Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்மவர் குறும்படங்கள்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பதியப்பட்டுள்ள  அநேக  படங்களை  ஏற்கனவே  பார்த்திருக்கின்றேன்

புங்குடுதீவு  ஒன்றியத்தின்

நாவலர்விருத்துக்கான போட்டிகளின் போது.

 

பல  படங்கள் வெற்றிகளைக்குவித்தவை

அத்துடன் சில  படங்கள் தகுதியிருந்தும் 

போட்டிகளினால் பின்னடந்தவை..........

 

போன  வருடம் இரண்டாவது இடத்தை

அடங்கா மதவி  பெற்றுக்கொண்டது

புலம் பெயர் அவலவாழ்வை  சொல்லி  நின்ற  படம்

இந்தியாவிலிருந்து தெரிவுக்குழு தலைவராக  வந்திருந்த 

தேசிய விருது பெற்ற  இயக்குநர் சக்திவேல் அவர்கள்

புலம் பெயர் வாழ்வு பற்றிய  அவரது அபிப்பிராயத்தை மாற்றிய  படம்...

 

தொடருங்கள் ஐயா

நன்றிகள்

எல்லோரும் பார்க்கணும்

பாராட்டணும்

அவர்களை  ஊக்குவிக்கணும்

  • Replies 141
  • Views 10.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

44. கறள்

 

யாழ்ப்பாணம் பொது நூலகம் 1981 ஆம் ஆண்டு மே 31 திகதி எரிக்கப்பட்டது .அதன் நினைவு நாளான 31.05.2014 அன்று சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினமும் ஆகும் . புகைத்தல் எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு கறள் குறும்பட வெளியீடு யாழ் பொது நூலகத்தில் இடம்பெற்றது.

நெடுந்தீவு முகிலனின் முகிலனின் இயக்கத்தில் பாரதியின் நடிப்பில் 39 வினாடிகளில் எடுக்கப்பட்டிருக்கின்றது கறள். முகிலனின் ஒவ்வொரு படைப்புகளும் சமுகத்துக்கு ஏதோ ஒரு கருத்தை சொல்லுவதாகவே அமையும் அந்த வகையில் அவரது 9வது படைப்பும் நல்லதொரு கருத்தை முன்வைத்திருக்கின்றது. எமக்கு அறிவுரை கூற பலர் இருக்கின்றார்கள், அவர்கள் கூரும் அறிவுரைகளுக்கு அவர்கள் தகுதியானவர்களா என்று அவர்கள் சிந்திப்பதே இல்லை. அப்படிதான் இக்கதையிலும் வகுப்பறையில் ஆசிரியர் தனது மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கையில் புகைத்தலால் உண்டாகும் தீமைககளை பற்றி வகுப்பெடுக்கின்றார், திடீரெண்டு அவர் எழுதிகொண்டிருந்த சார்க் கீழே விழுகின்றது அதை எடுப்பதற்காக ஆசிரியர் குனியும்போது அவரது பாக்கட்டில் இருந்த சிகரெட்டும் விழுகின்றது,
பின்னணி இசை மற்றும் ஒளித்தொகுப்பில் முகிலனது முன்னைய படைப்புக்களையும் பார்க்க அதிகம் கவனம் செலுத்தியிருக்கின்றார். பாரதிரின் நடிப்பு சொல்லவே தேவையில்லை, யதார்த்தமான கதாபாத்திரங்களுக்கு அருமையான தெரிவு பாரதி, நல்லதொரு செய்தியினை நச்சென்று சொல்லியிருக்கிறார்கள்.

 

https://www.youtube.com/watch?v=7z_xGY_7ysA

 

  • தொடங்கியவர்

45. மித்திரன்

 

ஜதி, தினேஷ், அனுஷா, சுபா, தனுஷன், கிரிஷ், யுவன் மற்றும் தனுஷ் ஆகியோர் நடிப்பில் டினேஷ் இயக்கியிருக்கும் மூன்றாவது படம் மித்திரன்.

 

இக்குறும்படம் நட்பின் புத்துணர்வை பற்றி சொல்லுவதாக அமைந்திருக்கிறது. ஐந்து நண்பர்கள் அதில் பிரபு என்பவன் போதைப் பொருள் கடத்தும் கும்பலுடன் இணைந்து சிறைக்கு செல்கிறான். இவனுக்கு பிருந்தா என்ற காதலியும் இருக்கிறாள்.

 

சிறையில் இருந்து வெளிவரும் பிரபு, தன் காதலியை சிவா காதலிக்கிறான் என்ற விஷயத்தை அறிந்து சிவாவை கொலை செய்து விடுகிறான். ஆனால் சிவாவுக்கு பிருந்தா தன் நண்பனின் காதலி என்று தெரியாது.

 

http://www.cineulagam.com/eelatamil/news-tamil/cinema/104287/

 

https://www.youtube.com/watch?v=ElzAmYYkvsA

  • தொடங்கியவர்

இதில் பதியப்பட்டுள்ள  அநேக  படங்களை  ஏற்கனவே  பார்த்திருக்கின்றேன்

புங்குடுதீவு  ஒன்றியத்தின்

நாவலர்விருத்துக்கான போட்டிகளின் போது.

 

பல  படங்கள் வெற்றிகளைக்குவித்தவை

அத்துடன் சில  படங்கள் தகுதியிருந்தும் 

போட்டிகளினால் பின்னடந்தவை..........

 

போன  வருடம் இரண்டாவது இடத்தை

அடங்கா மதவி  பெற்றுக்கொண்டது

புலம் பெயர் அவலவாழ்வை  சொல்லி  நின்ற  படம்

இந்தியாவிலிருந்து தெரிவுக்குழு தலைவராக  வந்திருந்த 

தேசிய விருது பெற்ற  இயக்குநர் சக்திவேல் அவர்கள்

புலம் பெயர் வாழ்வு பற்றிய  அவரது அபிப்பிராயத்தை மாற்றிய  படம்...

 

தொடருங்கள் ஐயா

நன்றிகள்

எல்லோரும் பார்க்கணும்

பாராட்டணும்

அவர்களை  ஊக்குவிக்கணும்

 

கருத்துக்கு மிகவும் நன்றி.

 

இந்தத் திரியை ஆரம்பித்த பின்பு, இதில் இணைக்கும் குறும்படங்களை முழுமையாகப் பார்த்த பின்பே இணைக்கின்றேன். கதை.. காட்சிகள்.. வெளிப்படுத்தல்கள் என வெகு விரைவில் நிகழப்போகும் ஈழத்துச் சினிமாவின் பரம்பலுக்கு கட்டியம் கூறுகின்றன.

 

ஏற்கெனவே சில குறும்படங்களை பார்த்திருந்தாலும், இவைகளைப் பார்க்கும்போது நம்மவர்களின் திறமைகளைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

  • தொடங்கியவர்

46. கேட்காமல் வந்த காதல்

 

48 மணி நேர குறும்பட போட்டிக்காக மாஸ்டர் ஸ்கிரீன் அணியினரால் எடுக்கப்பட்ட குறும்படம் கேட்காமல் வந்த காதல்.

 

காதல் வருவதற்கு நேரம், காலம், சூழ்நிலை எதுவும் முக்கியமில்லை என்பதை அழகாக காட்டுகிறது இக்குறும்படம். வெளிநாட்டில் இருந்து வரும் ஒரு இளம் ஜோடிகள் தங்கள் பழைய வீட்டை சுற்றி பார்க்கின்றனர். அப்போது கதாநாயகிக்கு தங்கள் பழைய நாட்கள் ஞாபகம் வருகிறது. பின் அவர்கள் இருவரும் எப்படி இணைகிறார்கள் என்பது கதை. இக்குறும்படத்தில் பலம் சேர்ப்பது ஜெயதீபன் மற்றும் மிதுனாவின் நடிப்பு அழகாகவும் இருந்தது.

 

http://www.cineulagam.com/eelatamil/news-tamil/cinema/104217/

 

https://www.youtube.com/watch?v=2VfWicME4ck

  • தொடங்கியவர்

47. அப்பா எங்க?

 

அப்பாவின் பாசத்துக்காக ஏங்கும் சிறுவனும் அப்பாவின் வேலைப்பழுவும் முடிவில் என்னவாகிறது.. என்பது தான் இந்த கதை.

 

https://www.youtube.com/watch?v=uOTZIrjmma0

 

  • தொடங்கியவர்

48. நிர்க்கதி

 

கண்ணீர் தேசம் குறும்படத்தை தொடர்ந்து சங்கர் தேவா இயக்கத்தில் மீண்டும் ஓர் குறும்படம் நிர்க்கதி இறுதி யுத்தத்தில் மூன்று தலைமுறையின் இடப்பெயர்வும். பெண்களுக்கு ஏற்படும் நிலைமையையும் அவர்கள் கடவுளால் கூட கைவிடப்பட்டதையும் சொல்லி நிற்கிறது நிர்க்கதி.

 

அந்த சம்பவத்தை அப்படியே எடுத்துக் காட்டி இருக்குறார் இயக்குனர் சங்கர் தேவா.

 

https://www.youtube.com/watch?v=XEVYnLsg_ZQ

  • தொடங்கியவர்

49. அறவை

 

சுபர்த்தனா மூவிஸ் வழங்கும் குறும்படம் அறவை.

 

https://www.youtube.com/watch?v=Wq3SCknx2A0

 

Edited by sOliyAn

  • தொடங்கியவர்

50. ஆழி

 

ஒரு அழகான குடும்பம். மனைவி, குழந்தை என வாழ்ந்து வருகிறான். பின் ஒரு நாள் பணம் சம்பாதிப்பதற்காக ஆஸ்திரேலியா செல்கிறான். தன் கணவன் ஆஸ்திரேலியா செல்கிறானே என்று மனைவி தன் கழுத்தில் இருக்கும் தங்க செயினை கழட்டி, இதை விற்று பணம் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கணவனை வழி அனுப்பி வைக்கிறாள்.

 

மனைவி கொடுத்த பணமும் போதாது என்பதால், தன் நண்பனிடமும் பண உதவி பெறுகிறான்.

 

ஆஸ்திரேலியா செல்கிறான். கடைசியில் அவன் பணத்துடன் வீட்டிற்கு வந்து தன் மனைவி, மகளோடு சந்தோஷமாக வாழ்கிறானா இல்லையா என்பது கதை.

 

நல்ல கருத்து, சொல்ல வந்த விஷயத்தை மிகவும் தெளிவாக 11 நிமிடத்திற்குள் அழகாக சொல்லியிருக்கிறார்.

 

http://www.cineulagam.com/eelatamil/news-tamil/cinema/106094/

 

https://www.youtube.com/watch?v=XYje-nbx73k

  • தொடங்கியவர்

51. திரைக்கதையில் அவள்

 

சிவலிங்கம் விமல்ராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது திரைக்கதையில் அவள் குறும்படம்.

 

எப்படியாவது ஒரு படமாவது எடுக்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கும் கணவன்.

 

ஆனால் வேலைக்கு போகாமல் படம் இயக்க போகிறேன் என்று சுற்றி வருகிறான்.

 

அந்த பெண்ணோ கடன் தொல்லை காரணமாக ஒரு நாள் கணவனிடம் வேலைக்கு போங்கள், சினிமா எல்லாம் நமக்கு சரிவராது என்று கூறுகிறாள்.

 

ஆனால் அவனோ ஆத்திரத்தில் தன் மனைவியை அடிக்க, அவளும் கோபத்தில் வீட்டை விட்டு வெளியே போகிறாள்.

 

அந்நேரம் பார்த்து வானொலியில் ஒரு செய்தி ஒலிக்கிறது.

இதன் பிறகு கதையில் ஒரு திருப்பம் வருகிறது.

 

நல்ல கதைக்களம் ஆனால் ஏதோ ஒன்று மிஸ் ஆனது போல் தோன்றுகிறது.

 

http://www.cineulagam.com/tamil/reviews-tamil/short-film/100195

 

https://www.youtube.com/watch?v=1cJNeIoX7qU

  • தொடங்கியவர்

52. பூம்புகார்

 

மருத்துவ வசதி, மின்சார வசதி என எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் ஒரு குக்கிராமம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது. அந்த கிராமத்திற்கு பெயர் தான் பூம்புகார். இந்த கிராமத்தில் வசதிகள் ஏதும் இன்றி அல்லல்படும் கிராமத்து மக்களின் இன்னல்களை பற்றி பேசுகிறது இக்குறும்படம்.

 

பூம்புகார் கிராமம் எங்கு இருக்கிறது என்று வழி கேட்டு ஒரு நபர் அலைகிறான். அதே நேரம் அந்த கிராமத்தில் ஒரு சிறுவன் யாழ்ப்பாணத்தில் இருக்கும் தன் அத்தை வீட்டுக்கு செல்கிறான். அப்போது அவன் கண்டிராத சில பொருள்களையும் காண்கிறான். மின் விளக்கு, தொலைக்காட்சி போன்ற பொருட்கள் நம் நகரத்தில் ஏன் நம் கிராமத்தில் இல்லை என்று தன் தந்தையிடம் குடைந்து குடைந்து கேட்கிறான்.

 

ஊருக்கு திரும்பியதும் அவன் மின்சாரத்தை பற்றியே கனவிலும் காண்கிறான். இந்த மனநிலையில் இருக்கும் அச்சிறுவன் எண்ணம் நிறைவேறுகிறதா? இல்லையா என்பது கதை.

 

முதலில் இயக்குனர் விமல்ராஜுக்கு எமது பாராட்டுக்கள், அடிப்படை வசதி இல்லாமல் இருக்கும் கிராமத்தை நம் கண்முன் காட்டியிருக்கிறார்.

 

http://www.cineulagam.com/eelatamil/news-tamil/cinema/103472/

 

https://www.youtube.com/watch?v=DmOaNFhXw24

 

  • தொடங்கியவர்

53. என்னுள் பசி

 

https://www.youtube.com/watch?v=dvIvX9m6-08

  • தொடங்கியவர்

54. இணையத்தளம்

 

https://www.youtube.com/watch?v=zTrH5fa1GeA

  • தொடங்கியவர்

55. ஈரம்

 

https://www.youtube.com/watch?v=Efgs4SfbJkk

  • தொடங்கியவர்

56. மாயை

 

https://www.youtube.com/watch?v=mfiOmGEUjcc

  • தொடங்கியவர்

57. தொடரி

 

மதிசுதாவின் இயக்கத்தில் தயாரான 'தொடரி' குறும்படம் 'பத்து சோடி கால்களும் ஒரு சோடி கைகளும் மாத்திரம் பயன்படுத்தி எவருடைய முகமும் தெரியாதபடி வித்தியாசமாக எடுக்கப்பட்டதாக படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.   அத்துடன் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட குறும்படமாகும்.

 

https://www.youtube.com/watch?v=tiRhVCeDkIY

 

  • தொடங்கியவர்

58. என்னத்த சொல்ல

 

30 செகன்டுகளில் என்னத்த சொல்ல முடியும் என்று நாம் சொல்வது வழக்கம் தான். ஆனால் முப்பது செகன்டுகளில் ஓர் இளைஞனின் நிலைமையை அழகாக சொல்லியிருக்கிறது என்னத்த சொல்ல குறும்படம்.

 

ஈழத்தில் இருந்து வெளிநாட்டுக்கு வேலை காரணமாக செல்லும் தமிழர்களின் கஷ்டத்தை அருமையாக சொல்லி இருக்கிறது இக்குறும்படம்.

 

30 செகண்டில் இக்குறும்படம் அமைந்திருப்பது வியப்பாக இருக்கிறது.

 

http://www.cineulagam.com/eelatamil/news-tamil/cinema/102767/

 

https://www.youtube.com/watch?v=p2T3AlIJr6o

  • தொடங்கியவர்

59. சில நிஜங்கள்

 

சில நிஜங்கள் குறும்படத்தை இயக்கியவர்கள் என்னதான் கூற வருகின்றனர் என்பது தெரியவில்லை.

 

கணவன், மனைவி, மகன் என்று அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகின்றனர். தன் மகனுக்கு கார் வாங்கி தருகிறேன், வீடு வாங்கி தருகிறேன் என்று சொல்லும் தந்தை.

 

பிறகு அதனை நிறைவேற்ற முடியாமல் போக தன் மனைவியிடம் கதை முழுவதும் திட்டுவாங்குகிறார். இவ்வளவு தான் கதை.

 

புனிதமலர் கதை முழுவதும் தன் கணவனை திட்டி தீர்க்கும் பெண்ணாக அருமையாக நடித்திருந்தார்.

 

http://www.cineulagam.com/eelatamil/news-tamil/cinema/102311/

 

பகுதி 1

https://www.youtube.com/watch?v=UGP7MQynYuI

 

பகுதி 2

https://www.youtube.com/watch?v=78Bz7x_oCks

 

பகுதி 3

https://www.youtube.com/watch?v=7jfT5_IUZzI

 

 

பகுதி 4

https://www.youtube.com/watch?v=eY5l5vl9FRo

 

  • தொடங்கியவர்

60. காதல் தினம்

 

https://www.youtube.com/watch?v=U2axJrZ70i4

  • தொடங்கியவர்

61. பயமா

 

இத்தாலியிலிருந்து வெளியாகியுள்ள குறும்படம் “பயமா”.

இத்தாலியின் பலெர்மோ நகரிலிருந்து வேறிடம் சென்ற இளைஞன் ஒருவன் பதினைந்து வருடங்களின் பின்னர் திரும்பவும் ஊருக்கு வருகிறான். விமான நிலையத்திலிருந்து அவனை அழைத்து வரும் அவனது நண்பன் ஒருவன் அன்று இரவு நண்பர்களுடன் ஒரு பார்ட்டிக்கு ஒழுங்கு செய்திருப்பதாகவும் இவனையும் வருமாறு அழைப்பு விடுத்து செல்கிறான்.

 

அழைப்பை ஏற்று இரவு அவர்கள் சொன்ன இடத்திற்கு காரில் சென்றுகொண்டிருக்கிறான் இந்த இளைஞன். வழியில் தன் நண்பன் ஒருவனை சந்தித்து அவனையும் தன் காரில் அழைத்து செல்கிறான்.

அவனோ நண்பர்கள் கூடும் இடம் தற்போது மாற்றப்பட்டுள்ளது என கூறி இவனை ஒரு காட்டுக்குள் அழைத்து செல்கிறான். காட்டுக்குள் நண்பர்களை நீண்டநேரம் காணாததால் அவர்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி பேசும்போதுதான் தன்னை அழைத்து வந்த நண்பன் சில வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டான் என தெரியவருகிறது.

 

அதன் பிறகு என்ன நடந்தது என்பதை சிறிய திருப்பம் ஒன்றோடு சொல்லியிருக்கிறார்கள். நல்ல கதைக்கருவும், அதுக்கேற்ற நல்ல திருப்பத்தையும் வைத்தது பாராட்டுக்குரியது. அதை சிறப்பாக செய்த இயக்குனர் ஜெபநாதனுக்கு பாராட்டுக்கள். ஒளிப்பதிவும் பாராட்டும்படி உள்ளது.

 

https://www.youtube.com/watch?v=uhDdxOu3X0c

 

  • தொடங்கியவர்

62. FEB 17?

 

காதலர் தினத்தை முன்னிட்டு தினேஷின் Feb 14?  என்கின்ற குறும்படம் வெளியாகி உள்ளது..! EElam Brothers வழங்கும், திரை கதை, இயக்கம், எடிட்டிங், முக்கிய கதாபாத்திரம் தினேஷ் . இவரின் முதல் குறுந்திரைப்படம் ஆகும்.

 நாட்டின் சூழ்னிலை கருதி, பொருளாதாரத்தால் தள்ளப்பட்ட ஓர் இளைஞனின் வெளிநாட்டு வாழ்க்கை, எதையும் கருத்தில் கொள்ளாமல்,வயசு எங்கும் காதலில் விழுந்து விடுகிறார், தொலைபேசி மூலம் மட்டும் காதல் தொடர்கிறது. காதலர் தினமாகிய Feb 14  அன்று காதலியை சந்திக்க போகின்ற சமையத்தில் யாரும் எதிர் பாரத சம்பவம் ஒன்று நடக்கிறது.

 கவனக்குறைவாலும், மனிதாபமற்ற முறையில் அளவுக்கும் மிஞ்சிய காதலின் எதிர்பார்ப்புகளினாலும், விபரித ஆபத்துக்கு உள்ளாக்கப்படுவதை இரண்டே நிமிடங்களில் காட்சியமைத்து நகர்த்தியிருக்கிறார், இக் குறும்படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் டினேஷ் அவர்கள்.

நீண்ட உரையாடல்கள், பொறுமையை சோதிக்கும் காட்சியமைப்புகள் என்று இழுத்து அடிக்காமல் கூற வந்த கருத்தை ஓரிரு நொடிகளில் பதிவு செய்திருக்கிறார்.

 தேவையான அளவிலான ஒளிப்பதிவும், இசையும் இப் படத்தின் பலம்.வாகனத்தில் மோதி விபத்தாகும் காட்சியமைப்பை நேர்த்தியாக எடிட் செய்திருப்பது படத்தின் இன்னொரு பலம்!

 

https://www.youtube.com/watch?v=lRZEUh6y2SE

  • தொடங்கியவர்

63. தூர தேசம்

 

தூர தேசம் குறும்படம் அவுஸ்த்ரேலியா வாழ் எம் கலைஞர்கள் உருவாக்கி இருக்கும் தூர தேசம் குறும்படம் இதில் பாடலாசிரியர் சுதர்ஷன் நடிகராக அறிமுகம் ஆகியுள்ளார்.

 

அளவெட்டி சுபாகரனின் இயக்கத்தில் (அறிமுகம்) முள்ளியவளை சுதர்சனின் நடிப்பிலும் (அறிமுகம்) வெளியாகியுள்ள இக்குறும்படத்தை ஒளிப்பதிவு செய்துள்ளார் தினேஷ் படத்தொகுப்பு தீபிகா துணை நடிகர்கள் - மாலா மற்றும் சுபாகரன்.

 

https://www.youtube.com/watch?v=QjEAku3Auh4

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப பொம்புளை பாக்கிறது மாப்பிளை பாக்கிறது கலியாணவீடு செத்தவீடு எல்லாம் ஸ்கைப்பிலைதான் நடக்குது......இனி தாலிகட்டு என்னமாதிரியெண்டு பாப்பம்?

இணைப்பிற்கு நன்றி சோழியன்.

  • தொடங்கியவர்

இப்ப பொம்புளை பாக்கிறது மாப்பிளை பாக்கிறது கலியாணவீடு செத்தவீடு எல்லாம் ஸ்கைப்பிலைதான் நடக்குது......இனி தாலிகட்டு என்னமாதிரியெண்டு பாப்பம்?

இணைப்பிற்கு நன்றி சோழியன்.

 

கருத்திற்கு மிகவும் நன்றி!!

  • தொடங்கியவர்

64. நம்ம ஊரு

 

A.J.felicion இன் நம்ம ஊரு குறும்படத்தில் இருந்து, கோ.ரஞ்சண் சாம்சனின் இசையில், சா.சஜேந்திராவின் வரிகளில், .பிரதிப் பாடிய பாடல். இது ஒரு சிதம்பரஸ்வரம் நடனாலயத்தின் வெளியீடு.

 

https://www.youtube.com/watch?v=whFZm6HHt5M

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.