Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கஜீபனின் சடலத்தை தாய், மனைவி, மாமனார் அடையாளம் காட்டினர்! - பொலிசாரே அடக்கம் செய்ய முடிவு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கஜீபனின் சடலத்தை தாய், மனைவி, மாமனார் அடையாளம் காட்டினர்! - பொலிசாரே அடக்கம் செய்ய முடிவு. 

[saturday, 2014-04-12 18:53:53]
gopi-120414-150.jpg

வவுனியா நெடுங்கேணி பிரசேத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட கோபி என அழைக்கப்படுகின்ற செல்வநாயகம் கஜீபனின் உடலை, பூஸா தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள அவருடைய தாயார் செல்வநாயகம் இராசமலர், அவருடைய மனைவி கஜீவன் சர்மிளா ஆகியோருடன், அவருடைய மாமனாராகிய செகராசசிங்கம் பாலகுருபரன் ஆகியோர் அடையாளம் காட்டியுள்ளனர்.நெடுங்கேணி வெடிவைத்தகல் பகுதியில் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லபட்ட கோபி, தேவியன், அப்பன் ஆகிய மூன்று பேருடைய சடலங்களும் நேற்று வியாழக்கிழமை மாலை அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் விசாரணைகளுக்காகக் கொண்டு செல்லப்பட்டிருந்தன.

  

இந்தச் சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும், அனுராதபுரம் வைத்தியசாலைக்குச் சென்று பயங்கரவாதப் புலனாய்வு பொலிசாரின் அனுமதி பெற்று செல்வநாயகம் கஜீபன் என்ற தனது மருமகனுடைய உடலைப் பார்வையிட்டதாக திருகோணமலை பாலைக்குழியில் உள்ள செகராசசிங்கம் பாலகுருபரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

கஜீபனின் உடலில் இடது கை, நெஞ்சுக்குக் கீழ்ப்பகுதி மற்றும் அடிவயிறு ஆகிய இடங்களில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்கள் காணப்பட்டதாகவும், தான் சென்று பார்ப்பதற்கு முன்பாக, பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகள் சர்மிளா மற்றும், கஜீபனின் தாயார் ஆகியோர் அழைத்து வரப்பட்டு, அவர்களால் சடலம் அடையாளம் காணப்பட்டிருந்தாகவும் பாலகுருபரன் கூறினார்.

இயக்கச்சியைச் சொந்த இடமாகக் கொண்ட கஜீபன் தனது மகள் சர்மிளாவை திருகோணமலைக்கு வந்திருந்தபோது விரும்பி திருமணம் முடித்திருந்ததாகவும், திருமணத்தின் பின்னர் அவர் மூன்று ஆண்டுகள் சவூதி அரேபியாவில் தொழில் செய்ததாகவும், பின்னர் கடந்த ஜனவரி மாதத்தின் பின்னர் அவருடன் தங்களுக்குத் தொடர்பில்லாமல் இருந்து இப்போது அவரை சடலமாகக் கண்டதாகவும் பாலகுருபரன் கூறினார்.

பயங்கரவாத சம்பவத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதனால், கஜீபனின் சடலம் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரச செலவிலேயே அடக்கம் செய்யப்படும் என்று காவல்துறையினர் தமக்குத் தெரிவித்ததாகவும், தமது மகளும், கஜீபனின் தாயாரும் மீண்டும் பூஸா முகாமுக்கே கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் கஜீபனின் மாமனாராகிய பாலகுருபரன் தெரிவித்தார்.

அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள தேவியன் மற்றும் அப்பன் ஆகியோருடைய சடலங்கள், அவர்களுடைய உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டதா இல்லையா, என்பது பற்றிய தகவல்கள் எதுவும் உடனடியாகக் கிடைக்கவில்லை.

http://seithy.com/breifNews.php?newsID=107413&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்
அவர் மூன்று ஆண்டுகள் சவூதி அரேபியாவில் தொழில் செய்ததாகவும், பின்னர் கடந்த ஜனவரி மாதத்தின் பின்னர் அவருடன் தங்களுக்குத் தொடர்பில்லாமல் இருந்து இப்போது அவரை சடலமாகக் கண்டதாகவும் பாலகுருபரன் கூறினார்.

 

 

இதனை நேரடி வாக்குமூலமாகப் பதிவு செய்து இக்கொலைகள் தொடர்பில்.. நீதியான விசாரணைக்கு சர்வதேச நாடுகளின் தூதரகங்களை வற்புறுத்த வேண்டும். இன்றேல்.. இப்படியான கொலைகள் தொடர்கதையாகும் நிலையே ஏற்படும்.

 

பின்னர் அதுவே சிறீலங்காவில் மீண்டும் வன்முறைகள் வெடிக்க காரணமாகவும் அமையலாம்..! சர்வதேசம் உண்மையில்.. சிறீலங்காவில் அமைதியை விரும்பினால்.. ஜனநாயக முறையில்.. பிளவுபட்டுள்ள மக்களை சொந்த உரிமைகளோடு பிரிந்து செல்ல அனுமதிப்பதோடு.. மானுட சமூகத்திற்கு எதிராக குற்றமிழைத்தவர்கள் அனைவரையும்.. சர்வதேச சட்டங்களின் பிரகாரம் கடுமையாக தண்டிக்க வேண்டும். அதன் கீழ் சிறீலங்கா ஆட்சியாளர்கள்.. இராணுவ ஆட்கள் உட்பட அனைவரும் தண்டிக்கப்படும் போது தான்.. இந்த உலகம்.. சர்வதேச கட்டமைப்புக்களுக்கு மதிப்புக் கொடுக்கும் நிலை தோன்றும்.

 

வெறுமனவே பாடம் கற்றுக் கொண்டோம் என்று சொல்லிக் கொண்டு செயலற்று.. இன்னும் இன்னும் மானுடத்துக்கு எதிரான கொடுமைகள் பெருக இடமளிப்பதால்.. மக்கள் விரக்தியின் விளிம்புக்கு தள்ளப்பட்டு பின்னர் அவர்களே வன்முறையையும் மானுடத்துக்கு எதிரானவர்கள் மீது பாவிக்க வெளிக்கிடுவர். அதனை பயங்கரவாதமாகக் காட்டி.. மக்களை அழிப்பதை மீண்டும் மீண்டும் அனுமதித்துக் கொண்டிருக்க முடியாது. :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.