Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா கொலை வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டார் புலிகளின் கேணல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா கொலை வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டார் புலிகளின் கேணல்! 

[Friday 2014-08-22 18:00]
janaka-prrera-200-news.jpg

வடமத்திய மாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உட்பட 29 பேரை குண்டுத்தாக்குதலில் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கேணல் நிலையில் இருந்த உறுப்பினர், இன்று தனது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். இந்நிலையில், இவருக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 29ஆம் திகதி வழங்கப்படும் என்று வடமேல் மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி நுனந்த குமார ரத்நாயக்க கூறினார். புலிகள் இயக்கத்தில் கேணல் பதவிநிலை வகித்தவரும் செங்கலடியைச் சேர்ந்தவருமான சண்முகநாதன் சுதாகரன் என்பவரே குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி, குண்டுத் தாக்குதலை நடத்தி ஜானக பெரேரா உட்பட 29பேரை கொலை செய்தார் என்று இவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை, இன்று இடம்பெற்ற நிலையிலேயே அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.com/breifNews.php?newsID=115450&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கறிஞர்கள்.. குற்றம் செய்யாவிட்டாலும்... குற்றத்தை ஒப்புக்கொள்ளுங்கள்.. தண்டனையோடு குறித்த காலத்தின் பின் விடுதலை கிடைக்கும் என்ற ஆசை வார்த்தைக்கு.. பாவம் அரசியல் கைதிகள் இலக்காவதை இது அப்பட்டமாக இனங்காட்டுகிறது.

ஜே வி பி அரசியல் கைதிகளுக்கு சிங்கள அரசுகள் பொதுமன்னிப்பு அளித்தது போல.. தமிழ் அரசியல் கைதிகளுக்கு அளிக்க முன்வராதது.. அப்பட்டமான இனவாதம் ஆகும். அதனை உலகின் முன் நிறுத்துவதன் வாயிலாகவும்.. சர்வதேசத்தின்.. இறுதி வாக்குறுதியை நம்பி சரணடைந்து இன்று கைதிகளாக துன்பப்படும்.. தமிழ் இளைஞர்களை யுவதிகளை விடுவிக்க வேண்டிய பொறுப்பு சர்வதேச சமூகத்திற்கு இருந்தும் அது தட்டிக்கழிக்கப்படுகிறது.

ஆப்கான்.. ஆக்கிரமிப்புக்கு பின் அமெரிக்கா கியூபத் தீவென்றில் நிறுவிய ரகசிய சிறைச்சாலை கூட மூடப்பட்டு.. அநேக தலிபான்.. அல்குவைடா சந்தேக நபர்களைக் கூட விடுவிக்கும் நிலை உள்ளது. அங்கெல்லாம்.. அமெரிக்காவின் நடவடிகைகளை கண்டித்து.. மனித உரிமை அமைப்புக்கள் ஆற்றிய பணியை.. சிறீலங்காவில் ஆற்ற முடியாமல் இருப்பது கவலையளிக்கிற விடயமாக உள்ளது. :icon_idea:

இதை திட்டமிட்டவர் இறந்துவிட்டார். (காலம் கடந்து நடந்த ஒரு நிகழ்வில்) 
 
மிகுதி அனைவரும் மாட்டிவிட்டார்கள். தமிழர் வெளியில் வந்துவிட்டார். 2 சிங்களவர்கள்தான் 20 ஆண்டு தீர்ப்பாகி இப்போது சிறையில் இருக்கிறார்கள்.
 
இப்போ புதிதாக ஒரு கேணலை இதற்குள் ஏன் செருகுகிரார்கள் எனபது புரியவில்லை. 
 
மிகவும் புத்திச்சலிதனமான ஒரு திட்டமிடல்.
கிட்டதட்ட 007 படங்கள்போல் எல்லாவற்றையும் செய்து இருந்தார்கள். அப்பாவி சிங்களவர்கள் இருவர்தான் பவம் சிறையில் இருக்கிறார்கள். அவர்களது குடும்பம் மிகவும் கஷ்ட படுகிறார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.