Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை சிறையில் அடைபட்டுள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் விடுதலை செய்ய மகிந்த உத்தரவு-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 

இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி நல்லெண்ண நடவடிக்கையாக, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் விடுதலை செய்ய இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக சிறப்பு உத்தரவு ஒன்றை அவர் பிறப்பித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்திலும் இதை அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 93 மீனவர்கள் தற்போது இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் கடந்த மே மாதத்திலிருந்து இதுவரை 225 இந்திய மீனவர்களை இலங்கை அரசு விடுவித்துள்ளது. ஆனாலும் அடுத்தடுத்து கைதுகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. அதாவது ஏதாவது காரணத்தைச் சொல்லி நல்லெண்ணம் என்று கூறி விடுவிப்பதும், காரணமே இல்லாமல் கைது செய்வதும் தொடர்ந்து வருகிறது.

 

இந்த நிலையில் இந்திய சுதந்திர தினத்தையொட்டி அனைத்து மீனவர்களையும் விடுவிப்பதாக இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 93 மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு கடந்த மாதம் முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார். இப்படி அவர் கடிதம் எழுதியதையே கிண்டலடித்து அநாகரீகமாகச் சித்தரித்து இலங்கை பாதுகாப்பு அமைச்சக இணையதளம் கட்டுரை வரைந்திருந்தது.  

இந்த நிலையில் சற்று முறுகல் நிலையை அடைந்த இலங்கை இந்திய உறவில் சிறு மாற்றத்தை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் இந்த உடனடி உத்தரவை பிறப்பித்து இருப்பதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன. எனினும் 93 மீனவர்கள் தவிர அவர்களின் 62 படகுகளும் இலங்கை வசம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110530/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
அவர்கள் பிடிக்கச்சொல்லியிருப்பார்கள் இவர் பிடித்திருப்பார்.
 
அவர்கள் விடுதலை செய்யச்சொல்லியிருப்பார்கள் இவர் விடுதலை செய்கிறார்.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

அவர்கள் பிடிக்கச்சொல்லியிருப்பார்கள் இவர் பிடித்திருப்பார்.
 
அவர்கள் விடுதலை செய்யச்சொல்லியிருப்பார்கள் இவர் விடுதலை செய்கிறார்.

 

எல்லாம் அவன் செயல்  :D

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் அவன் செயல்  :D

 

அடிக்கிற  கை  தான் அணைக்கும்.......

 

ஒரு முது  மொழியுண்டு

பூனைக்கு  விளையாட்டு

எலிக்கு உயிர் போகுது என்று...

தமிழன் எலி  தற்பொழுது... :(  :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.