Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாதனை சிகரம் கமலை நினைத்து பெருமை கொள்வோம்!

Featured Replies

- நான்கு முறை தேசிய விருதும், மூன்று முறை சர்வதேச விருதும் பெற்ற ஒரே இந்திய நடிகர். களத்தூர் கண்ணம்மா, மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் படங்களுக்காக தேசிய விருது பெற்றார்.- விருமாண்டி, சுவாதி முத்யம், சாகர சங்கமம் படங்களுக்கு சவுத் ஏசியன் இண்டர்நேஷனல் விருதுகள் சிறந்த படத்திற்கான விருதுகள் தரப்பட்டது.

- இதுவரை இந்திய நடிகர்களிலேயே இவர் நடித்த படங்கள் தான் அதிக முறை (7 முறை) ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது.- இந்திய சினிமா வரலாற்றிலேயே 18 முறை பிலிம்பேர் விருது பெற்ற ஒரே நடிகர். திலீப் குமாரே 14 பிலிம்பேர் விருதுகள் தான் வாங்கியிருக்கிறார்.

- இதுவரை உலகிலேயே அதிக விருதுகள் (171 விருதுகள்) பெற்ற ஒரே நடிகர் டாக்டர் கமல்ஹாசன் மட்டுமே.

- டாக்டர் கமல்ஹாசன் இந்தியாவில் குடிமகன்களுக்கு வழங்கப்படும் விருதுகளிலேயே 4வது சிறந்த விருதான பத்மஸ்ரீ பெற்றிருக்கிறார்.

- சமீபத்தில் கமல்ஹாசனுக்கு அவர் செய்யும் கலைசேவைகளுக்காக சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தால் "டாக்டர்" பட்டம் கையளிக்கப் பட்டது.

- டாக்டர் கமல்ஹாசனின் சொந்தப் பட நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் இதுவரை 450 மில்லியன் சம்பாதித்திருக்கிறது.

- டாக்டர் கமல்ஹாசனின் கனவுப்படைப்பான மருதநாயகம் இங்கிலாந்து மகாரானி எலிஸபெத்-2 அவர்களால் துவக்கப்பட்டது.

- உலகிலேயே ரசிகர் மன்றங்களை மக்களுக்கு சேவை செய்யும் நற்பணி மன்றங்களாக மாற்றிய முதல் நடிகர் டாக்டர் கமல்ஹாசன்.

- டாக்டர் கமல்ஹாசன் மற்றும் அவரது நற்பணி இயக்கத்தினர் இதுவரை 10000 ஜோடி கண்களை தானம் செய்திருக்கிறார்கள். 10000 கிலோ அரிசியை மக்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.

- 100 கோடி ரூபாய் தருகிறோம் என ஒரு அரசியல் கட்சி அழைத்தும் அதை துச்சமாக மதித்தவர் டாக்டர் கமல்ஹாசன்.

- இரண்டுமுறை ஆந்திர அரசின் மாநில விருதைப் பெற்றவர் டாக்டர் கமல்ஹாசன்.

- 8 முறை தமிழக அரசின் மாநில விருதைப் பெற்று மாபெரும் சாதனை புரிந்தவர் டாக்டர் கமல்ஹாசன்.

- டாக்டர் கமல்ஹாசனுக்கு தமிழக அரசு கலைமாமணி பட்டமும் வழங்கி கவுரவித்திருக்கிறது.

- டாக்டர் கமல்ஹாசனுக்கு மற்ற கலையுலக வித்தகர்களால் வழங்கப்பட்ட பட்டங்கள் "காதல் இளவரசன்" - ஜெமினி கணேசன், "புரட்சி மன்னன்" - கே. பாலச்சந்தர், "சூப்பர் ஆக்டர்" - பஞ்சு அருணாசலம், "கலைஞானி" - டாக்டர் கலைஞர், "உலக நாயகன்" - கே.எஸ். ரவிக்குமார்.

- The Fuel Instrument Engineers (FIE) Foundation, (Ichalkaranji, Maharashtra ) எனும் அமைப்பு நம் காலத்தில் வாழும் சிறந்த இந்தியர் எனும் விருதை டாக்டர் கமல்ஹாசனுக்கு வழங்கி இருக்கிறது. இதுவரை இந்த விருதைப் பெற்றவர்கள் 5 பேர் மட்டுமே (டாடா உட்பட)

- சென்னை ரோட்டரி சங்கமும் டாக்டர் கமல்ஹாசனுக்கு "சிறந்த மனிதர்" விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

- டாக்டர் ஏ.டி. கோவூர் தேசிய விருது சிறந்த மனிதாபிமானம் மற்றும் சமூகசேவைகளுக்காக டாக்டர் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை வழங்கியவர்கள் Bharatheeya Yukthivadi Sangham (Rationalist Association of India ).

- மதுரையில் திரைப்படத் துவக்க விழா செய்த ஒரே நடிகர் டாக்டர் கமல்ஹாசன் மட்டுமே. விருமாண்டிப் படத்துக்கான துவக்க விழா மதுரையில் நடைபெற்றது.

- டாக்டர் கமல்ஹாசனுடன் இன்டெல் நிறுவனம் இணைந்து இந்தியாவில் டிஜிட்டல் எண்டெர்டெயிண்ட்மெண்டை அறிமுகப்படுத்த பணியாற்றி வருகிறது. அந்த நிறுவனம் இந்தியாவில் டாக்டர் கமல்ஹாசன் ஒருவருடன் மட்டுமே இதுபோல ஒரு பார்ட்னர்ஷிப் வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- ஒரே ஆண்டில் 5 சில்வர்ஜூப்ளி திரைப்படங்களை அளித்தவர் டாக்டர் கமல்ஹாசன் மட்டுமே. எந்த ஒரு நடிகராலும் இந்த சாதனையைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. அந்தப் படங்கள் : 1982 - ஜன. 26 - வாழ்வே மாயம் (200 நாள்), பிப். 19 - மூன்றாம் பிறை (329 நாள்), மே 15 - சனம் தேரி கஸம் (175 நாள்), ஆக. 14 - சகலகலா வல்லவன் (175 நாள்), அக். 29 - ஹே தோ கமல் ஹோகயா (175 நாள்)

- டாக்டர் கமல்ஹாசன் நடித்த மரோசரித்திரா பெங்களூரின் கவிதா தியேட்டரில் 1000 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இதே படம் சென்னை சபையர் திரையரங்கில் 600 நாள் ஓடியது.

- மரோசரித்திரா இந்தியில் "ஏக் துஜே கலியே" என்ற பெயரில் எடுக்கப்பட்டு அங்கும் 350 நாள் ஓடியது.

- அகில இந்திய ரசிகர் மன்ற மாநாட்டினை இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு நடிகர் நடத்தியது என்றால் அந்தப் பெருமை டாக்டர் கமல்ஹாசனையே சாரும். இவர் 1985ல் கோவையில் இந்த மாநாட்டினை நடத்தினார்.

- இவரது நூறாவது படமான ராஜபார்வையில் நடிக்கும்போது இவரது வயது 27.

- டைம்ஸ் பத்திரிகை இவர் நடித்த நாயகன் திரைப்படத்தை உலகின் சிறந்த 100 படங்களுக்குள் வகைப்படுத்தியிருக்கிறது.

- உடல்தானம் செய்த ஒரே நடிகர் டாக்டர் கமல்ஹாசன் தான். சென்னை மருத்துவக்கல்லூரியில் ஆகஸ்டு 15, 2002 அன்று இதைச் செய்தார்.

- இந்தியத் திரைப்படங்களிலேயே முதன்முறையாக அனிமேஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது டாக்டர் கமல்ஹாசனின் 100வது படமான ராஜபார்வையில் தான்.

- தமிழில் மார்பிங் தொழில்நுட்பம் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது டாக்டர் கமல்ஹாசன் நடித்த மைக்கேல் மதன காமராஜனில் தான்.

- ஹாலிவுட்டில் இருந்து மேக்கப் மேன் வரவழைத்து மேக்கப் போடப்பட்ட முதல் இந்தியப்படம் "இந்தியன்"

- கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் முதன்முதலாக ஒரு இந்தியத் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது என்றால் அது டாக்டர் கமல்ஹாசன் நடித்த மங்கம்மா சபதம் திரைப்படத்தில் தான்.

- ஹாலிவுட் படமொன்றில் மேக்கப் அசிஸ்டண்டாகப் பணிபுரிந்து அந்தப் படத்தின் டைட்டிலிலும் டாக்டர் கமல்ஹாசனின் பெயர் வந்திருக்கிறது.

- சென்னையில் முதன்முதலாக ஆயிரம் காட்சிகள் தொடர்ந்து அரங்குநிறைந்து ஓடிய படம் சகலகலா வல்லவன்.

- கொடைக்கானலில் இருக்கும் ஒரு குகையை கண்டுபிடித்து அதில் குணா படத்தின் படப்பிடிப்பை நடத்தியதால் அந்த குகைக்கே "குணா குகை" என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

- டாக்டர் கமல்ஹாசனுக்கு இதுவரை 34 முறை படப்பிடிப்புகளில் எலும்புமுறிவு ஏற்பட்டிருக்கிறது. டூப் போட்டு கும்மி அடிக்கும் மற்ற நடிகர்களில் வித்தியாசமானவர் நம் தலைவர்.

- தமிழ் திரையுலக சகாப்தங்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி மூன்று பேருடனும் நடித்தவர் டாக்டர் கமல்ஹாசன்.

- உலகிலேயே முதன்முறையாக 10 மாறுபட்ட வேடங்களில் தசாவதாரத்தில் நடித்து வருகிறார்.

......... டாக்டர் கமல்ஹாசனின் சாதனைகள் தொடரும்.

(http://madippakkam.blogspot.com)

உண்மையை சொன்னால் எனக்கு கமலை எப்போதும் பிடிச்சதில்லை.... அதுக்காக ரஜனி ரசிகனா எண்டாதேங்கோ... ரஜனியின் நகைச்சுவை கலந்து வந்த எல்லாப்படங்களும் பிடிக்கும்....! விஜயக்காந்தின் பாட்டுக்கு ஒரு தலைவன் படத்தில் இருந்து அவரின் நகைச்சுவை நடிப்பை ரசிசேன்...! அதேபோலத்தான் பாக்கியராஜ், பாண்டியராஜன், படங்களும் பிடிக்கும்(எல்லா படங்களும் இல்லை)... ஆனாக் கமலின் நகைச்சுவை ஏதோ ஒடாத்து போல ஒரு உணர்வு வரும்... தவிர்க்க முடியவில்லை...

எண்றால்லும் மற்றவர்களுக்கு பிடித்த கலைஞராய் இருக்கும் இருக்கும் கமலுக்கு வாழ்த்துக்கள்...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொன்னுக்கு கவிபாடத்தான் கவிஞ்ஞர்கள் ஆயிரம்

யார்தான் கஞ்சிக்கு கவிபாடும் கவிஞ்ஞர்கள்

அவர்தாம் வேண்டும் எம்மண்ணின் துயர்துடைக்க

பொன்னுக்கு கவிபாடத்தான் கவிஞ்ஞர்கள் ஆயிரம்

யார்தான் கஞ்சிக்கு கவிபாடும் கவிஞ்ஞர்கள்

அவர்தாம் வேண்டும் எம்மண்ணின் துயர்துடைக்க

ஆயிரத்தி ஒரு வார்த்தை சொன்னீங்கள் அண்ணா

:idea: :idea: :idea:

  • தொடங்கியவர்

சில பேர் தங்களை எப்பவும் மற்றவர்கள் புத்திசாலிகளாக நினைக்க வேண்டும் என்று காட்டும் பகட்டு இருக்கிறதே... யப்பா தாங்க முடியலை....

இவர்களை நினைத்தால் சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை......

புத்திசாலியாக கவி பாடியிருந்தால் கவி கேட்டதும் கலசத்தில் பொற்காசுகள் பரிசாக கிடைத்திருக்கும்.

ஆனால் கஞ்சிதான் கிடைக்குதென்றால் பாடிய கவி பிச்சை கேட்பதாக யாரோ இரக்கப்பட்டு ஊத்தியதாகவிருக்கும். :P :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில பேர் தங்களை எப்பவும் மற்றவர்கள் புத்திசாலிகளாக நினைக்க வேண்டும் என்று காட்டும் பகட்டு இருக்கிறதே... யப்பா தாங்க முடியலை....

இவர்களை நினைத்தால் சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை......

என்ன லக்கி உங்களை நீங்களே மனசுக்க திட்டுற மாதிரி இருக்கு :lol::lol: :oops:

சில பேர் தங்களை எப்பவும் மற்றவர்கள் புத்திசாலிகளாக நினைக்க வேண்டும் என்று காட்டும் பகட்டு இருக்கிறதே... யப்பா தாங்க முடியலை....

இவர்களை நினைத்தால் சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை......

அதில என்ன தப்பு இருக்கு து முடிந்தா நீங்களும் காட்டுறது தானே

:idea: :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்திசாலியாக கவி பாடியிருந்தால் கவி கேட்டதும் கலசத்தில் பொற்காசுகள் பரிசாக கிடைத்திருக்கும்.

ஆனால் கஞ்சிதான் கிடைக்குதென்றால் பாடிய கவி பிச்சை கேட்பதாக யாரோ இரக்கப்பட்டு ஊத்தியதாகவிருக்கும்.

:P :lol:

எச்சிலிலைத் தேசியவாதமே

என்ன அபாரமான சிந்தனை இதுதான் உம் அபாரமான புரிதலறிவுக்கு கட்டியம் கூறுகின்ற உரைக்கல்லோ?

புத்திசாலியாக பாடி அது சலிக்காமல் போக சொல்லி பொற்காசு கொடுத்திருக்கலாம் ஆனால் கஞ்சி பாடி களைத்து விட்டான் என்றும் கொடுத்திருப்பார்கள்

:evil:

பொற்காசுகள் கிடைத்திருந்தால் மேலும் மேலும் ஊக்குவிப்பதாகவே இருக்கும். அதனால் கவிக்கு இன்னும் பாடி நிறையப் பெற வேண்டும் என்ற ஆசையே மேலெழும்.

ஆனால் கஞ்சி கிடைத்திருந்தால் அது கவியை ஊக்கப்படுத்தாது. அதனால் கவி சலிப்படைந்து அந்த இடத்தைவிட்டு போகவே விரும்புவார்.

அண்ணா ஒரு மனிதனை பாராட்டுவது பொற்காசு இல்லை சபையின் கைதட்டலும் இல்லாதவன் கூட கஞ்சிகொடுத்து வாழ்த்தினா அவன் தான் சிறந்த புலவன் என்பது எனது கருத்து

இல்லாதவனுக்கு இருப்பவன் கொடுப்பது சிறப்பானது தான். ஆனால் இங்கு ஒரு கவிக்கு எது கிடைக்கின்றது என்பதை வைத்துத் தான் அவரது கவிதையின் சிறப்பு பார்க்கப் படுகின்றது. அதனைத்தான் நான் குறிப்பிட்டேன்.

மற்றும்படி உங்கள் சிந்தனையில் தப்பில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கமலுக்கு வாழ்த்துக்கள்........!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் முன்பு விரும்பிப் பார்த்த படங்கள் கமல்காசனின் படங்கள். ஆயினும் தற்போதைய படங்களில் முன்பு இருந்த கமலைக் காணமுடிவதில்லை. வாழ்த்துக்கள் கமலிற்கு...

  • கருத்துக்கள உறவுகள்

வயதும் போய்ட்டு தொந்தியும் போட்டாயிற்று அதுதானே பிறேம் சார்

  • கருத்துக்கள உறவுகள்

அன்றும், இன்றும், என்றும் பிடித்த தமிழ் நடிகர் - கமல்ஹாசன்..

மேலும் தரமான படைப்புக்களைத் தந்து தமிழ்த் திரையுலகத்திற்கு சேவை செய்ய வாழ்த்துக்கள்..

சிவாஜிக்குப் பின் தமிழ்த் திரைப்பட இரசிகர்களிடையே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய ஒரு கலைஞர். ஏனோ நாயகன் திரைப்படத்தின் பின் இன்னும் ஒரு பெயர் சொல்லும் திரைப்படம் அமையவில்லை. தமிழ்த் திரைப்பட வரலாற்றில் சிவாஜி போல் கமலின் பெயரும் இடம்பெறும் என்பதில் ஐயமில்லை.

கமலுக்கு என் வாழ்த்துக்கள்.

¸Áø º¢Èó¾ ¿Ê¸÷ ±ýÀ¾¢ø ºó§¾¸§Á¢ø¨Ä

¿¡Â¸ý, ÌÕ¾¢ôÒÉø,Á¸¡¿¾¢ §À¡ýÈ À¼í¸û «Åâý ¾¢È¨ÁìÌ ¿øÄ ±ÎòÐ측ðÎ. ¬É¡ø ÓØ¿£Ç ¿¨¸îͨŠÀ¼í¸¨Ç ¾Å¢÷ò¾¢Õì¸Ä¡õ.

  • கருத்துக்கள உறவுகள்

Á¸¡¿¾¢ படம் பார்த்து அழுது விட்டன். மனம் ஜிரணிக்க முடியாமல் இருந்த்து.

Á¸¡¿¾¢ படம் பார்த்து அழுது விட்டன். மனம் ஜிரணிக்க முடியாமல் இருந்த்து.

சீ ஆ

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

சீ ஆ

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

சின்னா அழுறது என்னால் ஜிரணிக்க முடியாமல் இருக்கு

:cry: :cry: :cry: :cry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.