Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.மாவட்டத்தில் : திராட்சைப் பழ உற்பத்தியில் பாதிப்பு

Featured Replies

55(75).jpg-யோ.வித்தியா

யாழ்.மாவட்டத்தில் இவ்வருடம் (2014) நிலவிய அதிகவெப்பம் மற்றும் பனிப்பூச்சியின் தாக்கத்தால், திராட்சைப்பழ உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வடமாகாணப் பிரதி விவசாயப் பணிப்பாளர் கிருஸ்ணன் ஸ்ரீபாலசுந்தரம் வியாழக்கிழமை (28) தெரிவித்தார்.

கடந்த வருடங்களைவிட (100 ஏக்கர்) இவ்வருடம் அதிக நிலப்பரப்பில் (120 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில்) திராட்சைப் கொடிகள் செய்கை பண்ணப்பட்டது. 

இதன்மூலம் அதிக விளைச்சலைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. 

எனினும், அதிக வெப்பத்தால் கொடிகள் அதிகம் பூக்கவில்லையென்பதோடு, பனிப்பூச்சிகளின் தாக்கமும் அதிகமாக காணப்பட்டதால் இம்முறை விளைச்சல் குறைவாகவேயுள்ளது.

வழமையாக திராட்சைச் செய்கையில், ஒருகொடியில் இருந்து 20 கிலோகிராம் விளைச்சலைப் பெறமுடியும். ஆனால் இம்முறை ஒரு கொடியில் இருந்து 12 கிலோகிராம் விளைச்சலையே பெறமுடிகின்றது.

யாழ்.மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2013) 26 ஆயிரத்து 190 மொற்றிக்தொன் திராட்சை பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/124278-2014-08-28-04-09-57.html

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் திராட்சைகள் தரமான உயர்தர வைன் உற்பத்திக்குச் சிறந்தவை.

 

எமது வலி வடக்குப் பிரதேசமும்.. திராட்சை உற்பத்தியில் பயன்படுத்தப்பட்டு.. தரமான வைன் உற்பத்தி சாலைகள் நிறுவப்பட்டால்.. நிறைய அந்நியச் செலவாணியையும்.. பொருண்மிய மேம்பாட்டையும் எமது மக்கள் அடைய முடியும்.

 

ஆனால்.. நம்மிடம் தான் அதிகாரமோ.. நீண்ட நோக்குள்ள திட்டங்களை கொண்டு நடத்தும்.. நேர்மையான அரசியலோ முயற்சிகளோ.. இல்லையே..!!!!  எல்லாம் சிங்களவனும் இந்தியனும்.. தீர்மானிக்க வேண்டி இருக்குது..??!

 

மேலும்.. நவீன.. உயிரியல்தொழில்நுட்ப அறிவினைப் பயன்படுத்தி.. வைன் தயாரிப்புக்கான திராட்சைகளின் உற்பத்தியை பெருக்கவும் முடியும்.


குறிப்பாக அதிக வெப்பத்தை.. மற்றும் பூச்சிப் பீடைகளை வென்று வளரக் கூடிய திராட்சைகளை எமது மண்ணின் வளத்திற்கு ஏற்ப நவீன உயிரியல் தொழில்நுட்பம் கொண்டு உருவாக்க முடியும். இதற்கான ஆய்வுகளை வெளிநாட்டிலோ.. அல்லது யாழ் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞான அல்லது விவசாய பீடங்களில் செய்யலாம். :icon_idea:


grapes-and-wine2.jpg

  • கருத்துக்கள உறவுகள்

என்ன வளம் இல்லை எங்கள் மண்ணில். அந்த மண்ணை பாதுகாக்கத் தெரியாமல்.. ஆளத் தெரியாமல்.. சரியாகப் பயன்படுத்தத் தெரியாமல்.. எமக்கு நாமே அறிவாளிகள் என்று சொல்லி கொலரை இழுத்துவிட்டுக் கொண்டு நாடு நாடாகத் திரிவது தான் கேவலமாக உள்ளது. :icon_idea::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் திராட்சைகள் தரமான உயர்தர வைன் உற்பத்திக்குச் சிறந்தவை.

 

MELUNCHIMUNAI1-300x224.jpg250px-Toddy_fresh%26bubbling.jpg

 

நெடுக்ஸ்.... நாம் வைன் உற்பத்தியை, ஊக்குவித்தால்,

கள்ளு உற்பத்தி பாதிக்கப்பட்டு விடுமே...... :o

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

MELUNCHIMUNAI1-300x224.jpg250px-Toddy_fresh%26bubbling.jpg

 

நெடுக்ஸ்.... நாம் வைன் உற்பத்தியை, ஊக்குவித்தால்,

கள்ளு உற்பத்தி பாதிக்கப்பட்டு விடுமே...... :o

 

இரண்டும் வெவ்வேறானவை.

 

நிச்சயம் பாதிக்கப்படாது.

 

பார்லியில் உருவாகும்.. பியர் இருக்கு என்பதற்காக.. திராட்சையில் உருவாகும் வைனை யாரும் குடிக்காமல் விடுவதில்லை.

 

கள்ளு.. என்பது.. இன்னும் விசேடமானது. அதனை பதனீராக்கி வெல்லமும் ஆக்கலாம். நல்ல உயர்தர செயற்கை இரசாயனங்கள் அற்ற மதுபானமும் ஆக்கலாம். வெறும் கள்ளாவே வைத்திருந்தால்.. ஏற்றுமதி தரத்தைப் பேண முடியாது.

 

இதற்கு நவீன.. வடிகட்டல் முறை அவசியம். உயர்தர மதுபானமாக்க வேண்டின்.. புதிய வடிகட்டல் முறைகளை அமுலாக்க வேண்டும். அதற்கு சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டு.. பொறியியலாளர்களின் உதவியுடன் உபகரணங்களை தேவைக்கு ஏற்ப வடிவமைக்கவும் வேண்டும். பாரம்பரிய வழியில் மட்டும் இவற்றை பாவித்து வளத்தை வீணடிக்கக் கூடாது.

 

எமது பனை வளம்.. பெருக்கப்பட்டு.. நல்ல முறையில் பயன்படுத்தப்பட்டால்.. நிச்சயம் அதன் மூலமும் உலக தரத்திற்கு புதிய வகை மதுபானத்தை சந்தைப்படுத்த வாய்ப்பு ஏற்படும்.

 

வடக்கு மாகாண விவசாய அமைச்சு இதுபோன்ற விடயங்களில் கவனம் செலுத்தினால் வரவேற்கக் கூடியதாக இருப்பதோடு.. யாரோ வெளிநாட்டானுக்கு மாய்ந்து மாய்ந்து ஆராய்ச்சி செய்து முறியும்.. எம்மிடமுள்ள (புலம்பெயர் மாணவ சமூகத்திடம்) உயிரியல் தொழில்நுட்ப அறிவையும் ஆற்றலையும் பகிர்ந்து கொள்ளக் கூடியதாகவும் இருக்கும்..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

MELUNCHIMUNAI1-300x224.jpg250px-Toddy_fresh%26bubbling.jpg

 

நெடுக்ஸ்.... நாம் வைன் உற்பத்தியை, ஊக்குவித்தால்,

கள்ளு உற்பத்தி பாதிக்கப்பட்டு விடுமே...... :o

 

 

புலிகளின் காலத்தில்

மன்னார் -  வவுனியா வீதி ஓரமாக

ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் திராட்சைப்பழச்செய்கை செய்யப்பட்டுவந்தது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.