Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் மலர்களே மலருங்கள்

அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்

காதல் தேவன் காவியம்

நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள்... சொல்லுங்கள்...

ஆயிரம் மலர்களே மலருங்கள்

வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்

வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்

மனதில் உள்ள கவிதை கோடு மாறுமோ

ராகங்கள் நூறு பாவங்கள் நூறு

என் பாட்டும் உன் பாட்டும் பொன் அல்லவோ

ஆயிரம் மலர்களே மலருங்கள்

கோடையில் மழைவரும் வசந்த காலம் மாறலாம்

எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ

காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்

நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ...........

வாத்தியார்

**********

  • Replies 6.9k
  • Views 542.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=O6IUv3sbAgM

..யாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே

தூங்கும் என் உயிரை தீண்டியது............. யாரோ .....

தூரத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம்

மேகங்கள் இல்லாமல் மலைச்சாரல் ஆரம்பம்

முதலும் முடிவும் என் வாழ்வில் நீ தானே .

  • கருத்துக்கள உறவுகள்

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு

சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு

மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு

மோகனமே உன்னைப் போல என்னை யாரும் மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை!!!!!!!!!!

பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்............

மூடி மூடி வைத்தாலும் விதைகளெல்லாம்

மண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி

ஓடி ஓடிப் போகாதே ஊமைப்பெண்ணே

நாம் உயிரோடு வாழ்வதற்குக் காதல் சாட்சி

http://www.hummaa.com/player/player.php

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

ஓடி ஓடி உழைக்கோணும்

ஊருக்கெல்லாம் கொடுக்கணும்

ஆடிப் பாடி திளைக்கனும்

அன்பை நாளும் விதைக்கணும்!

  • கருத்துக்கள உறவுகள்

http://www.raaga.com/player4/?id=231979,184101,205374,184007&mode=100&rand=0.7154494087140062

ஆடிப்பாடி வேலை செய்தால்

அலுப்பிருக்காது அதில்

ஆணும் பெண்ணும் சேரா விடால்

அழகு இருக்காது

  • கருத்துக்கள உறவுகள்

அழகு மலர் ஆட

அபிநயங்கள் கூட

அழகு மலர் ஆட

அபிநயங்கள் கூட

சிலம்பொலியும் புலம்புவது கேள்..

அழகு மலர் ஆட

அபிநயங்கள் கூட

அழகு மலர் ஆட

அபிநயங்கள் கூட

சிலம்பொலியும் புலம்புவது கேள்

விரல்கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை

குளிர்வாழை கொஞ்சாமல்கொதிக்கின்ற சோலை

அழகு மலர் ஆட

அபிநயங்கள் கூட

அழகு மலர் ஆட

அபிநயங்கள் கூட

சிலம்பொலியும் புலம்புவது கேள்

http://www.youtube.com/watch?v=UDgnrMt3pyY

  • கருத்துக்கள உறவுகள்

http://www.raaga.com/player4/?id=155030&mode=100&rand=0.8321896552438004

வீணை மீட்டும் கைகளே

மாலை சூட்டவா

மாலை சூட்டம் கைகளே

வீணை மீட்டவா .......

உலகமே புகழ்ந்தது

அது உண்மையல்லவா

  • கருத்துக்கள உறவுகள்

மாலை நேரத்து மயக்கம் - பூ

மாலை போல் உடல் மணக்கும்

இதழ் மேலே இதழ் மோதும் - அந்த

இன்பம் தேடுது எனக்கும்! (இது)

கால தேவனின் கலக்கம் - இதைக்

கானல் என்பது பழக்கம்

ஒரு ஆணும் ஒரு பெண்ணும் - பெறப்

போகும் துன்பத்தின் துவக்கம்!!

  • கருத்துக்கள உறவுகள்

காலமகள் கண் திறப்பாள் சின்னய்யா !

நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா !

நாலு பக்கம் வாசலுண்டு சின்னய்யா !- அதில்

நமக்கும் ஒரு வழி இல்லையா என்னய்யா

சின்னச் சின்னத் துன்பமெல்லாம் எண்ண எண்ண கூடுமடா

ஆவதெல்லாம் ஆகட்டும் அமைதி கொள்ளடா

ஒரு பொழுதில் இன்பம் வரும்

மறு பொழுதில் துன்பம் வரும்......

வாத்தியார்

***********

  • கருத்துக்கள உறவுகள்

http://www.raaga.com/channels/tamil/searchresults.asp?search=kan+&Lang=T&search_fld=TRACK

கண் போன போக்கிலே கால் போகலாமா

கால் போன போக்கிலே மனம் போகலாமா

மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா

மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்!

வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்!

வாழை போல தன்னைத் தந்து தியாகியாகலாம்!

உருகியோடும் மொழுகைபோல ஒளியை வீசலாம்!

(தெய்வம்)

  • கருத்துக்கள உறவுகள்

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு

இந்த ஊரென்ன

சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே

வாழ்வின் பொருளென்ன

நீ வந்த கதையென்ன

நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா

நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா

இல்லை என் பிள்ளை என்னை கேட்டுப் பிறந்தானா

தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி

கொன்றால் பாவம் தின்றால் போச்சு இது என் கட்சி

ஆதி வீடு அந்தம் காடு

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு

இந்த ஊரென்ன

சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே

வாழ்வின் பொருளென்ன

நீ வந்த கதையென்ன

வெறும் கோயில் இதிலென்ன அபிஷேகம்

உன் மனமெங்கும் தெருக்கூத்து பகல் வேஷம்

கள்ளிக்கென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி

காட்டுக்கேது தோட்டக்காரன் இது தான் என் கட்சி

கொண்டதென்ன கொடுப்பதென்ன

இதில் தாயென்ன

மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு

இந்த ஊரென்ன

சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே

வாழ்வின் பொருளென்ன

நீ வந்த கதையென்ன

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்

அது தெரியாமல் போனாலே வேதாந்தம்

மண்ணைத் தோண்டி கண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி

என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இது தான் என் கட்சி

உண்மை என்ன பொய்மை என்ன

இதில் தேன் என்ன

கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு

இந்த ஊரென்ன

சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே

வாழ்வின் பொருளென்ன

நீ வந்த கதையென்ன

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு…………….

வாத்தியார்

***********

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைக்கு தந்தை ஒருவன்

நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் .

நீ ஒருவனை நம்பி வந்தாயோ இல்லை

இறைவனை நம்பி வந்தாயோ .....

தாயாரை தந்தை மறந்தாலும்

தந்தை தானேன்று சொல்லாத போதும்

ஏனென்று கேளாமல் வருவார் .

.நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்.

  • கருத்துக்கள உறவுகள்

இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட

அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையைச்செய்தன தான் விளையாட

உன் வாய் மொழி முல்லை இனி தாய் மொழி இல்லை

வெய்யில் என்ன மின்னல் என்ன வெண்மை என்ன மஞ்சள் என்ன

காணாத கண்கள் ரெண்டில் எல்லாமே ஒன்றுதான்

தென்றல் காற்றும் ஊமைக்காற்று தேவன் பாட்டும் ஊமைப்பாட்டு

அவன் தானே நம்மைச்செய்தான் துன்பங்கள் இல்லயே

உன் வாய் மொழி முல்லை இனி தாய் மொழி இல்லை ( இறைவன்)

உங்களுக்காக நானே சொல்வேன் உங்களுக்காக நானே கேட்பேன்

தெய்வங்கள் கல்லாய்ப்போனால் பூசாரி இல்லையா

தந்தை பேச்சு தாய்க்குப் புரியும் தாத்தா நெஞ்சில் உலகம் புரியும்

உள்ளத்தில் நல்லோர் எல்லாம் உயர்ந்தவர் இல்லையா

உன் வாய் மொழி முல்லை இனி தாய் மொழி இல்லை ( இறைவன்)

மலரும் போதெ வாசம் தெரியுது வளரும் போதே பாசம் புரியுது

தாய் தந்தை செய்த பூஜை வீணாகவில்லையே

கந்தன் அன்று மந்திரம் சொன்னான் கண்ணன் அன்று கீதையில் சொன்னான்

மகன் சொன்ன பாடம் கேட்டேன் மறைந்தது தொல்லையே

உன் வாய் மொழி முல்லை இனி தாய் மொழி இல்லை ( இறைவன்)

http://freecomicbooks.org//mytamilmp3.com/jesudas1/IRAIVAN_IRRANDU.mp3

  • கருத்துக்கள உறவுகள்

பூஜைக்கு வந்த மலரே வா

பூமிக்கு வந்த நிலவே வா

பொன்னென்று எண்ணி

பேசாமல் வந்த

பொன் வண்ண மேனி

சிலையே வா ..

. மலர் கொள்ள வந்த தலைவா வா

மணம் கொள்ள வந்த இறைவா வா

  • கருத்துக்கள உறவுகள்

இறைவா! இறைவா! இறைவா! - உந்தன்

ராஜசபை இங்கு வாராதோ - உந்தன்

கருணை மொழி இங்கு கேளாதோ - எங்கள்

நாயகனே இங்கு வாராயோ!

அடிமைக் குரலைக் கொஞ்சம் கேளாயோ...

எங்கள் அறிவெனச் சொல்வது நீயல்லவோ - இங்கு

அசைவன யாவையும் நீயல்லவோ

எங்கள் திருச் சபை மாணிக்கம் நீயல்லவோ

அன்புத் தேவனின் தூதுவன் நீயல்லவோ

அடிமைக் குரலைக் கொஞ்சம் கேளாயோ....

இங்கு - எமக்கென ஏதொன்றும் இல்லை இல்லை

எங்கள் இதயத்தில் சலனங்கள் இல்லை இல்லை

உந்தன் சோலையில் நாங்கள் மலர்கலையா

உன் தூது கொண்டாடும் அலைகலையா !

அடிமைக் குரலைக் கொஞ்சம் கேளாயோ... இறைவா!

  • கருத்துக்கள உறவுகள்

தூது செல்ல ஒரு

தோழி இல்லையென

துயர் கொண்டாயோ தலைவா

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கல் ஒரு கண்ணாடி

உடையாமல் மோதி கொண்டால் காதல்

ஒரு சொல் சில மௌனங்கள்

பேசாமல் பேசி கொண்டால் காதல்

கண்கள் இரண்டில் காதல் வந்தால் ஓ

கண்ணீர் மட்டும் துணை ஆகுமே

திமிருக்கு மறு பெயர் நீதானே

தினம் தினம் உன்னால் இறந்தேனே

மறந்திட மட்டும் மறந்தேனே

தீ என புரிந்தும் அடி நானே

திரும்பவும் உனை தொட வந்தேனே

தெரிந்தே சுகமாய் எரிந்தேனே

கடும் விஷத்தினை எடுத்து குடித்தாலும்

அடி கொஞ்சம் நேரம் கழித்தே உயிர் போகும்

இந்த காதலிலே உடனே உயிர் போகும்

காதல் என்றால் பெண்ணே சித்ரவதை தானே

உன் முகம் பார்த்தே நான் எழுவேன்

உன் குரல் கேட்டால் நான் அறிவேன்

உன் நிழல் உடனே நான் வருவேன்

புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன்

புறக்கணித்தால் நான் என்னாவேன்

பெண்ணே எங்கே நான் போவேன்

உன் உதடுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை

அதை சொல்லி விட்டால் தொடங்கும் என் வாழ்க்கை

உன் மௌனத்தில் இருக்கும் என்ன வலிகள்

காதல் என்றால் மெல்ல சாதல் என்று சொல்ல

http://audio.youngtamil.com/download.php?f=Tamilmp3world.Com - Oru Kal(Adnan).mp3

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

தீ...... யே ...உனக்கு தீராத பசியோ

திண்ட உடல் எத்தனயோ

கணக்கிடவில்லை யோ .

..

ஆளுக்கொரு தேதி வைச்சு

ஆண்டவன் அழைப்பான்

ஆண்டவன் அழைப்பான்

அதில் யார் அழுதால்

அவனுக்கென்ன

காரியம் முடிப்பான்

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டவன் உலகத்தின் முதலாளி

அவனுக்கு நானொரு தொழிலாளி

அன்னை உலகின் மடியின் மேலே

அனைவரும் எனது கூட்டாளி

ஆண்டவன் உலகத்தின் முதலாளி

அவனுக்கு நானொரு தொழிலாளி

அன்னை உலகின் மடியின் மேலே

அனைவரும் எனது கூட்டாளி

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும்

இலக்கணம் படித்தவன் தொழிலாளி

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும்

இலக்கணம் படித்தவன் தொழிலாளி

உருக்கு போன்ற தன் கரத்தை நம்பி

ஓங்கி நிற்பவன் தொழிலாளி

ஆண்டவன் உலகத்தின் முதலாளி

அவனுக்கு நானொரு தொழிலாளி

அன்னை உலகின் மடியின் மேலே

அனைவரும் எனது கூட்டாளி

கல்லைக் கனியாக மாற்றும் தொழிலாளி

கவனம் ஒரு நாள் திரும்பும்

கல்லைக் கனியாக மாற்றும் தொழிலாளி

கவனம் ஒரு நாள் திரும்பும் அதில்

நல்லவர் வாழும் புதிய சமுதாயம்

நிச்சயம் ஒரு நாள் அரும்பும்

வாழ்க்கை என்றொரு பயணத்திலே பலர்

வருவார் போவார் பூமியிலே

வாழ்க்கை என்றொரு பயணத்திலே பலர்

வருவார் போவார் பூமியிலே

வானத்து நிலவாய் சிலரிருப்பார் அந்த

வரிசையில் முதல்வன் தொழிலாளி

ஆண்டவன் உலகத்தின் முதலாளி

அவனுக்கு நானொரு தொழிலாளி

அன்னை உலகின் மடியின் மேலே

அனைவரும் எனது கூட்டாளி

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கணம் மாறுதோ

இலக்கியம் ஆனதோ

இதுவரை நடித்தது

அது என்ன வேடம்

இது பாடம்

இதுவரை நடித்தது

அது என்ன வேடம்

இது பாடம்

இலக்கணம் மாறுதோ...........

கல்லான முல்லை

இன்றென்ன வாசம்

காற்றான ராகம்

ஏன் இந்த கானம்

வெண் மேகம் அன்று

கார்மேகம் இன்று

யார் சொல்லித்தந்தார்

மழைக்காலம் என்று

மன்மதன்என்பவன் கண் திறந்தானோ

பெண்மை தந்தானோ

இலக்கணம் மாறுதோ............

  • கருத்துக்கள உறவுகள்

முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே

உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே!

வெள்ளியலை மேலே துள்ளும் கயல் போலே

அல்லிவிழி தாவக் கண்டேன் என்மேலே!

  • கருத்துக்கள உறவுகள்

வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து

வாடாமல் இருக்கும் பூ என்ன பூ!

அன்புக் கணவன் முன்னாலே மனைவி

அழகாக சிந்தும் புன்சிரிப்பு!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“மலர்ந்தும் மலராத பாதி மலர்போல

வளரும் விழி வண்ணமே – வந்து

விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக

விளைந்த கலை அன்னமே!

நதியில் விளையாடி கொடியில் தலைசீவி

நடந்த இளந்தென்றலே – வளர்

பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு

பொலிந்த தமிழ் மன்றமே!’

  • கருத்துக்கள உறவுகள்

தமிழே அமுதே அழகிய மொழியே எனதுயிரே ....

Edited by நிலாமதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.