Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நரேந்திர மோடியுடன் சிறிலங்கா அரசு பேச்சு – மாறிவரும் சூழ்நிலையை அவதானிக்கிறதாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Modi.jpg

நரேந்திர மோடி உள்ளிட்ட இந்தியாவின் எல்லா பிரதான தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் சிறிலங்கா அரசாங்கம் தீவிரமான பேச்சுக்களை நடத்தி வருவதாக சிறிலங்கா அரசின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் என்று நம்பப்படும் நரேந்திரமோடியுடன் சிறிலங்கா அரசாங்கம் கலந்துரையாடல்களை நடத்திக் கொண்டிருக்கிறது. 

சிறிலங்கா விவகாரத்தில் நரேந்திரமோடி வேறுபட்ட அணுகுமுறையைகை கடைப்பிடிப்பார் என்று கூறப்படுகின்ற நிலையில், சிறிலங்கா அரசாங்கம் அங்கு மாறி வரும் சூழ்நிலைகளை சிறிலங்கா அறிந்தே வைத்துள்ளது. 

நாம் நரேந்திரமோடியுடனும் பேச்சுக்களை நடத்தியுள்ளோம். 

இந்தியத் தேர்தலின் முன்னேற்றங்கள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருகிறோம். 

இந்தியத் தேர்தலில் போட்டியிடும் எல்லா பிரதான கட்சிகளுடனும் நாம் தீவிரமான பேச்சுக்களை நடத்தி வருகிறோம். 

அவர்கள் எமது அயலவர்கள். அவர்களுடனனான பேச்சுக்கள் தொடர்ந்து நடத்தப்படும். என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140413110319

ஆங்கிலத்தில் சிறி லங்கா, ஈழ அரசியல்வாதிகளின் கணிப்புகள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=138689

தமிழ் ஈழம் அமைப்பது குறித்து பா.ஜ.க.வுக்கு உடன்பாடு இல்லை; வைகோ கூறுகிறார் 

சென்னை: தமிழ் ஈழம் அமைப்பது குறித்து பா.ஜ.க.வுக்கு உடன்பாடு இல்லை என்று வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக  ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்;  பல்வேறு கொள்கைகளைக் கொண்ட கட்சிகள்  ஒரு தேர்தலை சந்திப்பதற்காகக்  கூட்டணி  அமைக்கின்றன. அதற்காக  அவர்கள்  தங்களுடைய கொள்கைகளை  விட்டுக்கொடுப்பது  இல்லை.   இந்தத் தேர்தலில்  நாங்கள் பா.ஜ.க.வுடன்  கூட்டணி சேர்ந்திருக்கின்றோம் .தமிழ் ஈழம்  அமைப்பது குறித்து பா.ஜ.க.வுக்கு  உடன்பாடு  இல்லை. அவர்களுடைய  பொதுச் சிவில்  சட்டம் போன்ற கோட்பாட்டை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 2002 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் பா.ஜ.க. உறுப்பினர் ஒருவர் கொண்டுவந்த பொதுச் சிவில் சட்டம் என்ற மசோதாவை  அறிமுக நிலையிலேயே நாங்கள்  எதிர்த்தோம். பனத்வாலா  எதிர்த்தார். எனவே மசோதா  வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது  மந்திரி  பிரமோத்  மகாஜன்  என்னிடம் வந்தார். வைகோ இந்தப் பிரச்சினையில்  உங்கள்  கொள்கை என்ன  என்பது  எங்களுக்குத்  தெரியும். நீங்கள் மசோதாவை  எதிர்த்து  வாக்களிக்க வேண்டாம்.   ஆதரித்தும் வாக்களிக்க வேண்டாம். வாக்கெடுப்பு  நிகழ்கின்ற வேளையில் அவையில் இருந்து வெளியேறிவிடுங்கள் என்றார். நான் சொன்னேன்,   மன்னிக்க வேண்டும். நாங்கள் இந்த மசோதாவை எதிர்த்து வாக்களிப்போம் என்று கூறினேன்.  அதன்படியே எதிர்த்து வாக்களித்தோம். பனத்வாலா  எனக்கு நன்றி தெரிவித்ததோடு மட்டுமல்ல,  கவிக்கோ அப்துல்  ரகுமானிடமும்  இதைக்கூறி  வைகோ  கொள்கையில் உறுதியானவர் என்று பாராட்டி இருக்கின்றார். ஆனால் அப்போது அதே கூட்டணியில்  இருந்த தி.மு.க. அந்த மசோதாவை  ஆதரித்து  பொதுச் சிவில்  சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தது. பா.ஜ.க.வோடு  கூட்டணி  சேர்ந்ததற்காக எங்களைக் குறை சொல்லுகின்றீர்களே,   நீங்கள் எந்த அடிப்படையில்  தி.மு.க.வோடு  கூட்டணி வைத்து இருக்கின்றீர்கள் என்று கூறியுள்ளார். - 
 
விகடன்
  • கருத்துக்கள உறவுகள்

ஆக மொத்தம் நாம் எல்லாருமே கூட்டணிக்காக கொள்கைகளை காற்றில் பறக்க விடுபவர்கள் என்கிறார் வைகோ.. இந்த நிலை மாற வேண்டும். மாற்ற வைப்பது வாக்காளர்களின் பொறுப்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.