Jump to content

எப்பொருள் யார் வாய் கேட்பினும்.....................


Recommended Posts

இங்கு எனக்கு யாரையும் தனிபட்ட ரீதியில் தெரியாது.தனி மடல் ரீதியாகவும் எவருடனும் தொடர்பில்லை. யாழ்களத்தின் வாசகனாகவே நெடும்காலம் இருந்த விட்டேன். போன மாதந்தான் எனக்கு உறுப்பினர் ஆக வேண்டும் என்ற அவா ஏற்பட்டு உறிப்பினராகவும் ஆகி கொண்டேன்.

நான் இணைந்த நேரமோ என்னமோ தெரியவில்லை கடந்த சில வாரங்களாக யாழ்களத்தில் சில பேதங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்கும் துர்ப்பாக்கியம் ஏற்பட்டது.

யாழ்களம் ஈழம் இந்தியா சினிமா பொதுஅறிவு உற்ப்பட பல பகுதிகளுடன் வெகுசிறப்பாகவே இருக்கிறது. முக்கியமாக சொல்லபோனால் இலங்கை தமிழர் அவலங்கள் பற்றி உலகலாவி இருக்கும் தமிழர்கள் அனைவரும் பேசி தங்களது கருத்துக்களை பரிமாறிகொள்கிறார்கள்.

அப்பாடா ஓரு மாதிரி விடயத்துக்கு வந்து விட்டேன்........

இங்கிருப்பவர் அனைவரும் ஒருவரல்லர். பலர்... இவர்கள் அனைவருக்குமே ஒரே கருத்து இருக்காது. ஆனால் இலங்கை தமிழர்களுக்கு முடிந்த முடிவு தமிழ்ஈழந்தான். இதில் யாருக்கும் எதிர்கருத்து இருக்காது இருக்கமுடியாது. வேறு தனிப்பட்ட விவாதங்களில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் அல்லது தமிழ்ஈழம் சம்மந்தபட்ட சில குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக ஏற்படும் கருத்துவேறுபாடுகள் அந்தந்த தலைப்புகளோடு மட்டும் நடக்கும் விவாதங்களோடு மட்டும் நின்று விடுவதாக எனக்கு தெரியவில்லை. அது வேறுவிடயங்களில் கூட "அதாவது ஒத்த கருத்துகளில் கூட எதிர்வாதம் செய்யும் விந்தையான சொற்தொடர்கள்" பாவிக்க படுவதாக உணர்கிறேன்.

எவராவது தமிழ்ஈழத்துக்கு எதிராக கருத்து வைத்தால் அதை கருத்தால் வெல்லும் வல்லமை அனணவருக்குமே இருக்கிறது(ஆனால் விதண்டாவாதம் செய்பவரிடம் வாதிடுவதில்லை என்பது என்னோட தனிப்பட்ட கொள்கை). குறிப்பிட்ட ஒருவரின் ஒரு கருத்து பிடிக்கவில்லையா??? கருத்துக்களால் அவரை முடியுமான வரை எதிருங்கள். அதே அவரின் இன்னொரு கருத்து பிடித்து இருக்கிறதா??? முடியுமான வரை அதை தாங்கி பிடியுங்கள். அத்தோடு முடித்து விடுங்கள். மீண்டும் புதிதாய் தொடங்குங்கள்.....

இது....

சில தினங்களாக பல புதிய உறுப்பினர்கள் யாழ்களத்துக்கு எதிராக பேசுவதை பார்க்கிறேன். இவர்கள் யார்???? எதற்காக இப்படி பேசுகிறார்கள்??? கட்டாயம் கவனத்தில் கொண்டு அவர்களுக்கு சரியான பதில் கொடுக்க வேண்டும்.(ஓரே ஆள் பல பேரீல் வந்தால் கூட...).

இது தவிர...

தனிப்பட்டவர்களிடம் கோபித்து கொண்டு போனவர்கள் அனைவரும் தங்களுக்கே தங்களுக்கான முகங்களுடன் திரும்பி வரவேணும். உங்களின் தனிப்பட்ட கோபங்களை மறவுங்கள்.

எங்கள் காலத்தில் நனவாக கூடிய தமிழ்ஈழத்தின் பேரால் நாங்கள் ஒன்று கூடுவோம்.

இது தவிர இன்னொன்று.....

நாங்கள் தமிழின் பேரால் ஒன்று கூடி இருக்கோம்... எல்லைகளை மறந்து ஒன்று கூடி இருங்கள்...

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.