே குருவாகக் கொண்டு அதன் நுட்பங்களை கற்றுக்கொள்ள ஆரம்பித்த போதும், அவரிடம் பெற்ற பயிற்சியோடு நில்லாது மேலும் பயில்வதற்காக யாழ்ப்பாணம் பி.திருநாவுக்கரசுபிள்ளையிடமும் நாதஸ்வர இசைப்பயிற்சி பெற்றார். மேலும் இசைப்பயிற்சி பெற இவருக்கு உதவியாக இருந்தவர் இவரது மாமனாராகிய கணேசரத்தினம் என்பவரே.
கணேசரத்தினம் அவர்கள் இந்தியாவிலிருந்து அழைத்து வந்து தம்முடன் தங்க வைத்திருந்த நாதஸ்வர மேதாவிகளின் வழிகாட்டல் இவருக்குக் கிடைத்ததே இவர் அத்துறையில் மேலும் மேலும் முன்னேற வாய்ப்பளித்தது. அது மட்டுமல்லாமல் அவ் வித்துவான்களுடன் இணைந்து வாசிக்க வாய்ப்புக் கிடைத்ததும் அவர் முன்னேற வழி வகுத்தது.
 
நாதஸ்வரக் கலையில் சுருதி சுத்தமாக, மேளகர்த்தா ராகங்களின் உருப்படிகளை ஒரு தனி ஸ்டைலில் வாசிப்பதில் வித்துவான்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். நா. க. பத்மநாதன் என்பது போட்டி பொறாமை அதிகம் இருந்த யாழ்பாணத்தில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. கேள்வி ஞானமும், கடின பயிற்சியும், விடாமுயற்சியும் இவர் தமக்கென ஒரு தனியான நாதஸ்வர வாசிப்பு வழியை உருவாக்க வழிசமைத்தது.
 
இவர் தாமாகவே ஒரு இளம் இசைவல்லார் குழுவை உருவாக்க எண்ணி, நாதஸ்வரம் நன்றாக வாசித்த கோண்டாவில் பாலகிருஷ்ணன், தவில் வாசிப்பதில் திறமையுடன் இருந்த இணுவில் தட்சணமூர்த்தி, குமரகுரு முதலியவர்களையும் தம்முடன் இணைத்து ஒரு குழுவை அமைப்பதில் வெற்றி கண்டார். அதில் கோண்டாவில் பாலகிருஷ்ணன் இளவயதிலேயே இறந்துவிட்டார். நாதஸ்வரக்கலையில் பல சாதனைகள் செய்ய நாதஸ்வரக் கலாநிதி, இன்னிசை வேந்தன், கலாசூரி முதலிய பட்டங்கள் அவரின் அசாத்திய திறமைக்கு கிடைக்கப் பெற்றன.
 
நல்லூர் முருகன் கோவில் பிரதான கலைஞராக ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் நாதஸ்வரம் வாசிக்கும் வாய்ப்பு தொடர்ந்தும் பல ஆண்டுகளாக இவருக்குக் கிடைத்தது இவரின் நாதஸ்வரக் கலைத் திறமைக்கு கிடைத்த பாராட்டு. இருவத்தி ஐந்து நாள் திருவிழாவிலும் அவர் வாசிக்கும் போது அதைக் கேட்க என்றே இசை ரசிகர்கள் அவரைச்சுற்றி மெய் மறந்து நிற்பார்கள்,
 
மேற்கு வீதியில் முருகக் கடவுள் உலா வரும்போது எப்போதுமே " நகுமோ கனலே நீ நாதாலி " என்ற ஆபேரி ராகக் கீர்த்தனை வாசிப்பார். தெற்கு வீதியில் " தெலி சினோடு ராமா " என்ற முத்துசாமி தீச்சிதர் உருப்படி வாசிப்பார் . அவர் எந்த நிகழ்சியிலும் குத்துப்பாட்டு மெட்டில் உள்ள சினிமாப் பாடல்கள் வாசிப்பதில்லை,நல்ல ராகங்களில் வந்த பழைய சினிமாப் பாடல் சில நேரம் வாசிப்பார், அதைத் தன்னுடைய பிரத்தியேக தரமாக வைத்திருந்தார்
இலங்கையில் தயாரான ஈழத்து இரத்தினம் எடுத்த முதல் சினிமாஸ்கோப் தமிழ்த் திரைப்படம் "தெய்வம் தந்த வீடு " நாதஸ்வரக்கலையை முக்கியமான கருப்பொருளாக வைத்து எடுக்கப்பட்டது . அந்தப் படமே நாதஸ்வரக்கலைஞன் என்.கே.பத்மநாதன் இசை அமைத்து வெளிவந்தது. 1979ல் இங்கிலாந்தில் வாழுந் தமிழர்களால் அழைக்கப்பட்டு அங்கு இசை பரப்பக்கிடைத்த வாய்ப்பினைத் தொடர்ந்து பல நாட்டுத் தமிழர்களிடமிருந்தும் இவருக்கு அழைப்புக்கள் கிடைக்க அங்கெல்லாம்சென்று அந்த நாட்டு மக்களின் பாராட்டினையும் பெற்றார்.
 
நாதஸ்வரக் கலையைப் பரப்பத் தமக்கொரு நிலையான வாரிசு வேண்டுமென்பதால் தமது புதல்வர்களில் ஒருவரான முரளி என்பவரை அக்கலையின் நுணுக்கங்களை அறிய இந்தியாவுக்கு அனுப்பிப் படிப்பிக்க விரும்பினார். முரளியை இந்தியாவுக்கு அனுப்பி அங்கு கலைவன்மை பெற்று முரளி இலங்கை திரும்பிய சில மாதங்களில் அந்த நேரம் யாழ்பாணத்தை அரசாண்ட இந்திய அமைதி காக்கும் IPKF படையினரின் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிக் கொல்லப்பட்டார்.
இது கலைஞர் பத்மநாதனது வாழ்வில் ஆறாத மனப்பாதிப்பாக அமைந்துவிட்டது. அவருடைய மகள் கனகாம்பரியை ஒரு சிறந்த கர்நாடக சங்கீதப் பாடகியாக்கி அந்த சோகத்தை ஒருவிதத்தில் அவரால் மறக்கடிக்க முடிந்து இருக்கிறது.கனகாம்பரி யாழ்பாண இசைக் கச்சேரி மேடைகளில் மிகச் சிறப்பாக கர்நாடக சங்கீதம் பாடிய
ஒருவர் .
அவர் மகன் முரளி படுகொலை செய்யப்பட்ட அவலம் நடந்த பின்னும் கலைப்பணியைத் தொடர்ந்து வந்தார். இங்கிலாந்திலிருந்து இவருக்கு மேலுமொரு அழைப்பு வந்தது. அழைப்பை அனுப்பியவர்கள் அவரது இசை விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர். கலைஞர் பத்மநாதனும் இங்கிலாந்து செல்ல ஆயத்தம் செய்து கொண்டிருந்தார்.சில நாட்களில் அவரின் இசை விழாவுக்கு போகுமுன்னரே அவர் நாதமும் பிரம்மமும் ஆகி இயற்கையுடன் சங்கமித்து விட்டார்..
 
நாவுக் அரசன் 
ஒஸ்லோ 11.03.15
  • 2 weeks later...
  • தொடங்கியவர்

1459134_10152679743336128_71345908551240

  • தொடங்கியவர்

பயணம், பெரும் பிரிவின் தொடக்கம்

 

 

 

batti.jpg

 

1984 -85 ம் ஆண்டின் இறுதிக் காலங்கள், இழக்கப்போகும் பெறுமதிமிக்க  காலங்களைப் பற்றிய எதுவித அறிகுறிகளுமில்லாமல்  ஓடிக்கொண்டிருந்தது. ஊருக்குள் பிரச்சனைகள் மெதுவாய் தொடங்கியிருந்த காலம்.  19 - 20 வயதுக்கான எவ்வித முதிர்ச்சியும் இன்றி, எவ்வித கனவுகளும் இன்றி, பல்கலைக்கழக  அனுமதிக்கான பரீட்சை எழுதிவிட்டு, பெறுபேறுகளுக்காகக் காத்திருந்தேன்.
 
 
சிங்கள நண்பர்கள் பலர் ஊரைவிட்டு மெது மெதுவாய் இடம் பெயர, இஸ்லாமிய நட்புகளும் பிரச்சனைகளின்  காரணமாக தொலைந்து கொண்டிருந்தன. இருப்பினும் துணிந்தவர்கள் சிலரின் நட்புகள் மங்கலான மாலைப் பொழுதுகளில் தொடரத்தான் செய்தன.
ஒன்றாய் பழகிய மூவின நட்புகளும் தனித்தனியே தொடர்பில்லாது தம்வழியே சென்றுவிட்டாலும், நட்பு என்னும் சொல் மட்டும் தனது தன்மையை இழக்காதிருந்தது என்பது பல ஆண்டுகளின் பின் தான் எனக்குப் புரியும் என்பது எனக்கு அன்று தெரியாதிருந்தது.
ஒரு புறம் தமிழ் முஸ்லீம் கலவரங்கள், இராணுவத்தினரின் கெடுபிடிகள், இயக்கங்ளின் வீரப்பிரதாபங்கள் என எமது ஊரின் காற்றில் கூட விறுவிறுப்பு கலந்திருந்த காலமது. கைதுகளும், மரணங்களும் பழகிப்போயின. நண்பர்கள் தீடீர் என காணாமல் போய் முறுகிய உடம்புடன் இறுகிய பார்வையுடன் 4 -5 மாதங்களின் பின் பின்மாலைப் பொழுதுகளில் வந்து சந்தித்தனர். ஒரு சிலர் இடுப்பில் இருந்த சில ஆயுதங்களையும் காட்டினர். சிலர் கொள்கைப்பரப்புரைகளும் செய்தனர். 
 
சகோதர முறுகுநிலை தொடங்கியிருந்தது. நண்பர்களாய் இருந்தவர்களும் முறாய்த்துக்கொண்டனர். அல்லது முறாய்க்க கட்டளையிடப்பட்டனர்.
 
ஒரு நாள் மட்டக்களப்பு ரஷீடியாஸ் குளிர்பானக்கடையினுள் எமக்கும் ஒரு ”அண்ணர்” வகுப்பு எடுத்தார். தமிழீழ விடுதலை ராணுவம் என்றார். அரசியற்பிரிவு, ராணுவப்பிரிவு, முழுநேரப் போராளி, பகுதிநேரப் போராளி என்றார். நான் பகுதிநேரம் என்றேன். எனது பெயர் விபரம் எழுதிப் போனார். பின்பொருநாள் ஏறாவூர் ரயில்நிலையத்தருகில் ஒரு கைத்துப்பாக்கியையும் காட்டினார். அதன் பின்பு அவர் வரவும் இல்லை. அவர் வரவில்லை என்று நான் கவலைப்படவும் இல்லை. 
 
ஒரு முறை ”ஹர்த்தால்” என்று சுவரொட்டி எழுதவேண்டியேற்பட்டது. அழகான கையெழுத்தை கொண்டிருந்த ஒரு நண்பனை காட்டுக்குள் அழைத்துப்போய் சுவரொட்டியை எழுதவைத்தோம். அதுவே அவன் தொழிலாகியது பின்னாலில். எல்லா இயக்கங்களுக்கும் அவனே சுவரொட்டி எழுதினான். அந்த சுவரொட்டியை ஒட்டுவதற்கிடையில் நான்கு தடவைகள் மூத்திரம் போயிருப்பேன். 
 
தினமும் ஒருவர் வீதிக் கம்பத்தில் தலை சரிந்து கிடந்தார். ஊராரும் சிவப்பு நிறத்தில் இருந்த நோட்டீஸ்களை நம்பத் தொடங்கயிருந்த காலம். வீதிக்கம்பத்தில் சரிந்திருந்தவர்கள் எல்லோரும் குற்றவாளியாக்கப்பட்டார்கள். அவர்களை சரித்தவர்களின் குற்றங்கள் பற்றி யாரும் பேசமுன்வரவில்லை. எவரும் கொல்லப்பட்டவர்களின் வலியை கண்டுகொள்ளவும் இல்லை.  கொலைசெய்யப்படுவதற்கு முன்னான வினாடியில் கூட தான் மன்னிக்கப்படலாம் என்று அவர்கள் எண்ணியிருக்கக்கூடும். துப்பாக்கியின் விசை அழுத்தப்படுதை காணும் போது அவர்கள் தமது குடும்பத்தை, குழந்தையை, காதலியை நினைத்திருக்கக்கூடும். சில வேளைகளில் ”நாசமாய்போவீர்கள்” என்றும் சபித்திருக்கவும் கூடும்.
ஒரு ‌முறை பெருங்கலவரம் மூண்டது தமிழர்களுக்கும், இஸ்லாமியர்க்கும் இடையில். எனது ஊர் எல்லையில் இருந்ததால், ஊரே இடம் பெயர்ந்தது. வந்தாறுமூலையில் உள்ள கிழக்குமாகாண பல்கலைக்கழகம் அகதிமுகாமனது. வீடு வீடாய் சென்று உணவு சேகரித்துவரக் கட்டளையிட்டார்கள் ”அண்ணா”க்கள். மாலையில் கத்தி, கோடாலி, அலவாங்கு, திருக்கைவால் போன்ற ஆயுதங்களுடன் செங்கலடிச்சந்ந்தியில் காவல் வேறு போட்டார்கள். நாங்கள் அருகே இருந்த ஒரு பேக்கரிக்குள் 304 விளையாடிக்கொண்டிருந்தோம்.
 
நண்பர்கள் சிலர் வெளிநாடு போயினர். சிலர் ”கப்பலுக்கு” போயினர். நாங்கள் சிலர் மட்டும் எங்கும் போகவில்லை. எங்கு போவது என்றும் எமக்குத் தெரிந்திருக்கவில்லை. நாம் குந்தியிருக்கும் சந்திக்கு ஆமி வரும்போது ஓடுவதும், அவர்கள் அங்கிருந்து அகன்றதும் நாம் திரும்பி வருவதும் வழமையாகியது.
இப்படியான நாட்களில் தான் ஊரில் இருந்தால் பிரச்சனை என்பதால் அம்மா என்னை இந்தியா அனுப்ப  யோசித்தார். இதை அறிந்த இரு நண்பர்களும் என்னுடன் இணைந்துகொள்ள இந்தியாப் பயணம் தொடங்கிற்று.
 
தெரிந்த பெரியவர் ஒருவருடன் நாம் கொழும்பு போய்,  அங்கிருந்து வீசா எடுத்து இந்தியா போவது போல் ஒப்பந்தமாகி நண்பர்களின் பெரும் பிரியாவிடையுடன் 1985ம் ஆண்டு கார்த்திகை  மாதத்தின் இறுதி நாட்களில் ஒரு நாள், காலைப் புகையிரதத்தில் கொழும்பு நோக்கிப் புறப்பட்டடோம். புகையிரதம் எமது Eravur United விளையாட்டுத்திடலைக் கடந்த போது, தரிசாய் கிடந்த நிலத்தை மூவின நண்பர்களும் சேர்ந்து செப்பனிட்டு விளையாடிக்களித்த நாட்கள் நினைவிலாடியது. 
 
அன்றைய  அந்தப் பயணம் , ஒரு பெரும் பிரிவின் தொடக்கம் என்பதும், அதுவே என் வாழ்வினை நிர்னயிக்கப்போகிறது என்பதும் எனக்கு புரிந்திருக்கவில்லை அன்று. ஒரு சாதாரணப்பயணம் போலிருந்தது அது. பெரும் பயணங்கள் அனைத்தும் சாதாரணமாகவே தொடங்குகின்றனவோ என்னவோ?
வெய்யில் காய்ந்து, காற்றும் காய்திருந்திருந்த தென்னைமர தோட்டங்களினூடாகவும், வெட்ட வெளிகளினூடாகவும் புகையிரதத்தின் வேகத்தில் தலைமுடி காற்றிலாட, காலம் செய்யப் போகும் கோலத்தினை உணராமல் பயணித்துக்கொண்டிருந்தேன். புகையிரதம் எதையும் கவனிக்காமல் கட கட கடவென ஓடிக்கொண்டிருந்தது, வாழ்வைப்போல்.
 
இருபத்திஏழு ஆண்டுகளின் பின்பான இன்று இதை எழுதிக்கொண்டிருக்கும் போது ஊரின் வாசனையையும் காட்சிகளையும், நட்பின் ஈரத்தையும், காற்றின் வெம்மையையும் மனம் நுகர்ந்ததை உணர்கிறேன். ஏகாந்தமான அனுபவம், அது. என் குழந்தைகளின் வாசனையை நான், குழந்தைகளின் அருகாமையின்றியே அறிவது போன்றது அது.
 
காலமும், வாழ்வும் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. நினைவுகளைச் சுமந்தபடி அவற்றுடன் பயணித்துக்கொண்டிருக்கிறேன் நான். நீங்களும்தான்.
இன்றைய நாளும் நல்லதே!.
 
via FB  மூலம் visaran.blogspot.com
  • 3 weeks later...
  • தொடங்கியவர்
“உதயா உதயா” என்றவுடன் எனக்கு ஞாபகம் வருவது ரகுமானோ ஹரிகரனோ இல்லை.. அந்தபாட்டு வெளிவந்தகாலத்திலும் எனக்கு அது சரியாக பிடிபடவில்லை. ஆனால் இரண்டு சுப்பர் சிங்கர் பாடகர்கள் அந்தப்பாட்டை பாமரனனான எனக்கு புரியவைத்தார்கள். ஒருவர் ரவி. அடுத்தது சத்யபிரகாஷ். சான்ஸே இல்லை. “மூச்சின் குழிகளிலே…உயிர் ஊற்றி அனுப்பித்துவைத்தேன்” என்று பாடுகையில் வைரமுத்து சொன்ன வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா உருண்டையை கீறி வெளிய இழுத்து கையில தந்த மாதிரி இருக்கும். சுப்பர் சிங்கரின் அதிசய கண்டுபிடிப்புகள் இருவரும். சுப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் முக்கியத்துவம் இப்படியான தருணங்களாலேயே நிர்ணயிக்கப்படுகிறது.
 
ஆனால் வழமைபோல இறுதியில் ரவிக்கு முதலிடம் கிடைக்கவில்லை. சத்தியபிரகாசின் நிலைமையோ இன்னமும் மோசம். இறுதிச்சுற்றில் மிகத்திறமையாக ஓமணப்பெண்ணே பாட்டை தன்னுடைய ஒரிஜினாலிட்டியும் சேர்த்து பாடியும் மக்கள்ஸ் கணக்கெடுக்கவில்லை. முதலிடமில்லை. இரண்டாமிடமுமில்லை. மூன்றாமிடம். இசை தலைகுனிந்த தருணம் அது. நடுவர்கள் தீர்மானித்தும் மக்கள் வாக்கு கிடைக்காததால் சத்யபிரகாஸ் மூன்றாமிடம் போனார். சந்தோஷ் இறுதிச்சுற்றில் சொதப்பினாலும் (பின்னர் அவர் தன்னை நன்றாகவே வளர்த்துக்கொண்டார்) நல்ல பெடியன் என்பதால் இரண்டாமிடம் கொடுத்தார்கள். அதற்குப்பின்னர்தான் நல்ல பாடகனுக்கு சுருதி, தாளம், பாவத்தை தாண்டி இனம், குணம், அம்மா, பாட்டி, மொழி, வண்டி வண்டியாக கண்ணீர் எல்லாம் முக்கிய தகுதியாகின.
 
சத்யபிரகாசுக்கு மூன்றாமிடம் கொடுத்ததை மனம் ஒப்புக்கொள்ளவே மறுத்தது. “சத்தியப்ரகாஷ்க்கு vote போடாமல் சாய்சரண் க்கு "Super Singer" title குடுத்து விட்டார்களே என்று புலம்புவதில் அர்த்தமில்லை என்று என்னுடைய முதல் பதிவான அரங்கேற்றவேளையில் எழுதியிருப்பேன். சாய்சரண் திறமையான பாடகர் என்பதில் சந்தேகமில்லை. சத்யபிரகாஸ் deserved more என்பதுதான் என் அப்போதைய ஆதங்கம்.
சென்ற சீசனில் ரகுமான் வந்திருந்தபோது அவருக்கு முன்னாலே சத்யபிராகாசுக்கு பாடும் சந்தர்ப்பம். அதே ஒமணப்பெண்ணே. அடித்தாடினார். ரகுமான் வழமைபோல நல்லாருக்கு என்றவகையில் ரெண்டு வார்த்தை சொன்னாரேயொழிய அதுக்குமேலே அடக்கியே வாசித்தார்.
 
இப்போது இரண்டு மூன்று நாட்களாக ஓகே கண்மணி வசம். சாஷா திருப்பதியின் குரலில் “நானே வருகிறேன்” பாடலில் மூழ்கிக்கிடக்கிறேன். என்ன குரல்டா இது. கோடியில் ஒருத்தருக்குத்தான் இப்படி குரல் வரும். ஏற்கனவே காவியத்தலைவனில் மிரட்டிய குரல். கொடை.
அந்தப்பாட்டை கேட்டுகொண்டேயிருங்கள். திடீரென்று ஆண்குரல் ஒன்று வரும்.
“சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே, சின்னஞ்சிறு சின்னஞ்சிறு அதிசயமே”
அட, நம்ம சத்யபிரகாஷ்!
ரகுமான் கொடுத்திருக்கும் இந்த வாய்ப்பு சத்யபிரகாஷுக்கு மட்டுமானதல்ல. திறமையாளர்களுக்கு புத்துயிர் கொடுத்திருக்கும் நம்பிக்கை டொனிக்.
 
FB
Sathyaprakash Dharmar Ravi Gopinath
 
 

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

10409749_1556550721284033_85857892186852

சிவலிங்கம் ஜயா

 

ஒருகாலத்தில் இலங்கை ஒலிபரப்புத்துறை யில் அன்னை வானொலி தந்த சிறுவர் நிகழ்வான வானொலி மாமா கதை கேட்பது,மறுபுறம் சிந்தாமணி வார இதழ் வாங்குவதும் சிறுவர் கதை அரசன் "மாஸ்டர் சிவலிங்கம் மாமா" வின் கதைக்காகத்தான் 

அவர் கதைசொல்லும் பாணி அலாதியானது.பல்வேறு ஓசைகளையும் தன் நாவால் சிறுவர்களுக்கு கொனவர்வதிலும் சம்பவங்களை வர்னிப்பதிலும் வல்லவர்.
என்றும் நீங்காத மட்டக்களப்பு பெற்ற அற்புத கலைஞர்களில் ஐயாவும் ஒருவர்.
 
FB மட்டு மண்

Edited by Athavan CH


ae5566a4dfd347c73d65198797ce2eb1

Edited by BLUE BIRD

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

11175040_10206122543403798_8126563087417

 

பாலும் பிளேன் டீயும் பாணும் பருப்பும் 
ஒவ்வொரு நாளும் கலந்துணக்கு நான் தருவேன், 
கூப்பன் கொடுக்கும் துங்கக் கரிமுகத்து தூமணியே
சம்பலுக்கு தேங்காய் துருவ திருவலையத் தேட முதல் 
வேளைக்கு சங்கக்கடையைத் திறந்து நிவாரணம் தா.!
 
 

நாவுக் அரசன் 
ஒஸ்லோ
  • தொடங்கியவர்
பாடல்களுக்கு வயசாவதில்லை.
 
காலையிலிருந்து தேனிசைத்தென்றல் தேவாவின் பாடல்களோடு இருக்கிறேன்.
தொண்ணூறுகள் காதல் படங்களில் காலம். முன்னரும் பின்னருமான காலப்பகுதியிலும் காதல் படங்கள வந்தனதான். ஆனால் தொண்ணூறுகளில் காதலை மட்டுமே மையப்படுத்தி, தலைப்பிலிருந்து எண்ட் கார்ட் வரை காதல் காதல் என்று இயக்குனர்கள் உருகினார்கள். எல்லாமே காதல் கோட்டை என்ற ஒரு படம் செய்த அநியாயம். நமக்குவேறு பதின்ம வயதா; சுவலட்சுமி, தேவயாணி, கௌசல்யா என்று வரிசையாக சேலையிலேயே கவுத்தார்கள். பிறகு சிம்ரன் பாஸ்கட் போல் விளையாடிக் கவுத்தார். ரம்பா மின் விசிறிக்கு முன்னாலே நின்றால், கீர்த்தியின் வாயிலிருந்த இலையான்கூட காத்துக்கும் பறக்காமல் ஆவெண்டு பார்க்கும்.
 
எல்லாமே காதல் படங்கள் என்பதால், இசையிலும் நிறைய காதல் இருந்தது. தேவாவின் பொற்காலம் அது. அப்போது ராஜா, ரகுமான், வித்யாசாகர் போன்ற இசையமைப்பாளர்கள் போட்ட மெலடிகளின் எண்ணிக்கையை விட தேவா அதிகமாகவே மெலடிப்பாடல்களை தந்திருக்கிறார் என்று தோன்றுகிறது. அதுவும் மரண மொக்கைப்படங்களுக்கெல்லாம் அருமையான பாடல்களை கொடுத்திருப்பார். அதற்காகவே சந்திரன் மாஸ்டரிடம் போய்த்தவம் கிடந்த காலங்கள் ஞாபகம் வருகின்றன. இனியவளே என்று ஒரு படம். பாடல்கள் அத்தனையும் செம. அன்பே டயானா என்று இன்னொன்று. அதிலே “ஒருமுறை சொன்னால் போதுமா” என்று ஹரிகரனும் சுஜாதாவும் பாடின டூயட் இருக்கு. செம. தேவா பாட்டுக்காகவே படம் ஓடிய காலமொன்று இருந்தது. “காலமெலாம் காதல் வாழ்க”, “உன்னுடன்”, “கண்ணெதிரே தோன்றினால்”, “நினைத்தேன் வந்தாய்” போன்ற படங்களில் தேவா மட்டும் இருந்திருக்காவிட்டால் நிலைமை என்ன?
 
ரகுமான் புதுப்பாடகர்களை அறிமுகப்படுத்துவார். ஆனால் அவரின் படங்கள் வருடத்துக்கு ஐந்தோ ஆறோதான் வெளிவரும். அத்தனை பாடல்களும் சுப்பர் ஹிட்டாக இருக்கும்தான். ஆனால் யாருக்கு காணும்? ராஜா அவ்வப்போது “மீட்டாத ஒரு வீணை” என்பார். வித்யாசாகரை ஏனோ தெரியாது நம்மாட்கள் அதிகம் பயன்படுத்தவில்லை. ஆக நமக்கு தீனி போட்டது தேவாதான். அந்தப்பாடகர்களுக்கு அதிக சந்தர்ப்பம் கொடுத்ததும் தேவாதான். ஹரிஹரன், ஹர்ணி, சுஜாதா, உன்னிமேனன், அனுராதா ஸ்ரீராம் எல்லாம் அதிகம் பாடியது தேவாவுக்கே. தேவா அதிகம் சுதந்திரமும் கொடுப்பார். மனம் விரும்புதேயில் ஹர்ணி அடிக்கிற ஒரு பிர்கா சேர்கஸ் அந்த ரகம்.
 
ஹரிகரனுக்கும் பாடல்களை அள்ளிக்கொடுத்தது தேவாதான். “ஒருமணி அடித்தால்” ஒரு மரண ஹிட். கொஞ்சநாள் பொறு தலைவா இன்னொன்று. “என் மனதை கொள்ளை அடித்தவளே, வண்ண நிலவே” என்று இன்று முழுக்க லிஸ்ட் பண்ணிக்கொண்டேயிருக்கலாம்.
எங்கள் வகுப்பில் பார்த்தி ஒரு தேவா பக்தன். ப்ரியா ரகுமான் பக்தன். அடிக்கடி இருவருக்குமிடையில் சண்டையே வரும். பார்த்தி தேவாவின் எந்த புது அல்பம் வந்தாலும் சீடி வாங்கி வந்துவிடுவான். நான் என்னிடமிருக்கும் பழைய கே.டி.கே கசட் கொடுத்து அழிச்சு ரெக்கோர்ட் பண்ணித்தாடா என்று கேட்பேன். என்னிடம் பெரிய கசட் ரேடியோ எதுவும் இருக்கவில்லை. ஒரு சின்ன பனசொனிக் மோனோ ரேடியோ. ஒரு டைனமோ சைக்கிள். அவ்வளவுதான். ரிவைண்டு எல்லாம் பேனையால் பண்ணுவதுதான். தொண்ணூறுகளில் பிற்பகுதியில் ஆர்மி கொன்றோலில் யாழ்ப்பாணம் வந்தாலும் இந்த கரண்டுச்சனியன், நல்லபதிவுக்கு கிடைக்கும் லைக்கு போல அவ்வப்போதுதான் வந்து போகும். நம்பமுடியாது.
 
ஆனால் பார்த்தியிடம் ஒரு கார் பட்டறி இருந்தது. ஒரு ஸ்டீரியோ செட்டும்.இருந்தது. போட்டால் வீடே அதிரும். நகுமோ, தொட தொட மலர்ந்ததென்ன எல்லாம் அவன் செட்டில் கேட்டபோது கிடைத்த மகிழ்ச்சி பின்னாளில் எந்த ஹோம் தியேட்டரிலும் எனக்கு கிடைக்கவில்லை. ஒருமுறை இன்னொரு புதிய ஸ்டீரியோ செட் வாங்கியிருப்பதாக சொல்லி என்னை அவன் வீட்டுக்கு அழைத்துப்போனான். நேருக்கு நேர் வெளிவந்த டைம். எங்கெங்கே எங்கெங்கே என்று ஆஷாவும் ஹரியும் பாடின பாட்டு. புது செட்டிலயும், பழைய செட்டிலயும் மாறி மாறி பாட்டை போட்டுக்காட்டி எதில நல்லாயிருக்கு என்று கேட்டு கடுப்பேற்றினான். பேஸ் முழங்கும் பாட்டு அது. நம்ம வீட்டில் டைனமோ அதனை நார் நாராக கிழிக்கும். நான் கடுப்பில், “பழைய ரேடியோவிலயே நல்லா இருக்கு மச்சான்” என்று சொல்லி அவன் முகம் கோணியதை ரசித்தேன்.
 
ஏ. எல் பரீட்சை நெருங்குகிறது.
அஜீத்தின் உன்னைத்தேடி என்றொரு படம் வெளிவருகிறது. சுந்தர் சி படம். கிளாஸ் கட் பண்ணி மாஸ்டரிடம் போகிறோம். மூன்று காரணங்கள். ஒன்று மாளவிகா. மற்றது தேவா. மூன்றாவது ஹரிஹரன். படத்தில் நான்கு பாடல்களை ஹரிஹரன் பாடியிருந்தார். எல்லாமே கிளாஸ். அதிலே ஒன்று “நாளை காலை நேரில் வருவாளா”. பாட்டை பார்த்தி வீட்டிலிருந்து கேட்ட ஞாபகம் இன்னமும் இருக்கிறது. ஹரிஹரன் சலங்கை கட்டி ஆடின பாட்டு. அதுவும் “தாட்சாயிணி” என்று வரும் ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு சங்கதி விழும். ஒரு சங்கதியில் ஹரிஹரன் “தயை காட்டு நீ” என்று உச்சம் அடைகையில் பார்த்தி கடுப்பாகிவிட்டான்.
“தேவா பாத்ரூம் போயிருக்கோணும் மச்சான். சைக்கிள் காப்பில ஹரிஹரன் கிடாய் வெட்டிட்டாண்டா!”
 
பாடல்களுக்கு வயசாவதில்லை.
 
Jeyakumaran Chandrasegaram

Edited by Athavan CH

  • தொடங்கியவர்
300 பேர் உயிரைக் காப்பாற்றிய டிரக் டிரைவர்!
 
போயிங் விமானம் ஒன்று தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டதனை அடுத்து அதனைத் தரையிறக்க டிரக் சாரதி உதவியுள்ளமை உலகில் பலரையும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
விமானம் விமான நிலையத்தை அடையும் போதுதான் அதன் முன் சக்கரங்கள் முழுமையாக வெளியே வராமல் போனதை விமானி அறிந்துள்ளார்.
 
அவர் எவ்வளவோ முயற்சி செய்தும் விமானத்தின் முன் சக்கரங்கள் முழுமையாக வெளியே வரவில்லை. இந் நிலையில் விமானத்தை தரையிறக்கினால் அது விபத்துக்கு உள்ளாகி பாதையை விட்டு விலகி வெடிக்கலாம் என்ற நிலை தோன்றியது. ஆனால் தொடர்ந்து பறக்க எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புகளும் இருந்தது. ஆனால் எரிபொருள் மீதியாக அதிகம் இருந்தால் அது விமானம் தரையிறங்கும்போது விபத்துக்கு உள்ளானால் எரிவதற்கு பெரிதும் உதவும். இதனால் எரிபொருள் காலியாகும் வரை வானில் சுற்றியது விமானம். இதற்கிடையில் தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறை ஒரு திட்டத்தைப் போட்டது. அதுதான் இறுதியில் கைகொடுத்துள்ளது.
 
அதாவது விமானம் தரையிறங்கும்போது அதன் முன் சக்கரங்கள் தரையில் முட்டாதவண்ணம் அதனை தாங்கிப் பிடிக்க ஒரு டிரக் வண்டியை அவர்கள் பாவிக்க திட்டம் தீட்டினர். ஆனால் அந்த டிரக் வண்டியை ஓட்டுபவர் சற்றும் பிசகாமல் அதனைச் செய்ய வேண்டும். சற்று ஆட்டம் கண்டாலும் விமானம் பாதை மாற வாய்ப்புகள் உண்டு.
 
அத்தோடு விமானம் தரையிறங்கும்போது அது என்ன வேகத்தில் செல்கிறதோ அதே வேகத்தில் அவர் தனது வாகனத்தைச் செலுத்தவேண்டும்.
நிசான் டிரக் வாகனம் ஒன்றைப் பாவித்தே இவர் இந்த விமானத்தை பேராபத்தில் இருந்து காப்பாற்றியுள்ளார். எல்லோரும் இவரை ஒரு ஹீரோ என்று பாராட்டினார்கள்.
பல ஊடகங்கள் அவரிடம் பேட்டி எடுக்க வரிசை கட்டி நின்றது. ஆனால் அவர் எதற்கும் பேட்டி கொடுக்க மறுத்துவிட்டாராம். தன்னை ஒரு ஹீரோ என நான் நினைக்கவில்லை என்று கூறிய அவர் இது தனது கடமை என்று சொல்லியுள்ளார்.
 
பிறர் செய்யும் காரியங்களையே தாம் செய்வதாகச் சொல்லித் திரியும் மனிதர்கள் மற்றும் TV வானொலிகளில் பேச அலைந்து திரியும் மனிதர்களுக்கு மத்தியில் இவர் சற்று வித்தியாசமானவர். உண்மையானவர்.

 

  • கருத்துக்கள உறவுகள்

நிசான் காருக்கு கொடுத்த அட்வேட் நம்ம முகநூல் வீரர்கள் விடுவதாய் இல்லை  :D

  • கருத்துக்கள உறவுகள்

நிசான் காருக்கு கொடுத்த அட்வேட் நம்ம முகநூல் வீரர்கள் விடுவதாய் இல்லை  :D

 

என்னத்தை.... சொல்ல, 

"காலம் கலி காலம்."

"கண்ணால்..... காண்பதும் பொய்,  காதால்... கேட்பதும் பொய். தீர விசாரித்து அறிவதே... மெய்."

ஹ்ம்ம்.... .....  கலி முத்திப் போச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

இவரை அழைத்து திருத்தியிருக்கலாம்.  :D

 

Edited by vaasi

  • தொடங்கியவர்

 

300 பேர் உயிரைக் காப்பாற்றிய டிரக் டிரைவர்!
 
 

 

 

இது முற்றிலும் தவறான தகவல் ,     நிசான் காருக்கான ஒரு விளம்பரம் 

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம் :

 
1. கடவுள் இல்லை என்று சொன்னாலும்
குற்றவாளி என்று சொல்லாத மதம்.
 
2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கு
கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று
வரையறுக்காத மதம்.
 
3. காசிக்கோ, ராமேஸ்வரதுக்கோ சென்றே ஆக
வேண்டும் என்று கட்டளை இடாத மதம்.
 
4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி
வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத
மதம்.
 
5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும்
என்று வரையறை செய்யாத மதம்.
 
6. ஒட்டு மத்த இந்து சமுகத்தை
கட்டுபடுத்தும் மதத் தலைவர் என்று யாரும்
இல்லை.
 
7. தவறு செய்தவன் சாமியாராக இருந்தாலும்
முகத்தில் காரி உமிழும் தெளிவு
இந்துகளுக்கு.
 
8. இயற்கையை தோன்றியவற்றில் இழி பிறவி
என்று ஏதுமில்லை. மரமும் கடவுள் ,கல்லும்
கடவுள், நீரும் கடவுள்(கங்கை), காற்றும்
கடவுள் (வாயு), குரங்கும் கடவுள் அனுமன்,
நாயும் கடவுள் (பைரவர்) பன்றியும் கடவுள்
(வராகம்).
 
9. நீயும் கடவுள். நானும் கடவுள் ...பார்க்கும்
ஒவ்வொன்றிலும் பரமாத்மா.
 
10. எண்ணிலடங்கா வேதங்களை கொடுக்கும்
மதம். பன்னிரு திருமுறைகள் , மண் ஆசையை
ஒழிக்க இராமாயணம், பொன் ஆசையை ஒழிக்க
மகா பாரதம், கடமையின் முக்கியத்துவத்த
ை உணர்த்தும் பாகவதம், அரசியலுக்கு அர்த்த
சாஸ்த்திரம், தாம்பத்தியத்திற்கு காம
சாஸ்திரம், மருத்துவத்திற்கு சித்தா,
ஆயுர்வேதம், கல்விக்கு வேதக் கணிதம், உடல்
நன்மைக்கு யோகா சாஸ்த்திரம்,
கட்டுமானத்திற்கு வாஸ்து சாஸ்திரம்,
விண்ணியலுக்கு கோள் கணிதம்.
 
11. வாளால் பரப்பப் படாத மதம்.
 
12. எதையும் கொன்று உண்ணலாம்
என்றுதொடங்கிய ஆதி மனித உணவு
முறையிலிருந்து "கொல்லாமை ""புலால்
மறுத்தல்", ஜீவ காருண்ய ஒழுக்கம், என்று
மனிதனுக்கு பரிணாம வளர்ச்சி கொடுத்த
மதம்.
சைவம் என்ற வரையறை உள்ள மதம். 
  • தொடங்கியவர்

11401196_493463684151344_828298151083255

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.