Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையுடன் அனுபவங்களைப் பகிர முடியும், அழுத்தம் கொடுக்க முடியாது! - தென்னாபிரிக்க அமைச்சர் தெரிவிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
இலங்கையுடன் அனுபவங்களைப் பகிர முடியும், அழுத்தம் கொடுக்க முடியாது! - தென்னாபிரிக்க அமைச்சர் தெரிவிப்பு. photo.png 
[Friday 2014-07-11 10:00]
sampanthan-nomaindia-200-news.jpg

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நிலையான சமாதானத்தை கட்டியெழுப்புவதற்காகத் தேவையான அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடியுமே தவிர, இவ்வாறு தான் செயற்பட வேண்டும். அல்லது முடிவுகளை எடுக்க வேண்டும் என எம்மால் ஒருபோதும் அழுத்தம் கொடுக்க முடியாது என தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்கான பிரதியமைச்சர் நொமன்டியா பெக்கிற்டோ தெரிவித்தார். தென்னாபிரிக்காவில் இனவன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு நேற்று கொழும்பில், லக்ஸ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகளுக்கான நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில், கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தியாளரிடம் கருத்து தெரிவிக்கையில்,

  

1989ஆம் ஆண்டு அரசியல் சீர்திருத்தச்சட்டத்தை உருவாக்குவதில் சிவில் சமூகத்தினர் அதிகளவில் பங்களிப்புச் செய்தனர். உள்நாட்டில் இருந்த அரசியல் பிரதிநிதிகள், மதத்தலைவர், சிவில் செயற்பாட்டாளர்கள் உட்பட அனைவரும் இது எனது நாடு இங்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சமாதானத்தை கட்டியெழுப்பப்பட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் செயற்பட்டார்கள். ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கோ அல்லது நிலைமாற்றங்களை ஏற்படுத்துவதற்கோ எந்தவிதமான குறுக்கு வழிகளும் கிடையாது. அதற்குரிய முன்னெடுப்புக்கள் உள்நாட்டிலிருந்தே உருப்பெற வேண்டும். ஆனால் அது ஒரே இரவில் ஏற்பட்டுவிடாது.

எமது நாட்டில் நீண்டகாலமாக காணப்பட்ட இனங்களுக்கிடையிலான வன்முறைகள் துடைத்தெறியப்பட்டு சுதந்திரமும் ஜனநாயகமும் உருவாக்கப்பட்டு இருபது ஆண்டுகள் நிறைவை இலங்கையில் கொண்டாடுவதில் மிக மகிழ்ச்சியடைகின்றேன். இவ்வாறான நிலையிலேயே இந்தவாரத்தின் முற்பகுதியில் எமது உபஜனதிபதி தலைமையிலான தூதுக்-குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்து பலதரப்பட்ட தரப்பினருடன் சந்திப்புக்களை நடத்தியிருந்தனர். இலங்கைக்கும் தென்னாபிரிக்காவிற்கும் இடையில் நீண்டகாலமான வரலாற்று ரீதியான உறவுகள் காணப்படுகின்றன.

எமது நாடு நீண்டகாலமாக வன்முறைகளுக்குள் இலக்காகி மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அவ்வாறான காலப்பகுதியில் பலவாறான எமது நாட்டின் மீது விமர்சனங்கள் காணப்பட்டன. சர்வதேச சமூகத்தினால் மனிதாபிமானம் நிலைநாட்டப்பட்டு இனங்களுக்கிடையில் சமஉரிமைகளுடன் நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதனடிப்படையில் நீண்டகாலமாக தொடரும் வன்முறைக்கு முதற்படியாக அரசியல் தலைவர்கள் சிறைச்சாலைகளில் இருந்து விடுதலைசெய்யப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

தொடர்ந்து வாக்குரிமையே அற்றுக்காணப்பட்ட கறுப்பினத்தவர்கள் முதற்தடவையாக வாக்களிக்கும் தகுதியைப் பெற்று 1994 ஏப்ரல் 27ஆம் திகதியன்று முதலாவது ஜனநாயக தேர்தல் நடத்தப்பட்டது. அதில் விடுதலைக்கான போராடிய நெல்சன் மண்டேலா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை அரசியல் தலைவர்கள், மதத்தலைவர்கள், சிவில் சமூகத்தினர் என அனைவரும் ஒன்றுபட்டு ஒரே பொது இலக்குடன் மேற்கொள்ள ஆரம்பித்தோம்.

பொதுமக்களிற்கு அதன் முக்கியத்தும் தொடர்பில் வலியுறுத்தும் கருத்துக்களை முன்வைத்தோம். இருதரப்பினாலும் இழைக்கப்பட்ட தவறுகளை அடையாளம் கண்டு அதற்குரிய தீர்ப்பை வழங்குவதற்கு உண்மைகளைக் கண்டறியும் ஆணைக்குழு ஐக்கிய நாடு சபையின் அடிப்படை விதிகள், நீதிச்சட்டங்கள் என்பவற்றை உள்ளடக்கி உருவாக்கப்பட்டு பலத்த சவால்களுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிவில் சமூகத்தின் பங்களிப்புடன் அரசியல் சீர்திருத்தம் ஏற்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் நாம் அனைவரும் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு நிரந்தர சமாதானத்திற்காக இனங்களுக்கிடையில் ஐக்கியத்துடன் செயற்பட்டு அதனை நிலைநாட்டியிருந்தோம். இன்று சுதந்திரமும் ஜனநாயகமும் ஏற்படுத்தப்பட்டு இருபது ஆண்டுகள் நிறைவடைவதுடன் சர்வதேசத்தில் இனநல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் வெற்றியடைந்தவர்களாக இருக்கின்றோம். அந்த வகையிலேயே நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நிரந்தர சமாதானத்தினை நிலைநாட்டுவதற்காக நாம் பல்வேறு தருணங்களில் வேறுபட்ட நிலைமைகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றோம். அந்த அனுபவங்களை எமது நீண்டகால நட்பு நாடு என்ற வகையில் இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கின்றோம்.

எமது நாட்டில் 1985 ஆம் ஆண்டிலிருந்து 1989ஆம் ஆண்டுவரையிலான காலப்பகுதியில் அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இனஅடக்கு முறை ஏற்படுத்தப்பட்டது. திட்டமிட்ட வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன. உதாரணமான எனது நண்பரான கிஷானி என்ற ஒரு முக்கிய விடுதலை வீரர் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அந்த நேரத்தின் போது கூட எனக்கு பாரிய தாக்கம் ஏற்பட்டது. கோபம் கூட எழுந்தது. சிலர் அவர்களை பதிலுக்கு தாக்க வேண்டும் என கூறினார்கள். இருப்பினும் நானோ எனது சகபாடிகளோ வன்முறை வழியில் காலடி எடுத்து வைக்கவில்லை. பொறுமையுடன் இருந்தோம். எமது செயற்பாடுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்காகவும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான முயற்சிகளையே மேற்கொண்டோம்.

எமது அனுபவங்கள் தொடர்பாக பல்வேறு விடயங்களை நாம் பகிர்ந்துள்ளோம். எதிர்காலத்தில் பகிர்வதற்கும் தயாராக இருக்கின்றோம். ஆனால் ஜனநாயக நாடான எம்மால் ஒருபோதும் அரசாங்கத்தையோ அல்லது சிறுபான்மை, பெரும்பான்மை தரப்பினரையோ குறிப்பிட்ட முடிவுகளையே எடுக்க வேண்டும் என அழுத்தங்களை அளிக்க முடியாது. உள்நாட்டில் இருந்து தான் அதற்கான கோரிக்கைகள் சரியான தொடர்பாடல் மூலம் உருவாக வேண்டும். அதற்கு அரசியல் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள், சிவில் சமூகத்தினர் என அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு ஒத்த பொது இலக்குடன் செயற்பட வேண்டும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை போன்ற சர்வதேச அமைப்புக்கள் இல்லாதவொரு நிலையிலேயே உண்மைகளைக் கண்டறியும் ஆணைக்குழு எமது நாட்டில் உருவாக்கப்பட்டது. தற்போது இருபது வருடங்கள் கடந்து விட்டன. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை போன்ற சர்வதேச அமைப்புக்கள், மனிதாபிமான தொண்டு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் உண்மைகளை கண்டறியும் ஆணைக்குழு போன்ற கட்டமைப்பு இலங்கையில் அமைக்கப்படவேண்டும் என்ற அவசியமில்லை. அதனை விடவும் மாற்றுவழிகளை பயன்படுத்துவதற்கான வசதி வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. எமது நாட்டில் இனங்களுக்கிடையிலாக சமஉரிமை, பால் சமத்துவம் போன்றன உட்பட முக்கிய விடயங்கள் தொடர்பில் நிலையாக கொள்கைகள் காணப்படுகின்றன. வெளியுறவுக்கொள்கையும் சிறப்பாக காணப்பட்டுகின்றது. இவை பொருளாதார, ஜனநாயக வளர்ச்சிக்கு வழிசமைப்பதாய் உள்ளன.

இங்கு அதிகமாக காணிப்பிரச்சினைகள் தொடர்பில் எம்மிடம் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. எமது நாட்டில் காணிப்பிரச்சினைகள் காணப்பட்டன. குறிப்பாக கறுப்பினத்தவர்களின் காணிகளை வெள்ளையினத்தைச் சேர்ந்த பணம்படைத்தவர்கள் அபகரிப்புக்களைச் செய்தனர். அவற்றை உடனடியாக மீண்டும் கொசோவா போன்று பறிமுதல் செய்யமுடியாது. அது மீண்டும் வன்முறைச் சூழலையே ஏற்படுத்தும். ஆகவே படிப்படியாகவே காணிகளை மீட்கும் நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வந்தோம்.

எமது நாட்டில் குற்றங்கள், வறுமை, மனித உரிமை மீறல்கள் என்பன படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்றன. அவற்றை முற்றுமுழுதாக நிறைவுக்கு கொண்டுவர நீண்டகாலம் எடுக்கும். எம்மைப்பொறுத்தவரையில் தற்பொழுது பொருளாதார சவால் உள்ளது. வேலையில்லாதேர்ர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்காக நாம் 2030ஆம் ஆண்டுவரையிலாக தேசிய அபிவிருத்தி செயற்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளோம். அதில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

இந்நிகழ்வில் இலங்கைக்கான தென்னாபிரிக்க தூதுவர் ஜெப்ரி டோக்,லக்ஷமன் கதிர்காமர் சர்வதேச கற்கைகள் நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அசங்க அபயகுணசேகர, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வெளிநாட்டு தூதுவர்கள், அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

sampanthan-nomaindia-110714-seithy.jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=112946&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப பின்ன என்னத்துக்கு மினக்கெடுவான்.  இதொண்டும் ஆகப்போற விசயமில்ல. சும்மா குதிரையேறிச் சக்கடத்தார் மாதிரிச் சறுக்கி விழப்போகினம் போலை.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்திய போது அவர்கள் தான் குழப்பினார்கள் என இங்கு சிலர் குறிப்பிட்டார்கள். இயலுமாயின் சிறிலங்கா அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்தி ஒரு தீர்வை தமிழ் மக்களுக்கு பெற்று தர தென்னாபிரிகாவால் முடியுமா? சிலர் சம்பந்தர் ஐயா தான் குழப்புகிறார் என்று சொன்னாலும் ஆச்சரியப்பட முடியாது. அந்தளவுக்கு மகிந்த அரசின் விசுவாசிகளாக உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்கா அனுசரனை: பேச்சுவார்த்தை என்ற போலி நாடகம்!

மருண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேயாகத் தெரியும். அதேநேரத்தில் மோசமான ஆபத்தில் இருப்பவனுக்குக் தெரிவதெல்லாம் தன்னைக் காப்பாற்றுவதற்காக வந்துள்ள தேவதையாகவே தெரியும். இந்த மனநிலையில்தான் இன்று தமிழ் மக்களும்இ தமிழ் அரசியல் தலைவர்களும் இருக்கின்றார்கள்.

இலங்கையில் சிவில் யுத்தம் ஒன்று மூள்வதற்கு முன்னர் சமாதான வழியில் எப்படியாவது அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு கிட்டும் என்று எதிர்பார்த்திருந்தார்கள். அரச கட்டிலில் இருந்த தலைவர்கள் அப்போது அந்தந்த அரசியல் சந்தர்ப்பங்களுக்காகக் கூறிய வார்த்தைகளும்இ சந்தர்ப்பங்களுக்காக ஒப்பந்தங்கள்இ உடன்படிக்கைகள் என்ற பெயரில் இடப்பட்ட கையெழுத்துக்களையும் மலைபோல நம்பியிருந்தார்கள். இவற்றின் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் ஏமாற்றந்தான் மிஞ்சியது. அரசியல் தீர்;வு காண்பதற்காக தமிழ் அரசியல் தலைவர்கள் காட்டிய வழிகளில் எல்லாம் மக்கள் பேராட்டங்களில் ஈடுபட்டார்கள்.

ஆனால்இ அடக்குமுறைகள் மூலமாகவே அரசாங்கம் அவற்றுக்குப் பதிலளித்தது. போராட்டங்களை ஓர் உந்து சக்தியாகக் கணித்துஇ பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அரசாங்கங்கள் முன்வரவே இல்லை. ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் என்ற பெயரில் மேற்கொண்ட நடவடிக்கைகள் எல்லாமே சந்தர்ப்பத்திற்கான நடவடிக்கைகளாகவே அமைந்திருந்தன. நிர்ப்பந்தங்கள் காரணமாகவும்இ அப்போது எழுந்திருந்த அழுத்தங்களை சமாளிப்பதற்காகவுமே அந்தச் செயற்பாடுகளை அரசாங்கங்கள் முன்னெடுத்திருந்தன.

உள்ளார்ந்த விருப்பத்தோடும்இ நேர்மையான வழியிலும் அந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. இதனால்இ உரிமைகளுக்கான போராட்டம் என்பதுஇ அரசாங்கம் மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகள் காரணமாகஇ ஒரு வகையில் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கான நடவடிக்கையாகவும் மாற நேர்ந்தது. உண்மையில் இனப்பிரச்சினை தீர்வுக்கான தமிழ் மக்களின் முயற்சியானதுஇ போராட்டமும் பாதுகாப்பும் இணைந்த ஓர் ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்திருந்தது என்றே கூற வேண்டும்.

இதன் காரணமாகத்தான்இ விடுதலைப்புலிகள் ஏனைய ஆயுதமேந்திய தமிழ் அமைப்புக்களை ஆயுத ‘ரீதியாக ஓரங்கட்டி’ விடுதலைப்புலிகள் தீவிரமாக முன்னெடுத்திருந்த ஆயுதப் போராட்டத்தின் மூலம் தங்களுக்கு விமோசனம் கிடைக்கும் என்று பெரும்பான்மையான தமிழ் மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால் அந்தப் போராட்டமும்இ அரசாங்கத்தின் சாதுரியமாகத் திட்டமிட்ட இராஜதந்திர நடவடிக்கைகள் காரணமாக 2009 ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டது.

இதற்கு விடுதலைப்புலிகளின் பலவீனமான இராஜதந்திர பலவீன நடவடிக்கைகள் ஒரு முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றது. 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி அமெரிக்காவின் நியூ யோர்க் நகர வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரக் கட்டிடங்கள் மீதும்இ அமெரிக்க பாதுகாப்புத் தலைமையமாகிய பென்டகன் மீதம்இ வொஷிங்டன் மீதும் அல்கய்டா அமைப்பினரால் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தற்கொலை தாக்குதல்களின் பின்னரானஇ பயங்கரவாதத்தி;ற்கு எதிரான உலக போக்கின் ஒழுங்கைக் கடைப்பிடித்துஇ விடுதலைப்புலிகளையும் பயங்கரவாதிகளாக – அந்த அமைப்பை மிகவும் மோசமான பயங்கரவாத அமைப்பாக உலகுக்கு சித்தரித்திருந்த இலங்கை அரசாங்கத்தின் தந்திரோபாயச் செயற்பாடும் விடுதலைப்புலிகளின் அரசியல் போராட்டம் தோல்வியடைந்தமைக்கு மற்றுமொரு முக்கிய காரணமாகக் கூறப்படுகின்றது.

ஆவல் மிகுந்த அரசியல் எதிர்பார்ப்புக்கள்

ஆயுத பலத்திலும்இ ஆயுத போராட்ட உத்திகளில் தலைசிறந்தவர்களாகவும் திகழ்ந்த விடுதலைப்புலிகளின் தலைமையில் நிச்சயமாக இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று தமிழ் மக்கள் மலைபோல நம்பியிருந்தார்கள். இந்த நிலையில் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில்இ விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியானதுஇ சிறிதும் எதிர்பாராத வகையில் ஒரு பேரிடியாகவே வந்திறங்கியது. இருப்பினும்இ விடுதலைப்புலிகளை இல்லாதொழித்த பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம்இ போரினால் தமிழ் மக்கள் அடைந்த வேதனைகள்இ துன்ப துயரங்கள்இ அளப்பரிய இழப்புக்களைக் கவனத்தி;ற்கொண்டு நியாயமான ஓர் அரசியல் தீர்வை வழங்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. அரசியல் தீர்வு காணும் விடயத்தில் சிறிதும் ஆர்வமற்ற முறையிலேயே அரசாங்கம் யுத்தம் முடிவடைந்த பின்னர் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கின்றது.

சாதாரண நிலைமைகளில் மட்டுமல்லால்இ யுத்தம் தீவிரமடைந்திருந்த நேரத்திலும்இ இந்தியாவும்இ ஐநா மன்றமும்இ அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் தங்கள் துயரைப் போக்கிஇ இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வைக் காண்பதற்குஇ அனைத்துத் தரப்பினரும் முன்வருவார்கள்இ என்று மிகுந்த ஆர்வத்தோடு தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்தார்கள். யுத்தத்தினால் எற்பட்டிருந்த மோசமான பாதிப்புகள் மட்டுமல்லாமல்இ அந்நியர் ஆட்சியில் இருந்து இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர்இ பேரினவாத சிங்கள அரசியல் கடசிகளினாலும்இ பேரினவாத அரசுகளினாலும் மேற்கொள்ளப்பட்டு வந்த திட்டமிட்ட அடக்குமுறைகளும் ஒடுக்கு முறைகளும் இதற்கு முக்கிய காரணங்களாக இருந்தன.

இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு கிடைக்கும்இ சர்வதேசமும்இ ஐநா மன்றமும்இ குறிப்பாக இந்தியாவும் ஓதோ ஒரு வழியில் – ஏதோ ஒரு வகையில் தங்களுக்கு அபயமளிப்பார்கள்இ அமைதியான வாழ்க்கையை ஏற்படுத்தித் தருவதற்கு உதவி புரிவார்கள் என்ற எதிர்பார்ப்பு பல வழிகளிலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ந்து நிலவியது. அது இன்னும் தொடர்வதையே காண முடிகின்றது.

அரசியல் தீர்வுக்கான தென்னாபிரிக்காவி;ன் அனுசரணை முயற்சிஇ இதற்கு சிறந்த உதாரணமாக அமைந் திருக்கின்றது என்றால் அது மிகைப்படுத்தப்பட்ட கூற்றாக மாட்டாது. தமிழ் மக்கள் மட்டுமல்லஇ பழுத்த அரசியல் அனுபவம் வாய்ந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும்இ நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ஆர்.சம்பந்தனும் தென்னாபிரிக்காவின் அனுசரணையில் அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும்இ என்ற எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

நெல்லைஇ யார் குற்றினாலும்சரிஇ அரசியானால் சரி என்று சொல்வார்கள். இது சுயமுயற்சிகள் தோல்வியடைந்து முயற்சிகளில் நம்பிக்கை இழந்த நிலையில் ஏற்படுகின்ற ஒரு எதிர்பார்ப்பு நிலைமையின் வெளிப்பாடாகும். இந்த நிலையில்தான் தென்னாபிரிக்காவின் அனுசரணையில் அரசியல் தீர்வொன்று ஏற்படும் என்ற எதிர்பார்ப்பும் அமைந்திருந்தது. தென்னாபிரிக்கா தனது இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் ஓர் அரசியல் தீர்வைக் கண்ட அனுபவத்தைக் கொண்ட ஒரு நாடு. அதன் அனுபவமும்இ அரசியல் முதிர்ச்சியும் நல்லதொரு வழிகாட்டியாக தங்களுக்கு அமையும் என்று தமிழ் மக்களில் பலரும்இ தமிழ் அரசியல் தலைவர்களில் பலரும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆயினும் தென்னாபிரிக்காவின் அனுசரணை என்பது எத்தகைய ஒரு சூழலில் எப்படி செயல்வடிவ நிலைமைக்கு மேல் எழுந்திருந்தது என்பதை ஆழமாக அவர்கள் சிந்திக்கத் தவறிவிட்டார்கள் என்றே தோன்றுகின்றது.

தென்னாபிரிக்காவின் வருகை

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் இறுதிக்கட்டச் சமர்களின்போதுஇ அரச படைகள் மிகமோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தன. மனித குலத்திற்கு எதிராக சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மிக மோசமான மீறியிருந்தன என்ற குற்றச்சாட்டு சர்வதேச அளவில் எழுந்திருந்த நேரம் அது. ஐநா மன்றத்தில் மூன்றாவது தடவையாக மனித உரிமை மீறல் விடயத்தில் தனக்கு எதிரான பிரேரணையை அரசாங்கம் அப்போது எதிர்கொண்டிருந்தது.

ஜனநாயக உரிமைகளை நிலைநிறுத்துவதற்காகஇ நிறைவேற்று அதிகாரப் பலத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பான ஏற்பாடுகளைக் கொண்டிருந்த அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்காகஇ அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்ட பதினெட்டாவது அரசியல் திருத்தம் நாடாளுமன்றத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தின் உதவியோடுஇ அப்போது சட்டமாக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு ஜனாதிபதி கட்டுப்பாடின்றி தேர்தலில் போட்டியிட்டுஇ ஜனாதிபதியாகப் பதவி வகிப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆணைக்குழுக்களின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த காரியங்கள் அனைத்தும்இ தனி நபராகிய ஜனாதிபதி தனது இஸ்டத்திழற்கு யாருடைய தயவின்றியும்இ எத்தகைய கட்டுப்பாடின்றியும் மேற்கொள்ள முடியும் என்ற அதிகாரம் இதன் மூலம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்தப் பின்னணியில்இ நிறைவேற்று அதிகாரம் கொண்ட நிர்வாகப் பலமாகிய ஜனாதிபதியின் விருப்பத்தைத் தூக்கியெறிந்துஇ நீதித்துறையின் சுதந்திரத்தைப் பேணி நடந்து கொண்டிருந்த காரணத்தினால்இ பாராளுமன்றத்தின் அரசியல் செல்வாக்கையும்இ அரசியல் அதிகாரத்தையும் பிரயோகித்து பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா பதவியில் இருந்து அப்போது தூக்கியெறியப்பட்டிருந்தார்.

இந்த நிலைமையில்தான் பொதுநலவாய மாநாடு கொழும்பில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்தது. அத்துடன் அதன் தihலமைப் பொறுப்பை மரபு வழியின்படிஇ இலங்கையின் அரச தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏற்றுக்கொள்ளவிருந்தார். இறுதியாக நடைபெற்ற இந்த பொதுநலவாய மாநாடு ஜனநாயக உரிமைகளைத் துச்சமாக மதிக்கின்ற ஒரு நாட்டில் நடைபெறுவதை உறுப்பு நாடுகள் பல விரும்பவில்லை. அதற்கு எதிராக அவைகள் போர்க்கொடி உயர்த்தியிநந்தன. ஜனநாயக விழுமியங்கள் போற்றிப் பாதுகாக்கப்படாத ஒரு நாட்டிற்குஇ ஜனநாய உரிமைகளையும்இ ஜனநாயக விழுமியங்களையும் உயிர் மூச்சாகக் கொண்ட பொதுநலவாய அமைப்பின் தலைமைப் பதவியை வழங்க முடியாது என்று அந்த நாடுகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. சுருக்கமாகச் சொல்வதானால்இ பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகள் மத்தியில் இலங்கையில் நடைபெறவிருந்து பொதுநலவாய மாநாடு பெரியதோர் பூகம்பத்தையே ஏற்படுத்தியிருந்தது என்றே கூற வேண்டும்.

ஆயினும் பொதுநலவாய மாநாட்டை எப்படியாவது கொழும்பில் நடத்திவிட வேண்டும் என்று உறுதியாகச் செய்றபட்டு வந்த அரசாங்கம் தன்மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் அப்பட்டமாக மறுத்திருந்தது. அது மட்டுமல்லாமல் பொதுநலவாய அமைப்பின் தலைமைப் பொறுப்பை இதன் மூலம் ஏற்றுக்கொண்டால்இ தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் ஒரு கவசமாக அமையும் என்று அரசாங்கம் கருதியது.

‘இறுதி யுத்தத்தின்போதுஇ அரச படைகள் எந்தவிதமான மனித உரிமை மீறல்களிலும் ஈடுபடவில்லை. சர்வதேச மனிதாபிமான சட்டங்களும் மீறப்படவில்லை. ‘பொதுமக்களின் உயிரிழப்பே இல்லாத – ஸீரோ கசுவாவலிட்டி’ கொள்கையையே அரசாங்கமும்இ அரச படையினரும் பின்பற்றியிருந்தார்கள். இதன் அடிப்படையில் பயங்கரவாதிகளுக்கு எதிராகவே இராணுவ தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பொது மக்கள் எவரும் அரச படையினராhல் கொல்லப்படவில்லை. பயங்கரவாதிகள் மாத்திரமே கொல்லப்பட்டார்கள். பயங்கரவாதிகளினால் கேடயமாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த மூன்று லட்சம் பொதுமக்களை அரச படைகள் இந்த யுத்தத்தின் மூலம் பாதுகாப்பாக மீட்டெடுத்துஇ அவர்களைப் பராமரித்துஇ பாதுகாப்பாக மீள்குடியேற்றம் செய்து அரசாங்கம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் அபிவிருத்தி செய்து வருகின்றது. இந்த நிலையில் அரசாங்கத்தின் மீது அபாண்டமாக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கின்றது’ என்று அரசாங்கம் தனது பிரசாரத்தை முடுக்கிவிட்டிருந்தது.

இத்தகைய ஒரு பின்னணியில்தான் தென்னாபிரிக்காவும் பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்றுவதற்காக கொழும்புக்கு வந்திருந்தது. எரியும் பிரச்சினையாக நாட்டில் தொhடர்ந்து கொண்டிருக்கின்ற இனப்பிரச்சினைக்கு தென்னாபிரிக்காவின் அனுபவத்தைப் பின்பற்றிஇ அதன் ஊடாக ஓர் அரசியல் தீர்வைக் காணலாம். அதற்கு தென்னாபிரிக்கா அரசு உதவ வேண்டும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தென்னாபிரிக்காவிடம் கேட்டிருந்தார். இந்த வகையில்தான் அரசியல் தீர்வுக்கான தென்னாபிரிக்காவின் அனுசரணை முயற்சி தோற்றம் பெற்றிருந்தது.

தென்னாபிரிக்க அனுசரணை எந்த அளவுக்கு சாத்தியமானது?

தென்னாபிரிக்காவின் இனப்பிரச்சினை தீர்வு விடயத்திலான அனுபவத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இலங்கை அப்போது கூறியிருந்தமைக்குஇ அப்போதைய சர்வதேச அழுத்தங்களும்இ அரசியல் அழுத்தங்களும் முக்கிய காரணங்களாக அமைந்திருந்தன. அந்த அழுத்தங்களில் இருந்து அரசியல் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியவர்களின் கவனத்தில் சலனத்தை ஏற்படுத்துவதற்கான உத்தியாகவும் அரசாங்கம் இந்த கூற்றை வெளிப்படுத்தியிருந்தது என்றே கொள்ள வேண்டியிருக்கின்றது.

இதன் மூலம் இலங்கை அரசாங்கம் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு ஜனநாயக வழிமுறையில் முடிவு காண்பதற்கு முயற்சிக்கின்றது என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தவும்இ அதன் மூலம்இ தன்மீதான அழுத்தங்களைச் சற்று இலகுபடுத்தவும் அது எண்ணியிருந்தது.

அதேநேரம் அந்த முயற்சியை தமிழ்த்தேசிய கூட்டமைப்போ அல்லது தமிழர் தர்பபினரோ அதிகம் வலியுறுத்தி அதனை முன்னெடுக்க வேண்டும் என்று முனையமாட்டார்கள் என்றும் அரசாங்கம் நன்றாக அறிந்து வைத்திருந்தது. ஏனென்றால் பொதுநலவாய கொழும்பு சூழலில் இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள அழுத்தத்தை மேலும் பலப்படுத்தவே அந்தத் தரப்புக்கள் முனையும் என்றும் அரசாங்கம் உறுதியாக நம்பியிருக்க வேண்டும். எனவேஇ இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண வேண்டும் என்று முயற்சிப்பவர்களின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாத ஒரு சூழலில் தானே முயற்சிக்கின்ற அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு அதிக கவனம் அவர்கள் தரப்பிலிருந்து வரமாட்டாது என்பதை அரசு நன்கு அறிந்து வைத்துக் கொண்டு இந்த முயற்சியை சர்வதேசத்தின் கவனத்தை தனக்கு சார்பான வகையில் ஈர்ப்பதற்காக மேற்கொண்ருந்தது என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கின்றது.

தென்னாபிரிக்காவின் அனுசரணை கோரிக்கையைடுத்து அங்கு சென்றிருந்த அரச குழுவினர் அரசியல் தீர்வு பற்றி பேச்சுக்கள் நடத்தாமல்இ அப்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கொண்டு வரப்படவிருந்த இலங்கைக்கு எதிரான பிரேரணகை;கு எதிராகச் செயற்பட வேண்டும்இ வாக்கெடுப்பு ஒன்று இடம்பெற்றால்இ இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். அரசியல் தீர்வுக்கான தென்னாபிரிக்காவின் அனுசரணை என்ற போர்வையில் ஐக்கிய நாடுகள் சபையில் ஏற்பட்டிருந்த நெருக்கடியைத் தளர்த்துவதற்காக அந்த நாட்டினதும்இ அதன் நட்பு நாடுகளினதும் ஆதரவைப் பெறுவதற்கே அரசாங்கம் முயற்சித்திருந்தது.

உண்மையாகவே அரசாங்கம் அரசியல் தீர்வுக்கு விரும்பியிருந்தால்இ மனப்பூர்மாக முயற்சித்திருந்தால்இ தென்னாபிரிக்காவிடம் அனுசரணை குறித்து விரிவாகப் பேச்சுக்கள் நடத்தியிருக்கும். அதுபற்றிய உத்தேச செயல்வடிவம் ஒன்றை கையளித்து அதற்கான நிகழ்ச்சி நிரல் ஒன்றையும் தயாரித்தளித்திருக்கும். இது நடைபெறவில்லை. மாறாகஇ தனது கடும்போக்கு ஆதரவாளர்களைக் கொண்டு தென்னாபிரிக்காவின் விசேட தூதுவர் சிறில் ரமபோஸாவின் வருகைக்கு அரசு கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்ததைக் காணக் கூடியதாக இருக்கின்றது.

எனவே நடைபெற்ற சம்பவங்கள்இ அவற்றின் பின்னணிகள் என்பவற்றை வைத்துப் பார்க்கும்போதுஇ அரசாங்கம் தென்னாபிரிக்க அனுசரணை என்ற போலி நாடகத்தை நடத்தியிருப்பதை உணர்:ந்து கொள்ள முடியும். தென்னாபிரிக்காவின் விசேட தூதுவரின் வருகையை எதிர்க்கச் செய்த அரச தரப்பில் இருந்து அவருடைய வருகைஇ அவருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் பற்றி வாயைத் திறக்கவே இல்லை. இறுக்கமான ஒரு மௌளத்தைக் கடைப்பிடித்திருக்கின்றது. அரசின் இந்தச் செயற்பாடும்கூடஇ அரசியல் தீர்வு காணும் விடயத்தில் அதன் அக்கறையற்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றது.

எனவேஇ அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற விடயத்தில் கிடைக்கின்ற துரும்பைப் பிடித்துக்கொண்டு கரையேறத் துடிக்கின்ற தமிழர் தரப்பினர் நிலைமைகளை சிர்தூக்கிப் பார்த்து தமது எதிர்பார்ப்புக்களை வெளிப்படுத்துவது நல்லது. நிலைப்பாடுகளைக் கொள்வதும் நல்லது. அவ்வாறில்லாவிட்டால் வீணாக எதிர்பார்த்துஇ மோசமான முறையில் ஏமாற்றமடையவே நேரிடும் என்பதில் ஐயமில்லை.

- செல்வரட்ணம் சிறிதரன்

 

https://www.facebook.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.