Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடகொரியா, சிரியா, ஈரான் வரிசையில் இணைய விரும்புகிறதா இலங்கை? - அமெரிக்க அதிகாரி கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வடகொரியா, சிரியா, ஈரான் வரிசையில் இணைய விரும்புகிறதா இலங்கை? - அமெரிக்க அதிகாரி கேள்வி 
[Tuesday, 2014-06-24 09:51:30]
atul-keshab-150-news.jpg
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் இலங்கை தொடர்பில் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவை நிராகரிப்பதாக பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக. ஆசிய பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் துணை பிரதி ராஜாங்கச் செயலாளர் அடுல் காசியப் தெரிவித்துள்ளார். ஈரான், வடகொரியா, சிரியா போன்ற நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசாரணைகளை திட்டவட்டமாக நிராகரித்திருந்தன. விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
 
நீண்ட கால ஜனநாயக வரலாற்றைக் கொண்ட இலங்கை, பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சிரியா, ஈரான், வடகொரியா போன்ற நாடுகளின் பட்டியலில் இணைந்து கொள்ள எத்தனிப்பது வருத்தமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. யுத்தம் நிறைவடைந்து ஐந்த ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் மனித உரிமை விவகாரங்களில் இலங்கையில் மேம்பாடு ஏற்படவில்லை என்பதனை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். வடக்கிலும் தெற்கிலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருகின்றன.
 
விசாரணைகளின் மூலம் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது என்ன நேர்ந்தது என்பது பற்றி புரிந்துகொள்ள இலங்கைக்கு ஓர் சந்தர்ப்பம் கிட்டும். யுத்தத்தின் பின்னரான நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு சிறந்த அனுபவங்கள் உள்ளன. அந்த அனுபவங்கள் இலங்கையில் நல்லிணக்கத்ததை ஏற்படுத்த வழியமைக்கும் எனவும் காசியப் தெரிவித்துள்ளார்.http://www.seithy.com/breifNews.php?newsID=111888&category=TamilNews&language=tamil

USA_CI.jpg

வடகொரியா, சிரியா மற்றும் ஈரான் போன்ற நர்டுகளின் வரிசையில் இணைந்து கொள்ள இலங்கை விரும்புகின்றதா என அமெரிக்கா கேள்வி எழுப்பியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் இலங்கை தொடர்பில் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவினை நிராகரிப்பதாக பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்;ட தீர்மானம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.  ஆசிய பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் துணை பிரதி ராஜாங்கச் செயலாளர் அடுல் காசியப் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஈரான், வடகொரியா, சிரியா போன்ற நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசாரணைகளை திட்டவட்டமாக நிராகரித்திருந்தன என அவர் குறிப்பிட்டுள்ளார். விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார். நீண்ட கால ஜனநாயக வரலாற்றைக் கொண்ட இலங்கை, பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சிரியா, ஈரான், வடகொரியா போன்ற நாடுகளின் பட்டியலில் இணைந்துகொள்ள எத்தனிப்பது வருத்தமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்து ஐந்த ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் மனித உரிமை விவகாரங்களில் இலங்கையில் மேம்பாடு ஏற்படவில்லை என்பதனை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்டு;ள்ளார்; வடக்கிலும் தெற்கிலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார். விசாரணைகளின் மூலம் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது என்ன நேர்ந்தது என்பது பற்றி புரிந்துகொள்ள இலங்கைக்கு ஓர் சந்தர்ப்பம் கிட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் பி;ன்னரான நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு சிறந்த அனுபவங்கள் காணப்படுவதாகவும், அந்த அனுபவங்கள் இலங்கையில் நல்லிணக்கத்த்தை ஏற்படுத்த வழியமைக்கும் எனவும் காசியப் தெரிவித்துள்ளார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/108527/language/ta-IN/article.aspx

சக்கரைவத்தி குடும்ப கனவும் வட கொரியா ஆவதே.

இராணுவத்தை எல்லா இடமும் பரப்புகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சக்கரைவத்தி குடும்ப கனவும் வட கொரியா ஆவதே.

இராணுவத்தை எல்லா இடமும் பரப்புகிறார்கள்.

 

சக்கரவர்த்தியை ஒருத்தரும் அசைக்க ஏலாது....சிம்பாபே ஜனாதிபதி போன்று அவரும் தனிக்காட்டு ராஜா

சக்கரவர்த்தியை ஒருத்தரும் அசைக்க ஏலாது....சிம்பாபே ஜனாதிபதி போன்று அவரும் தனிக்காட்டு ராஜா

அம்பாந்தோட்டையில் அரச குடும்பங்கள் செய்வது போல் ஒரு மில்லியன் விசுவாசிகளின் வலயத்தை உருவாக்கி வருகிறார்.

இன்னும் இணையவில்லையா ???????? 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இணையவில்லையா ???????? 

 

அவங்கள் எப்பவோ இணைச்சிட்டாங்கள்......உவையள்(ஜனநாயக வாதிகள்--அமேரிக்கா,பிரிட்டன்,இந்தியா) ஐயோ இணையாதைங்கோ என காலில் விழுந்து கெஞ்சிகொண்டிருக்கினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.