Jump to content

பயனீட்டாளர்களின் 'உணர்வு'களுடன் ஃபேஸ்புக் ஆராய்ச்சி செய்தது சரியா? தவறா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஃபேஸ்புக் நிறுவனம் தனது பயனீட்டாளர்களின் 'உணர்வு'களை ஆராய்ச்சி செய்து, அதன் முடிவுகளை சமீபத்தில் அமெரிக்காவின் PNAS ( Proceedings of the National Academy of Sciences ) பத்திரிகையில் ஆராய்ச்சிக் கட்டுரையாக வெளிட்டது. ஃபேஸ்புக்குக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்ட விதம் குறித்து நிறைய பேர் கண்டனங்களைத் தெரிவித்துவருகிறார்கள். சர்ச்சைகளில் சிக்குவது ஃபேஸ்புக்குக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால், இந்த விஷயம் நாம் கவலைகொள்ளவேண்டிய விஷயமா?

1%2853%29.jpg

ஃபேஸ்புக் செய்த ஆராய்ச்சி

ஃபேஸ்புக் நிறுவனத்தின் தகவல் விஞ்ஞானியான ஆடம் க்ராமர் (Adam Kramer)-தான் இந்த ஆராய்ச்சியைச் செய்தது. இந்த ஆராய்ச்சியின் தலைப்பு 'Experimental evidence of massive-scale emotional contagion through social networks'. இவருடன் அமெரிக்காவின் கலிஃபோர்னியா, கார்னல் பல்கலைக்கழகங்களில் விஞ்ஞானிகளாக பணிபுரியும் Jamie E. Guillory மற்றும் Jeffrey T. Hancock என்ற இருவரும் இந்த ஆராய்ச்சியைச் செய்துமுடிக்க உதவியிருக்கிறார்கள்.  PNAS-காக இந்த ஆராய்ச்சிக் கட்டுரையை எடிட் செய்து ஒப்புதல் அளித்தது பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் Susan T. Fiske.

இந்த ஆராய்ச்சியின் நோக்கம், 'சமூக வலைதளங்களில் மனிதர்கள் தங்களுடைய உணர்வுகளை பதிவு செய்யும்போது, அந்த உணர்வு மற்றவர்களுக்கும் தொற்றிக்கொள்ளுமா?' என்பதுதான். உதாரணத்துக்கு, உங்கள் நண்பர் உங்களுடன் நேரடியாகப் பேசும்போது அவருடைய உணர்வுகளை உங்களாலும் உணரமுடியும். ஆனால், ஃபேஸ்புக் ஃநியூஸ்ஃபீடில் தொடர்ந்து பல நண்பர்களின் உணர்ச்சிமயமான ஸ்டேட்டஸ்களை படித்தீர்கள் என்றால், உங்களையும் அந்த உணர்வு தொற்றிக்கொண்டு, நீங்களும் அதேபோன்ற ஸ்டேட்டஸ்களை பதிவு செய்வீர்களா? என்று சோதனை செய்திருக்கிறது ஃபேஸ்புக். மகிழ்ச்சி, சோகம், வருத்தம் போன்ற உணர்வுகள் இந்த ஆராய்ச்சியில் சோதனை செய்யப்பட்டிருக்கின்றன.

ஃபேஸ்புக் இந்த ஆராய்ச்சியை எப்படி செய்தது?

ஃபேஸ்புக்கால் நம்மைப்போன்ற பயனீட்டாளர்களைத்தவிர  வேறுயாரை வைத்து ஆராய்ச்சி செய்யமுடியும். 2012-ல் ஜனவரி மாதம் நடந்தது இந்த ஆராய்ச்சி. எந்தவித தொடர்பும் இன்றி ரேண்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 6,89,003 பயனீட்டாளர்கள்தான் இங்கு பரிசோதனைக்கு பயன்படுத்தப்பட்டவர்கள். சுமார் 2500 பேருக்கு ஒருவர் என்ற விகிதம் இது.

சுமார் 30 லட்சம் ஸ்டேட்டஸ்கள் ஆராய்ச்சி செய்யப்பட்டிருக்கின்றன. தான் இந்த பரிசோதனையில் பங்கேற்றிருக்கிறோம் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட பயனீட்டாளர்களுக்கும் தெரியாது. இதில் நீங்களும் இருக்கலாம். நானும் இருக்கலாம்.  ஆனால், நாம் எல்லோரும் மறைமுகமாக இந்த பரிசோதனையை ஏற்றுக்கொண்டவர்கள்தான். குழப்புகிறதா? (இதன் விளக்கம் பின்னே!)

அடுத்து, இந்த  6,89,003 பேருடைய நியூஸ்ஃபீடில் எந்த வகையான ஸ்டேட்டஸ்களும், போஸ்ட்டுகளும் தெரியவேண்டும் என்று முடிவு செய்தது ஃபேஸ்புக். 6,89,003 பேர்களை இரண்டு குழுவாக பிரித்துக்கொண்டார்கள். ஒரு குழுவின் நியூஸ்ஃபீடில் பாசிட்டிவான வார்த்தைகள் நிறைந்த ஸ்டேட்டஸ்கள் வருவதைக் குறைத்தது. இன்னொரு குழுவின் நியூஸ்ஃபீடில் நெகட்டிவ்வான வார்த்தைகள் நிறைந்த ஸ்டேட்டஸ்கள் தெரிவதைக் குறைத்தது.

ஆராய்ச்சியின் முடிவு?

கிட்டத்தட்ட ஒரு வாரம் இந்த பரிசோதனைகளைச்  செய்ததில், நெகட்டிவான ஸ்டேட்டஸ்களை குறைவாகப் பார்த்தவர்கள், மகிழ்ச்சியான உணர்வுகளைக் கொண்டிருந்த ஸ்டேட்டஸ்களை பதிந்திருக்கிறார்கள். இதற்கு நேரெதிராக பாசிட்டிவான ஸ்டேட்டஸ்களை குறைவாகப் பார்த்தவர்கள்,சோகமான உணர்வுகளைக் கொண்டிருந்த ஸ்டேட்டஸ்களை பதிந்திருக்கிறார்கள். இதன்மூலம் ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் உணர்ச்சிகளை ஒருவரிடம் இருந்தோ, ஒரு குழுவிடமிருந்தோ இன்னொருவருக்கு தொற்ற'வைக்க'முடியும் என்று முடிவுசெய்திருக்கிறார்கள் ஆராய்ச்சிக்குழுவினர்கள்.

3%2825%29.jpg

ஃபேஸ்புக் மீது வைக்கப்படும் விமர்சனங்கள்

இணையத்தில் 'பயனீட்டாளர்களின் அனுமதியின்றி ஃபேஸ்புக், அவர்களை பரிசோதனையில் ஈடுபடுத்தியது' என்று கண்டனக்குரல்கள் எழுந்துள்ளன. ஆராய்ச்சி நடந்த ஒரு வார காலத்துக்கு  6,89,003 பேரின் மனநிலையில் ஃபேஸ்புக் விளையாடியிருக்கிறது என்றும், அவர்கள் என்ன உணரவேண்டும் என்று ஃபேஸ்புக் தீர்மானித்திருக்கிறது என்றும் கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. விஷயம் சீரியஸானதும், ஆராய்ச்சியில் பங்கேற்றிருந்த கார்னல் பல்கலைக்கழகம் அளித்த விளக்கக்குறிப்பில் 'இந்த ஆராய்ச்சிக்கு அமெரிக்க ராணுவ ஆராய்ச்சி மையம் நிதியுதவி செய்தது' என்று இருந்தது. இப்போது அதை 'எடிட்' செய்து மறுத்துள்ளது அந்தப் பல்கலைக்கழகம்.

விமர்சனங்களுக்கு பதில்

கண்டனக்குரல்களை கவனித்த ஃபேஸ்புக்-ன் தகவல் விஞ்ஞானியும், இந்த ஆராய்ச்சியை நடத்தியவருமான ஆடம் க்ராமர் தன் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸில் இப்படி எழுதியிருக்கிறார்.'“My co-authors and I are very sorry for the way the paper described the research and any anxiety it caused. In hindsight, the research benefits of the paper may not have justified all of this anxiety,” எனவே, இவரது கூற்றை ஃபேஸ்புக்-ன் பதிலாக ஏற்றுக்கொள்ளமுடியாது. இது சம்பந்தமாக ஃபேஸ்புக் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை.

அவ்வளவுதானே! - இதில் என்ன பிரச்னை?

ஃபேஸ்புக்குடன் இருக்கும் மிகப்பெரிய சொத்து, 'தகவல்கள்' தான். இதை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி வருவாயைப் பெருக்குவதே அதன் பிஸினஸ். ஃபேஸ்புக் நிறுவனம் ஆராய்ச்சி நிறுவனம் கிடையாது. எனவே ஃபேஸ்புக் செய்த இதை ஒரு 'மார்க்கெட்டிங் ரிஸர்ச்' என்றும் கூறமுடியும். அப்படிப்பார்த்தாலும், ஃபேஸ்புக் போன்ற ஒரு மிகப்பெரிய கார்பொரேட் நிறுவனத்துக்கு தான் செய்த வர்த்தக ஆராய்ச்சியை வெளியில் சொல்லவேண்டும் என்ற அவசியமே இல்லை.  எனவே, ஏன் இந்த அறிக்கையை வெளியிட்டார்கள் என்ற கேள்வி எழுகிறது.

உதாரணத்துக்கு, ஒரு ஊர் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த ஊரில் 500 பேர் இருக்கிறார்கள். அங்கே வசிக்கும் 500 குடும்பங்களின் அத்தனை தகவல்களும் ஒரே ஒருத்தருக்கு மட்டும் நன்றாகத் தெரியும். இப்போது அந்த ஊரில் தனது புதிய தயாரிப்பை விற்கவேண்டும் என்று ஒரு நிறுவனம் நினைக்கிறது. ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி, அந்தத் தயாரிப்பை கடைக்காரர்களிடம் அறிமுகப்படுத்துவது ஒரு வகை உத்தி. ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் வீட்டிற்கும் சாம்பிள் கொடுப்பது இன்னொரு உத்தி.

ஆனால், இந்த இரண்டு உத்திகளுக்குமே மனித வளமும், பண வளமும்,  நேரமும் நிறைய தேவைப்படும். அப்போதுதான் ஊரில் உள்ள அனைவரையும் பற்றி தெரிந்துவைத்திருக்கும் அந்த நபரைப் பற்றிக்கேள்விப்படுகிறது அந்த நிறுவனம். உடனே அவரிடம் சென்று விஷயத்தைச் சொல்லி, அவரிடம் டீல் பேசுகிறது. இத்தனை நாட்களாக அவ்வளவு தகவல்களையும் 'வெறுமனே' வைத்துக்கொண்டிருந்த அவர், இந்த தகவல்களை விற்று 'சம்பாதிக்கலாமே' என்று நினைக்கிறார். அவரை நாடி வந்த நிறுவனத்திடம், ஊரில் இருக்கும் 500 குடும்பங்களின் அனைத்துத் தகவல்களையும் கொடுக்கிறார். ஊரில் உள்ள அனைவரையும் பற்றி நன்கு தெரிந்துவிட்டதால், நிறுவனமும் பிரத்யேக விளம்பரங்களின் மூலம் வாடிக்கையாளர்களைக் கவர்கிறது.

ஒரு ஒரு ஊரில் இருக்கும் இவரைப்போல, மொத்த உலகுக்கும் ஒருவர் இருந்தால்? அவர்தான் நம் 'ஃபேஸ்புக்'. ஃபேஸ்புக்கை நாடி வந்த பயனீட்டாளர்களாகிய நாம், நம்முடைய தகவல்களைக் கொடுக்க கொடுக்க, அதை நாடி வரும் நிறுவனங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு நமக்கேற்ற பிரத்யேக விளம்ரங்களைக் காட்டுகிறது ஃபேஸ்புக். எனவே ஃபேஸ்புக்குக்கும் இது ஒரு வணிகம், தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இது ஒரு வணிகம். ஃபேஸ்புக்கின் நோக்கம், நம்மை அதிக நேரம் ஃபேஸ்புக் செலவிடவைத்து, விளம்பர வருவாயைப் பெருக்குவது. எந்த வகையான நியூஸ்ஃபிடைக் காட்டினால், பயனீட்டாளர்கள் அதிக நேரம் தளத்தில் செலவிடுவார் என்பதே இந்த ஆராய்ச்சியின் உண்மையான வர்த்தக நோக்கமாக இருக்கக்கூடும்.

நாம் செலவு செய்வது நம்முடைய 'நேரம்'-ம், தகவல்களும் மட்டுமே. ஆனால், பணம் போனால், திரும்ப வரும். நேரம் போனால், திரும்ப வருமா?

ஃபேஸ்புக் நம்மைப் பயன்படுத்திய விதம்

ஃபேஸ்புக்-ன் இந்த ஆராய்ச்சிக்கு மறைமுகமாக  6,89,003 பயனீட்டாளர்களும் ஏற்றுக்கொண்டார்கள்(ஏற்றுக்கொண்டோம்?!) என்று எழுதியதற்கான விளக்கம் இது. ஃபேஸ்புக்-ல் நம்முடைய கணக்கை துவக்கும்போது, அதன் விதிமுறைகள், ஒப்பந்த்தத்தை நாம் ஏற்றுக்கொள்வதாக 'டிக்' அடிப்போமே நினைவிருக்கிறதா?

2%2842%29.jpg

அந்த terms & agreement பாலிசியில் இருக்கும் ஒரு வரி இது -> “In addition to helping people see and find things that you do and share, we may use the information we receive about you…for internal operations, including troubleshooting, data analysis, testing, research and service improvement.”. இதை ஏற்றுக்கொண்டுதான் நாம் ஒவ்வொருவரும் ஃபேஸ்புக்-ல் நம் நேரத்தைச் செலவிட்டுக்கொண்டிருக்கிறோம். எனவே, சட்டப்படி, ஃபேஸ்புக் செய்ததில் தவறில்லை. 6,89,003 பயனீட்டாளர்களும் தங்களுடைய தகவல்களை 'ஆராய்ச்சி'-க்கு தருகிறோம் என்று ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்று ஃபேஸ்புக் தைரியமாக வாதாடலாம். ஆனால், நல்லெண்ண அடிப்படையில் இது சரிதானா?

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் கொண்டுவரப்பட்ட, மனிதவள ஆராய்ச்சி நெறிமுறைகளான Nuremberg Code-ன் படி, எந்த ஒரு மனிதரையும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்பு அவரிடம் முறையான அனுமதி பெறுவது அவசியம்.  ஆனால், மிக மிக அவசியமான சூழ்நிலைகளில், அனுமதி வாங்காமல் ஆராய்ச்சி செய்யமுடியும் என்று வழி இருக்கிறது.ஆனால், ஃபேஸ்புக் செய்த இந்த ஆராய்ச்சி இதற்குப் பொருந்துமா என்று தெரியவில்லை.

நாம் என்ன செய்யவேண்டும்?

உண்மையில், இந்த ஆராய்ச்சியில் நாம் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று Tal Yarkoni என்ற உளவியல் நிபுணர் கூறுகிறார். ஒருவகையில் பார்த்தால் 6,89,003 பேர் என்பது விஞ்ஞானரீதியில், இதுதான் உலகின் மிகப்பெரிய உளவியல் பரிசோதனை என்கிறார்கள். ஆனால், இந்த ஆராய்ச்சியினால் ஏற்படும் உணர்ச்சி மாற்றங்கள் மிகவும் குறைவுதானாம். அதாவது இந்த ஆராய்ச்சியினால் 6,89,003 பேருக்கும் ஏற்பட்ட உணர்ச்சி மாற்றங்கள் ஃபேஸ்புக்கில் போடும் ஸ்டேட்டஸ்களோடு முடிந்தவிடுகிறது. மிகவும் குறைவான பேர்தான் ஃபேஸ்புக்-ல் மற்றவர்களுடைய ஸ்டேட்டஸ்-ன் உணர்ச்சிகளை மிகவும் பெர்சனலாகவும், சீரியஸாகவும் எடுத்துக்கொள்கிறார்கள் என்கிறார்.

இதற்கு அவர் சொல்லும் உதாரணம் இன்னும் அருமையாக இருக்கிறது. 'கடற்கரையில் நண்பர்களுடன் ஜாலியாக இருந்தேன்' என்ற ஸ்டேட்டஸை பதிய விரும்பும் ஒருவர், ஃபேஸ்புக்-ல் லாக்-இன் செய்தவுடன், நண்பருடைய தந்தை மரணமடைந்துவிட்டார் என்ற ஸ்டேட்டஸை பார்க்கிறார் என்றால், அவர் பதிவு செய்ய விரும்பிய ஜாலியான ஸ்டேட்டஸை பதிவிடமாட்டார். காரணம், தன்னுடைய ஸ்டேட்டஸை இந்த நேரத்தில் பார்த்தால், சோகமாக இருக்கும் நண்பரின் மனதைப் புண்படுத்தக்கூடும் என நினைப்பதால்தானே தவிர, நண்பருடைய துக்கம் தனக்கும் உள்ளது என்பதால் இல்லை!. மற்றவர்களுடைய உணர்ச்சியை ஃபேஸ்புக்கில் மிக சிலரே பெர்சனலாக எடுத்துக்கொள்வார்களே தவிர, பெரும்பாலானோர், கடந்துசென்றுவிடுவார்கள் என்கிறார் இவர்.

4%2819%29.jpg

ஃபேஸ்புக்-ன் ஆராய்ச்சியை நாம் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாமா? 

இதை நாம் சற்று கூர்ந்து கவனித்தாலே புரியும். 6,83,009 பேரின் ஸ்டேட்டஸ்களை மனிதர்களால் நிச்சயம், தனித்தனியாக எடுத்துக்கொண்டு படித்துக்கொண்டிருக்கமுடியாதல்லவா?. எனவே மென்பொருள்களை வைத்துதான் இந்த பெரிய ஆராய்ச்சியைச் செய்திருக்கிறார்கள் என்கிறார் Psych Central தளத்தின் ஜான் க்ரோஹால். இதற்கு அவர்கள் பயன்படுத்தியது 1993-ல், சமூக வலைதளங்கள் எல்லாம் துவக்கலாம் என்ற எண்ணம் எழுவதற்கு முன்னரே உருவாக்கப்பட்ட மென்பொருளான Linguistic Inquiry and Word Count application. 2007-ல் இந்த மென்பொருள் அப்டேட் செய்யப்பட்டிருந்தாலும், நிறைய சொற்கள் அடங்கிய பெரிய கட்டுரைகளைத்தான் இந்த சாஃப்ட்வேர் சிறப்பாக ஆராயுமாம். ஆனால், சமூகவலைதளங்களில் மிகக்குறைவான வார்த்தைகளில் உருவாக்கப்படும் சொற்றொடர்களை ஆராய இந்த மென்பொருள் வடிவமைக்கப்படவில்லை என்பது இவரது கருத்து.

எவ்வளவு பெரிய கட்டுரையாக இருந்தால் என்ன? கொடுத்த வேலையைச் செய்யப்போகிறது என்று நினைத்தால் அது தவறு. ஏனென்றால், ஃபேஸ்புக்கினால், 'Happy' என்ற வார்த்தையைத் தேடு என்றுதான் சாஃப்ட்வேரிடம் கட்டளையிடமுடியுமே தவிர, 'Happy' என்ற உணர்வைக் கொண்ட மகிழ்ச்சியான ஸ்டேட்டஸைத் தேடு என்று கட்டளையிட முடியாதல்லவா? உதாரணம் கீழே!

“I am not happy.”

“I am not having a great day.”

இந்த இரண்டு சொற்றொடர்களுமே நெகட்டிவான உணர்வைக் கொண்டிருப்பவை என்பது 4-ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கும்கூட தெரியும். ஆனால்...

சாஃப்ட்வேர் படித்த மென்பொருள் இன்ஜினியர்கள் உருவாக்கிய LIWC 2007 மென்பொருள் இந்த இரண்டு சொற்றொடர்களையுமே 'பாசிட்டிவ்' மற்றும் 'நெகட்டிவ்' என்று சேர்த்துக் கணிக்கும். பாசிட்டிவ் என்று கணிக்கக் காரணம் 'great'  போன்ற 'happy' வார்த்தைகள். நெகட்டிவாக கணிக்க காரணம் 'not' என்ற சொல் இரு சொற்றொடரிலும் இருப்பதால்!. இதில் இருந்தே தெரிகிறது, ஸ்டேட்டஸ், ட்வீட் போன்ற குறைவான வார்த்தைகளைக் கொண்டிருக்கும் சொற்றொடர்களை வைத்துக்கொண்டு இந்த் மென்பொருளால் ஆராயமுடியாது என்பதுதான் ஜான் க்ரொஹாலின் கருத்து.

எனவே, ஃபேஸ்புக்-ன் இந்த ஆராய்ச்சி செய்யப்பட்ட விதமே தவறானது என்று சொல்கிறார் இவர். இந்த ஆராய்ச்சி முடிவுகளை வெளியிடவேண்டிய தேவையே இல்லாதபோது ஏன் வெளியிட்டு எல்லோரிடமும் வாங்கிக்கட்டிக்கொள்கிறது என்று புரியவில்லை.

மேலும், ஃபேஸ்புக் போன்ற இணைய தகவல் ஜாம்பவான்கள் தங்களுடைய 'Terms and Agreements' ஒப்பந்த்தை சாமான்யனும் புரிந்துகொள்ளும் வகையில் மாற்றினால் மட்டுமே, இது போன்ற ஆராய்ச்சிகளில்  அந்நிறுவனங்கள் கவனமாக இருக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.

5%2811%29.jpgஒருவேளை, தன்னுடைய ரகசிய ஆராய்ச்சிகளில் ஒன்று இணையத்தில் வெளியானால் என்ன ரியாக்‌ஷன் இருக்கும் என்பதைக் கணிக்க, இந்த 'ஆராய்ச்சி முடிவு வெளியிடுதல்'-யே ஒரு 'ஆராய்ச்சி'யாக ஃபேஸ்புக் செய்திருக்ககூடுமோ என்று கார்டியன் பத்திரிகையில் நக்கலான சந்தேகத்துடன் கேட்கிறார் கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் மூத்த உளவியல் ஆராய்ச்சியாளர் க்ரிஸ் சேம்பர்ஸ். இது உண்மையாக இருந்தால்..... நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது!

மேலும், எப்போதுமே ஃபேஸ்புக் நியூஸ் ஃபீடை மாற்றி அமைத்து கொண்டே தான் இருக்கிறது.

முடிவு

'ஆராய்ச்சி'யை சற்று ஆராய்ந்தால், பயனீட்டாளர் பதியும் ஸ்டேட்டஸில்தான் உணர்ச்சி மாற்றங்கள் இருந்ததே தவிர, அவர் மனதளவில் என்ன உணர்ச்சியுடன் அந்த ஸ்டேட்டஸைப் பதிந்தார் என்பதையும், தன்னுடைய நிஜ வாழ்க்கையில் அந்த உணர்வு அவரைப் பாதித்ததா என்பதையும் ஃபேஸ்புக்கால் அழுத்தமாக/சரியாக சொல்ல முடியாது என்பது தெரியவருகிறது.

சில பயனீட்டாளர்கள் விதிவிலக்குகளாக இருக்கலாம். விதிவிலக்குகளை 'விலக்கி' வைத்துவிட்டு, மெஜாரிட்டியைத்தான் பெரும்பாலான ஆராய்ச்சி முடிவுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்பது உங்களுக்குத் தெரிந்ததே. எனவே, இப்போதைக்கு 'மார்க்'-ஐ பணக்காரர் ஆக்குவதைவிட்டுவிட்டு, நாம் 'மார்க்' வாங்குவதைப் பார்க்கவேண்டும் என்பதே 'மதி'!

அப்டேட்: இங்கிலாந்தின் தகவல் ஆணையர் அலுவலகம் இப்போது பயனீட்டாளர்களின் தகவல்கள் ஃபேஸ் புக் தவறாக கையாண்டதா? என்று விசாரணையை துவக்கி உள்ளனர்.

ஆனால், ஒன்று மட்டும் புரியவில்லை. இவ்வளவு ஆராய்ச்சி பண்ணும் ஃபேஸ்புக், இந்த கேண்டி க்ரஷ் (Candy Crush) போன்ற கேம் ரிக்வெஸ்ட்டுகளை அனுப்புவர்களின் மனநிலையைப் பற்றி சில ஆராய்ச்சிகளைச் செய்திருக்கலாமே!

ர. ராஜா ராமமூர்த்தி

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=29681

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.