Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோகோ கோலா பானங்களில் சர்ச்சைக்குரிய மூலப்பொருளை நீக்க முடிவு

Featured Replies

140504114950_coca_cola_china_464x261_afp

கோக்கோ கோலாவின் சில பானங்களிலிருந்து சர்ச்சைக்குரிய தாவர எண்ணெயை நீக்க முடிவு

உலகின் மிக பெரிய குளிர் பானத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கோகோ கோலா அது தயாரிக்கும் சில குளிர் பானங்களிலிருந்து ஒரு சர்ச்சைக்குரிய மூலப்பொருளை நீக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

பானங்களில் சுவையைப் நிலைப்படுத்த பயன்படுத்தப்படும் ‘பிவிஒ- பிரோமினேடட் வெஜிடபிள் ஆயில்’ அதாவது புரோமீன் என்ற ரசாயனம் கலந்த தாவர எண்ணெயை மாற்றவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த எண்ணெய் தீயணைப்பு பொருட்களிலும் காணப்படுகின்றது என்பது குறிப்பிடதக்கது.

இந்த மூலப்பொருள், கோகோ கோலா நிறுவனம் தயாரிக்கும், பேண்டா, பவரேட் போன்ற குளிர்பானங்களில் காணப்படுகிறது.

‘பிவிஒ’வை நீக்கும் இந்த முடிவு பாதுகாப்புக் காரணங்களுக்காக எடுக்கப்பட்டது அல்ல என்றும் இந்த குறிப்பிட்ட இரசாயனத்தின் பயன்பாடு அந்த குளிர்பானங்கள் விற்கப்படும் அனைத்து நாடுகளின் விதிமுறைகளுக்கு உட்பட்டது என்றும் ஜாஷ் கோல்ட் என்ற கோகோ கோலா நிறுவனத்துக்காகப் பேசவல்ல அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோகோ கோலாவின் இந்த முடிவு, நிறுவனங்கள் மீது பொதுமக்களின் அழுத்திற்கு இருக்கும் சக்தியை பிரதிபலிக்கிறது.

‘பிவிஒ’வின் பயன்பாடு தொடர்பில் கேள்வி எழுப்பும் ஒரு இணையதள மனுவில் ஆயிரக்கணக்கான மக்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது.

http://www.bbc.co.uk/tamil/global/2014/05/140506_cocacola.shtml

 

  • கருத்துக்கள உறவுகள்

சாப்பிட்ட பின் நெஞ்சு எரிவு ஏற்பட்டால் தீயணைப்பு அவசியம்தானே??!! :o:D

Edited by இசைக்கலைஞன்

இது சின்ன விடயம். சீனிக்கு பதிலா ஜி.எம்.ஒ சோள பாணியை பாவித்து சிறுவர்களுக்கு சலரோகம் கொடுப்பதை நிறுத்தவேண்டும்.

கோக கோலா கேஸ் என்று ஒரு விவரண படம் பார்த்தேன். அதில் மத்திய அமெரிக்க நாடுகளில் தொழில் சங்க தலைவர்களை எப்படி கோக கோலா நிறுவனம் போட்டு தள்ளுகிறது என்று காட்டினார்கள்.

  • தொடங்கியவர்
சுற்றுச்சூழல் விருதுகளை வென்ற கொகா-கோலா

 

இயற்கையை பாதுகாத்தல் குறித்து அர்ப்பணிப்புடன் செயலாற்றும் கொகா-கோலா ஸ்ரீலங்காவின் முனைப்பானது, தேசிய தூய்மை உற்பத்தி மையத்தினால் (National Cleaner Production Centre - NCPC) அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளது.
 
coca-cola.jpg
 
சிறந்த தூய்மையான உற்பத்தி நடைமுறைகளைக் கைக்கொள்ளுதல் மற்றும் செயற்திறனுள்ள வகையில் வளங்களை முகாமை செய்தல் போன்ற நடவடிக்கைகளுக்காகவே இந்நிறுவனத்திற்கு உன்னத கௌரவ விருதுகள் நான்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
 
அதற்கமைய கொகா-கோலா ஸ்ரீலங்கா, தேசிய தூய்மை உற்பத்தி மையத்தினால் அண்மையில் கொழும்பில் நடத்தப்பட்ட நிகழ்வில் வைத்து, கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களிடமிருந்து வள செயற்திறன் மற்றும் தூய்மையான உற்பத்தி நடைமுறைகளில் மேன்மை நிலையை வெளிப்படுத்தியமைக்காக பெரியளவான உற்பத்தி பிரிவின் கீழ் வெள்ளி விருதினைப் பெற்றுக்கொண்டது.
 
அது மாத்திரமல்லாமல், சக்தி சேமிப்பு பிரிவில் மிகுந்த செயற்திறனைக் காட்டியமைக்காக உன்னத விருதினையும், நீர்வளப் பாதுகாப்புக்கான உன்னத விருதினையும், பொருட் சேமிப்பு செயற்திறனில் தூய்மையான உற்பத்திச் சாதனைகளை புரிந்தமைக்கான மெரிட் சான்றிதழையும் நிறுவனம் பெற்றுக்கொண்டமை முக்கியத்துவமானதாகும். 
 
தேசிய தூய்மை உற்பத்தி மையமானது, 2002ஆம் ஆண்டு அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனமாகும். இந்நிறுவனமானது, சுற்றுச்சூழலுக்கு குறைந்தளவான பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் தொழில் நிறுவனங்கள் வினைத்திறனுடன் செயற்படுதலை ஊக்குவிக்கும் ஸ்தாபனமாகும். வள சேமிப்பு செயற்திறன் மற்றும் தூய்மையான உற்பத்தி (RECP)  எனவும் அறியப்படும் தூய்மையான உற்பத்தி (CP) ஆகியன, குறித்த இந்த இலக்கை அடையும் வகையில் தொழிற்துறைகளுக்கு உறுதுணையாக விளங்குகின்றது.
 
தேசிய தூய்மை உற்பத்தி விருதுகளாவன, நிறுவனங்கள் சுற்றுச்சூழல் செயற்திறன் மற்றும் வள உற்பத்தித்திறன் ஆகியவற்றில் மேன்iமையான செயற்பாடுகளை வெளிப்படுத்துவதுடன், தூய்மையான உற்பத்தி தொழினுட்பங்களை ஏனைய நிறுவனங்களும் கைக்கொள்வதற்கான ஊக்குவிப்பை அளிக்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றது.
 
குறித்த இந்த விருதுகளுக்கான வெற்றியாளர்கள், தரவுகளுடன் பூர்த்தி செய்யப்படும் விண்ணப்பங்கள், நேரடியாக உற்பத்தி செய்யப்படும் இடங்களுக்கு சென்று மதிப்பாய்வு குழுவினரால் உறுதிப்படுத்தப்படுதல் மற்றும் நிபுணத்துவ குழுவினரின் தெரிவு ஆகியவற்றின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்றன. 
 
இது குறித்து கருத்துரைத்த கொகா-கோலா பெவரேஜஸ் ஸ்ரீலங்காவின் தேசிய முகாமையாளர் கபில வெல்மில்லகே,
 
நாம் எமது அனைத்து செயற்பாடுகளிலும் தொடர்ச்சியாக செயற்திறன்மிகு முன்னெடுப்புகளை கைக்கொள்வதன் ஊடாக சூழலியல் காற்தடத்தினைக் குறைத்தலை இலக்காகக் கொண்டு செயலாற்றுகின்றோம். இந்த விருதுகள் எமது பொறுப்புணர்வுக்கான ஆதாரமாக விளங்குவதுடன், எமது முயற்சிகளை அங்கீகரித்து கௌரவித்த தேசிய தூய்மை உற்பத்தி மையத்திற்கு எமது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். நாம் செயற்படும் சூழலை பாதுகாக்கும் நோக்குடன், எம்மிடம் பல்வேறு உள்ளக மற்றும் வெளிக்களம் சார்ந்த பேண்தகைமை முனைப்புகள் உள்ளன என்று தெரிவித்தார். 
 
அமுலிலுள்ள அனைத்து சுற்றுச்சூழலியல் சார்ந்த சட்டங்கள், ஒழுங்குவிதிகள் மற்றும் ISO தரநிர்ணயங்களை கடைப்பிடிப்பதோடு, கொகா-கோலா ஸ்ரீலங்கா சர்வதேச ரீதியில்  அங்கீகரிக்கப்பட்ட, உலகளாவிய ரீதியிலுள்ள கொகா-கோலா நிறுவனங்களினால் கைக்கொள்ளப்படும் கடுமையான சுற்றுச்சூழல் தரநியமங்களையும் கடைப்பிடிப்பது குறிப்பிடத்தக்கதாகும். கொகா-கோலா வர்த்தக அணுகுமுறையில் ஸ்திரமான போக்கினைக் கைக்கொள்வதுடன், சிறப்பான முறையில் வளங்களை பயன்படுத்தி, அதன் செயற்பாடுகளினூடாக, குறைந்தளவு தாக்கத்தினை மாத்திரமே சூற்றுச்சூழலுக்கு விளைவிக்க வேண்டும் என்பதில் அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புணர்வுடன் செயலாற்றுகின்றது. ஸ்திரமான வழிமுறைகளுடன், வர்த்தக வளர்ச்சியை முன்னெடுக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக நிறுவனமானது பசுமை வாயு வெளியேற்றம் மற்றும் பூஜ்யம் பொதியிடல் கழிவுகள் போன்றவற்றை குறைக்கும் வகையிலான புத்தமைவு வழிமுறைகளை தொடர்ச்சியான கண்டுபிடிப்பதிலும் ஈடுபடுகின்றது. 
 
இதுவரையில் கொகா-கோலா ஸ்ரீலங்கா மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவலுப்பயன்பாட்டை அதிகரித்தல், உற்பத்தி அல்லாத நோக்கங்களுக்காக கழிவுநீரை சுத்திகரித்தல், மீள்சுழற்சியாக்கம், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான நீர்சுகாதாரம் முனைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பேண்தகைமை முனைப்புகளை முன்னெடுத்துள்ளது. ஒவ்வொரு வருடமும் கொகா-கோலா ஐக்கிய நாடுகள் சபையினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள உலக நீர் தினம், சுற்றுச்சூழல் தினம் மற்றும் புவி மணித்தியாலம் ஆகியவற்றை அனுஷ்டிப்பதுடன், அது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள், பேச்சுகள், விவாதங்கள், சித்திர போட்டிகள் போன்றவற்றை பாடசாலை மாணவர்களுக்கிடையில் மேற்கொண்டு, அவர்களும் சுற்றுச்சூழலை பேணிப் பாதுகாத்தல் முன்னெடுப்பில் இணைந்து கொள்வதை வலியுறுத்துகின்றது. அதுமட்டுமல்லாது கொகா-கோலா நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கிடையில் போஸ்டர்கள், வீடியோக்கள், திரைப்படங்கள் ஊடாக, சுற்றுச்சூழலை பேணுதல் தொடர்பான பொறுப்புணர்வை ஊக்குவிக்கின்றது.
 
கொகா-கோலா நிறுவனமானது, மில்லியன் கணக்கான உள்நாட்டு மக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் புத்துணர்வூட்டும் மென்பானங்களை அளிப்பதுடன், அனைவருக்கும் கொகா-கோலாவின் ருசிகர அனுபவம் கிடைப்பதை உறுதிசெய்கின்றது. 127 வருட பழமை வாய்ந்த இந்நிறுவனமானது, 200 இற்கும் மேற்பட்ட நாடுகளில் தன் இருப்பை பதிவுசெய்துள்ளதுடன், உலகளாவிய ரீதியிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வருகிறது. நிறுவனமானது, தொடர்ச்சியான ஸ்திரமான செயற்பாமுகளை பொறுப்புணர்வுடன் முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்து அறிந்துள்ளதுடன், தயாரிப்பிக் பாதுகாப்பு மற்றும் தராதரம் ஆகியவற்றை மேம்படுத்துதலை தொடர்ந்தும் முனைப்புடன் முன்னெடுக்கின்றது. 
 
நாட்டின் ஆயிரக்கணக்கான நுகர்வோரை கொகா-கோலா, கொகா-கோலா லைற், ஸ்ப்ரைட், ஃபேன்டா, ஒரேஞ், ஃபேன்டா போர்ட்டலோ, ஃபேன்டா க்றீம் சோடா, லயன் சோடா, லயன் டோனிக் வோட்டர், லயன் ஜிஞ்சரெல், லயன் ஜிஞ்சர் பியர், ஷ்வெப்ஸ் டோனிக் வோட்டர், மினிட் மெய்ட் ஒரேஞ், மினிட் மெய்ட் மாங்கோ, மினிட் மெய்ட்  மிக்ஸ்ட் ஃப்ரூட்  போன்ற தமது பானத் தொகுப்புகளால் புத்துணர்ச்சியூட்டுகின்றது.
இலங்கையில் உள்ள கொகா-கோலா கட்டமைப்பில், 1500 ற்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக பணியாளர்கள் உள்ளனர். கொகா-கோலா சுகாதாரம் மற்றும் சுத்தமான குடிநீர்த்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் எண்ணற்ற சமூக மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுக்கின்றது. 
 
அது மாத்திரமன்றி, கொகா-கோலா நிறுவனமானது, சுறுசுறுப்பான வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் கிரிக்கட் பாத்வே முகாம்கள், மத்திய சுற்றாடல் அதிகாரசபையுடன் இணைந்து PETகழிவுகள் சேகரித்தல், நாட்டில் கல்வி மற்றும் பாடசாலை வசதிகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் 2020ஆம் ஆண்டளவில் 12,500 பெண்களுக்கு வலுவூட்டுதல் போன்ற மேலும் பல கூட்டாண்மை பொறுப்புணர்வுத் திட்டங்களை கொகா-கோலா செயற்படுத்துகின்றது. 
 
தொடர்ச்சியான எமது உலகத்தரமிக்க தொழினுட்பம் மற்றும் தர நிர்ணயங்களுக்காக 2013ஆம் ஆண்டுக்கான தேசிய தராதர விருதுகள் எமக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிலோன் சேம்பர் ஒஃப் கொமர்ஸ் வழங்கிய மூன்று கூட்டாண்மை சமூகப் பொறுப்புணர்வு விருதுகளையும் நாம் பெற்றுள்ளோம். அவையாவன மிகச்சிறந்த கூட்டாண்மை பிரஜைக்கான பேண்தகைமை விருதுகளில் (15பில்லியனுக்கும் குறைவான விற்பனைப்புரள்வு பிரிவு ) மூன்றாமிடம், 2013ஆம் ஆண்டு நீர் காப்பு புரிந்தமைக்கான மிகச்சிறந்த பேண்தகைமை செயற்திட்ட விருதுகள் 2013 மற்றும் காத்தான்குடியில் நீர் மற்றும் சுகாதாரம் குறித்த நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுத்தமைக்காக வடக்கு மற்றும் கிழக்கு நல்லிணக்க பிரிவின் கீழ் 2012ம் ஆண்டுக்கான கூட்டாண்மை சமூகப்பொறுப்புணர்வு விருதுகள் ஆகும்.
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக் கருமங்களிலும்   பாக்க  எங்கடை ஊரிலை குடிக்கிற  தேத்தண்ணி திறம் :)
 

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில்

சலரோசத்தை உருவாக்கிய

பெருக்கிய  பெருமை  இவர்களையே  சாரும் :(  :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.