Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பூர் அனல் மின்நிலைய பணியினை தீவிர படுத்துமாறு மகிந்த உத்தரவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சம்பூர் அனல் மின்நிலைய பணியினை தீவிர படுத்துமாறு மகிந்த உத்தரவு!
மே 29, 2014
 

 இந்தியாவின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் திருகோணமலை சம்பூர் அனல் மின்சார திட்டத்தின் பணிகளை தீவிரப்படுத்துமாறு மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சத்தியப்பிரமாண நிகழ்வுக்கு சென்று திரும்பிய நிலையிலேயே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.தமது 512 மில்லியன் டொலர்கள் நிதியுதவியில் சம்பூரில் அனல் மின்சார திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்தியா கடந்த ஒக்டோபர் மாதத்தில் அறிவித்தது.எனினும் அந்த பணிகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்தநிலையில் இன்று குறித்த அனல் மின்சார திட்டத்தை தீவிரமாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ராஜபக்ச, மின்சக்தி எரிபொருள்துறை அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார்.250 மெகாவாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யவுள்ள இந்த அனல் மின்சார நிலையம் 2018 ம் ஆண்டளவில் தமது பணிகளை ஆரம்பிக்கவுள்ளது..

http://www.sankathi24.com/news/41956/64//d,fullart.aspx

மோடி உறுக்கி போட்டார் போல. ஊண்டி சாமரம் வீசினம்.

  • கருத்துக்கள உறவுகள்

மோடி உறுக்கி போட்டார் போல. ஊண்டி சாமரம் வீசினம்.

 

 

அப்படியும் இருக்கலாம்

அல்லது

மோடிக்கான தூண்டில் இரையாகவும் இது இருக்கலாம்..

டெல்லி: இலங்கையின் திருகோணமலை சம்பூரில் இந்தியா அமைக்கும் அனல்மின் நிலைய திட்டத்தைக் காரணம் காட்டி கடந்த 9 ஆண்டுகளாக அப்பகுதியில் பாரம்பரியமாக வாழ்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் தாய்நிலத்திலேயே இன்னமும் அகதிகளாக முகாம்களில் வாழ்ந்து வருகிற கொடுமை நீடித்து வருகிறது.

Read more at: http://tamil.oneindia.in/news/india/thousands-tamils-displaced-sampur-due-india-s-power-plant-202323.html

Edited by யாழ்அன்பு

சம்பூர் மக்களின் வாழ்க்கை பற்றி இதிலும் கூறப்பட்டுள்ளது. வேதனை அளிக்கும் வாழ்க்கை!

போராட்டத்திலிறங்கும் இடம்பெயர்ந்த மக்கள் :ப்ரியந்த லியனகே|தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

 

இன்று மே மாதம் 16ம் திகதி. நான் கொழும்பில் இருக்கிறேன். வீதி முழுதும் புத்தரின் பிறந்த நாளைக் கொண்டாடும் மகிழ்ச்சி எதிரொலிக்கிறது. எனது கைத்தொலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. எனக்கு மட்டுமல்ல. அது நாட்டிலிருக்கும் எல்லோருக்கும் அனுப்பப்பட்டவோர் தகவல்.

‘நோயற்ற சுக வாழ்வோடு நீண்ட ஆயுள் கிடைக்கட்டும்’ எனும் வாழ்த்துச் செய்தி அது. அவ் வாழ்த்தினை நினைவிலிருத்திக் கொண்டு நான் இப்பொழுது கிழக்குக்குச் செல்கிறேன்.

 

இப்பொழுது நான் திருகோணமலை – சேருநுவர வீதியிலிருக்கும் கிளிவெட்டி இடம்பெயர் முகாமுக்கு முன்னால் இன்னும் சில நண்பர்களுடன் நிற்கிறேன். இடம்பெயர் முகாமுக்கு முன்னாலிருக்கும் பாதையின் மறுபுறம் இருக்கும் வெற்றுவெளியின் மூலையில் தகரக் கொட்டகையொன்று இருக்கிறது.

‘அதோ இருக்கிறது பாடசாலையொன்று’ மொழிபெயர்ப்பாளராக வந்த குமார் அப் பகுதியை விரல் நீட்டி சுட்டிக் காட்டியபடியே சொன்னார்.

 

பாடசாலையொன்றெனச் சொல்லப்பட்ட சிறிய தகரக் கொட்டகைக்குள் நான் நுழைந்தேன். பாடசாலையொன்று எனச் சொல்லப்பட்ட போதிலும் அச் சிறிய தகரக் கொட்டகைக்குள் இரண்டு பாடசாலைகள் இருக்கின்றன. ஒன்று திரு/குன்னத்தீவு நாவலர் ஆரம்பப் பாடசாலை, மற்றையது திரு/ சுடைக்காடு பாரதி ஆரம்பப் பாடசாலை. இத் தகரக் கொட்டகைக்குள் முதலாம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு வரையிலான பிள்ளைகள் இன்று கல்வி போதிக்கப்படுகிறார்கள். எவ்விதத்திலேனும் பாடசாலையொன்று எனச் சொல்லமுடியாத 60 X 20 அடிகள் நீள அகலம் கொண்ட இத் தகரக் கொட்டகைக்குள் குன்னத்தீவு பாடசாலைப் பிள்ளைகள் 41 பேரும், சுடைக்காடு பாரதி பாடசாலைப் பிள்ளைகள் 32 பேரும் கல்வி பயில்கிறார்கள். அனேகமான பிள்ளைகள் நிலத்தில் அமர்ந்துதான் எழுத்துக்களை எழுதுகிறார்கள். எமது ‘தேசாபிமான ஜனாதிபதி’ துரத்தத் துணிந்த பேன் கீ மூன்கள் தந்த கேன்வஸ் துணிகளில்தான் இக் குழந்தைகள் இன்னும் அமர்ந்திருந்திருக்கிறார்கள்.

 

பாடசாலையொன்றுக்குத் தேவையான எதுவுமே இல்லாத இடமொன்றில், ‘என்ன குறைகளிருக்கின்றன?’ என்று கேட்கும் சம்பிரதாயமான கேள்வியை எனது மனதுக்குள்ளேயே சிறைப்படுத்திக் கொண்டேன். இரண்டு பாடசாலைகளுக்குமே அதிபர்களோடு சேர்த்து ஐந்து ஆசிரியர்களே இருக்கின்றனர். எங்களது கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக குன்னத்தீவு பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றும் திரு. எஸ். தங்கேஸ்வரம் இவ்வாறு கூறினார்.

“கோபப்படாதீர்கள் ஐயா. பிரதேசக் கல்விக் காரியாலத்தின் அனுமதி பெற்று வாருங்கள். அனுமதியில்லாமல் எங்களால் எதுவும் சொல்ல முடியாது.”

 

கேட்ட கேள்விகளுக்கு பதில்களற்றுப் போனாலும் காண்பவைகளை எழுத எங்களால் முடியும். நான்கு பக்கங்களும் தகரங்களால் அடைக்கப்பட்ட 60 X 20 தகரக் கொட்டகைக்குள் நிலத்தில் அமர்ந்து, வியர்வை வழிய வழிய வாழ்க்கையைக் கொண்டு செல்லத் துடிக்கும் இச் சிறு பிள்ளைகளுக்காக, இவற்றை நாட்டுக்கே சொல்வது எங்கள் கடமை.

“நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள் பிள்ளைகளே?”

 

எங்களது மொழிபெயர்ப்பாளர் குமார், தமிழில் கேட்ட கேள்விக்கு ஒரு துடிப்பான குழந்தை இவ்வாறு சொன்னது.

“அதோ தென்படும் முகாமில. எனது அண்ணாவென்றால் குன்னத்தீவுல எங்க வீட்டில பிறந்தாராம்.”

“பிள்ளையோட வயது என்ன?”

 

தமிழில் விரல் விட்டு எண்ணிய குழந்தை ‘ஐந்து வயது’ எனச் சொன்ன போது நண்பன் எனது முகம் நோக்கினான்.

 

“இப்போ எங்கே அந்தக் கிராமத்து வீடு?”

 

“தெரியாது. எங்களை அங்க போக விட மாட்டாங்களாம்”

குழந்தை ரகு ‘டீச்சரிடம் புத்தகத்தைக் காட்டி வருகிறேன்’ எனச் சொல்லி எங்களை விட்டும் விலகிப் போனது. குழந்தை ரகு நிலத்தில் அமர்ந்து எழுத்துக்கள் எழுதியிருந்த அதனது கொப்பியையும் எடுத்துக் கொண்டு ஆசிரியையிடம் ஓடியது. பிள்ளைகளின் ஆசிரியை அப்பாவித்தனமாக எங்களைப் பார்த்துப் புன்னகைத்தபடி கொப்பியைக் கையில் வாங்கிக் கொண்டார்.

 

“குண்டுச் சத்தத்துக்கு சிறிய எழுத்துக்கள் கோணலாகும்

என்ன செய்வது குழந்தையே

ஆசிரியை நான் மாணவி நீ

எனினும் நாம் ஒரு வகுப்பில்……”

 

 

பாடகி தீபிகா பாடும் இப் பாடல் எனது நினைவில் எழுந்தது. குண்டுச் சத்தம் இல்லா விடினும் இன்னும் இக் குழந்தைகளின் எழுத்துக்கள் கோணல்தான். அது ஏனெனில் தகரக் கொட்டகையொன்றுக்குள் வியர்வை வழிய வழிய நிலத்திலமர்ந்து எழுத்துக்களை எழுத வேண்டியிருப்பதால்தான்.

 

 

இக் குழந்தைகளிடமிருந்து விரைவிலேயே விலகிச் செல்ல மனம் இடந் தரவில்லையெனினும் நாங்கள் அங்கிருந்து விடை பெற்றோம். ஏனெனில் அரச அதிகாரிகளின் அனுமதியற்று அழைக்கப்படாமலேயே சென்ற எங்கள் பயணமானது, தகரக் கொட்டகையொன்றுக்குள் வியர்வையில் நனைந்தபடி இக் குழந்தைகளின் கல்விக் கண் திறக்கப் பாடுபடும் இந்த ஆசிரியர்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் எனத் தோன்றியமையால்தான்.

 

 

இவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த அதிபர் நாங்கள் வெளியேற முற்படுகையில் இவ்வாறு கூறினார்.

“எங்களால் வேறு குறைபாடுகளையென்றால் கொஞ்சம் கொஞ்சமாகவாவது நிவர்த்தி செய்து கொள்ளலாம். ஆனால் குழந்தைகளுக்கு இருக்கிற பெரிய பிரச்சினை இருக்க வீடில்லாததுதான்.”

 

 

அடுத்ததாக நாங்கள் கிளிவெட்டி இடம்பெயர் முகாமுக்குப் போனோம். அவர்களது முழு வாழ்க்கையுமே 12 X 12 அடி தகரக் கொட்டகைக்குள் சிறைப்பட்டிருக்கிறது. பிள்ளைகளின் பாடசாலை வேலைகள், சமையல், பெற்றோரின் தாம்பத்திய உறவு எல்லாமுமே 12 அடிகளுக்குள் சிறைப்பட்ட வாழ்க்கை. ஏக்கர் சிலவற்றுக்குள்ளான சிறிய நிலத்தில் 575 குடும்பங்கள். அவர்கள் எல்லோருக்குமே இருப்பது ஒரே மாதிரியான நடைமுறை வாழ்க்கை. அவ் வாழ்க்கை நடைமுறைகளை அவர்களுக்குப் பதிலாக எங்களிடம் சுருக்கமாகச் சொன்னார் கிழக்கு பிரதேச சபையின் மக்கள் விடுதலை முன்னணி அமைச்சர் திரு விமல் பியதிஸ்ஸ.

 

 

“இன்று இவ்வாறு இங்கு சிறைப்படுத்தப்பட்டிருப்பது ஏக்கர் கணக்கில் நிலங்கள் இருந்த, வீடு வாசல்கள் இருந்த, நல்ல உழைப்பினால் பயன் தரக் கூடிய விவசாய நிலங்கள் இருந்த சாம்பூர் மக்கள். சாம்பூரைத் தமிழில் சம்பூர் என அழைக்கிறார்கள். சாம்பூரானது அரிசி, காய்கறிகள், பால், குளத்து மீன்கள், கருவாடு போன்ற உணவு வகைகளினால் நிறைந்திருந்த ஓர் பிரதேசம். இப் பிரதேசத்தில் மட்டும் 47 குளங்கள் இருக்கின்றன. ஆயிரக்கணக்கிலான பால் தரும் மாடுகள் இப்பொழுது காட்டு மாடுகளாகி விட்டன. இன்று இவ்வாறு சிறைப்படுத்தப்பட்டிருக்கும் மக்கள்தான் மூதூர் நகரத்திற்கு கருவாடு, மரக்கறி வகைகள், அரிசி போன்றவற்றை வழங்கியவர்கள். இன்று இந்த கிளிவெட்டி முகாமில் 575 குடும்பங்களைச் சேர்ந்த 1755 பேர் இருக்கிறார்கள்.

 

 

சாம்பூர் எனப்படுவது ஐந்து கிராம சேவகர் பிரிவுகளின் மக்கள் வாழ்ந்த பிரதேசம். அவை குன்னத்தீவு, நவரத்தினபுரம், கடற்கரைச் சேனை, சாம்பூர் கிழக்கு, சாம்பூர் மேற்கு ஆகியன. இங்கு அனாதரவாக்கப்பட்டிருப்பது அவற்றின் மக்கள். இங்கு இவர்கள் எட்டு வருடங்களாக இருக்கிறார்கள். நான் இதுபற்றி கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கேட்டபோது அதிகாரி, ‘அது தேசியப் பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சினை..அதனால் அது எமக்குச் சம்பந்தப்பட்டதல்ல’ என்று கூறினார். இப்பொழுது இந்தச் சாம்பூரானது இந்தியாவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சம் இலங்கை இராணுவத்துக்குக் கூட அங்கு செல்ல முடியாதென நாங்கள் நினைக்கிறோம். அது தேசியப் பாதுகாப்புக்கு நல்லதா என நாங்கள் கேட்கிறோம்.”

 

அமைச்சர் விமல் பியதிஸ்ஸவினுடைய நீண்ட விளக்கத்தின் பிறகு நாங்கள் முகாமினுள்ளே மக்களைச் சந்தித்தோம். அவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு தண்ணீர் பவுஸர்களே கிடைக்கின்றன. 575 குடும்பங்களைச் சேர்ந்த 1755 பேருக்கு இந்த இரண்டு பவுஸர்களில் 6000 லீற்றர் தண்ணீர் வந்தால் 1755 பேரில் ஒருவருக்குக் கிடைப்பது 3 1/2 லீற்றரிலும் குறைந்த அளவே. கழிப்பறைத் தேவைக்கு, குளிக்க, துணி தோய்க்க, குடிக்க எல்லாவற்றுக்கும் அவ்வளவுதான். அவர்கள் இந் நரகத்தில் வாழும் வாழ்க்கையைத் தீர்மானிக்க இதுவே போதாதா என்ன? அடுத்ததாக, நாட்டுக்கு அரிசி வழங்கிய இம் மக்கள் மத்தியில் மூவர் அடங்கிய குடும்பமொன்றுக்கு ஒரு மாதத்துக்குக் கிடைப்பது 26 கிலோ அரிசி, தேங்காயெண்ணெய் 1 1/2 லீற்றர், 3 கிலோ பருப்பு மாத்திரமே. அவர்கள் ஒருமித்த குரலில் கேட்பது ‘எங்களுக்கு வேறு எதுவுமே வேண்டாம். எங்களை எங்கள் ஊர்களுக்குச் செல்ல அனுமதியுங்கள்’ என்ற வேண்டுகோளை மாத்திரமே.

ஐந்து வருடங்களாகக் கேட்கும் அவர்களது வேண்டுகோளானது செவிட்டு யானைகளிடத்தில் வீணை வாசிப்பது போல ஆகியமையால் அவர்கள் தமது உரிமைகளுக்காக வீதியிலிறங்கத் தீர்மானித்திருக்கிறார்கள். மக்கள் விடுதலை முண்ணனிக் கட்சி, முண்ணனியில் வந்து நின்றிருக்கிறது. சேருநுவர – திருகோணமலை வீதியில் முகாமுக்கு முன்னே வந்து நின்று கிளிவெட்டி இடம்பெயர் முகாம் மக்கள் தங்களது போராட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். இவ்வளவு காலமும் அடங்கிப் போயிருந்த மக்கள் போராட்ட அட்டைகளை உயர்த்தியபடி கோஷமெழுப்புகிறார்கள்.

‘சாம்பூர் எங்களது இடம்! எங்களுக்கு எங்களது இடம் வேண்டும்!!’

 

அந்தப் பாடசாலையில் நாங்கள் சந்தித்த சிறு குழந்தையின் கையிலும் ஒரு போராட்ட அட்டை இருந்தது. கிளிவெட்டி முகாமானது நாளை பற்றியெரியக் கூடிய மக்கள் போராட்டத்தின் முதல் வித்தோடு திரும்பவும் இரவின் இருளில் மூழ்கியது. நான் மீண்டும் கொழும்பு திரும்பினேன். கொழும்பானது வெசாக் தோரணங்களாலும், மின்விளக்குகளாலும் களைகட்டியிருந்தது.

 

நான் எனது கைத்தொலைபேசிக்கு வந்திருந்த ஜனாதிபதியின் வாழ்த்துக் குறுஞ்செய்தியை மீண்டும் படித்துப் பார்த்தேன்.

‘நோயற்ற சுக வாழ்வோடு நீண்ட ஆயுள் கிடைக்கட்டும்’

 

கிளிவெட்டி அகதி முகாமில் தினமொன்றுக்குக் கிடைக்கும் 3 1/2 லீற்றர் தண்ணீரில், சிறிய பெரிய எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ள வேண்டியிருக்கும் மக்களுக்கு இது எவ்வாறு பொருந்தும்? அவர்கள் வாழ்ந்த இடத்தை இழக்கச் செய்து, பலாத்காரமாக முகாம்களுக்குள் இழுத்துப் போடப்பட்டிருக்கும் மக்களுக்குக் கிடைக்காத சுக வாழ்க்கை இருப்பது ஜனாதிபதியின் குறுஞ்செய்தியில் மாத்திரமே.

- ப்ரியந்த லியனகே(16.05.2011)

தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை

 

 

http://inioru.com/?p=40301

டெல்லி: இலங்கையின் திருகோணமலை சம்பூரில் இந்தியா அமைக்கும் அனல்மின் நிலைய திட்டத்தைக் காரணம் காட்டி கடந்த 9 ஆண்டுகளாக அப்பகுதியில் பாரம்பரியமாக வாழ்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் தாய்நிலத்திலேயே இன்னமும் அகதிகளாக முகாம்களில் வாழ்ந்து வருகிற கொடுமை நீடித்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு டெல்லி வந்திருந்தார் அதிபர் ராஜபக்சே. அவர் இலங்கை திரும்பிய உடனேயே இலங்கையின் கிழக்கில் திருகோணமலை சம்பூரில் இந்தியா அமைத்து தர இருக்கும் அனல்மின் நிலைய திட்ட பணிகளை விரைவுபடுத்த ராஜபக்சே உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த சம்பூர் அனல்மின் நிலையத் திட்டத்தைக் காரணம் காட்டி 9 ஆண்டுகாலமாக இப்பகுதியில் வசித்த ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படாமல் அகதிகள் முகாம்களிலேயே இன்னமும் வசித்து வருகின்றனர். அவர்களது எதிர்காலம் என்னவென்று கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இலங்கையில் 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தம் முடிந்து 5 ஆண்டுகளைக் கடந்தாயிற்று. ஆனால் அதற்கு முன்னதாக யுத்தம் தொடங்கிய 2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதன் முதலாக அகதிகளாக வெளியேறியவர்கள் திருகோணமலை சம்பூர்வாழ் தமிழர்கள்தான்.

சம்பூரில் மிகவும் பிரசித்திபெற்ற சம்பூர் பத்திரகாளி கோவில், பல கல்வியாளர்களையும், சமூகசேவையாளர்களையும் உருவாக்கிய சம்பூர் மகாவித்தியாலயம், சம்பூர் ஸ்ரீமுருகன் வித்தியாலயம் ஆகிய கல்வி நிறுவனங்களுடன் இந்து சமய வரலாற்று ஆதாரங்களுடன் கூடிய இடம்தான் இந்த சம்பூர். இப்போது சம்பூர் பொட்டல்காட்டு பிரதேசமாக முற்று முழுதாக இலங்கை ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது.

சம்பூரைவிட்டு தமிழர்கள் வெளியேறிய பின்னர் அந்த பகுதியை உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியது இலங்கை ராணுவம். அப்பகுதியில்தான் இந்தியா உதவியுடனான அனல்மின் நிலையம் அமைக்கப்படவும் இருக்கிறது. இந்த காரணங்களால்தான் பிறபகுதி தமிழர்கள் சொந்த நிலத்தில் குடியேறிய பின்னரும் கூட சம்பூர் தமிழர்கள் அகதிகள் முகாம்களிலே வெயிலிலும் மழை வெள்ளத்திலும் அவதிப்பட்டு

இந்த மக்களுக்கு நட்ட ஈட்டுத் தொகையோ, மாற்று வாழ்விடமோ எதுவுமே இதுவரை வழங்கப்படவில்லை. யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கை சென்ற இந்திய எம்.பி.க்கள் குழுவினர் இந்த அகதிகள் முகாமைப் பார்வையிடவும் அனுமதிக்கப்படவில்லை.

ஏறத்தாழ 9 ஆண்டுகளாக அகதிகள் முகாம்கள் வாழும் இந்த தமிழ் மக்கள் இனி சொந்த நிலத்தில் குடியேற்றப்படுவது சாத்தியமற்ற ஒன்று என்று இலங்கை அரசு திட்டவட்டமாக கூறுகிறது

இந்த சம்பூர் அகதிகளைப் பற்றி ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பு உட்பட எந்த ஒரு சர்வதேசமும் கண்டு கொள்ளவே இல்லை. இப்படியான நிலையில் இந்த மக்களுக்கான தீர்வு தான் என்ன?

இலங்கையின் வடபகுதியில் ஈழத் தமிழர் மறுவாழ்வுக்காக வீடுகளைக் கட்டித்தருகிறது இந்திய அரசு. அதே நேரத்தில் தாம் அமைக்கும் அனல்மின் நிலையத் திட்டத்துக்காக சொந்த மண்ணை விட்டு அகதிகள் முகாம்களில் அவதியுறும் பல்லாயிரம் குடும்பங்களுக்கென கிழக்கில் வீடு கட்டித் தந்து அவர்களது வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் தரக்கூடிய அனைத்து வாய்ப்புகளையும் இந்தியாவே உருவாக்கித் தருவதுதான் முதன்மையான தேவை என்கின்றனர் இலங்கை ஊடகவியலாளர்கள். செய்யுமா புதிய மோடி அரசு?

Read more at: http://tamil.oneindia.in/news/india/thousands-tamils-displaced-sampur-due-india-s-power-plant-202323.html#slide688451

Edited by யாழ்அன்பு

  • கருத்துக்கள உறவுகள்

இருவரும் சந்தித பொழுது இப்படி பேசியிருக்கலாம்

மகிந்தா: புத்தம் சரணம் கச்சாமி ,சங்கம் சரணம் கச்சாமி

மோடி: எது நடந்ததோ அது நல்லாவே நடந்தது இனி நடக்க இருப்பதும் நல்லாவே நடக்கும்

மகிந்தா: சோ வி ஆர் இந்த செம் போர்ட்..கி...கி.கி

மோடி: யெஸ்,யெஸ்...நீ தமிழனை வைச்சு உன்ட அரசியலை நடத்து,நான் இந்துவை வைச்சு என்ட அரசியலை

நடத்துகிறேன்...

மகிந்தா: இப்ப என்ட நாட்டில புலியில்லை எல்லாத்தயும் அழிச்சு போட்டேன் டமிழர்கள் எல்லாம் நல்ல சந்தோசம்யிருக்கினம்..

மோடி: மச்சான் மகிந்தா எனக்கே நீ காது குத்துகிறாய், நீ தமிழனுக்கு ஒன்றும்கொடுக்க முடியாது என்பது என்க்கு தெரியும் அதை நான் பற்றி பெரிதாக கண்டுகொள்ளபோவதில்லை , ஆனால் நானும் நீயும் வியாபாரம் செய்யலாம்....போனவுடன் அதற்கான் வேலைகளை ஆரம்பி.

மகிந்த:போனவுடன் முதல் வேலை அதுதான்...நாளையான் பேப்பரை பார்த்து நீங்கள் அதிர்ந்து போவீங்கள்

பத்திரிகை:...சனதிபதி அனல்மின் திட்டதின் வேலைகளை துரிதபடுத்தும்படி கட்டளை இட்டார்...இந்திய பிரதமர் சிறிலங்கா விஜயம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.