Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா படுகொலைகள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்! – மாவை எம்.பி வலியுறுத்துகிறார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா படுகொலைகள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்! – மாவை எம்.பி வலியுறுத்துகிறார். 

[sunday, 2014-04-13 05:24:27]
mavai-130414-150.jpg

புலிகள் மீளிணைகிறார்கள் எனச் சொல்லப்பட்ட தகவல், அதன் பின்னணியில் மூன்று தமிழ் இளைஞர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, இலங்கை அரசும் இராணுவமும் கூறும் கதைகளில் எமக்கு எள்ளளவும் நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர், மாவை சேனாதிராஜா இந்தப் படுகொலைச் சம்பவங்கள் குறித்து சர்வதேச, சுயாதீன விசாரணை ஒன்று நடத்தப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

  

இலங்கை அரசு இந்த விடயங்கள் தொடர்பில் நீதியான விசாரணை ஒன்றை நடத்தும் என்பதிலும் எமக்கு நம்பிக்கை இல்லை. எனவே சர்வதேச தலையீட்டில் இந்த விசாரணை இடம்பெற வேண்டும்.அரசும் இராணுவமும் கூறிவரும் புலிகள் மீளிணைவுக் கதைகளில் எமக்கு நம்பிக்கை இல்லை. இது சோடிக்கப்பட்ட நாடகம் என்றே நாங்கள் ஆரம்பத்தில் இருந்து கூறி வருகிறோம். மக்களுக்கும் அரசு கூறும் புலி மீளிணைவுக் கதை தொடர்பில் உண்மை நிலைப்பாடு தெரியாது. புலிகள் மீளிணைவு பற்றிய பிரசாரம், அதனைத் தொடர்ந்து மூன்று இளைஞர்கள் கடந்த வியாழக்கிழமை சுட்டுக்கொலை செய்யப்பட்டமை ஆகியன தொடர்பில் இராணுவத் தரப்பிலும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களே தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இராணுவம் கூறும் எதனையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. மேலும் புலிகள் மீளிணைவுக் கதையின் பின்னர் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் இராணுவத்தரப்பில் தெரிவிக்கப்பட்டு வரும் தகவல்கள் எமக்கு மேலும் சந்தேகத்தையே ஏற்படுத்தியுள்ளன. எனவேதான் இந்தச் சம்பவங்கள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம் எனவும் மாவை சேனாதிராஜா மேலும் கூறினார்.

http://seithy.com/breifNews.php?newsID=107429&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

மிகத் தாமதமாகக் கருத்து வெளியிட்டு இருகறகிறார்.இதை ததேகூட்டமைப்பின் கருத்தாகக் கொள்ள முடியுமா?விடயம் ஐநா வரை சென்றிருக்கிறது.இப்பொழுதுதான் மக்கள் பிரதிநிதி அதுவும் தனிப்பட்ட கருத்தாகத் தெரிவித்து இருக்கிறார்.தலைமை பீடம் என்ன செய்கிறது?!?????

உண்மையில் தலைமைப்பீடத்தில் இருந்து வெளிப்படையான அறிக்கை வந்திருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் தலைமைப்பீடத்தில் இருந்து வெளிப்படையான அறிக்கை வந்திருக்க வேண்டும்.

 

அது  அவரின் தனிப்பட்ட  கருத்து

கூட்டமைப்பின் கருத்தல்ல  என இதுவரை மறுப்பறிக்கை வராததே பெரிய  விடயம்........ :(

அவர்கள் தென்னாபிரிக்காவில் நல்லிணக்கம் பற்றி பேச போய்விட்டார்கள். நாங்கள் நல்லிணக்கம் எப்படி இருக்கின்றதென்று அவர்கள் வந்தபிறகு அறிக்கை விட சொல்லி கேப்பம். அவையல் வெளியில் நிக்கும் வரைக்கும் இவர் தான் தலைவர். வந்தா பிறகு அவை விடுகிற அறிக்கை தான் உத்தியோகபூர்வ அறிக்கை. 

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்காவில் பாதிக்கப்பட்டவன் (victim) தனது அதிகாரங்களைப் பெற்றுக்கொண்டபின், அடக்குமுறையாளனுக்கு (perpetrator) வழங்கியது நல்லிணக்கம் என்கிற தீர்வு.

இலங்கையில் அடக்குமுறையாளன் அதிகாரத்துடன் பாதிக்கப்பட்டவனை நல்லிணக்கத்திற்கு நிர்ப்பந்திக்கிறான்.

மாவை சேனாதிராஜா sir, adutha kuri ungalukuthan. konjam adaki vaasinga. epadiyum ungalala onnum kilika mudiyathu. apuram enna pechu vendi kidakuthu, ellathayum nerla patha ungaluke manasu valikala.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.