Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் பௌத்த கலைப்பொக்கிஷங்கள் கண்டு பிடிப்பு - இராணுவம் :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கிளிநொச்சியில் பௌத்த கலைப்பொக்கிஷங்கள் கண்டு பிடிப்பு - இராணுவம் :
05 ஜூன் 2014
kili5_CI.jpg

கிளிநொச்சியில் பௌத்த கலைப்பொக்கிஷங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி சிவநகர் மற்றும் உருத்திரபுரம் ஆகிய இடங்களில் பண்டைய பௌத்த மத அடையாளச் சின்னங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். பண்டைய கால கற்கள் மற்றும் சிவனொளிபாதை மலைச் சின்னங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதிக்கு சென்ற இராணுவத்தினர் பண்டைய பௌத்த மதச் சின்னங்களை கண்டதாகவும், அது குறித்து அகழ்வாராச்சி திணைக்களத்திற்க அறிவித்ததாகவும் கிளிநொச்சி கட்டளைத் தளபதி சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அகழ்வாராய்ச்சி திணைக்கள அதிகாரிகள் குறித்த பகுதிகளில் அகழ்வுப் பணிளை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். மீட்கப்பட்ட பொருட்களில் சிவனொளிபாத மலை சின்னங்கள் காணப்பட்டதாகவும், கிளிநொச்சியிலிருந்து மீடக்ப்பட்ட பௌத்த மத கலைப் பொக்கிஷங்கள் பொலனறுவை காலத்தை; சேர்ந்தவை எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த இடத்தில் பௌத்த விஹாரை காணப்பட்டமை உறுதியாகியுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பிரதேச்தை புனித வலயமாக அகழ்வாராய்ச்சித் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த இடத்தில் தொடர்ச்சியாக அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. 1940ம் ஆண்டில் சிறிய பிள்ளையார் கோயில் காணப்பட்டதாகவும், 1980களில் சிவன் கோயில் அமைக்கப்பட்டதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர் என குறிப்பிடப்படுகிறது.

1965ம் ஆண்டில் ஆலயத்தை அண்டிய காட்டை வெட்டிய போது பாரியளவிலான புத்தர் சிலையொன்றை ஆலய குருக்கள் கண்டு பிடித்ததாகவும், அதனை தமிழீழ விடுதலைப் புலிகள் உடைத்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அரச மரமொன்றையும் புலிகள் வெட்டிச் சாய்த்ததாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/107791/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் .... உந்த சீமெந்து கல்ல பாத்தால் கனகரத்தினத் தின்னட கக்கூசு கிடங்கை மூடி கிடந்த கல்லு மாதிரி யல்லோ தெரியுது..

1965ம் ஆண்டில் ஆலயத்தை அண்டிய காட்டை வெட்டிய போது ....பாரியளவிலான புத்தர் சிலையொன்றை ஆலய குருக்கள் கண்டு பிடித்ததாகவும், அதனை தமிழீழ விடுதலைப் புலிகள் உடைத்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. :icon_mrgreen:

சிங்கள ஆமிக்காரன் நல்லாத்தான் கணக்கு போடுரானுகள்... நாடு எங்கேயோ .....யோ யோ யோ யோ  போயிட்டுது .

  • கருத்துக்கள உறவுகள்
இந்தப் பிரதேச்தை புனித வலயமாக அகழ்வாராய்ச்சித் திணைக்களம் அறிவித்துள்ளது. 

 

 

இதை செய்ய தான் இவ்வளவு குத்தி முறிவு.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் தமிழர்களும் புத்தசமயத்தைத் தழுவியிருந்ததாகச் சரித்திரமுண்டு.

 

தனது போதனை இப்படிக் கேவலமான ஒரு இனத்தையும் உருவாக்கும் எனத் தெரிந்திருந்தால் புத்தர் போதனை செய்வதற்கே முன்வந்திருக்கமாட்டார். :o :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.