Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா இலங்கை வந்து இங்குள்ள நிலைவரத்தை நேரில் பார்க்கவேண்டும் - அழைப்பு விடுக்கிறார் சுவாமி

Featured Replies

SWAMY_765376f.jpg

 

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இங்குள்ள நிலவரத்தை நேரில் பார்வையிடவேண்டும். இவ்வாறு கொழும்பில் வைத்து அவருக்கு அழைப்பொன்றை விடுத்தார் பாரதீய ஜனாதாக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் சுப்பிரமணிய சுவாமி. பண்டாரநாயக்க சர்வதேச கல்வி நிறுவகத்தில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் 'மோடியின் கீழ் இந்தியா' என்ற தொனிப் பொருளில் அவர் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
இலங்கை இந்திய உறவில் இருந்து தமிழ் நாட்டையும் தமிழர் விவகாரத்தையும் துண்டிக்க வேண்டும் என்ற கருத்தையும் முன் வைத்தார். தமிழ் நாட்டிலோ தமிழ் நாட்டு தேர்தல்களிலோ இலங்கைத் தமிழர் விவகாரம் முக்கிய இடத்தைப் பிடிக்கவில்லை. அவர்கள் தேர்தல்கள் மூலம் இதனை வெளிப்படுத்தி உள்ளார்கள். வெளிநாடுகளில் உள்ள எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளின் பணத்தையும் போதைப் பொருள் விற்ற பணத்தையும் தமிழ் நாட்டில் உள்ள சில குழுக்கள் பயன்படுத்துகின்றன. இந்த நிலை சினிமா உலகத்திலேயே மிக மோசமாக காணப்படுகிறது - என்றும் அவர் தெரிவித்தார். -
 
http://malarum.com/article/tam/2014/07/21/3839/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF.html#sthash.3FR2LHST.dpuf
 
 

இலங்கையில் இனப்பிரச்சனை என்றில்லை மொழிப்பிரச்சனையே - இனப்பிரச்சனை என்ற வரலாறுகளை மாற்ற வேண்டும் -

 

இலங்கை இந்திய உறவில் இருந்து தமிழ் நாட்டையும் தமிழர் விவகாரத்தையும் துண்டிக்க வேண்டும் - சு... சாமி - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கொழும்பு:- இணைப்பு 2

 

ஆவணப் படம்

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இங்குள்ள நிலவரத்தை நேரில் பார்வையிட வேண்டுமென கொழும்பில் வைத்து அவருக்கு அழைப்பொன்றை விடுத்துள்ள சுப்பிரமணிய சுவாமி இலங்கை இந்திய உறவில் இருந்து தமிழ் நாட்டையும் தமிழர் விவகாரத்தையும் துண்டிக்க வேண்டும் என்ற கருத்தையும் முன் வைத்துள்ளார்.


கொழும்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் அவர் மேலும் தெரிவித்ததாவது. இலங்கை 13வது திருத்தத்தில் குறிப்பிட்டப்பட்ட விடயங்களில் பலவற்றை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றி உள்ளது எஞ்சி உள்ள விடயங்களையும் அது நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம் தமிழ் மக்கள் மீண்டும் சிலரின் கரங்களில் வீழ்ந்து வீணாக பலியாவதை தவிர்க்கலாம்.


இலங்கை இந்திய உறவுகளில் இருந்து தமிழ் நாட்டையும் தமிழர் விவகாரத்தையும் பிரித்துப் பார்க்க வேண்டும். இலங்கை தொடர்பாக மனித உரிமை ஆணையகத்தில் தீர்மானங்களை கொண்டு வருவதற்கு அமெரிக்காவிற்கோ பிரிட்டனுக்கோ எந்த வித உரிமையும் இல்லை. அவர்கள் செய்த தவறுகளுக்காக யார் அவர்களை விசாரிப்பது. இலங்கை இந்த விவகாரத்தில் பின் வாங்கக் கூடாது. இதற்கு எதிரான முயற்சிகளில் இரட்டிப்பாக்க வேண்டும்.


இலங்கையில் நிலவரம் எப்படி உள்ளது என்பதை நேரில் கண்டறிவதற்காக ஜெயலலிதா இங்கு வரவேண்டும்.


தமிழ் நாட்டிலோ தமிழ் நாட்டு தேர்தல்களிலோ இலங்கைத் தமிழர் விவகாரம் முக்கிய இடத்தைப் பிடிக்கவில்லை. அவர்கள் தேர்தல்கள் மூலம் இதனை வெளிப்படுத்தி உள்ளார்கள்.


வெளிநாடுகளில் உள்ள எஞ்சி உள்ள விடுதலைப் புலிகளின் பணத்தையும் போதைப் பொருள் விற்ற பணத்தையும் தமிழ் நாட்டில் உள்ள சில குழுக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த நிலை சினிமா உலகத்திலேயே மிக மோசமாக காணப்படுகிறது. இலங்கையில் இனப் பிரச்சனை ஒன்றும் இல்லை. மொழிப் பிரச்சனைதான் உள்ளது. இனப்பிரச்சினை என்ற ஒன்றுள்ளது என சொல்லப்படும் வரலாற்றையும் வரலாற்று நூல்களையும் மாற்றியெழுத வேண்டும் என தெரிவித்தார்.


 

இலங்கையின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது - இந்தியா-


இலங்கையின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என இந்தியா அறிவித்துள்ளது.


இலங்கைக்கு விஜயம் செய்துள்ள, இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் சுப்ரமணியம் சுவாமி இதனைத் தெரிவத்துள்ளார்.


அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, சுப்ரமணியம் சுவாமி சந்தித்துள்ளார்.


பிராந்திய வலய விவகாரங்கள் மற்றும் இரு தரப்பு விவகாரங்கள் குறித்து ஜனாதிபதிக்கும், சுப்ரமணியம் சுவாமிக்கும் இடையில் சந்தி;ப்பு நடத்தப்பட்டுள்ளது.


இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் இலங்கை முக்கிய பங்களிப்பினை வழங்கி வருவதாக இந்தியா அறிவித்துள்ளது.


பயங்கரவாதத்தை சிறந்த முறையில் இலங்கை அரசாங்கம் மட்டுமே வெற்றிகொண்டுள்ளதாக சுப்ரமணிய சுவாமியுடன் சென்ற  இந்திய பிரதிநிதிகள்  தெரிவித்துள்ளனர்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/109648/language/ta-IN/article.aspx

 

இந்த பிரபஞ்சத்திலே உள்ள அனைத்து மொழிகளிலும்  மிகவும்  கேவலமான அருவருக்க தக்க  ஒரு பொருள் என்பதை  எப்படி அழைப்பது  என்றால் அந்த பொருளை << சுப்பிரமணிய சுவாமி >> என்று அழைக்கலாம்.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

அய்யரம்மாவில அலுத்து களைத்ததவருக்கு..  கேரளத்து சாயல்லை நல்ல நீத்துப்பெட்டி புட்டுக்கொடுத்தால் சாமி எழும்பி ஆடாமல் படுத்தா கிடக்கும்....(மன்னிக்கவும்..இதைவிட இந்த கெட்ட சனியனை திட்ட எனக்கு வேறு வார்த்தை வரவில்லை)

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் பார்த்ததை சொல்லுங்கோவன்....அவாள் நம்புவா.....

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை இந்திய உறவில் இருந்து தமிழ் நாட்டையும் தமிழர் விவகாரத்தையும் துண்டிக்க வேண்டும் - சு... சாமி   ஜெயலலிதா இலங்கை வந்து இங்குள்ள நிலைவரத்தை நேரில் பார்க்கவேண்டும் - அழைப்பு விடுக்கிறார் சுவாமி

 

 

இதன்  மூலம் சொல்லவருவது என்னவென்றால்

தமிழகத்தை  தற்பொழுது ஆள்பவர் தமிழரல்ல  என்பதே....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.