Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விவசாய நிலங்களில் நிறுத்தி வைத்த வெருளிகள் - ஐநா சபையினர் , சர்வதேச விசாரணையை அனுமதிக்க மாட்டோம் - சுவாமி

Featured Replies

swamy%20mahinda_CI.jpg

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் தன்னிச்சையான நடவடிக்கைகள் எதனையும் எடுக்க முடியாது என்பதால் இலங்கை அது குறித்து அலட்டிக்கொள்ள தேவையில்லை என சுப்பிரமணிய சுவாமி அறிவுரை வழங்கியுள்ளார்.

விவசாய நிலங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் வெருளிகள் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தை வர்ணித்துள்ள அவர் இலங்கை குறித்து ஏன்  அவர்கள் அக்கறை கொள்ளவேண்டும் அவர்கள் யார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை விவகாரம் பாதுகாப்பு சபைக்குச் சென்றால் சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பாவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இது குறித்த கவலையடைய தேவையில்லை, நாங்கள் ஒரு போதும் சர்வதேச விசாரணைணை அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

ஐ.நா விசாரணை குறித்து கவலை கொள்ள வேண்டியதில்லை – சுப்ரமணியம் சுவாமி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகள் குறித்து அரசாங்கம் கவலை கொள்ள வேண்டியதில்லை என பாரதிய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

ஏனெனில், இலங்கை தொடர்பில் தன்னிச்சையான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் விசாரணைக்குழுவிற்கு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் அனுமதியுடனே நடவடிக்கைகள் எடுக்கப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இல்ஙகை தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அதற்கு சீனா எதிர்ப்பை வெளியிடும் எனவும் அதனால் இலங்கை கவலை கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை விவகாரங்களில் சர்வதேச சமூகத்தின் தலையீடுகளை நியாயப்படுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/109734/language/ta-IN/article.aspx

 

சபாஷ்

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை விவகாரங்களில் சர்வதேச சமூகத்தின் தலையீடுகளை நியாயப்படுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்
அதாவது.....இந்தியாவின் தலையீட்டை நியாயப்படுத்தலாம் ஆனால் சர்வதேச சமுகத்தின் தலையீட்டை நியாயப்படுத்த முடியாது.....
  • கருத்துக்கள உறவுகள்

விவசாய நிலங்களில் நிறுத்தி வைத்த வெருளிகள் - ஐநா சபையினர் 

 

இவர்  தான்   அந்த வெருளி

இவரது நாடு 

அந்த விவசாய  வெருளியாக வருவதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தையும்

நாடு நாடாக கெஞ்சி படும் பாட்டையும்

இவர் தெரிந்து கொள்ளவேண்டும்

''இலங்கை விவகாரம் பாதுகாப்பு சபைக்குச் சென்றால் சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பாவிக்கும் ''

 

இவர் எந்த நாட்டு வெருளி? பேச்சைப்பார்த்தால் சீனாபோல் தெரிகிறது,

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இதனைச் சொல்ல...கேட்கிற வெருளி பழைய வெருளி போல....மனுசன் அடக்கி வைத்ததையெல்லாம் கொட்டித்தீர்க்குது...ஒரு வெருளியாலை வேறை என்னத்தை செய்யமுடியும்...அதைவிட கேட்கிற பழைய வெருளிக்கும்  இதைவிட வேறை என்ன சந்தோசம் இருக்கும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.