Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"கத்தி", "புலிப்பார்வை" திரைப்படங்கள் தமிழர்களுக்கு எதிரான போர்!" - திருமுருகன் காந்தி ஆவேசம் .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
"கத்தி", "புலிப்பார்வை" திரைப்படங்கள் தமிழர்களுக்கு எதிரான போர்!" - திருமுருகன் காந்தி ஆவேசம் 
[Thursday 2014-07-31 21:00]
thirumurukan-may-17-150.jpg

திருமுருகன் காந்திஇனப்படுகொலையாளன் ராஜபக்சேவின் நெருங்கிய கூட்டாளியான 'லைக்கா மொபைல்ஸ்' நிறுவனர் சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரிக்கும் 'கத்தி', ஈழ விடுதலைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதிரான பச்சமுத்து என்ற பாரிவேந்தர் தயாரிக்கும் 'புலிப்பார்வை' ஆகிய படங்களுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளன. இப்படங்கள் தயாரிக்கப்படுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளார் திருமுருகன் காந்தி, "தமிழ் திரையுலகின் வழியாக தமிழர்கள் மீது உளவியல் - பொருளியல் - கருத்தியல் சிதைவினை கொண்டுவரும் போராக இலங்கை - இந்திய அரசினால் நிகழ்த்தப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

  

இது தொடர்பாக, திருமுருகன் காந்தி தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ஈழவிடுதலை ஆதரவு அரசியல்களத்தில் தமிழகத்தின் திரைத்துறைக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. பொதுமக்களிடத்தில் இவர்களின் ஈழ ஆதரவு பெரும் தாக்கத்தினை ஏற்படுத்திய பல நிகழ்வுகளை குறிப்பிட முடியும்.

2009க்கு பின் தமிழகத்திரைத்துறையின் ஈழ ஆதரவு அரசியலை உடைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பாலிவுட் திரைப்பட விருது வழங்கும் விழாவின் தோல்விலிருந்து இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தமிழக திரைத்துறையில் இருக்கும் நிதி முதலீட்டு நெருக்கடியையும், வணிக நோக்கமாக இருப்பவர்களையும் இலங்கை பயன்படுத்த எண்ணியது. FICCIயின் (வர்த்தக கூட்டமைப்பு) துணை கொண்டு பல ஒப்பந்தங்களை இந்திய திரை உலகுடன் இலங்கை ஏற்படுத்திக்கொண்டது.

இதன் விரிவான திட்டமாக நாம் புரிந்து கொள்ள கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் 1. திரைத்துறையில் முதலீடு 2. திரையுலக கலைஞர்களை தமது பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக்கொள்வது.

இதன் அடிப்படையிலேயே தற்பொழுது லைகா மொபைல் நிறுவனத்தின் முதலீடு திரைத்துறையில் பெரிய பேனரில் , வணிகரீதியாக லாபம் கொடுக்கும் நடிகர் விஜய் - முருகதாஸ் மூலமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. லைகா மொபைல் ராஜபக்சேவிற்கு ஆதரவாக பல வர்த்தக பணிகளை மேற்கொண்டதை நாம் அறிவோம். அந்த நிறுவனம் தமிழகத்தில் 'இலங்கை மீது பொருளாதார தடை இருப்பதை' அறிந்து பின்வாசல் வழியாக நுழைகிறதா?..

மற்றொரு புறம் சந்தோஷ் சிவன் போன்ற அரசியல் தரகு படைப்பாளிகளின் வழியே நுணுக்க அரசியல் படங்களை ஈழவிடுதலைக்கு எதிராக கொண்டுவருவது. இந்தவகையான 'அறமற்ற' தொழிற்நுட்ப கலைஞர்களை தமிழ்திரையுலகில் ஆளுமை செலுத்த வைப்பது. சந்தோஷ் சிவனின் 'இனம்' திரைப்படத்தினை லிங்குசாமி கொண்டுவந்தார். சூரியாவை வைத்து லிங்குசாமி இயக்கும் படத்திற்கு சந்தோஷ் சிவன் காமிரா செய்கிறார்.

மாற்று அரசியல் என்கிற பெயரில் தென்னாப்பிரிக்கவின் மூலமாக மேற்குலகினால் முன்வைக்கப்படும் "நல்லிணக்கம்" ,"இனப்படுகொலை குற்றவாளிகளை மன்னித்து , இணைந்து வாழ்தல்" என்கிற திட்டத்தினை நுணுக்கமாக அறிவுசீவி சமூகவெளிக்குள் நகர்த்தும் 'வித் யூ, வித்தவுட் யூ" போன்ற படங்களை பி.வி.ஆர் போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் விநியோகம் செய்யும் 'புரட்சி'யும் இங்கு நிகழுகிறது. தமிழகத்தின் மனசாட்சியை உலுக்கிய பாலச்சந்திரனின் அந்த 'இறுதிப் பார்வை' புகைப்படம் இன்றளவும் பலரை துன்புறுத்தும் இனப்படுகொலை பதிவு. இந்த மனப்பதிவினை சிதைப்பதுவும், பாலச்சந்திரன் பற்றியான பிம்பத்தினை உடைப்பதுவும் இந்திய-இலங்கை அரசிற்கு மிக மிக அவசியமான உடனடித் தேவை. இப்பிம்பம் முற்றிலும் முறிக்கப்பட்டால் காலப்போக்கில் பல நினைவுகளை அழிக்க முடியும்.

'புலிப்பார்வை' எனும் படத்தின் அறிமுக காணொளியில் உளவியல்ரீதியாக தமிழர்களின் ஆழ்மனதில் புதைந்து நிற்கும், 'ஏன் இந்த அப்பாவி குழந்தை படுகொலை செய்யப்பட்டான்" என்கிற கேள்வியை சிதைத்து அழிக்கும் காட்சிப்படுத்தலை காணமுடிகிறது. இதை பிரவீன் காந்தி எனும் வணிகரீதியாக மலிவான படங்களை எடுக்கும் நபரைக் கொண்டு செய்திருக்கிறார்கள்.

தமிழ்த் திரையுலகின் வழியாக தமிழர்களின் மீது உளவியல் - பொருளியல் - கருத்தியல் சிதைவினை கொண்டுவரும் 'போராக' இது இலங்கை-இந்திய அரசினால் நிகழ்த்தபடுகிறது. இதிலிருந்து தமிழகமும், தமிழ் திரையுலகமும் தப்பிக்குமா எனத் தெரியவில்லை.

இனிமேல் தமிழ்திரையுலகில் ஈழவிடுதலை ஆதரவாளருக்கு கிடைக்கும் வர்த்தக வாய்ப்புகளை விட இலங்கையின் நுண் அரசியலுக்கு துணை போகும் அறமற்றவர்களுக்கு வணிக வாய்ப்புகள் ஏராளம் கிடைக்கலாம். இம்முயற்சிகளை முறியடிப்பது ஒட்டுமொத்த தமிழர்களின் கடமை. தமிழகமும், திரையுலகுமும் எழுந்து நிற்குமா... அல்லது 2009 போர் முடிந்ததும் எழுந்த உணர்வலைகள் இன்று அடங்கிவிடுமா?... என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=114150&category=TamilNews&language=tamil

தமிழர் அமைப்புத் தலைவர்களுடன் முருகதாஸ் சந்திப்பு: முடிவுக்கு வருகிறது 'கத்தி' பிரச்சினை.

 

564xNxkathi_2032159g.jpg.pagespeed.ic.Hp

 

'கத்தி' பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர தயாரிப்பாளர் கருணாமூர்த்தி மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் தமிழர் அமைப்புகளை சந்தித்துள்ளனர்.

விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'கத்தி' படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. தீபாவளிக்கு 'கத்தி' திரைக்கு வரவிருக்கிறது. நாளை முதல் 'கத்தி' இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தை தயாரித்து வரும் லைக்கா நிறுவனம், ராஜபக்சே ஆதரவு பெற்ற நிறுவனம் என்று படம் தொடங்கப்பட்ட போது செய்திகள் வெளியாகின.

இதனை தயாரிப்பு நிறுவனம் மற்றும் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்தார்கள். தற்போது மீண்டும் இப்பிரச்சினை தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது.

செப்டம்பரில் இசை, தீபாவளிக்கு படம் என்று 'கத்தி' இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர தயாரிப்பாளர் கருணா மூர்த்தி மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முடிவு செய்து தமிழர் அமைப்புகளை சந்தித்து பேசியுள்ளனர்.

"தயாரிப்பாளர் கருணாவோடு பழ.நெடுமாறன், தொல்.திருமாவளவன், சீமான் ஆகிய தலைவர்களைச் சந்தித்தோம். அவர்களிடம் உரிய விளக்கம் அளிக்கப்பட்டது. மதிமுக பொதுச் செயலர் வைகோவை சந்திக்க இருக்கிறோம்" என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

விரைவில் வைகோவையும் சந்தித்துவிட்டு, தமிழர் அமைப்புகளின் அறிக்கையோடு 'கத்தி' இசை வெளியீட்டு தேதியையும் அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.

 

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88/article6267496.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாழும் நாட்டில் இப்படம் திரையிடப்படுமாகவிருந்தால் சிறிய எதிர்ப்பை வெளிக்காட்டலாம் எனும் முடிவில் இருக்கிறேன்.

 

பெரிதாகச் செய்யவேண்டுமாகிலும் பிரச்சனை ஒண்டும் இல்லை,

 

நாணோ எனது பிள்ளைகளோ தமிழ் திரைப்படம் பார்ப்பதற்கு திரையரங்கம் போவதில்லை. ஆகவே எனக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை.

 

ஆகையால் என்ன கொஞ்சம் மனிதமலத்தினை பொட்டலமாகக் கட்டி திரையரங்கில் அங்காங்கே தெளித்துவிட்டேனெனில் அனைவரும் சில நிமிடங்களிலேயே அரங்கை விட்டுப் போய்விடுவார்கள். 

 

தவிர எதிர்காலத்தில் எப்படத்துக்கும் திரையரங்கு கிடையாது. அதனால் எவருக்கும் நட்டமில்லை.

 

இவைகளைச் செய்யமுதல் சம்பந்தப்பட்டவர்களுக்கு இப்படத்தைத் திரையிடவேண்டாம் என அறிவுறுத்துவேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.