Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலேஷிய விமானம் யுக்ரெய்னில் விபத்துக்குள்ளானது

Featured Replies

விமானம் விழுந்த இடத்தில் ஆதாரங்களை அழிக்க முயற்சி'

 

 

 
140719083610_ukraine_malaysia_plane_304x

ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தங்களின் ஆய்வு நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதாக சர்வதேச ஆய்வாளர்கள் கூறுகின்றனர்

கிழக்கு யுக்ரெய்னில் கடந்த வியாழன்று மலேஷிய விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆதாரங்களை அழிக்க முயற்சிப்பதாக யுக்ரெய்ன் அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

தனியாட்ஸ்க் நகரிலுள்ள பிரேத அறை ஒன்றுக்கு 'பயங்கரவாதிகள் 38 சடலங்களை கொண்டு சென்றுள்ளனர்' என்று யுக்ரெய்னிய அரசாங்கம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

 

ரஷ்யாவின் ஒத்துழைப்புடனேயே கிளர்ச்சியாளர்கள் செயற்படுவதாகவும் அந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆதாரங்கள் அழிக்கப்படுவது பற்றிய குற்றச்சாட்டு தொடர்பில் கிழக்கு யுக்ரெய்னில் உள்ள கிளர்ச்சியாளர்களிடமிருந்தோ ரஷ்யாவிடமிருந்தோ பதில் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

ஆம்ஸ்டர்டம் நகரிலிருந்து கோலாலம்பூர் நோக்கி, கிட்டத்தட்ட 300 பேரை ஏற்றிச்சென்ற மலேஷிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது.

இதேவேளை, விமானத்தின் சிதிலங்கள் விழுந்துகிடக்கின்ற பகுதிக்கு நேரடியாக சென்றுபார்ப்பதற்கு கிழக்கு யுக்ரெய்னில் உள்ள ஆயுதக்குழுக்கள் தம்மை அனுமதிக்கவில்லை என்று ஐரோப்பிய கண்காணிப்புக் குழுவினர் கூறுகின்றனர்.

இதன் காரணமாக, அருகிலுள்ள வீதியொன்றிலிருந்து கொண்டு தாங்கள் தமது ஆய்வுகளை நடத்திவருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

http://www.bbc.co.uk/tamil/global/2014/07/140719_ukraine_flight.shtml

 

  • கருத்துக்கள உறவுகள்
 
pro-russische-separatisten-wuehlen-im-ge

 

விமானம் விழுந்த இடத்தில்.... கண்டெடுக்கப் பட்ட ஒரு விளையாட்டுப் பொம்மை. :(

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விமான விபத்தில்... பலியானவர்களின் வங்கி அட்டைகளை திருடி...

அதில் இருந்து பணம் எடுக்கும் முயற்சியில்....

சிலர் ஈடு பட்டுள்ளதாக... நெதர்லாந்து வங்கி கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

விமானம் வெடித்துச் சிதறிய சம்பவத்துக்கு தாமே பொறுப்பென ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள்

POSTED BY SIVA KUMAR POSTED ON 15:39 WITH NO COMMENTS
 
 
 
 
 
Intercepted-1.jpg
மலேசிய 'எம்.எச். 17' விமானம் நடுவானில் 

வெடித்துச் சிதறி வீழ்ந்த சம்பவத்துக்கு தாமே பொறுப்பென ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் உரிமை கோருவதை வெளிப்படுத்தும் இரு தொலைபேசி உரையாடல்களை தாம் இடைமறித்து கேட்டதாக உக்ரேனிய பாதுகாப்பு சேவைகள் உரிமை கோரியுள்ளது.

ரஷ்ய இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு ரஷ்ய ஆதரவு கொஸ்ஸக் போராளிகளுக்குமிடையில் இடம்பெற்றதாக கூறப்படும் இந்த தொலைபேசி உரையாடல் ஒலிநாடா பதிவுகள் "கியவ் போஸ்ட்” ஊடகத்திற்கு உக்ரேனிய பாதுகாப்பு படையினரால் கையளிக்கப்பட்டுள்ளது.

மேற்படி மலேசிய போயிங் 777-200 விமானம் டொனெட்ஸ்க் நகரின் வடமேற்கே 50 மைல் தொலைவில் ரஷ்ய எல்லைக்கு அண்மையிலுள்ள சொர்னுகின் கிராமத்துக்கு அருகில் வெடித்து சிதறியுள்ளது.
 

உக்ரேனிய பாதுகாப்பு படையினரால் கையளிக்கப்பட்ட ஒலி நாடாவொன்றில் ரஷ்ய இராணுவ புலனாய்வு அதிகாரியான ஜகோர் பெஸ்லர் மலேசிய விமானம் வீழ்ந்தமை குறித்து தனது ரஷ்ய இராணுவ புலனாய்வுப் பிரிவில் தனது மேலதிகாரியாகவுள்ள கேணல் வஸிலி ஜெரானினுக்கு தெரிவிக்கின்றார்.

அந்த தொலைபேசி உரையாடல் விமானம் விழுந்து 20 நிமிடங்களின் பின் அந்நாட்டு நேரப்படி மாலை 4.40 மணிக்கு மேற்கொள்ளப்பட்டது. ரஷ்ய இராணுவ புலனாய்வு அதிகாரியான ஜகோர் பெஸ்லர் உக்ரேனிலுள்ள ரஷ்ய ஆதரவு போராளிகளால் சுய பிரகடனம் செய்யப்பட்ட டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் கட்டளைத் தளபதியாக செயற்பட்டு வருவதாக உக்ரேனிய பாதுகாப்புச் சேவைகள் தெரிவிக்கின்றது.

தொலைபேசி உரையாடல் 

இந்நிலையில் மேற்படி ஒலிநாடாவில் ஜகோர் பெஸ்லர் என நம்பப்படும் குரல் நாம் சிறிது முன் விமானத்தை சுட்டு வீழ்த்தினோம் அது யெனகியவோக்கு அப்பால் வீழ்ந்துள்ளது என தெரிவிக்கின்றார்.

அதற்கு ரஷ்ய ஆயுதப் படைகளின் கேணல் வஸிலி ஜெரானினுடையது என நம்பப்படும் குரல் விமானிகள் எங்கே என வினவுகின்றார். அதற்கு பதிலளித்த ஜகோர் தாம் தேடுதல் நடத்தவும் விமானத்தை புகைப்படமெடுக்கச் செல்வதாகவும் அங்கு ஒரே புகைமூட்டமாக உள்ளதாகவும் கூறுகின்றார்.

அடுத்த ஒலிநாடா மேற்படி உரையாடல் இடம்பெற்று சுமார் 40 நிமிடங்களின் பின் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளரான மேஜர் என்பவரும் பிறிதொரு கிளர்ச்சியாளரான கிரேக் என்பவரும் தொலைபேசியில் உரையாடுவதை வெளிப்படுத்துகின்றது.

அந்த உரையாடலில் விமானம் பெற்ரோபவ்லொவ்ஸ் கயா சுரங்க பிரதேசத்தில் விழுந்துள்ளதாகவும் விழுந்த விமானம் சிவிலிய பயணிகள் விமானம் எனவும் ஆயுதங்கள் எதுவும் அதில் இல்லையெனவும் சிவிலிய பாவனைப் பொருட்களே அதில் இருப்பதாகவும் பயணிகளில் ஒருவர் தொப்ஸ்ன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் இந்தோனிசிய மாணவர் என்பதை அவரது அடையாள ஆவணங்கள் வெளிப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது தொலைபேசி உரையாடலில் கிளர்ச்சியாளர் ஒருவர் பயணிகள் விமானமொன்றே விழுந்துள்ளதாகவும் அதில் பயணித்தவர்களில் பல பெண்களும் சிறுவர்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவித்தார். அது மலேசிய எயார்லைன்ஸ் விமானம் எனவும் அதற்கு உக்ரேனுக்கு மேலாக என்ன வேலை எனவும் அவர் கூறினார்.

http://youtu.be/m8nYE4pjK-Y

இந்த தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் ரஷ்ய பாதுகாப்பு சேவையின் தலைவர் வருவன்ரைன் நலிவேசென்கோ கூறுகையில், இந்த குற்றச் செயலை மேற்கொண்ட ரஷ்ய இராணுவத்தை தண்டிப்பதற்கு தேவையான அனைத்தையும் நாம் செய்வோம் என்று தெரிவித்தார்.

 

http://www.tamilkingdom.org/2014/07/blog-post_4305.html

 

சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம்: தமிழர் குடும்பமே பலியான பரிதாபம்
 
 
மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் தமிழர் குடும்பமே பலியான பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. உக்ரைனில் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு 298 பேர் பரிதாபமாக பலியாகினர். இதில் ஒரு தமிழர் குடும்பமும் அடங்கும்.
 
மலேசியாவில் உள்ள ‘ஷெல்’ நிறுவனத்தில் ஆசிய பசிபிக் பிரிவின் தலைவராகவும், ஐ.டி. பட்டதாரிகளின் ஆலோசகராகவும் பணியாற்றி வந்தவர் பால் ராஜ சிங்கம் சிவஞானம். இவர் தனது மனைவி, மகனுடன் நெதர்லாந்து சென்றிருந்தார்.
 
நெதர்லாந்தில் பயணத்தை முடித்துக்கொண்டு இவர் குடும்பத்துடன் கோலாலம்பூர் வந்தபோது தான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இதில் பால் ராஜ சிங்கம் சிவஞானம் குடும்பமே பலியாகி விட்டது.
 
அதே போல் பால் ராஜ சிங்கம் சிவஞானம் பணியாற்றி வந்த அதே ‘ஷெல்’ நிறுவனத்தில் கஜகஸ்தானில் பணியாற்றி வந்தவர் தம்பி ஜீ. இவர் கஜகஸ்தானில் இருந்து கோலாலம்பூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 
புதிய பணியிடத்தில் சேருவதற்கு முன் அவர் குடும்பத்துடன் ரம்ஜான் கொண்டாட்டத்துக்காக வந்துகொண்டிருந்தார். அப்படி வரும்போது தான் தனது மனைவி அரிஜா காஜலீ, குழந்தைகள் முகமது ஆரிப், முகமது அப்சல், மார்ஷா அஜ்மீனா, முகமது அப்ரஸ் ஆகியோருடன் பலியாகி விட்டார்.
 

அரசியல் பிழைத்தோர்க்கு  அறம் கூற்றாகும் என்பதற்கேற்ப இது நிகழ்ந்துள்ளது எனலாம்.

ஈழத்தமிழர் விடயத்திலும்,அங்குள்ள ஏனைய தமிழர் விடயத்திலும் மலேசிய அரசின்

செயற்பாடுகள் மிகத் தவறானவை.தம்மோடு கருத்துவேறுபடுகிறவர்களைப் பழிவாங்கும்

தற்போதைய அரசின் மலேசிய இஸ்லாமியப்போக்கை அது கைவிடல்வேண்டும்.

 

This is the second catastrophe to hit the Malaysian airline this year after flight MH370 disappeared in March.

 

Questions are being asked about whether the carrier can now survive.

 

"Even if this is pure coincidence, it's never happened in history that a flag carrier has seen two wide-body aircraft disappearing in a few months," said Bertrand Grabowski, head of aviation at DVB Bank, which acts as a banker to Malaysia Airlines.

 

அண்மையில் ஏற்பட்ட இரு விபத்துகள் காரணமாக மலேசிய விமானநிறுவனம் மிகப்பெரிய

நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.அந்த நிறுவனம் இதிலிருந்து தப்பிப் பிழைக்குமோ

தெரியாது.

http://www.bbc.com/news/business-28370863

  • கருத்துக்கள உறவுகள்

596082372MH3.jpg

எம்எச் 17 வீழ்த்தப்பட்ட அதே நேரத்தில் உக்ரைன் மீது பறந்து கொண்டிருந்த டெல்லி- லண்டன் விமானம்!
 
 
ரஷ்ய ஆதரவு புரட்சிப் படையினர் மலேசியன் ஏர்லைன்ஸின் எம்எச் 17 விமானத்தை ஏவுகணை மூலம் வீழ்த்திய அதே நேரத்தில், அதே பகுதியில் டெல்லியிலிருந்து லண்டன் போய்க் கொண்டிருந்த விர்ஜின் அட்லான்டிக் விமானமும் பறந்து கொண்டிருந்ததாக தெரிய வந்துள்ளது. 200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இந்த விமானம் சென்று கொண்டிருந்தது. தாக்குதல் நடந்து கொண்டிருந்த இடத்திலிருந்து 140 மைல் தொலைவில் இந்த விமானம் பறந்து கொண்டிருந்தது. 

அதாவது கிழக்கு உக்ரைனின் ஜபோரிஷியா என்ற நகரின் மேல் இந்த விமானம் பறந்து கொண்டிருந்தது. மேலும் அந்த சமயத்தில் உக்ரைன் வான் பகுதியில் கிட்டத்தட்ட 300 விமானங்கள் பறந்து கொண்டிருந்துள்ளன. அதில் 55 விமானங்கள் போர்ப் பகுதியில் பறந்துள்ளதாகவும் புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 6 விமானங்கள் லண்டன் ஹீத்ரு விமான நிலையத்திலிருந்து கிளம்பி வந்தவையாகும். 

மேலும் கடந்த ஒரு வாரமாகவே அதிக அளவிலான விமானங்கள் குறிப்பாக விர்ஜின் அட்லான்டிக் விமானங்கள் போர்ப் பகுதியில் பறந்துள்ளன. இதுவும் புரட்சிப் படையினர் உஷாராகி தாக்குதலுக்குத் திட்டமிட்டதற்குக் காரணமாக கூறப்படுகிறது. அடிக்கடி விமானங்கள் பறந்ததால் அவர்கள் உக்ரைன் ராணுவம் உளவு பார்ப்பதாக சந்தேகப்பட்டு தாக்குதலுக்குத் திட்டமிட்டிருக்கலாம் என்கிறார்கள். 

மேலும் புரட்சிப் படையினர் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தைக் குறி வைத்துத் தாக்கவில்லை என்றும், அந்த சமயத்தில் எந்த விமானம் அந்தப் பகுதியில் வந்திருந்தாலும் தாக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

மேலும் மலேசிய விமானம் பயன்படுத்திய வான் பாதையில் அன்றைய தினம் டொன்ஸ்டெக் நகர் மீது ஜெட் ஏர்வேஸ், தாய் ஏர்வேஸ், பாகிஸ்தான் சர்வதேச விமானம், கத்தார் ஏர்வேஸ், எதிஹாட், எமிரேட்ஸ், ஆஸ்திரேலியன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானங்களும் பயன்படுத்தியுள்ளதும் தெரிய வந்துள்ளது. 

அதேபோல மலேசியன் ஏர்லைன்ஸைச் சேர்ந்த இன்னொரு விமானம் ஹீ்த்ரூவிலிருந்து கோலாலம்பூர் சென்றுள்ளது. அதுவும் கூட இந்த மார்க்கத்தில்தான் போனதாகவும் கூறப்படுகிறது. 

மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பகுதியை பயன்படுத்தி வந்த அத்தனை விமானங்களும் அவசரம் அவசரமாக வேறு பாதையில் திரும்பிச் சென்றுள்ளன. 

தற்போது உக்ரைன் வான்வெளி வழியாக எந்த விமானமும் செல்லவில்லை. ஒட்டுமொத்தமாக உக்ரைன் வான்வெளியை அனைத்து விமானங்களும் தவிர்த்து வருகின்றன. 

மலேசிய விமானம் தாக்கப்படுவதற்கு 2 நிமிடங்களுக்கு முன்பு சிங்கப்பூர் ஏர்லைன்ஸைச் சேர்ந்த ஒரு விமானம், அபாயகரமான டோன்ஸ்டெக் நகர் மீது பறந்துள்ளது. இத்தனை விமானங்களும் பத்திரமாக தப்பிய நிலையில், எம்எச் 17 மட்டும் சிக்கிக் கொண்டு விட்டது பரிதாபம்தான்...!

வானில் ஒரு கொடூர அரசியல்

உலகமே அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறது. எம்.எச்-370 விமானத்துக்கு என்ன ஆயிற்று என்றே தெரியாத நிலையில், மலேசிய ஏர்லைன்ஸின் மற்றொரு போயிங் 777 விமானம் உக்ரைன் வான்தடத்தில் பறந்துகொண்டிருந்தபோது சுட்டு வீழ்த்தப் பட்டிருக்கிறது. ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்குச் சென்று கொண்டிருந்த அந்த விமானம், உக்ரைன் பிரிவினைவாதிகளுக்கும் உக்ரைன் ராணுவத்துக்கும் இடையே நடக்கும் மோதலில் சிக்கும் என்றோ, விமானத்தில் இருந்த 298 உயிர்களும் கொல்லப்படும் என்றோ யார் எதிர்பார்த்திருக்கக் கூடும்?

இத்தனைக்கும் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்படாத வான் தடத்தில், அதுவும் 33,000 அடி உயரத்தில் இந்த விமானம் பறந்தபோது இப்படிச் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது. இதுவரை உக்ரைன்-ரஷ்ய விவகாரம் என்று உலகமே வேடிக்கைபார்த்த ஒரு விவகாரம், இன்று உலகளாவிய தீவிரத்தை இந்தச் சம்பவத்தால் பெற்றிருக்கிறது. விமானங்கள் வழக்கமாகப் பறக்கும் வான்தடத்தில் இப்படி ஒரு அக்கிரமம் நிகழ்ந்திருப்பது ஒட்டுமொத்த வான்தடங்கள் குறித்தும் சர்வதேசச் சமூகத்துக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதே உண்மை.

1940-களில் தொடங்கி இன்றுவரை சுமார் 20-க்கும் மேற்பட்ட சம்பவங்களில் பயணியர் விமானங்கள் ராணுவத்தினராலோ பிரிவினை வாதிகள், பயங்கரவாதிகளால் போன்றவர்களாலோ ஏவுகணைகளால் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளன. இப்போதைய சம்பவத்துக்கு ‘நீதான் காரணம்... நான்தான் காரணம்’ என்று உக்ரைன் அரசும் பிரிவினைவாதிகளும் மாறிமாறிக் குற்றம்சாட்டிக்கொள்கின்றனர். ரஷ்ய அரசு மீதும் குற்றம் சாட்டப்படுகிறது. இதே பகுதியில், சில நாட்களுக்கு முன்னால்தான் உக்ரைன் ராணுவ விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டிருக்கிறது. மலேசிய விமானம் வரும் பாதையில், உக்ரைன் ராணுவ விமானம்தான் வரும் என்று பிரிவினைவாதிகள் காத்திருந்தது அவர்களுடைய உரையாடலை ஒட்டுக்கேட்டதில் தெரியவந்துள்ளது.

இந்த வான்தடம் வழியாக வேறு சில விமானங்களும் செல்வதாக இருந்தன. மலேசிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட சில மணி நேரங்களுக் கெல்லாம் அந்தத் தடத்தில் வரவிருந்த பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் வேறு தடத்தில் திருப்பி விடப்பட்டிருக்கிறது. அதே தடத்தில்தான் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் வரவிருந்தார் என்றும், இந்த ஏவுகணை அவரைக் குறிவைத்துதான் ஏவப்பட்டது என்றும் உறுதிப்படுத்தப்படாத மற்றொரு தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைன் ராணுவத்தின் மீதே இந்தப் பழி திருப்பப்படுகிறது. இத்தகைய விபத்துகளைத் தடுக்க, சர்வதேச அளவில் பொது அமைப்பு ஒன்று விமானங்களின் போக்குவரத்தைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வருகிறது. விமானப் பயணிகளின் நலனில் அக்கறை கொண்டு இத்தகைய பொது அமைப்பை உருவாக்குவது அவசியம். இதற்கு விமான நிறுவனங்களும் நாடுகளும் விதிவிலக்கின்றி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

உக்ரைன் பிரச்சினை எப்போது பூதாகாரமாக வெடிக்குமோ என்று எல்லோரும் பயத்துடன் இருந்தபோது, இப்படி ஒரு கொடூரமான சம்பவம் நடந்திருக்கிறது. உக்ரைன், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் யாவும் இந்தச் சந்தர்ப்பத்தைத் தங்கள் புவியரசியல் நகர்த்தலுக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளும் அபாயம் இருக்கிறது. 298 உயிர்களின் இழப்பு என்பது அந்த நகர்த்தலின் தொடக்கமாக இருக்குமென்றால் ஆட்டத்தின் போக்கு, முடிவு எல்லாம் எப்படி இருக்கும்?

 

http://tamil.thehindu.com/opinion/editorial/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/article6231429.ece?homepage=true&theme=true

இவர்களுக்கு என்ன விதி?
2014-07-21 10:52:18 | General

4352_content_article-2699378-1FD53A1D000

சுட்டு வீழ்த்தப்பட்ட எம்.எச்.17 மலேசிய விமானத்தில் பயணித்து பலியான 80 சிறுவர்களில் 22 சிறுவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த கோர சம்பவத்தில் 3 பச்சிளம் குழந்தைகளும் பலியானது குறிப்பிடத்தக்கது.

 

 http://thinakkural.lk/article.php?world/xgjjqogajv55361134ac57b515424c8mhyb1d38b7d70c1b6feaa28cfzgils#sthash.z3SfJe50.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.