Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பேச்சுவார்த்தை

Featured Replies

சிங்களத்தின் காலத்திற்கேற்ற அணுகுமுறையும், தனது தனது இலக்கு எது என்பதில் சரியான உறுதியும்,அதனை அடைவதற்கு சரியான அணுகுமுறையுமே தற்காலிக, நிரந்தர வெற்றிகளை கொடுக்கிறது. அது தந்திரமும், மந்திரமும், மாந்திரிகமும் கூடத்தான்.அதாவது காரியம் சாதிக்க எவ்வழியும் நாட்டம். இதில் ஒருவழிதான் மற்ற நாடுகளின் அதிகாரிகளை அழைத்து கையுக்குள் போடுவது. எந்த ஆட்சி மாறினாலும் இவர்களையும், சு.சாமி போன்றவர்களையும் வைத்து நெடுங்கால திட்டத்துடன் தனக்கு சாதமாக, அறிக்கைகள், சீனா பூச்சாண்டிகாட்டல், இஸ்லாமியர்களுக்கு எதிராக நாட்டில் தாக்குதல் நடத்தல், பின்னர் அதனைக்காட்டி இந்திய அரசை மகிழ்வூட்டி(மோடி அரசை) தனக்கு சாதமாக்கல், இப்படி எத்தனையோ வழிகளில்தன்னைக்காப்பாற்ற வெளியில் தெரியாமல் இரகசியமாக வேலைகள் நடந்து கொண்டு இருக்கு. டெல்லியில் தனக்கு செயலாற்ற ஒரு குழுவையே உருவாக்கி கோடிக்கணக்கில் பணத்தை இறைத்து காரியவெற்றியாக்கிறது. தமிழர்களுக்கு இன்னும் காலம் போகவில்லை.. பல இராஜ தந்திர நகர்வுகள் அலட்டிகொள்ளாமல் , எதிரிகளை மேலும் உருவாக்காமல், இந்திய மத்திய(டெல்லி) அரசிற்குள் செல்வாக்குகளை பயன்படுத்தி மனம் சலைக்காமல் ஊடுறுவ வேண்டும். இதற்கு மிக தேர்ந்து எடுக்கப்பட்ட அரசியல் அறிவுள்ள,ஆட்களை மடக்கும் மயக்கும் பேச்சாற்றல் உள்ளவர்கள் தேவை. எமக்கு எம்மினத்தின் எதிர்கால நலனும் சுய விளம்பரம் இல்லாத காதுடன் காதாக செயாற்றுவர்கள்தான் உடன் தேவை. முடியாது என்பது எதுவுமில்லை..முயற்சி இருந்தால்..

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ இந்த கொடுமையை நான் எங்கு போய்ச்சொல்ல? யூகேயின் EEZ (எழுத்துப்பிழைக்கு மன்னிக்கவும்zone ஐ area என்று சொல்லிவிட்டேன்) அத்திலாந்திக்குக்குள் 200 கடல் மைல் போனாலும், territorial waters (200-12) தவிர்ந்த் 182 மைலும் சர்வதேச கடற்பரப்பே.

கீழே உள்ளது விளக்கம்.

The difference between the territorial sea and the exclusive economic zone is that the first confers full sovereignty over the waters, whereas the second is merely a "sovereign right" which refers to the coastal state's rights below the surface of the sea. The surface waters, as can be seen in the map, are international waters.[2]

http://en.m.wikipedia.org/wiki/Exclusive_economic_zone

EEZ இல் ஆயில் போன்றவற்றை தோண்டும் உரிமை மட்டுமே உள்ளது. கப்பல்களை மறித்து எல்லாம் சண்டித்தனம் செய்ய முடியாது.

யுத்த கப்பல் தவிர்ந்த இலங்கையின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்காத வர்த்தக கப்பல் போக்குவரத்து, territorial waters க்கூடு நடப்பதை கூட இலங்கையால் தடுக்க முடியாது.

இதுதான் Law of the Sea Convention சொல்வது.

அண்ணோய் Exclusive Economic Zone  அதாவது பிரத்தியோக பொருளாதார மண்டலம்....!!   தமிழாக்கம் சரியோ அண்ணை...  அப்படி எண்டால் என்ன அண்ணை... 

 

full sovereignty - முழுமையான இறையான்மை  தமிழாக்கம் சரியோ...??? 

 

merely a "sovereign right"  தனித்தன்மை கொண்ட  இறையாண்மை உரிமை...    தமிழாக்கம் இதுக்கும் சரியோ...??   அப்படி எண்டால் என்ன... ??? 

 

முடியாட்டில் விடுங்கோ..  !!

 

யுத்த கப்பல் தவிர்ந்த இலங்கையின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்காத வர்த்தக கப்பல் போக்குவரத்து, territorial waters க்கூடு நடப்பதை கூட இலங்கையால் தடுக்க முடியாது.
இதுதான் Law of the Sea Convention சொல்வது.

 

அப்படி எண்டால் சர்வதேச கடலிலை போன கப்பல்களை தான் இலங்கை கடற்படை புலிகளின் கப்பல் எண்டு அடிச்சு தாட்டது  சர்வதேச சட்ட மீறல் எண்டுறீயள்...???? 

Edited by தயா

 

மிக முக்கியமாக  தயவு செய்து அரை குறை விளக்கத்தோட  வந்து எதையாவது குழப்பி அடிக்காமல்  ஆற அமர இருந்து நண்றாக படிச்சு போட்டு வந்து  எங்கட நேரத்தை வீணடியுங்கள்... 

 

 

இதுதான் நான் சொல்லும் சேது

:lol:  :lol:  :lol:  :D

 

 

அப்படி எண்டால் சர்வதேச கடலிலை போன கப்பல்களை தான் இலங்கை கடற்படை புலிகளின் கப்பல் எண்டு அடிச்சு தாட்டது  சர்வதேச சட்ட மீறல் எண்டுறீயள்...???? 

தயா அண்ணா இவர் அர்ச்சுன் அண்ணாவின் சீடன் ,அல்லது குருவாக இருக்கணும் என நினைக்கிறேன் .......................புலனாய்வு  :D  :D

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

பிரத்தியோக பொருளாதார மண்டலம் - தமிழாக்கம் சரி - விளக்கம்தான் பிழை. பிரத்தியோகமாக "பொருளாதர" நடவடிக்கை (என்னை எடுத்தல் போல) மட்டும் செய்யலாம். கப்பலை எல்லாம் தடுக்க முடியாது.

பூரண இறையாண்மை - தமிழாக்கம் சரி - விளக்கம்தான் பிழை. நிலத்தை போலல்லாது, கடலில் பூரண இறையாண்மை உள்ள பகுதியிலும் innocent passage aஐ தடுக்க முடியாது. இதை தன் Law of the Sea Convention சொல்லுது.

Merely sovereign right - தமிழாக்கமும் பிழை, விளக்கமும் பிழை. Merely என்றால்

adverb

just; only.

"Gary, a silent boy, merely nodded"

synonyms: only, purely, solely, simply, entirely, just, அதவது "மட்டும்" என்று அர்த்தம்.

sovereign right என்றால் இறையாண்மைக்கான உரிமை ( இறையாண்மை அல்ல, அதற்கான உரிமை மட்டுமே) என்று அர்த்தம்.

Surface என்றால் கடல்மேற்பரப்பு என்று அர்த்தம். ஆக மேலே நான் சொன்ன பந்தியின் அர்த்தம்.

EEZஇல், கடலின் மேற்ப்பரப்ப்பு சர்வதேச கடலாகவே கருதப்படும் (high seas, open seas). 200 கடல் மைல் அருகில் உள்ள கடலடித்தளத்தில், அண்மையாய் உள்ள நாட்டுக்கு, "பொருளாதார" செயல்களில் ஈடுபடுவதற்க்கு "மட்டுமான" இறையாண்மைக்கான உரிமை உள்ளது.

சர்வதேச கடலில் பயங்கரவாதிகளை தாக்க கூடாது என்று எந்த சர்வதேச சட்டமும் சொல்லவில்லை. ஆகவே நடுக்கடலில் இலங்கை புலிகளையோ அமெரிக்கா சோமாலிக் கடற்கொள்ளையர்களையோ தாக்குவது சட்ட மீறலில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தம்பட்டம் அடிப்பதற்க்காக சொல்லவில்லை. தமிழ் சூரியனும் தலயும் Law Of The Sea Convention பர்ரி நான் நுனிப்புல் மேய்வதாக கூறியதால் சொல்கிறேன்.

எனது Master of Laws கற்க்கையில் நான் தெரிவு செய்து thesis ற்க்கு ஆராய்ச்சி பொருளாக எடுத்துக்கொண்ட விடயம் Law of The Sea Convention. ஆக இதில் எனக்கு கொஞ்சம் அறிவு இருப்பதாகவே எனக்குப் படுகிறது.

இதற்கு மேலும் விளக்கம் உங்களுக்கும் தந்து என் பொன்னான சனிக்கிழமையை வீணடிக்க நான் விரும்பவில்லை.

நன்றி. வங்கம்.

இனிய சனிக்கிழமையாக அமையட்டும்  :D  :D

கடவுளே...    அண்ணோய் சும்மா மூக்கை சுத்தாமல் நேர விசயத்துக்கு வாங்கோ....!!  

 

கடற்கரைக்கு சொந்தமான நாட்டின் நேச நாடுகள் தவிர்ந்த எந்த நாட்டு கப்பல்களும் உந்த Exclusive Economic Zone   எனும் வலையத்துக்கு வருவதோ இல்லை  வந்து நங்கூரம் இட்டு நிற்பதோ , மீன் பிடிப்பதோ ஏதும் தடை ஏதும் இல்லை... !!!   எதிரி நாடுகள் உட்பட ...

 

கடலுக்கு அடியிலை இருக்கும் நிலமும் அதோடை அமைந்த வளமும் மட்டும் தான் உரிமை உடையது...??  வேறை ஒண்டும் இல்லை...    சுங்க தீர்வைகள், வரிகள் , Toll , எதையும் விதிக்கும் அதிகாரம் இல்லை...  ?? 

 

இதை தானே சொல்லவாறியள்... ??? 

 

விடுங்கோ எனக்கு வேறை வேலை இருக்கு... 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

EEZ க்குள்ளால வாற எதிரி நாட்டுக்கப்பலயும் தடுக்க முடியாது. கப்பலில் ஏறி சோதிக்க கூட முடியாது. நீங்க யூகே தானே தல? உங்கள் வீடு drive way தான் territorial waters. அதற்க்கு வெளியால உள்ள pavement தான் EEZ. ரோட்டுத்தான் பெருங்கடல்.

Pavement ல தேவைப்பட்டால் நீங்கள் குழிதோண்டி காஸ் இணைப்பு எடுக்கலாம். ஆனா pavement ல போறவையை நிப்பாட்டி கொஸ்டீன் எல்லாம் கேட்க முடியாது.

இனிய சனிக்கிழமையாஹட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.