Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என்ன பாட்டு போட? (இசை புதிர்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் எண் 143: ராதா காதல் வராதா.. (நான் அவனில்லை) :D

ஆரம்பத்தில் கேட்டபோதே இந்தப்பாடல் மாதிரி இருந்தது.. ஆனால் சரிபார்க்காமல் விட்டதால் பிழைத்துவிட்டது.. :blink:

  • Replies 338
  • Views 26.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
முந்திய இசைப் பதிவுகளுக்கு சரியான விடை அளித்த இசை கலைஞனுக்கு வாழ்த்துக்கள் .
இதோ இன்றைக்குரிய இசைப்பதிவுகள் .
 
பாடல் எண் 149 - https://soundcloud.com/write2ravi/song-149
 
பாடல் எண் 150 - https://soundcloud.com/write2ravi/song-150
 
பாடல் எண் 151 - https://soundcloud.com/write2ravi/song-151
 
பாடல் எண் 152 - https://soundcloud.com/write2ravi/song-152
 

151: வானெங்கும் தங்க விண்மீன்கள் (மூன்றாம் பிறை)

150: வருது வருது விலகு விலகு (தூங்காதே தம்பி தூங்காதே)

152: பூமாலையே தோள் சேரவா

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் எண் 149: விடிய விடிய சொல்லித் தருவேன்.. (ரஜினி படம் என நினைக்கிறேன்.)

விடிய விடிய சொல்லித் தருவேன்" பாடல் போக்கிரிராஜா படத்தில் வருகிறது. எம் எஸ் விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். அதுதான் என்னால் கண்டுபிடிக்க முடியாமல் போய் விட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சரியான விடை தேடி பதிவு செய்த சபேசன் மற்றும் இசைக்கலைஞன் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
இது இன்றைய இசை தெரிவு. இலகுவான பாடல்கள், கண்ணை மூடிக்கொண்டு பதில் தரலாம்.
பாடல் எண் -  153: https://soundcloud.com/write2ravi/song-153
பாடல் எண் - 154: https://soundcloud.com/write2ravi/song-154
பாடல் எண் - 155: https://soundcloud.com/write2ravi/song-156
 

Edited by Sasi_varnam

ஆஹா... இன்று 8 மணிக்குப் பிறகு போட்டு இருக்கின்றீர்கள்....!

 

பாடல் எண் - 154: https://soundcloud.com/write2ravi/song-154
 
வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்
 
 
பாடல் எண் - 155: https://soundcloud.com/write2ravi/song-156

 

வெட்டி வேரு வாசம்.

 

153 ஆம் பாட்டு தொண்டைக் குழிக்குள் நிற்குது...ஆனால் வர மாட்டுதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் எண் 153: வசந்தம் பாடி வர.. (ரயில் பயணங்களில்?? )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம்,
பாராட்டுக்கள் நிழலி, இசை. 
இது இன்றைகுரிய இசை தெரிவு.
 
பாடல் எண் 156: https://soundcloud.com/write2ravi/song-157
 
பாடல் எண் 157: https://soundcloud.com/write2ravi/song-158
 
பாடல் எண் 158: https://soundcloud.com/write2ravi/song-159
 
 
 

 

 
 
 
பாடல் எண் 157: https://soundcloud.com/write2ravi/song-158
 
பாடல் எண் 158: https://soundcloud.com/write2ravi/song-159

 

 

 

பாடல் எண் 156: https://soundcloud.com/write2ravi/song-157
 
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது

 

 

மிச்சமும் இலகுவான பாடல்கள். மற்றவர்களுக்கும் வாய்பு கொடுப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

 

வணக்கம்,
பாராட்டுக்கள் நிழலி, இசை. 
இது இன்றைகுரிய இசை தெரிவு.
 
பாடல் எண் 156: https://soundcloud.com/write2ravi/song-157
 

 

இந்தப் பாடல் எனது வாழ்நாள் விருப்பப் பாடல்களுள் ஒன்று. எஸ்.பி.பாலா, வாணி ஜெயராம் இருவரின் சுத்தமாகப் பாடும் தன்மை பாடல் முழுவதும் மிளிர்கிறது.  :huh:

 

குறிப்பாக,ஆரம்பத்தில் பாலா அவர்கள் உனை நான்.. என்று முடிக்கும் அந்தக் கணத்தில் கொடுக்கும் சங்கதி ஒரு தனியான சங்கதி. :D மனதுக்குப் மிகவும் பிடித்தமான இசை அசைவு அது. வாணி அவர்கள் பாடும்போது அந்த அசைவைக் கொடுத்திருக்கமாட்டார்.

 

மெதுவான நடையுடன் ஆரம்பிக்கும் பாடல் முதலாவது இடை இசை தொடங்கும்போது, எவ்வாறு அப்படி ஒரு வேகமெடுக்கிறது என்பது ஆச்சரியம். பாடலில் தொய்வு ஏற்படாமல் இருக்க இடை இசைகளைப் பயன்படுத்துவது இளையராஜா அவர்களின் தனிச் சிறப்பு.ஆனால் இவ்வாறு செய்யும்போது பாடலுக்கு இடையூறு வராதபடி செய்வது கடினம். மெதுவாக கீபோர்டின் உதவியுடன் பரவும் அந்த சுரங்கள் இலகுவாக வேகமான தாளத்துக்குச் சென்று வேகமெடுக்கின்றன.

 

சரணத்தில் மறுபடியும் இலகுவான நடை. அதன் முடிவில் இனிப்பதென்ன என்று பாலா அவர்கள் முடிக்கும் பொழுது வெளிக்கிழம்பும் சங்கதிகள் இளையராஜாவின் தனி முத்திரை.. :D

 

சசி இணைத்துள்ள இந்தத் துண்டு இசை இரண்டாவது இடை இசையில் வருவது. அதில் உள்ள அந்த வயலின் இசையோ மெல்லிய இறகால் வருடுவது போன்று ஒரு இனிமை. :D அது வெட்டுப்பட்டுவிட்டதே என்பது சிறு கவலை.  :huh:  :D

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கலைஞன் அருமையான கருத்துப் பதிவு, எப்போது கேட்டாலும் திகட்டாத பாடல் வரிசைகளில் நிச்சயம் இதுவும் ஒன்று. இசை ஞானி ஒரு இசை சித்தர் என்பதில் ஒரு ஐயமும் இல்லை. எவ்வளவு இசை நுணுக்கங்கள், இற்றை வரைக்கும் இவரால் மட்டுமே இப்படியான படைப்புக்களை கொண்டுவர முடிந்துள்ளது !!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"சசி இணைத்துள்ள இந்தத் துண்டு இசை இரண்டாவது இடை இசையில் வருவது. அதில் உள்ள அந்த வயலின் இசையோ மெல்லிய இறகால் வருடுவது போன்று ஒரு இனிமை. :D அது வெட்டுப்பட்டுவிட்டதே என்பது சிறு கவலை. :huh::D

 

~~~ இசை நான் இந்த பாடலின் இசையை வெட்டி எடுக்கும் போது குறிப்பாக அந்த வயலின் இசை வரும் பகுதியை மனம் இல்லாமல் தான் வெட்டினேன் காரணம் அந்த வயலின் இசை துண்டே போதும் அது என்ன பாடல் என்று அடையாளம் காட்டா. இப்படி நிறைய பாடல்கள் ஒரு குறிப்பிட்ட இசை நாதத்தை வைத்தே கண்டு பிடிக்கலாம். ~~~

 

 

 
பாடல் எண் 157: https://soundcloud.com/write2ravi/song-158
 
 

 

 

இன்னும் எவரும் (இசை கண்டு பிடித்து இருப்பார்) பதில் கொடுக்காமையால்

 

பாடல்: என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்

 

 

இளையராஜாவின் இசையில் வந்த பெண் குரலில் மட்டுமே அமைந்த பாடல்களில் மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. இதனைக் கேட்கும் போது 'மேகமே மேகமே வானில் உலா போகுதே' பாடலையும் மனசு நிரடுகின்றது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம்,
இவை இன்றைய  இசை தொகுப்புக்கள்.
 
பாடல் எண் 159: https://soundcloud.com/write2ravi/song-162
 
பாடல் எண் 160: https://soundcloud.com/write2ravi/song-160
 
பாடல் எண் 161: https://soundcloud.com/write2ravi/song-161
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எவரும் (இசை கண்டு பிடித்து இருப்பார்) பதில் கொடுக்காமையால்

 

பாடல்: என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்

 

 

இளையராஜாவின் இசையில் வந்த பெண் குரலில் மட்டுமே அமைந்த பாடல்களில் மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. இதனைக் கேட்கும் போது 'மேகமே மேகமே வானில் உலா போகுதே' பாடலையும் மனசு நிரடுகின்றது

 

வணக்கம் நிழலி,
எனக்குப் பிடித்த ஒரு பாடல் இது.
இதில் வாணி ஜெயராம் குரல் ஒரு வழி  தவறிப் போகும் பெண்ணின் அபலை நிலையை அப்படியே வெளிக் கொண்டுவரும். இசை ஞானியின் இசை இந்த situation ஐ அப்படியே உள்வாங்கி இசை அமைத்து இருப்பார்.   
நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை.
என் மன கங்கையில் சங்கமிக்க , பங்கு வைக்க 
பொங்கிடும் பூம் புனலில்... 2:14 இதற்குப் பிறகு வரும் ஆலாபனை அப்படியே "மேகமே மேகமே பால் நிலா தேயுதே" இதில் வரும் ஆலாபனை போலவே இருக்கும்  

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் எண் 161: காதல் வைபோகமே.. காணும் நன்னாளிலே.. (சுவர் இல்லாத சித்திரங்கள்)

 

கங்கை அமரன் இசையில் வெளிவந்த பாடல். ஆனால் இது இளையராஜா இசையமைத்ததா என்று அடிக்கடி எண்ண வைக்கும். :D 

 
பாடல் எண் 161: https://soundcloud.com/write2ravi/song-161

 

 

பாடல் எண் 161:

காதல் வைபோகமே காணும் நன்னாளிலே (படம்: சிவரில்லாச் சித்திரங்கள்)

 

பாக்கியராஜ் இயக்கிய படங்களில் இத் திரைப்படம் மட்டும் தான்  சோகமான  முடிவு கொண்ட திரைப்படம். இத் திரைப்படத்தின் பின் இனிமேல் ஒரு போதும் Tragedy முடிவுகள் கொண்ட படத்தினை இயக்க மாட்டேன் என்று சொன்னார். அதன் பின் சுந்தரகாண்டம் படம் ஒரு சாவில் முடிவடைத்தாலும் சோகமான திரைப்படமாக அமையவில்லை.

 

மிச்சப் பாட்டுக்களை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் எண் 160: அழகிய விழிகளில்.. அறுபது கலைகளில்.. (பாக்யராஜ், பூர்ணிமா நடித்த படம்)

 

சங்கர்-கணேஷ் இசையில் வெளிவந்தது என நினைக்கிறேன்.

பாடல் எண் 161: காதல் வைபோகமே.. காணும் நன்னாளிலே.. (சுவர் இல்லாத சித்திரங்கள்)

 

கங்கை அமரன் இசையில் வெளிவந்த பாடல். ஆனால் இது இளையராஜா இசையமைத்ததா என்று அடிக்கடி எண்ண வைக்கும். :D

 

அடடா... நான் கொஞ்சம் நீளமாக பதில் எழுதிக் கொண்டு இருக்கும் போது ஒரு நிமிடத்தால் நீங்கள் என்னை முந்தி விட்டீர்கள் இசை. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதோ இன்றைக்குரிய இசை 

 

 

பாடல் எண் 162: https://soundcloud.com/write2ravi/song-163

பாடல் எண் 161: https://soundcloud.com/write2ravi/song-164

 

 

இதோ இன்றைக்குரிய இசை 

 

 

பாடல் எண் 162: https://soundcloud.com/write2ravi/song-163

 

 

பாடல்: நஞ்சை உண்டு புஞ்சை உண்டு (உன்னால் முடியும் தம்பி)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.