Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் இருந்து வரும் அகதிகளை முகாம்களில் தங்க வைக்க தமிழக அரசு தடை புழல் சிறையில் அடைப்பு -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையில் விடுதலை புலிகளுக்கும் ராணுவத்துக்கும் சண்டை முடிவுக்கு வந்த பிறகும், அங்குள்ள தமிழர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். விசாரணை என்ற பெயரில் தமிழர்களை ராணுவத்தினர் அழைத்து சென்று கொடுமைப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
 
ராணுவத்துக்கு பயந்து தமிழர்கள் பலர், படகுகளில் தமிழகத்துக்கு வரத் தொடங்கி உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, இலங்கை தலைமன்னாரில் இருந்து முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த தவேந்திரன், கணேஷ் சுதாகரன், யாழ்ப்பாணத்தை சேர்ந்த தயாபர ராஜ் ஆகியோர் மனைவி, குழந்தைகள் என 10 பேர் 2 படகில் தனுஷ்கோடி வந்து இறங்கினர்.அவர்களை பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் தனுஷ்கோடி போலீசார் கைது செய்தனர். நேற்று இரவு ராமேஸ்வரம் மாஜிஸ்திரேட் சரவணக்குமார் முன்னிலையில் அவர்களை ஆஜர்படுத்தினர். அவர் களை வரும் 19ம் தேதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். கைதான 2 சிறுவர்கள் நிலக்ஷனா (9), விதுரன் (7) மற்றும் 3 குழந்தைகள் உள்பட 10 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இலங்கையில் ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையில் நடந்த இறுதிக்கட்ட சண்டைக்கு பின் தமிழர்கள் வாழும் பகுதியில் இலங்கை அரசு மறுசீரமைப்பு பணிகளை தொடங்கியது. அதனால் இலங்கையில் இருந்து வரும் தமிழர்களை அகதிகளாக பதிவு செய்வதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இங்குள்ள முகாம்களில் அகதிகளாக தங்கியுள்ள தமிழர்கள், இலங்கை செல்வதற்கும் தேவையான அனுமதியை தமிழக அரசு செய்து வருகிறது.இதுகுறித்து போலீசார் கூறுகையில்,அகதிகளாக வருபவர்களை பாஸ்போர்ட் சட்டப்படி கைது செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி 3 மாதம் சிறையில் அடைக்கப்படுவர். அதன்பிறகு கலெக்டர் பரிந்துரையின் பேரில் அவர்கள் முகாம்களில் தங்க வைக்க வழி உள்ளது என்றனர்

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த அகதிகள் சிறிலங்கா சென்று ஓய்வெடுத்து வரும் காலத்தில் தமிழ் நாட்டு அரசு அகதிகளாக சிறிலங்காவில் இருந்து வருபவர்களைத் தடை செய்வதில் என்ன தப்பு இருக்கின்றது.
முதலில் நீங்கள் நிறுத்துங்கள். பின்னர் மற்றவர்கள் மீது பிழையைக் கூறுங்கள்

இதைத்தான் சொல்வது வெந்த புண்ணில் வேல் பாச்சுவது என்று..அவுஸ்ரேலியா தொடக்கம் உலகின் மூலைமுடுக்கெல்லாம் தமிழினம் மிருகங்களை விட கேவலமாக, அனாதைகளாக அகதிகளாக திரிகிற நிலமையும், தேர்தலுக்கு மட்டும் குரல் எழுப்பும் பொய் தமிழ்தலைமகளும் இருக்கும் மட்டும் எம்மினத்தை கடவுளாலும் காப்பாற்ற முடியாது. மற்ற இனங்கள் தம்மினத்திற்கு கேடு நடந்தால் உடன் ஒன்று சேர்ந்து அரசியல் பாராது தட்டிக்கேற்கும். எம்மினத்தலைமைகளோ எம் எதிரியுடன் விருந்தும்,மருந்தும் சாப்பிட்டு ஏப்பம் விட்டு இவைக்கு தேவையில்லாத வேலை என்று சொல்லும்..தமிழ் நாட்டிலும் இதே நிலைமைதான்.. இதனால் உலகத்தமிழர்களுக்கு எந்த நாட்டிலும் பாதுகாப்பில்லை.. இந்த விதியை மதியால் விரைவில் மாற்றியமைக்க வேண்டும்.போலிகளை இனம் கண்டு இனியாவது எம்மினத்தின் வருங்காலத்தை சிறப்பாக்குவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

தாய் மண் எவனிடம் அடிமையாய் போனாலும் போகட்டும்.. வசதி படைத்த நாடுகளில் அகதி அந்தஸ்தும்.. பிரஜா உரிமையும் என்று அலையும் நிலை உள்ள வரை தமிழனுக்கு இதுதான் கதி. :icon_idea:

தாய் மண் எவனிடம் அடிமையாய் போனாலும் போகட்டும்.. வசதி படைத்த நாடுகளில் அகதி அந்தஸ்தும்.. பிரஜா உரிமையும் என்று அலையும் நிலை உள்ள வரை தமிழனுக்கு இதுதான் கதி. :icon_idea:

 

..அதோட "ஸ்கொலர்ஷிப்" இல் வெளிநாட்டுக்கு அலையும் என்பதையும் சேர்க்க வேண்டும் சேர் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.