Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித நோய் தீர்க்கும், மயக்கும் ராகங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இசையை ரசிக்காத மனிதர்களே இல்லை, இசைக்கு இறைவனும் மயங்குவான் எனக் கூறுவதைக் கேட்டிருக்கிறோம். மனிதன் பிறக்கும் பொது “ ஆ…. என்ற ஒலியை எழுப்பியவாறே பிறக்கிறான்.பிறந்த பின் தாலாட்டும், இறந்த பின் ஒப்பாரியும் இக்குழந்தைக்கு பிற மனிதர்களால் பாடப்படுகிறது. ஆக இசை என்பது தமிழர்களின் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்றாகவும், உணர்வுகளோடும், வாழ்க்கையோடும் கலந்துவிட்ட ஒன்றாகவும் மாறிப்போனது.

இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் மன அழுத்தம் இல்லாத மனிதர்களே இல்லை எனலாம், அவ்வாறு மன அழுத்தம் ஏற்படுகிறபோது அதிலிருந்து விடுபட சிலர் மது அருந்துகின்றனர். சிலர் கோவிலுக்குச் செல்கின்றனர், சிலர் புகை பிடிக்கின்றனர், சிலர் திரைப்படம் காணச் செல்கின்றனர், சிலர் தனக்குப் பிடித்தவரிடம் சென்று தனது சோகங்களைச்  உரியவரிடம் கூறி ஆறுதல் தேட முயல்கின்றனர், இன்னும் சிலர் தான் மனதிற்குள்ளேயே பூட்டி வைத்துக் கொண்டு புழுங்கிக்கொண்டு இருக்கின்றனர். இதில் மிகச்சிலரே தனக்கு அழுத்தம் ஏற்படும் பொது தனக்குப் பிடித்த மெல்லிய இசையையோ, பாடலையோ கேட்கின்றனர்.

இசை மனிதனின் உணர்வுகளைத் தூண்டும் சக்தி படைத்தது. சங்க காலத்தில் போருக்குச் செல்வதற்கு முன்பு முரசு முழங்கி, கொம்பு (வாத்தியக்கருவி) ஊதப்பட்டு வீரர்களை இசை மூலம் உற்சாகப்படுத்தி போருக்குத் தயார் செய்வதை ஒரு வழக்கமாக வைத்திருந்தனர். அன்றைய காலகட்டத்தில் பாணர், விறலியர், கூத்தர், போன்றோர் மன அழுத்தத்தில் இருக்கும் அரசர்களையும், அமைச்சர்களையும் தன் இசையால் மகிழ்வுபடுத்தி, தானும் மகிழ்ந்து வாழ்ந்து வந்தனர்.

குழல், யாழ் என இருந்த தமிழரின் பூர்வீக இசைக்கருவிகள் பிற்காலத்தில் வளர்ச்சியடைந்து கம்பிக்கருவிகள் (வீணை, கிடார், வயலின்), காற்றுக்கருவிகள் (புல்லாங்குழல், நாதஸ்வரம், ஒத்து, முகவீணை, கிளாரினேட்), தோல் கருவிகள் (முரசு, பறை, தவில், பம்பை, உடுக்கை) போன்ற பலவகை இசைக்கருவிகளைக் கொண்டு நம் மக்களை இசைக் கலைஞர்கள் மகிழ்வித்து வந்தனர் என்பது வரலாறு.

இந்தக் கருவிகளை வாசிக்கும் போது மனிதரின் மனதிற்குள் இருக்கும் கோபம், அன்பு , அமைதி, இறக்கம், கருணை, அழுகை, மகிழ்ச்சி எனப் பல உணர்வுகளைத் தட்டி எழுப்பும் சக்தி இந்த இசைக்கருவிகளுக்கு உண்டு என்றால் அது மிகையாகாது.

முற்காலத்தில் ஆற்றுப்படுகைகளின் ஓரத்தில் வாழ்ந்த ஆதி தமிழ் மக்களின் இசையைக் கேட்ட பிற நாட்டவர்கள் இது “ கரை நாட்டு இசை” என்றனர். அதாவது ஆற்றங்கரை ஓரத்தில் வாழ்ந்ததால் இப்பெயர் வந்தது. பிற்காலத்தில் இக்கரை நாட்டு இசையே பேச்சு வழக்கில் திரிந்து  கர்னாட்டிக் இசை என மாறியது எனக் கூறுகின்றனர் சில தமிழ் அறிஞர்கள்.

manitha-noi-theerkkum-raagam-4.jpgஇந்த கர்நாட்டிக் இசையின் அடி நாதமாக ச,ரி,க,ம,ப,த,னி,ச  என்ற ஏழு எழுத்துக்களைக் கொண்டு ஏழு சுரங்களுக்குள் பல வித ராகங்களை உருவாக்கி பாடல்களாகப் பாடி வந்தனர். தற்போது தமிழ் திரை இசையமைப்பாளர்களில் சிலர் இந்த ராகங்களை அடிப்படையாக எடுத்துக் கொண்டு திரையில் மெல்லிசைப் பாடல்களையும், துள்ளிசைப் பாடல்களையும் உருவாக்கி மக்களுக்குத் தருகின்றனர்.

 சத்தத்தில் சங்கீதம் இருக்கு – அதை

கேட்கத்தான் நெஞ்சத்தில் இருக்கு.

என்ற கவிஞர் முகிலன் எழுதிய இவ்வரியில் இயற்கையின் ஒவ்வொரு படைப்பிலும் ஒரு சத்தம் ஒளி வடிவாகவும், இசை வடிவாகவும் இருக்கிறது. அதைக் கேட்காத நெஞ்சம் கிறுக்கு (மயக்கநிலை) ஆகிவிடும் எனக் கூறுகிறார்.

இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை   - திருவிளையாடல்

இசை கேட்டால் புவி அசைந்தாடும், அது இறைவன் அருளாகும்.

 இசையால் வசமாக இதயமேது?

எனப் பாடும் தமிழ் திரைப்பாடல்களில் தமிழ் இசையின் அருமை பெருமைகள் வியந்து பாடப்படுகிறது.

எவனொருவன் நல்ல ரசிகனோ அவன் நல்ல கலைஞனாகிறான். எவனொருவன் நல்ல கலைஞனோ அவன் அறிஞனாகிறான். ஆக இசையைக் கேட்கவும், ரசிக்கவும் நம் மனதிற்கு நல்ல ஒரு ரசனை உணர்வு வேண்டும். அந்த ரசனை உணர்வு இல்லாதவர்கள் இங்கே உயிர் இருந்தும் சடங்களாகவும், உடல் இருந்தும் சவங்களாகவும் வாழ்ந்து வருகின்றனர்.

விஞ்ஞானம் வளர்ந்து விட்ட இக்காலச் சூழலில் மனிதர்களுக்கு பற்பல நோய்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு புதுக் கண்டுபிடிப்புகளும் ஒரு புதிய நோய் உருவாக்கி வருகிறது என்பதே உண்மை. ஆக  இன்றைய மனிதர்களின் வாழ்க்கை  இயந்திரத்தனமான வாழ்வாக பலருக்கும் மாறிவருவது காலம் செய்த கோலமாகும்.

இப்படிப்பட்ட இயந்திர வாழ்வில் ஓய்வில்லாமல்,உறக்கமில்லாமல், நல்ல உணவுகளைக் கூட நேரத்திற்கு சாப்பிட முடியாமல் பலர் இருப்பதால் பல நோய்கள் இம்மனிதர்களைத் தாக்கும் போது பெரும்பாலானவர்கள் ஆங்கில மருந்தை எடுத்துக் கொள்கின்றனர்.

manitha-noi-theerkkum-raagam-7.jpgஇச்சூழலில் நோய்களை இசையின் மூலம் குணப்படுத்துவது பலருக்கும் தெரியாத ஒன்றாகவே உள்ளது. அதெப்படி இசை மூலம் குணமாக்க முடியும்? இசைக்கு அப்படி ஒரு திறன் உண்டா? எனப் பல கேள்விகள் எழுவது இயற்கையே. ஆனால் அந்த இசையால் பற்பல நோய்களைக் குணப்படுத்த முடியும் என்பதே உண்மையான ஒன்றாகும்.

இசையால் இறை நிலை  அடையாளம் என்கின்றனர் சில இசை வல்லுனர்கள். அவ்வளவு ஏன், உலகத்தில் உள்ள எல்லா மதங்களின் வழிபாட்டின் போதும் எதோ ஒரு இசைக்கருவியை வாசித்தும், பாடல்கள் பாடியும் இறைவனை வழிபட்டு வருகின்றனர். இச்சூழலில் கர்நாடக சங்கீத இசையில் சில குறிப்பிட்ட ராகங்களைக் கேட்டால் நோய்கள் குணமாகும் என தமிழகத்தில் நடந்த சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தாலி நாட்டில் உள்ள பாவியா என்ற நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருந்துகள் பிரிவுப் பேராசிரியர் லூசியானா  பெர்னார்டி தலைமையில் இந்த இசை தொடர்பான ஆய்வுகள் நடை பெற்றன. இசை மூலம் நோய்களைக் குணமாக்க முடியும் என இக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சுகமான, இதமான இசையைக் கேட்டதன் மூலம் நரம்பு சம்பந்தமான கோளாறுகள், நரம்பு தளர்ச்சி, சோகமான நிகழ்வில் ஏற்படும் அதிர்ச்சிகள் என இவைகளை இசை ஒரு கட்டுக்குள் கொண்டு வருகின்றன. ஒரு நபர் இசைக்கும் வயலின் இசையைக் கேட்டாலே கொடிய தலைவலியும் போய்விடும் என்கின்றனர். கிஸ்டீரியா  என்ற நோயை நரம்புக் கருவிகளின் இசை குணமாக்கி விடுகிறதாம். அமெரிக்காவில் ஒரு பல் மருத்துவர் மயக்க மருந்தோ அல்லது வலி குறைப்பு மருந்தோ இல்லாமல், மெல்லிய இசையை எழுப்பியே நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். மெல்லிசையைக் கேட்கும் போது இதய நோய் குணம் ஆகிறதாம். அதிலும் குறிப்பாக மாரடைப்புக்குப் பிறகு நோயாளிகள் குணமாக மெல்லிசை பெரிதும் பயன்படுகிறது.

manitha-noi-theerkkum-raagam-1.jpgநல்ல இசை நம் மனதையும் எண்ணங்களையும் அமைதிப் படுத்துவதோடு, ரத்த அழுத்தம், மன அழுத்தம், மன இறுக்கம், தூக்கமின்மை, சீரற்ற இதயத்துடிப்பு போன்ற நோய்கள் இசையைக் கேட்பதமன் மூலம் குணப்படுத்தமுடியும் என்கின்றனர். துடும்பு, பறை, மத்தளம், டிரம்ஸ் போன்ற தொல்கருவிகள் ஒலிகளைக் கேட்கும்போது நம் மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தி நமது தசை நார்களை தளரச் செய்கின்றன. நமது கிராமங்களில் இன்றும் கூட தீ மிதித்தல், அலகு குத்துதல், சாமி இறக்குதல், சீர்வரிசை கொண்டு வருதல், பால் குடம் கொண்டு வருதல், தேர் இழுத்தல்  போன்ற சுப காரியங்கள்  நிகழும் போது தவில், பறை, உருமி, பம்பை, உடுக்கை போன்ற தொல்கருவிகள் வாசிக்கப்படுவதால் இதைக் கேட்பவர்களுக்கு ஒரு வித மனக்கிளர்ச்சி ஏற்பட்டு உள்ளத்திற்கும், உடலுக்கும் ஒரு புதிய வேகம், உற்சாகம், உண்டாவதை நாம் யாராலும் மறுக்க முடியாது. இவ்விசையைக் உற்சாகத்தில் நடனம் ஆடுவதையும், சாமி வந்து ஆடுவதையும் பார்க்கலாம்.

இந்திய மருத்துவத்துறையில் குறிப்பிடத்தக்க மைல் கல் இசைமருத்துவம் ஆகும். அதாவது கர்ப்பிணிகளுக்கு இனிய இசை வாயிலாக சுகப்பிரசவம் நிகழுகின்ற அதிசயம் நிகழ்த்தப்பட்டு வருகிறது. கர்ப்பிணிப் பெண்கள் தினமும் காலை, மாலை வேளையில் குறைந்தபட்சம் அரைமணி நேரம் நல்ல ராகமுள்ள பாடலைப் பாடி வந்தால் அல்லது இனிய இசையைக் கேட்டு வந்தால் அவர்களுக்கு நிச்சயம் சுகப்பிரசவம் ஏற்படுகிறதாம். இந்த முறை இந்தியாவில் தமிழகத்தில் தான் முதலாவதாக அமலுக்கு வந்திருக்கிறது என்பது தமிழ்ப் பெண்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் ஆகும்.

manitha-noi-theerkkum-raagam-8.jpgஇசை மூலம் நம் முன்னோர்கள் சில அதிசயங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளனர். அகத்தியர் பாடியே ஒரு மலையை உருக வைத்தாராம். பேரரசர் அக்பர் அவையில் இருந்த சங்கீதச் சக்கரவர்த்தியான தான்சேன்  என்ற இசைக்கலைஞர் “தீபக்” என்ற ராகத்தைப் பாடி அணைந்த விளக்குகளை மீண்டும் எரிய வைத்தாராம்.

நம் நோய் தீர்க்கும் சில ராகங்களையும், அந்த ராகத்தில் அமைந்த திரைப் பாடல்களையும், இந்த ராகத்தில் அமைந்த பாடல்களைக் கேட்டால் தீரும் நோய்களைப் பற்றியும் இங்கே இனி காணலாம்.

அதிகாலையில் கேட்க வேண்டிய ராகம் – பூபாளம்

பாடல்  :      சலங்கயிட்டால் ஒரு மாது

   படம்     :      மைதிலி என்னைக் காதலி

* பாடல்  :      செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்

    படம்      :      முள்ளும் மலரும்

 அந்தி மாலையில் கேட்கவேண்டிய ராகம் – மலையமாருதம், சக்கரவாகம்

* பாடல்  :     கண்மணி நீ வர காத்திருந்தேன் – மலையமருதம்

    படம்    :     தென்றலே என்னைத் தொடு

பாடல்  :     நீ பாதி நான் பாதி கண்ணே – சக்கரவாகம்

   படம்    :     கேளடி கண்மணி

பாடல்  :     பூப்பூக்கும் மாசம் தை மாசம் – மலையமாருதம்

    படம்    :     வருசம் 16

 * பாடல்  :     உள்ளத்தில் நல்ல உள்ளம – சக்கரவாகம்

    படம்    :     கர்ணன்

* பாடல்  :     ஓராறு முகமும் ஈராறு கரமும்

   படம்    :     டி.எம்.எஸ். பக்திப் பாடல்கள்

 

 

* பாடல்  :     நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு

    படம்    :     தியாகம்

 

சிறுநீரகப் பிரச்சனை தீரவும், மழை வேண்டியும்- அமிர்தவர்ஷினி

*பாடல்:  தூங்காத விழிகள் ரெண்டு.

படம் :   அக்னி நட்சத்திரம்

 கடின மனம் இளக கல்நெஞ்சம் கரைய – அரிகாம் போதி 

*பாடல்:   கண்ணுக்கு மை அழகு

  படம் :    புதிய முகம்

*பாடல்:   உன்னை ஒன்று கேட்பேன்

  படம்  :   புதிய பறவை

*பாடல்:   ஒரே பாடல் உன்னை அழைக்கும்

  படம்  :   எங்கிருந்தோ வந்தாள்.

*பாடல்:   பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்

  படம்  :   வருசம் பதினாறு.

மனதை வாட்டும் பல துன்பங்களின் தாக்கம் குறைந்து அமைதி ஏற்பட – ஆனந்த பைரவி, ஸ்ரீ ரஞ்சனி, கமாஸ், நாயகி,சகானா, நீலாம்பரி

*பாடல்:     நாதம் எழுந்ததடி – ஸ்ரீ ரஞ்சனி

படம்  :     கோபுர வாசலிலே

*பாடல்:     வசந்த காலங்கள் இசைந்து – ஸ்ரீ ரஞ்சனி

 படம் :     ரயில் பயணங்களில்

*பாடல்:    மெட்டுப்போடு மெட்டுப்போடு – ஆனந்த பைரவி

  படம்  :    டூயட்

*பாடல்:    கற்பகவள்ளி நின் பொற்பாதங்கள் – ஆனந்த பைரவி

  படம்  :    டி.எம்.எஸ். பக்திப்பாடல்கள்.

*பாடல்:    வரம் தந்த சாமிக்கு சுகமான லாலி – நீலாம்பரி

  படம்  :    சிப்பிக்குள் முத்து.

*பாடல்:  பூவே இளைய பூவே – நீலாம்பரி

  படம்  :  கோழி கூவுது

*பாடல்:  சித்திரம் பேசுதடி என் சிந்தை – கமாஸ்

  படம்  :  சபாஷ் மீனா

manitha-noi-theerkkum-raagam-3.jpg

மனம் சார்ந்த பிரச்சனை தீர – அம்சத்வனி, பீம்பிளாஸ்

*பாடல் :  காலம் மாறலாம் நம் காதல்  – அம்சத்வனி

  படம்  :   வாழ்க்கை

*பாடல்:   சிந்து நதிக்கரையோரம் அந்தி நேரம் – பீம்பிளாஸ்

  படம்  :   நல்லதொரு குடும்பம்

*பாடல்:   தொகை இளமயில் ஆடி வருகுது – அம்சத்வனி

  படம்  :   பயணங்கள் முடிவதில்லை

*பாடல்:   வா…வா…வா… கண்ணா வா – அம்சத்வனி

   படம்  :   வேலைக்காரன்

*பாடல்:    இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை – பீம்பிளாஸ்

  படம்  :    திருவிளையாடல்

*பாடல்:    பன்னிரு விழிகளிலே பணிவுடன்

  படம்  :    சீர்காழி கோவிந்தராசன் பக்திப்பாடல்கள்

*பாடல்:   அழகென்ற சொல்லுக்கு முருகா

  படம்  :   டி.எம்.எஸ். பக்திப்பாடல்கள்

*பாடல்:   வாராய் நீ வாராய்

  படம்  :  மந்திரி குமாரி

manitha-noi-theerkkum-raagam-2.jpg இதய நோய் தீர கேட்க வேண்டிய ராகம் – சந்திரக கூன்ஸ்

நீரிழிவு நோய் தீர கேட்க வேண்டிய ராகம் – பகாடி,ஜகன் மோகினி

பெரும் உணர்ச்சிக்கும், உத்வேகம் வர கேட்க வேண்டிய ராகம்-அடான

*பாடல்:  யார் தருவார் இந்த அரியாசனம் – அடான

படம்  :  சரஸ்வதி சபதம்

*பாடல்:  வருகிறார் உனைத் தேடி – அடான

படம் :  அம்பிகாபதி

மனதை வசீகரிக்க, மயக்க – ஆனந்த பைரவி , உசேனி, கரகரப்பிரியா

*பாடல் :  தானா வந்த சந்தனமே – கரகரப்பிரியா

படம்   : ஊருவிட்டு ஊரு வந்து

*பாடல் : கம்பன் எங்கே போனான் – கரகரப்பிரியா

படம்  :  ஜாதிமல்லி

*பாடல்:  மெட்டுப்போடு மெட்டுப்போடு –ஆனந்த பைரவி

படம்  :  டூயட்

*பாடல்:  சங்கீதஸ்வரங்கள் ஏழே கணக்கா – கரகரப்பிரியா

படம்  :  அழகன்

*பாடல்:  மாதவிப் பொன் மயிலாள் – கரகரப்பிரியா

படம் :  இருமலர்கள்

சோகத்தை சுகமாக்க – முகாரி , நாதநாமக்கிரியா

*பாடல்:  கனவு கண்டேன் நான் – முகாரி

படம்  :  பூம்புகார்

*பாடல்:  சொல்லடி அபிராமி

படம்  :  ஆதிபராசக்தி

  

manitha-noi-theerkkum-raagam-6.jpg

பாடல்:  எந்தன் பொன் வண்ணமே அன்பு

படம்  :  நான் வாழவைப்பேன்

பாம்புகளை அடக்குவதற்கு – அசாவேரி ராகம்

வாயுத்தொல்லை தீர – ஜெயஜெயந்தி ராகம்

வயிற்றுவலி தீர – நாஜீவதாரா

 எந்த நேரத்தில் என்ன பாட்டு கேட்க வேண்டும் ?

திருவெண்காடு டி.தண்டபாணி தேசிகர் எந்த நேரத்தில் என்ன ராகத்தில் அமைந்த பாடல்களைக் கேட்கலாம் என்று ஒரு வரையறை கூறுகிறார்.

நேரம்

ராகம்

5-6 மணி (காலை நேரம்)

பூபாளம்

6-7  மணிக்கு

பிலஹரி

7-8 மணிக்கு

தன்யாசி

8-10 மணிக்கு

ஆரபி, சாவேரி

10-11 மணிக்கு

மத்யமாவதி

11-12 மணிக்கு

மனிரங்கு

12-1  மணி (மதிய நேரம்)

ஸ்ரீராகம்

1-2 மணிக்கு

மாண்டு

2-3 மணிக்கு

பைரவி, கரகரப்பிரியா

3-4 மணிக்கு

கல்யாணி, யமுனா கல்யாணி

4-5 மணிக்கு (மாலை நேரம்)

காம்போதி, மோகனம், ஆனந்த பைரவி, நீலாம்பரி, பியாகடை, மலையமாருதம்

இப்படியான பல ராகங்கள், மனிதனுக்குள் இருக்கும் பல்வித நோய்களைக் குணப்படுத்துகிறது. இங்கே குறிப்பிட்டுள்ள ராகங்களின் அடிப்படையிலான  பாடல்களையும், இசைகளையும் கேட்டு நோயாளிகள் தங்கள் நோய்களைக் குணப்படுத்த வேண்டும். பாட்டைக் கேட்டல் நோய் தீரும் என்பது கரும்பு தின்னக் கூலியா என்பது போல, நம் உடல் நலமும், மன நலமும் நம்மிடம் உள்ளது. நம் நோய்க்கான மருந்து இந்த ராகங்களில் உள்ளது. இனியாவது இருக்கமானவர்கள் இனிமை கூட்டும் பாடல்களையும், இசைகளையும்  ரசிப்பார்கள், கேட்பார்கள், அமைதி பெறுவார்கள்  என்பதில் எனக்கு ஐயமில்லை

 

http://siragu.com/?p=8036

பகிர்விற்கு நன்றி உடையார்.
இனி..
 
 
நேத்து ராத்திரி.... ஜம்மா!
 
 
இந்தப்பாடலின் ராகம் என்ன ?
 
எந்த நேரத்தில் கேட்க வேண்டும்?
 
எந்த நோய் தீர்க்கும் ?

 

பகிர்விற்கு நன்றி உடையார்.
இனி..
 
 
நேத்து ராத்திரி.... ஜம்மா!
 
 
இந்தப்பாடலின் ராகம் என்ன ?
 
எந்த நேரத்தில் கேட்க வேண்டும்?
 
எந்த நோய் தீர்க்கும் ?

 

 

ராகம் : வாத்ஸாயன காம போதி
 
எந்த நேரம் கேட்க வேண்டும்: அதுதான் பாட்டிலேயே இருக்கே சார். ராத்திரியில் கேட்கும் ராகம்.
 
எந்த நோய் தீர்க்கும்: தங்களுக்கு ராத்திரியில் வரும் அனைத்து நோய்களையும் தீர்க்கும் 
 
:D  :D  :D  :lol:  :icon_idea: 

ராகம்: சந்திரகௌன்ஸ்

 
 1] மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி 
 
 2] நானாக நானில்லை தாயே 
 
 3] அழகு மலர் ஆட அபினயங்கள் கூட 
 
 4] நான் தேடும் செவ்வந்தி பூவிது ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
 
 5] வெள்ளி சலங்கைகள் கொண்ட கலைமகள் வந்து ஆடும் நேரமிது
 
 
 
 
 
 

Edited by seeman

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பகிர்விற்கு நன்றி உடையார்.
இனி..
 
 
நேத்து ராத்திரி.... ஜம்மா!
 
 
இந்தப்பாடலின் ராகம் என்ன ?
 
எந்த நேரத்தில் கேட்க வேண்டும்?
 
எந்த நோய் தீர்க்கும் ?

 

 

'தோடி ராகம்' - விரகதாப நோய் தீர்க்கும் ராகம் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.