Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் ஊடக யுத்தத்தில் இலங்கை தோல்வியடைந்துள்ளது – ரொஹாண் குணரட்ன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

rohan%20gunawardena_CI.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக யுத்தத்தில் இலங்கை அரசாங்கம் தோல்வியைத் தழுவியுள்ளதாக பயங்கரவாத தடுப்பு தொடர்பான நிபுணத்துவ பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகளை யுத்த களத்தில் அரசாங்கம் தோற்கடித்த போதிலும் ஊடக கள முனையில் தோல்வியடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு என்பதிலிருந்து பாரியளவிலான பிரச்சாரப் போராட்ட இயக்கமாக பரிணமித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். போலியான தகவல்களின் அடிப்படையில் புலிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சார போராட்டத்தை புரிந்து கொண்டு அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இலங்கை இராஜதந்திரிகள் கூடுதல் முனைப்பு காட்டுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுடன் அரசாங்கம் காத்திரமான தொடர்புகளைப் பேண வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.தமிழ் ஊடகங்களுடன் அரசாங்கம் இணைந்து செயற்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.இனவாதிகள் அல்லாத இளம் அரசியல் தலைவர்களை இலங்கை உருவாக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

அதிகளவான தமிழ் முஸ்லிம்களை பாதுகாப்புப் படையில் அரசாங்கம் இணைத்துக்கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.போலியான செய்திகளை முறியடித்து உண்மையான தகவல்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதற்கு அரச நிறுவனங்களை பயன்படுத்திக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்குலக நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.அண்மையில் நந்தகோபன் என்ற புலித் தலைவரை கைது செய்தமை புலிகளுக்கு எதிரான முக்கிய திருப்பு முனையாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.பாதுகாப்பு ஏற்பாடுகளில் அரசாங்கம் மாற்றம் செய்யக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுவாக காணப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை தளர்த்தினால் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைப் போன்று இலங்கையிலும் மீள யுத்தம் ஏற்படக் கூடிய அபாயம் நிலவி வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/105604/language/ta-IN/article.aspx

அது சரி புரளி புரபசர். எப்ப $53,000 தண்ட காசு கட்ட போறீங்கள்?

"பயங்கரவாத தடுப்பு தொடர்பான நிபுணத்துவ பேராசிரியர் ரொஹான் குணரட்ன"

என்றாலும் புலிவாந்திக்கு இந்த தலைப்பு டூ மச்.

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி புரளி புரபசர். எப்ப $53,000 தண்ட காசு கட்ட போறீங்கள்?

"பயங்கரவாத தடுப்பு தொடர்பான நிபுணத்துவ பேராசிரியர் ரொஹான் குணரட்ன"

என்றாலும் புலிவாந்திக்கு இந்த தலைப்பு டூ மச்.

 

ம்ம்ம்

பிள்ளையார்

தாய் தககப்பனை சுற்றி  வந்தது   போன்றது தான் இதுவும்.........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.