Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருக்கைலாய யாத்திரை அற்புத அனுபவம் தரும் பயணக்கட்டுரை. (படங்கள் இணைப்பு)

Featured Replies

  • தொடங்கியவர்

திருக்கைலாய யாத்திரை பகுதி 23

 
திருக்கையிலாய யாத்திரைக்கு என நான் கொண்டு சென்ற ஒரே பூசைப்பொருள் நறுமணம் கமழும் ஊதுபத்திகள் மட்டுமே..டோல்மாலாபாஸ் உச்சியை அடைந்தபோது, அங்கே நிறைய காகிதத்தால் ஆன கொடிகள் கட்டி அவைகளை இறைவனின் அடையாளங்களாக கருதி அவற்றிற்கு ஊதுபத்தி காட்டி வழிபடுகின்றனர். 

சிவசக்தி ஸ்தலமாக கருதப்படும் இந்த இடத்தில் இருந்துதான் சிவன் மோக மாயை விடுத்து யோகீஸ்வராராக யோகத்தில் அமர கயிலை சென்றார் என்பதும், பார்வதி தேவியின் இருப்பிடமாகவும் நம்பபடுகிறது.அந்த குளிரிலும், சிறு சிறு பனிமழைத் தூரல் இருந்த போதும் யாத்திரீகர்களின் தொடர்ந்த வருகையால் நெருப்பு அணையாமல் இருக்க நானும் ஊதுபத்தியினை ஏற்றி வைத்து வழிபட்டேன்.

dolmala%2Bpass%2Btop%252C%2Bkailash%2Bya
 
dolmalapass%2Bclosewiew%252C%2Bkailash%2
 
dolmalapass%252C%2Bkailashyatra.JPG
 
கூட வந்த நண்பர்கள் அமைதியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபட எனக்கோ தனியே அமர்ந்து செய்ய வேண்டிய நிலை இல்லாததால் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தேன். கொஞ்ச தூரம் சென்ற உடன் இறக்கம். அதுவும் செங்குத்தான இறக்கம். டோல்மாலாவில் இருந்து வலதுகைப்பக்கம் அதாவது கிழக்கு நோக்கி இறங்க கொஞ்ச நேரம் நடந்தபின் கெளரிகுந்த் எனப்படும் பார்வதி குளம் தென்பட்டது. பார்வதி தேவி டோல்மாலாவில் இருந்து இறங்கி இங்குதான் நீராடுவதாகவும் நம்பப்படுகிறது. தூரத்தில் இருந்து பார்க்க சிறிய குட்டை போல் தோன்றினாலும் இறங்க இறங்க சுமார் 40 அடி அளவில் வட்டமாக குளம் இருந்தது. இந்த குளத்தில் நீர் பெரும்பாலும் பனியாக உறைவதே இல்லை. பனிப்படலம் வேண்டுமானால் இருக்கிறது. குளத்தில் மரகதப்பச்சை நிறத்தில் தெளிவாக நீர் நிறைந்து இருக்கிறது. ஆழம் அதிகம் இருக்கும் என நினைக்கிறேன்.
 
kowrikund%2Bview%2Bfrom%2Bheight.%2Bkail
 
kowrikund%252Ckailash%2Byatra.JPG
 
gowrikund%252C%2Bkailashyatra.JPG
 
நாங்கள் சென்ற பாதையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டருக்கும் மேல் முழுக்க முழுக்க பாறைகளின் மேல் நடந்து இறங்கினால் பார்வதி குளத்தை அடையலாம். பெரும்பாலும் யாரும் அங்கு செல்வதில்லை. தரிசனத்துடன் சரி. காரணம் டோல்மாலா பாஸ் இடத்தை அடைய எடுக்கும் கடும் பிரயத்தனம் ஒரு கர்ரணமாக இருக்கலாம். மளமள வென்று அந்த மலையைத் தாண்டிவிட்டோம்.

யாத்திரை தொடரும்

 
  • தொடங்கியவர்

திருக்கைலாய யாத்திரை பகுதி 24

 
கெளரிகுந்த் குளத்தைத் தாண்டி இறங்கி அதன்பின் இரண்டு குன்றுகளைத் தாண்டி வந்தபோது கண்முன்னே விரிந்தது கிட்டத்தட்ட குதிரை லாட வடிவிலான பள்ளத்தாக்கு. சுற்றிலும் மலைகள் ஓங்கி உயர்ந்து நின்றன.
 
kailash%2Byatra%252C%2B2nd%2Bday%252C%2B
 
பள்ளத்தாக்கில் பனி ஆறு நீண்டு கிடந்தது. அதில் நடந்த அனுபவம் மனம் குழந்தைபோல் துள்ளச் செய்தது. கிட்டத்தட்ட பல இடங்களில் கையில் ஸ்டிக் இல்லாமல் நடக்க இயலவில்லை. வழுக்கவும், சறுக்கவும் செய்தது.
 
kailash%2Byatra%252C%2B2nd%2Bday%252C%2B
 
சுற்றிலும் சூழ்ந்திருந்த மலைகளை அண்ணாந்து பார்த்துக்கொண்டே நடந்தோம். கால்கள் பனியில் புதைய புதைய இங்கும் கவனமாக முன்னர் யாத்திரீகர்கள் சென்ற பாதையில் மட்டுமே கவனமாகச் சென்றோம்
 
kailash%2Byatra%252C%2B2nd%2Bday%252C%2B
 
கீழே இருக்கும் படத்தில் கொடி பறப்பது போன்ற தோற்றம் தெரிகிறதா? மிகப்பெரிய பாறையின் மேல் அமைந்த சிறு பாறை வடிவம் த்வஜஸ்தம்பம் போல
 
kailash%2Byatra%252C%2B2nd%2Bday%252C%2B
 
இந்த பனி மிகுந்த பகுதியைத் தாண்டி முடிவில் குன்றின் மறுபுறத்தில் செங்குத்தாக கீழே இறங்கத் தொடங்கினோம். கீழே கண்ணுக்கு எதோ ஒரு கூடாரம் மாதிரி தெரிய மெள்ள மெள்ள இறங்கிச் சேர்ந்தோம். அங்கு கூடாரத்தில் சீன பாக்கெட் உணவு வகைகள் இருந்தன.தங்குமிடமாக இருக்கும் என நினைத்த எனக்கு,சற்று ஏமாற்றமாகவே இருந்தது. எதுவும் வாங்கவோ, அருந்தவோ பிடிக்காமல தொடர்ந்து நடக்க ஆரம்பித்தேன்.
 
kailash%2Byatra%252C%2B2nd%2Bday%2Beveni
 
இனி இது போன்ற இரு புறமும் மலைகள் தொடர்ந்து வர நடுவில் பரந்த பள்ளத்தாக்கு சமவெளியில் சுமார் நான்கு மணிநேரம் நடந்தோம்.  இதுவரை வந்த இடங்கள் வாகனங்கள் அணுக முடியாத மலைகள். இப்போது வந்திருப்பதோ யாத்திரை நிறைவு பெறும்  இடத்திலிருந்து வாகனத்தில் அணுக முடியும். அப்படி ஒரு சமவெளிதான். வழி நெடுக சூரிய ஒளி மின்சாரம் பெரிய அளவில் தயாரிப்பதற்கு உரிய மின்சக்தி நிலையங்கள் இருந்தன. அதைப்பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டே வந்தேன். மாலை சுமார் 4.30 மணி அளவில் இரண்டாம் நாள் தங்குமிடமான திராபுக் வந்தடைந்தோம். இங்கும் படுக்கை மட்டும் கிடைத்தது. இரவு உணவு ஆப்பிள் மற்றும் பாக்கெட் ஜீஸ்.  உடல் அசதியினால் தூக்கம் வரவேண்டும். ஆனாலும் சுமாராக தூங்கி காலையில் எழுந்தேன்.,.

யாத்திரை தொடரும்
 

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

திருக்கைலாய யாத்திரை பகுதி 25

 
திருக்கைலாய யாத்திரையில் பரிக்ரமாவின் மூன்றாவது நாள் காலை 6.30 மணி அளவில் கிளம்பினோம். முன்னதாக பையில் வைத்திருந்த உலர்பழங்களை காலை உணவாக எடுத்துக்கொண்டோம். மற்றபடி புறப்படுவதில் எந்த சிரமமும் இல்லை. கூடவே யாத்திரை நிறைவு அடையும் நாள் வேறு. நாங்கள் தங்கி இருந்த திராபுக் இடத்திற்கு சற்று முன்னதாக முந்தய நாள் மாலை எடுத்த படம் கீழே 
kailash%2Byatra%2B2nd%2Bday%2Bevening.JP
 
காலை கிளம்பிய உடன் இரவு தங்கிய இடம் ஏதோ சொல்வது போல் உணர்ந்தேன். பிரியாவிடை கொடுத்தது போல் இருந்தது. சற்று தூரம் வந்தபின் எடுத்த படம் கீழே.
 
kailash%2Byatra%2B3rd%2Bday%2B1.JPG
 
kailash%2Byatra%2B3rd%2Bday%2B2.JPG
 
காலை கிளம்பி தொடர்ந்து நடந்தோம். உணவு எதுவும் தரப்படவில்லை. எங்களுக்கும் பசி எடுக்கவில்லை. இன்று எவ்வளவு நேரம் நடக்க வேண்டும் என வழிகாட்டி இடம் கேட்டபோது மொத்தம் 5 மணி நேரம் ஆகலாம் என்றார்.பாதை எளிதாகவே இருந்தது. 
 
kailash%2Byatra%2B3rd%2Bday%2B3.JPG
 
kailash%2Byatra%2B3rd%2Bday%2Bend.JPG
 
மிதமான வேகத்திலேயே நடந்தோம். சுமார் இரண்டு மணி நேரம் நடந்தபின் தூரத்தில் கூடாரம் தெரிய சரி இங்கும் ஒரு டீக்கடைபோல என நினைத்துக்கொண்டு நடந்தேன். அருகில் செல்ல செல்ல கார்கள் நின்றிருந்தன. ஆம், நாங்கள் யாத்திரையில் சென்று சேர வேண்டிய இடத்தை இரண்டு மணிநேரத்திலேயே அடைந்துவிட்டோம்.

வழிகாட்டி வேண்டுமென்றே எங்களை தமாஷ் பண்ணவே 5 மணி நேரம் என்று சொல்லி இருந்திருக்கிறார். அந்த இடத்தை அடைந்தவுடன் இந்த யாத்திரையில் என்னோடு மனப்பூர்வமாக நெருக்கமாக பழகிவந்த சேலத்தை சேர்ந்த திரு.தனுஷ்கோடி ஐயா அவர்கள் என்னை வரவேற்க காத்திருந்தார்.

கூட வந்த வழிகாட்டி என்னை கட்டிப்பிடித்துக்கொண்டு நாங்கள் போதுமான ஒத்துழைப்பு கொடுத்தற்கு மிகவும் நன்றி எனச் சொன்னார்... அவரில்லையேல் இந்த முழுசுற்று யாத்திரை சாத்தியேமே இல்லை என்பதை பதிலாகச் சொன்னேன்.

சரி இப்போது எப்படி உணர்கிறீர்கள் என்று அவர் கேட்க., இப்பொழுதே இன்னொருமுறை திருக்கைலையை வலம் வர வேண்டும் என்றேன். ஆம் உண்மையிலேயே, உடலும் மனமும் விரும்பியே என் உணர்வினைத் தெரிவித்தேன். உடலில் எந்த ஒரு வலியோ, அலுப்போ எதுவும் இல்லாமல் முழுத்தகுதியுடன் முன்னெப்போதும் இல்லாத அளவு உற்சாகமாக உணர்ந்தேன். திருக்கையிலையின் சக்தி வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாதது என்பதையும் உணர்ந்தேன்...

யாத்திரை தொடரும்

 
 
 
 
 

திருக்கைலாய யாத்திரை பகுதி 26

 
எங்களை அழைத்துச் செல்ல இரண்டு ஜீப்கள் காத்திருந்தன. அனைவரும் அதில் ஏறி மானசரோவர் ஏரியை நோக்கி சென்றோம்.  அன்றைய தினம் காலையில் மற்ற யாத்திரீகர்கள் அனைவரும் முன்னதாக டார்சன் முகாமிலிருந்து மானசரோவர் சென்றுவிட்டனர்.

மானசரோவர் ஏரியில் அன்று இரவு தங்கினோம். பூசைகள் செய்து வழிபட்டும் பின்னர் இரவு ஆன்மிக உரையாடல்கள் நிகழ்த்தியும் உற்சாகமாக இரவைக்கழித்தோம். அடுத்தநாள் காலை கிளம்பி ஏற்கனவே தங்கிய பழைய டோங்பா ஊரில் தங்காமல் கொஞ்சம் முன்னதாக இருந்த புதிய டோங்பா நகரில் தங்கினோம். திபெத்தில் சீனர்களை குடியமர்த்தும் முயற்சிகளில் ஒன்றாக இந்த நகரம் சகல வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இங்கு நல்ல செளகரியமாகவே இருந்தது. அடுத்த நாள் காலையில் கிளம்பி எங்கும் தங்காமல் நியாலம் வந்து சேர்ந்தோம். வரும் வழியில் எடுத்த சில படங்கள் உங்களுக்காக.

 
kailash+yatra+manasarover.JPG
 
kailash%2Byatra%252C%2Bdrongpa%2Bto%2Bny
 
kailash%2Byatra%2Breturn%2Bjourney.JPG
 
kailash%2Byatra%2Bnear%2Bnyalam.JPG
 
வழியில் நாங்கள் பார்த்த ஒரே விவசாயம் கடுகு விளைச்சல்தான். படம் மேலே.. கீழே உள்ள படத்தில் நானும் எங்களுக்கு உறுதுணையாக வந்த வழிகாட்டி கியான்..இவரோடு பேசியபோது எந்த படிப்பறிவும் இல்லாமல் போர்ட்டராக இருந்து அனுபவத்திலேயே ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறனை வளர்த்துக்கொண்டதாகவும், வருடத்தில் இந்த மூன்று மாதம் மட்டுமே வருமானம் எனவும், மற்ற மாதங்களில் சிரமமே எனச் சொன்னார். அதே சமயம் தனக்கு படிப்பு இல்லாததால் தன் மகளை காலேஜ் லெவலில் படிக்கவைத்துக்கொண்டு இருப்பதாகவும் சொன்னார். என் கையில் செலவு போக மீதி இருந்த 500யுவான் பணத்தை கல்விச் செலவுக்கென வைத்துக்கொள்ளுங்கள் என அன்போடு கொடுத்தேன். நன்றியுடன் பெற்றுக்கொண்டார். இதை இங்கே எழுத அவசியமில்லை என முதலில் நினைத்திருந்தாலும் இப்போது பகிர்ந்துகொள்ளத்தோன்றியது.
kailash%2Byatra%252C%2Bsiva%2Band%2Bguid
 
திரும்பி வரும் பயணம் முழுவதும் சற்று செளகரியமாகவே தங்குமிடங்கள் இருந்தன. நாங்கள் ஆட்சேபணை தெரிவித்திருததும் ஒரு காரணம்.நியாலத்திலும் போகும்போது தங்கிய அறைகளுக்குப்பதிலாக, செளகரியமான அறைகள் ஒதுக்கப்பட்டன. 

அடுத்த நாள் காலை கிளம்பி சுமார் ஒரு மணிநேரத்தில் அதாவது காலை 10 மணி அளவில் சீன செக்போஸ்டை அடைந்தோம். முதல் குழுவாக நின்று வெளியேறி கொஞ்ச தூரம் வந்து மதிய உணவினை அருந்தி மாலை காட்மண்டு திரும்பினோம்.முன்னர் தங்கிய ஓட்டலில் 19 ஜீலை 2011 அன்று இரவு தங்கினோம். கூடவே எடுத்துச் சென்ற ஸ்லீப்பிங்பேக் திரும்ப ஒப்படைத்துவிட்டு மறு நாள் காலை காட்மண்டுவில் விமானம் ஏறி டில்லி வழியாக சென்னை திரும்பினோம். விமானநிலையத்தில் உடன் வந்த நண்பர்களுடன் பிரியாவிடை பெற்று இல்லம் திரும்பினேன். 

யாத்திரை ஆரம்பிக்கும் முன் நேபாளத்தில் சில இடங்களை சென்று தரிசித்தோம். அதன் புகைப்படங்கள் சிலவற்றை பகிரும் அடுத்த பகுதியுடன் யாத்திரை நிறைவு பெறும். 

நிகழ்காலத்தில் சிவா.

 
 
  • தொடங்கியவர்

திருக்கைலாய யாத்திரை நிறைவு செய்தல்

 
திருக்கைலாய யாத்திரை ஆரம்பித்தபோது நாங்கள் நேபாளில் காட்மாண்டு சென்றபின் அன்றய தினமும் அதற்கு அடுத்த நாளும் தங்க வேண்டியதாயிற்று. அப்போது நேபாளத்தில் பசுபதி நாதர் கோயில்சென்று தரிசனம் செய்தோம்.இங்கு புகைப்படம் எடுக்கத் தடை இருப்பதால் எதுவும் எடுக்கவில்லை. இங்கு பசுபதிநாதர் சிவலிங்கத்தில் நான்குமுகங்களோடு காட்சி அளிக்கின்றார். தரிசனம் முடித்த பின் அன்றைய தினம் மதியம் தங்கி இருந்த ஓட்டலில் ஓய்வு. மாலை பயணம் குறித்த விளக்க மீட்டிங். 
அதற்கடுத்த நாள் 7ந்தேதி ஜீன் 2011, காலை 
பக்தாபூர் இங்கு புகைப்படங்கள் நிறைய எடுத்தேன். இந்த நகரத்தை சுற்றி வர நேரம் போதவில்லை. எல்லா இடங்களிலும் மரங்களினால் ஆன சிற்பங்கள் வேலைப்பாடுகள் என பார்க்க பார்க்க சலிப்பே ஏற்படவில்லை. புகைப்படங்களில் சிறந்தவை என தேர்ந்தெடுப்பதில் மலைபே ஏற்பட்டது. அதனால் இந்த புகைப்படம் ஹிஹி...
siva%2Bbaktapur%2Bkatmandu.JPG


இதன்பின் பெளத்தர் கோவில் சென்று வந்தோம்..எந்நேரமும் தனியறையில் தீபங்கள் எரிந்து கொண்டே இருந்தன. அதை இரு வெளிநாட்டவர் தொடர்ந்து பராமரித்துக்கொண்டே இருந்தனர். கோவிலைச் சுற்றி வந்தபின் வெளியே நிறைய புறாக்கள் இருந்தன. அவற்றையும் கண்டு மகிழ்ச்சி அடைந்தோம்.

 

boutha%2Btemple.JPG

 

மதிய உணவிற்குப்பின் சயனகோலத்தில்  விஷ்ணு இருந்த தலத்திற்கு சென்றோம்.

 

Jal%2BNarayan%2Bnepal.JPG

 

nepal%2Bkathmandu%2Bjal%2Bnarayan.JPG

 

அடுத்ததாக சற்று உயரமான மலை ஒன்றில் இருந்த சுயம்பு புத்தா கோவில் தரிசனம் செய்தோம். இங்கு கற்களால் ஆன நிறைய வடிவங்கள் இருந்தன. இந்த கோவிலும் கண்டிப்பாக பார்த்து தரிசனம் செய்ய வேண்டியதே. இதன்பின் ஓட்டலுக்கு திரும்பி வந்தோம்.

 

nepal%2Bswayamu.JPG

 

nepal%2Bswayamu%2Btemple.JPG

 

மேற்கண்டவிதமாக திருக்கைலை யாத்திரையில் ஒருபகுதியாக நேபாள் திருத்தலங்களுக்கும் சென்று வரவேண்டி இருந்தது. 
 

இதுவரை இந்தத் திருக்கைலையாத்திரை தொடரை எழுத வாய்ப்பு அளித்த கையிலைநாதரை வணங்கியும், நீண்ட தொடராக இருப்பினும் கூடவே வந்து படித்தும், பாராட்டியும், ஊக்க்ப்படுத்திய என் நெருங்கிய நட்புகளுக்கு நன்றியறிதலையும் அன்பையும் தெரிவித்து இந்தத் தொடரை நிறைவு செய்கிறேன்.

 

சிவாய நம ஓம்
சிவாய சிவ ஓம்
சிவாய வசி ஓம்
சிவசிவசிவ ஓம்

நிகழ்காலத்தில் சிவா

 

மேலும்  புகைப்படங்கள் தொகுப்பிற்கு...

 

http://sooryayatra.blogspot.ch/2011/08/blog-post_23.html

 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு அற்புதமான பயணத்தைத் தொடர்ந்து இணைத்தமைக்கு நன்றி...! :D

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி.கைலாயம் சொர்க்கத்தில் இருக்குது என்று தான் நான் இவ்வளவு நாளும் நினைத்திருந்தேன்.அந்தளவிற்கு என் சமய அறிவு இருக்குது:D

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி.கைலாயம் சொர்க்கத்தில் இருக்குது என்று தான் நான் இவ்வளவு நாளும் நினைத்திருந்தேன்.அந்தளவிற்கு என் சமய அறிவு இருக்குது :D

 

சிவலோகத்தில் இருந்து இந்த பிரபஞ்சம் முழுவதும் உள்ள உயிர்களை பரிபாலிக்கும் சிவபெருமான், இந்த உலகத்தில் உள்ள உயிர்களை இவ்வுலகின் உயர்ந்த மலையான கைலாய மலையில் அமர்ந்து இருந்து பராமரிப்பதாக நம்பிக்கை....

  • கருத்துக்கள உறவுகள்

சிவலோகத்தில் இருந்து இந்த பிரபஞ்சம் முழுவதும் உள்ள உயிர்களை பரிபாலிக்கும் சிவபெருமான், இந்த உலகத்தில் உள்ள உயிர்களை இவ்வுலகின் உயர்ந்த மலையான கைலாய மலையில் அமர்ந்து இருந்து பராமரிப்பதாக நம்பிக்கை....

கைலாயம் என்ன எவரஸ்ட் சிகரத்திலா இருக்கு?? :unsure::D

  • தொடங்கியவர்

கைலாயம் என்ன எவரஸ்ட் சிகரத்திலா இருக்கு?? :unsure::D

 

இல்லை படத்தில் பாருங்கள்.

 

tibet_map.gif

 

 

 

 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

பூலோக கைலாயம் என்பார்கள்...!

 

அதேபோல் திருமாலின் 108 திருப்பதிகளில்  106 பூலோகத்திலும் ,  ஶ்ரீ வைகுந்தம் , திருப்பாற் கடல் ஆகியவை பூலோகத்துக்கு வெளியில் என்றும் சொல்வார்கள்...!

  • தொடங்கியவர்
எவரெசுட்டு
 
300px-Mount_Everest_by_Kerem_Barut.jpg
 
உயரம் : 8,848 மீட்டர்கள் (29,028 அடி) 
 
அமைவிடம்  : இமயமலை, கூம்பு வடிவ மடிப்பு மலை தொடர் 
 
இமயமலை சிறப்பு :  8,848 மீ உயரத்தில் முதன்மை
 
ஆள்கூறுகள் :  17px-WMA_button2b.png27°59′N, 86°56′E 
 
 
முதல் ஏற்றம் :1953, எட்மண்டு ஃகில்லரி+ டென்சிங்கு நோர்கே 
 
சுலப வழி: எவரெசுட்டுன் தெற்குப் பகுதி
 
கைலை மலை
 
300px-Kailash_south_side.jpg
 
உயரம் : 6,638 மீட்டர்கள்
அமைவிடம் :திபேத் (இமயமலை தொடர்)
தொடர் : இமயமலை
ஆள்கூறுகள் : 31°04′N, 81°18′E
 
கைலை மலை அல்லது கைலாயம் இமய மலைத் தொடரில் ஒரு புகழ் பெற்ற மலை முடி. இதன் உயரம் 6,638 மீ. இம்மலையில் இருந்துதான் மிக பெரும் சிந்து ஆறும், சட்லெச்சு ஆறும், பிரம்மபுத்திரா ஆறும் புறப்பட்டு ஓடுகின்றது. அருகே புகழ் மிக்க இரு ஏரிகள் உள்ளன. அவையாவன மானசரோவர் ஏரியும் ராட்சதலம் ஏரியும் ஆகும். மானசரோவர் ஏரி உலகிலேயே மிக உயரத்தில் உள்ள ஏரி என்பர். இந்து மதத்திலும் புத்த, சமண மதத்திலும் இக் கைலாய மலை பற்றி பல கதைகள் மெய்ப்பொருள் கருத்துக்கள் உள்ளன. கைலாயம் (கயிலாயம், நொடித்தான்மலை) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் சீனாவில் இமயமலையின் வடக்கில் அமைந்துள்ளது. மானசரோவர் ஏரியும் சிந்து முதலிய நதிகளும் இத்தலத்தின் தீர்த்தங்களாகும். இந்துக்களின் முக்கிய வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றாகும்.
 
 
 
கைலை மலை அமைந்துள்ள இடம்
 
கைலாய மலை பற்றிய இந்துக்களின் நம்பிக்கையை விளக்கும் ஒரு படம். சிவனும், பார்வதியும் குழந்தைகளான பிள்ளையார், முருகன் ஆகியோருடன் கைலாயத்தில் காணப்படுகின்றனர்.
சம்பந்தர் தென் கைலாயம் எனப்படும் திருக்காளாத்தியைத் தரிசித்தபின்னர் அங்கிருந்து இத்தலம் மீது பதிகம் பாடினார். சேரமான் பெருமாள் இத்தலம் மீது திருக்கயிலாய ஞான உலா பாடியுள்ளார். இந்து சமயத்தில் குறிப்பிடப்படும் மும்மூர்த்திகளுள் ஒருவரான சிவன் கைலாய மலையில் தனது துணைவியான பார்வதி தேவியுடன் உறைவதாக இந்துக்கள் நம்புகின்றனர். பல இந்து சமயப் பிரிவுகள் கையாயத்தை சுவர்க்கம் என்றும் ஆன்மாக்கள் இறுதியாகச் சென்றடைய வேண்டிய இடம் இதுவென்றும் கருதுகின்றன. கைலாய மலையை மிகப்பெரிய லிங்கமாகவும், மானசரோவர் ஏரியை யோனியாகவும் உருவகப்படுத்தும் மரபும் உண்டு. விஷ்ணு புராணம் கைலாய மலை உலகின் மையத்தில் இருப்பதாகக் கூறுகின்றது.
 
கைலாச யாத்திரை
 
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக் கணக்கானவர்கள் கைலாய யாத்திரை மேற்கொள்ளுகிறார்கள். இது பன்னெடுங்காலமாக நிகழ்ந்து வரும் ஒரு மரபாகக் கருதப்படுகின்றது. இந்துக்கள் மட்டுமன்றிப் பல சமயங்களைச் சேர்ந்தவர்களும் இங்கே வருகிறார்கள். கைலாய மலையை நடந்து சுற்றிவருவது சிறப்பானது என்பது பலரது நம்பிக்கை. 52 கிமீ (32 மைல்) நீளம் கொண்ட இப் பாதையில் நடந்து மலையைச் சுற்றுவது யாத்திரீகர்களின் ஒரு முக்கியமான கடமையாகக் கருதப்படுகிறது.
 
மலையேற்றம்
 
இதுவரை கைலாய மலையை யாரும் ஏறியது இல்லை. இது பல மதங்களின் புனிதத் தலமாகக் கருதப்படுவதால் மலையேற அனுமதி கிடையாது. 1926 ஆம் ஆண்டு Hugh Ruttledge என்பவர் கைலாயத்தின் வடமுகமாக ஏற முனைந்தபோது அதன் உயரம் 6000 அடிக்கு செங்குத்தாக இருப்பதால் முயற்சியை கைவிட்டார். 1936 ஆம் ஆண்டு Herbert Tichy என்பவர் Gurla Mandhata ஏற முனைந்த போது அங்கிருந்த மலைவாழ் மக்களின் தலைவரிடம் கைலாய மலையை ஏறுவது பற்றி கேட்ட போது. " பாவங்களற்ற மனிதனால் மட்டும் தான் அதை பற்றி நினைக்க முடியும்" என்றார்.
 
விக்கிப்பீடியாவில் இருந்து.

 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

கைலாயம் என்ன எவரஸ்ட் சிகரத்திலா இருக்கு?? :unsure::D

 

பிள்ளாய், இசை,
 
இமயம் வந்து, அகக் கண்களை திறந்து பாரும் மகனே...
 
இறை அறிவிக்கப் படும்....

மிக பயனுள்ள, சுவாரசியமான கட்டுரை, கண் கொள்ள காட்சிகள் . இங்கு போவது வாழ் நாளில் நாம் செய்த பாக்கியமே. இணைப்புக்கு நன்றி ஆதவன்

மிக நல்ல பதிவு.....

 

வாசிக்கும் பொது அங்கு போகவேண்டும் என்னும் எண்ணமே தோன்றுகிறது....

சிவம் விரும்பினால் போவதற்கு வழி பிறக்கும் என்று இருப்போம்... :)

 

 

Edited by naanthaan

  • 2 years later...
  • தொடங்கியவர்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.