Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமானப் படைக்கு விசேட பராமரிப்புத் தளம் சீனா நேரடியாக சீனக்குடாவில் அமைக்கும்! சீற்றத்துடன் அவதானிக்கின்றது புதுடில்லி

Featured Replies

mahintha%20xinpin%20674d.jpg

 

இலங்கை விமானப் படைக்கான பராமரிப்புத் தளம் ஒன்றை திருகோணமலை சீனக்குடாவில் உள்ள விமானப் படை முகாமுக்குள் அமைப்பதற்குத் தீர்மானித்துள்ள இலங்கை அரசு அந்தக் கட்டுமானப் பணியை சீனாவிடம் ஒப்படைப்பதற்கும் முடிவு செய்திருக்கின்றது. அது, புதுடெல்லி அரசு மட்டத்தில் பெரும் சீற்ற அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தெரிய வருகின்றது.

 

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும் ஏனைய மூத்த பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் சீனத் தரப்புடன் நத்திய பேச்சுக்களை அடுத்தே இந்தக் கட்டுமானப் பணியை சீனாவிடம் ஒப்படைப்பதற்கு முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது. கடந்த வருடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ சீனாவுக்கு விஜயம் செய்திருந்த சமயம் இந்தக் கட்டுமானப் பணிக்கான பூர்வாங்க முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன என்று தெரிகின்றது. தொடர்ந்து பொலிவியாவில் 'ஜி 77' நாடுகளின் கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக அங்கு சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி அந்த மாநாட்டுக்கு இடையே சீன அதிபருடனும் பேசினார். அப்போது இந்த விமானப் படைப் பராமரிப்புத் தளம் அமைப்பதற்கான இறுதித் தீர்மானம் எட்டப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இதனை அடுத்து, இதற்கான அமைச்சரவைப் பத்திரமும் தயாராக்கப்பட்டு அமைச்சரவைக்கு வந்திருப்பதாகத் தெரிகின்றது. இதற்கிடையில் ஜனாதிபதியின் சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்‌ஷ தற்போது சீனா சென்றுள்ளார்.

 

கடந்த புதனன்று சீனாவின் உதவிப் பிரதமர் வாங் யாங்குடன் அவர் பேச்சு நடத்தினார். அந்தப் பேச்சுக்களின் போதும் இந்தக் கட்டுமானப் பணி குறித்துப் பேசப்பட்டதாக ஒரு தகவல் தெரிவித்தது. சீன அதிபர் ஸ்கி ஜின் பிங் இந்த ஆண்டு இறுதியில் இலங்கைக்கு வரவிருக்கின்றார். 1986 இற்குப் பிறகு சீனாவின் தலைவர் இலங்கை வருகை தருகின்றமை இதுவே முதல் தடவை. இதேவேளை சீனாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்குடன் 'கடல்வழி பட்டுப் பாதை' வர்த்தக உடன்பாட்டில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணிகளைத் தொடர்ந்து சீனக்குடா விமானப்படைப் பராமரிப்புத் தளத்தை அமைக்கும் திட்டத்துக்கும் சீனாவுடன் இலங்கை கைகோர்க்கின்றது. இது, இந்திய அரசுத் தலைமை மட்டத்தில் - குறிப்பாக புதிய அரசின் கொள்கை வகுப்பாளர்கள் தரப்பில் - கடுஞ்சீற்றத்துடனான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பதாக அறிய வருகின்றது. இந்தியாவின் பதிலடி நடவடிக்கை அடுத்து வரும் வாரங்களில் கோடி காட்டப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்றும் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. -

 

http://malarum.com/article/tam/2014/07/05/3411/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-i-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F.html#sthash.7AlrNQG5.dpuf

 

அவை இப்ப தான் விரல் விட்டு பன்னிரண்டு பதின்மூன்று என்று அரிவரி ராசதந்திரம் செய்யினம்.

  • கருத்துக்கள உறவுகள்
அமெரிக்கா, பிரிட்டன் அதிர்ச்சி எண்டால் நம்ப முடியும்.
 
இந்தியர்கள் அதிர்ச்சி எண்டால் நம்ப முடியாது.
 
ஜெயவர்தனே காலத்தில் கொழும்பு சென்ற ரொமேஷ் பண்டாரியின் மனைவிக்கு கிடைத்த ஒரு லட்ச ரூபா பெறுமதியான வைர அட்டியள், அன்டன் பாலசிங்கம், நடேசன் சத்தியேந்திரா, சந்திரஹாசன் ஆகியோர் இந்தியாவில் இருந்து deport பண்ண வைத்தது.
 
இத்தாலி ஹெலிகொப்டெர் ஊழல் விடயத்தில் சிக்கிய நாராயணன், நிச்சயமாக, இந்திய அதிகார வர்க்கத்தின் தடையில்லா ஆதரவினை உறுதி செய்ய, பெரும் பணம் பெற்று இருப்பார்.
 
போர் முடிந்ததும் இவருடன் வந்த சிவசங்கரமேனன் இருவருமே தமக்கு உரியதை வாங்கவே வந்தனர்.
 
மோடி ஊழலுக்கு இடம் கொடுப்பதில்லை என்றாலும், டெல்லியில் வேண்டியதைப் பெற கொழும்பின் கையால் சுப்ரமணிய சாமியார் இருக்கிறாரே.
 
இது போல பணத்துக்கு தமது நாட்டினை விலை பேசும் புல்லுருவிகள் உள்ள மட்டும் இந்தியா இது போல வீழ்ந்தே இருக்கும்.

புது டில்லி சீற்றத்துடன் பார்த்து என்னத்தை பெரிசா புடுங்கப்போகிறது வெறும் அறிக்கையைத்தவிர 

  • கருத்துக்கள உறவுகள்

புது டில்லி சீற்றத்துடன் பார்த்து என்னத்தை பெரிசா புடுங்கப்போகிறது வெறும் அறிக்கையைத்தவிர 

போற போக்கைப் பாத்தால், இந்தியாவை விட இலங்கைக்குத் தான், வல்லரசாகும் சாத்தியங்கள் அதிகம் போல உள்ளது...! :lol:

 

பரமசிவனின் தலையில் இருக்கும் வரை, கருடனும் பாமபைப் பார்த்துக் 'கொட்டாவி' விட வேண்டியது தான்! :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.