Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.தொழில்நுட்பக் கல்லூரியில் இராணுவத்திற்கு கட்டாய ஆட்சேர்ப்பு

Featured Replies

யாழ் தொழில்நுட்பவியல் கல்லூரி அதிபரின் யோகத்தில் ஆசைகாட்டி மணவர்களை மோசம் செய்யும் படையினர்:-

 

யாழ்.பல்கலைக்கழக சூழலில் அமைந்துள்ள தொழில்நுட்பவியல் கல்லூரியில் இலங்கை இராணுவத்திற்கு கட்டாய ஆட்சேர்ப்பு முன்னெடுக்கப்படுவது தொடர்பில் மாணவ அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன. குறிப்பாக குறித்த தொழில்நுட்பக் கல்லூரி அதிபரே மாணவர்களை பொறியினுள் தள்ளிவிடும் கைங்கரியத்தில் ஈடுபடுவதாக குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கு கல்லூரி தரப்புகள் தெரிவித்தன.


இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலிருந்து தொழில்நுட்பக் கல்லூரியில் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்யும் செயற்பாடு இடம்பெற்று வருவதாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக்கல்லூரிப் பணிப்பாளர் கலாநிதி ந.யோகராஜனின் அனுசரணையுடனேயே படையினர் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது.


கடந்த சனிக்கிழமை சீருடையில் அங்கு சென்ற படை அதிகாரிகள் மாணவர்களுடன் கலந்துரையாடலை நடத்தியுள்ளனர். இக் கலந்துரையாடலில் மாணவர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று யோகராஜன் நிர்ப்பந்தித்துள்ளார்.


இந்தக் கலந்துரையாடலில் உரையாற்றிய படை அதிகாரி இது படையினருக்கான ஆட்சேர்ப்பு அல்ல என்று கூறியதுடன் படைதரப்பின் அங்கமான விரிவுரையாளர்கள், சாரதிகள், தொழில்நுட்பவியலாளர்கள் வெற்றிடங்களிற்கே இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் தாங்கள் தாங்கள் எந்தத் துறைகளில் கல்வி கற்கின்றார்களோ அந்த துறையில் தொழில்வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இணைந்து கொள்பவர்களுக்கு படைப்பயிற்சி இல்லையெனவும் மாதாந்தம் 30 ஆயிரம் ரூபா வேதனம், உடைகள், தங்குமிடம், உணவு இலவசம், யாழ்ப்பாண மாவட்டத்திலேயே வேலை என்று பல ஆசை வார்த்தைகள் கூறப்பட்டிருந்தன. கற்கை நெறியைப் பூர்த்தி செய்யாத மாணவர்களும் இதில் இணைந்துகொள்ள முடியும் என்று படை அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.


வன்னியில் இடம்பெற்ற ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் படைக்கு அல்ல, ஏனைய வேலைகளிற்கே என்று கூறியே ஆட்சேர்ப்பு செய்யப்பட்டிருந்தது. இதே பாணியிலேயே கொக்குவில் தொழில்நுட்பவியல் கல்லூரியிலும் ஆட்சேர்ப்பு இடம்பெறுவதால் அங்கு கல்வி கற்கும் மாணவ, மாணவியர் அச்சமடைந்துள்ளனர்.


குறித்த கல்லூரியின் பணிப்பாளர் யோகராஜன் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய பிரமுகர் ஆவார். அத்துடன் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பொதுசன ஜக்கிய மக்கள் முன்னணியில் அவர் இணைந்து யாழில் போட்டியுமிட்டிருந்தார்.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் அனைத்து சிங்கள அதிகாரிகள், மற்றும் அமைச்சர்களையும் யாழ்ப்பாணத்து மாப்பிள்ளைகள் ஆக்குவதில் யோகராஜன் முன்னின்று உழைத்தவராவார். விருந்தினர்களிற்கு தலைப்பாகை அணிவித்து மாப்பிள்ளைக் கோலமாக அலங்கரித்ததன் மூலம் மக்களுக்கு யாழ்ப்பாணத்தில் தலைப்பாகை கட்டும் பழக்கத்தை ஏற்படுத்தியவர் இந்த யோகராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/105477/language/ta-IN/article.aspx

 

 


பயங்கரவாத தடுப்புபிரிவால் கைதான முன்னாள்மூத்த பெண்போராளிகள் இருவரதுபெயர்கள் கைதுபட்டியலில் மறைப்பு:

வன்னியில் கைதுகள் தொடர்கின்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ள இரு முன்னணி பெண் போராளிகள் பற்றிய தகவல்களை இலங்கைப் பாதுகாப்பு தரப்பு மறைத்துள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால்  அவர்களது குடும்பங்கள் அச்சமடைந்துள்ளன.


கைதான குறித்த பெண் போராளிகளுள் ஒருவர் விடுதலைப்புலிகள் அமைப்பில் மூத்த தளபதியாக இருந்தவரென தெரியவருகின்றது. இலங்கை அரசு இன்று (10.04.14) அறிவித்துள்ள தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்கள் பட்டியலில் இந்தப் போராளிகளின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டு இருக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.
 

இதனிடையே வவுனியாவில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தாயும் மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். 42 வயதுடைய சசிகரன் தவமலர் 16 வயதுடைய சசிகரன் யதுர்சினி ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட தவமலரின் கணவன் சசிகரன் மத்தியகிழக்கு நாடொன்றில் தொழில் புரிந்து வருகின்றார். கைது செய்யப்பட்ட இருவரையும் வவுனியாவில் வைத்து விசாரணை செய்து வருவதாக தெரியவருகின்றது.


இவர்களில் கோபி என இலங்கை அரசு கூறி வரும் நபரின் மனைவியான 26 வயதுடைய சர்மிளா கஜீபன கோபியின் தாயார் மற்றும் ஜெயக்குமாரி மற்றும் மகள் விபூசிகா ஆகியோரென பத்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/105482/language/ta-IN/article.aspx
 

 

Edited by Athavan CH

கலாநிதியா அல்லது கல்லா நிதியா?

வேற என்னத்தை செய்வது எண்டு தெரியுது ஏதாவது செய்து தப்பிக்கலாம் என்று பார்க்கிறான், 2004 - 2009 வரை இருந்த அரசியல் நிலை இப்போது இல்லை, நாராயணனும்,நம்பியாரும், பி.ராமனும் காப்பாற்ற முயற்சித்தாலும் அவர்களால் முடியாது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.