Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்களுடன் நாங்கள் நூறு வீதம் இருக்கிறோம் - கூட்டமைப்பினரிடம் மோடி உறுதி

Featured Replies

modi%20meet%20TNA%20321.jpg

 

தமிழ் தேசிய கூட்டமைப்பினருடனான சந்திப்பின் போது நாங்கள் உங்களுடன் நூறு வீதமிருக்கிறோம் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூட்டமைப்பினரிடம் தெரிவித்தார் என கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடான சந்திப்பின் போது வடமாகண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கடிதமொன்றை சம்பந்தன் மோடியிடம் கையளித்தார். விக்கினேஸ்வரனையும் தன்னைச் சந்திக்க வருமாறு அழைப்பு விடுக்கவுள்ளார் எனவும் மோடி தெரிவித்தார் என்றும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
 
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது புதுடில்லியின் நன்கு அறியப்பட்ட 7 ரேஸ்கோர்ஸ் வீதி என்ற முகவரிக்கு முன்னால் கூட்டமைப்பினர் சென்ற அந்த மூன்று வாகனத் தொடரணியை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். அவர்களை அந்த வாகனத்திலிருந்து இறங்கி வேறு மூன்று வாகனங்களில் பயணிக்குமாறு கோரினர். அந்த பணயம் இந்திய பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை நோக்கி அமைந்திருந்தது.
 
அங்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சம்பந்தனையும் அவருடன் சென்ற ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வரவேற்றார். தமிழில் வணக்கம் என்றார். சிறிது நேரத்தின் பின்னர் ஆரம்பமான பேச்சுக்களின் போது மோடி சம்பந்தனை பார்த்து நான் உங்களை கருத்துக்களை முதலில் செவிமடுக்க விரும்புகிறேன் என்றார் மோடி. அவர் இந்தியில் தெரிவித்தது மொழி பெயர்க்கப்பட்டது. 30 நிமிடங்களே நடைபெறவிருந்த அந்த சந்திப்பு ஒரு மணிநேரம் வரை நீடித்தது. அதன் முடிவில் மோடி நாங்கள் உங்களுடன் நூறு வீதமிருக்கிறோம் என்றார். தனது இரு கரங்களையும் நெஞ்சோடு அணைத்தபடி சம்பந்தன் சுட்டிக்காட்டும் விடயங்களை மோடி உன்னிப்பாக அவதானித்தார்.
 
இராணுவமயப்படுத்தல், சிங்கள குடியேற்றம், மற்றும் தமிழர் பகுதிகளில் சனத்தொகை பரம்பலை மாற்றுவது குறித்தே சம்பந்தன் மோடிக்கு தெளிவுபடுத்தினார். அவர் வேறு பல விடயங்களையும் சுட்டிக்காட்டினார். வடபகுதியில் இராணுவத்தின் 15 அணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இது அளவுக்கதிகமானது. யாழ் மாவட்டத்தின் வலிகாமத்தில் இராணுவம் நிலங்களை சுவீகரிக்கிறது. இராணுவத்தினரின் குடும்பத்தினரை தங்கவைப்பதற்காக பொதுமக்களின் ஆயிரத்து 600 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டுள்ளது.
 
உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள நிலையிலும் சில வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டுசென்றுள்ள போதிலும் அவர் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என்றார். திட்டமிடப்பட்ட முறையில் சிங்கள் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன என்று தெரிவித்த சம்பந்தன், இராணுவத்தினருக்காக 10 ஆயிரம் வீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. பாதுகாப்பு வலயத்திற்குள் இராணுவம் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளது. வர்த்தக நடவடிக்கைளிலும் அது ஈடுபட்டுள்ளது என்றார் அவர். முல்லைத்தீவில் 5ஆயிரம் சிங்கள வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அளித்த வாக்குறுதிகளுக்கு மாறாக சந்திரசிறியை மீண்டும் ஆளுநராக நியமித்துள்ளார். அவரால் வடமாகாண சபையின் நடவடிக்கைகளுக்கு ஏற்படுத்தப்படும் இடையூறுகள் என்பவற்றையும் சம்பந்தன் மோடிக்கு தெளிவுபடுத்தினார்.
 
அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் குறித்தும் சுட்டிக்காட்டிய சம்பந்தன் இலங்கை ஜனாதிபதி கடந்த 5 வருடங்களில் அது தொடர்பாகவும் அதற்கு அப்பால் செல்வதாகவும் அளித்த வாக்குறுதிகளை நினைவுபடுத்தினார். நாடாளுமன்ற தெரிவிக்குழுவில் இடம்பெறாததற்கான காரணத்தையும் தெளிவுபடுத்திய அவர், கிழக்கு மாகாண நிலைமைகள் குறித்தும் சுட்டிக்காட்டினார். சம்பந்தன் சுட்டிக்காட்டிய விடயங்கள் குறித்து தான் அறிந்துள்ளார் எனத் தெரிவித்த மோடி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தனக்கு அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாகவும் அதற்கு அப்பால் செல்வதாகவும் உறுதியளித்தார் எனவும் குறிப்பிட்டார்.
 
இலங்கையிலுள்ள ஏனைய தமிழ் பேசும் சமூகங்களின் அரசியல் தலைவர்களுடன் பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொண்ட மோடி, இலங்கை அரசாங்கத்துடன் நேரடிப் பேச்சுக்களை ஆரம்பிக்குமாறும் கோரினார். இலங்கை தமிழர் விவகாரத்தை கையாள்வதற்கு விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்குமாறு சம்பந்தன் விடுத்த அழைப்பை அவர் நிராகரித்துள்ளார் எனவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
 
  • தொடங்கியவர்

NAயிடம் மோடி சொன்னது என்ன? தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்-

Modi%20sambathan_CI.jpg

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடான சந்திப்பின் போது வடமாகண முதலமைச்சர் சிவி விக்கினேஸ்வரனின் கடிதமொன்றை சம்பந்தன் மோடியிடம் கையளித்தார், விக்கினேஸ்வரனை தன்னை சந்திக்க வருமாறு அழைப்பு விடுக்கவுள்ளாதாக மோடி தெரிவித்தார் என தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது.

புதுடில்லியின் நன்கு அறியப்பட்ட 7 ரேஸ்கோர்ஸ் வீதி என்ற முகவரிக்கு முன்னால் பாதுகாப்பு படையினர் அந்த மூன்று வாகனத் தொடரணியை தடுத்து நிறுத்தினர். அவர்களை அந்த வாகனத்திலிருந்து இறங்கி வேறு மூன்று வாகனங்களில் பயணிக்குமாறு கோரினர் அந்தப் பணயம் இந்திய பிரதமரின் உத்தியோகபூர்வ வாசல்ஸதலத்தை நோக்கி அமைந்திருந்தது.

அங்கு இந்திய பிரதமர்நரேந்திர மோடி சம்பந்தனையும் அவரது 5 நாடாளுமன்ற சகாக்களையும் வரவேற்றார் தமிழில் வணக்கம் என்றார்.

சிறிது நேரத்தின் பின்னர் ஆரம்பமான பேச்சுக்களின் போது மோடி சம்பந்தனை பார்த்து நான் உங்களை முதலில் செவிமடுக்க விரும்புகிறேன் என்றார். மோடி இந்தியில் தெரிவித்தது மொழி பெயர்க்கப்பட்டது.

30 நிமிடங்களே நடைபெறவிருந்த அந்த சந்திப்பு ஒரு மணிநேரம் வரை நீடித்தது. அதன் முடிவில் மோடி நாங்கள் உங்களுடன் நூறு வீதமிருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

தனது இரு கரங்களையும் தனது நெஞ்சோடு அணைத்தபடி சம்பந்தன் சுட்டிக்காட்டும் விடயங்களை மோடி உன்னிப்பாக அவதானித்தார். இராணுவமயப்படுத்தல், சிங்கள குடியேற்றம், மற்றும் தமிழர் பகுதிகளில் சனத்தொகை பரம்பலை மாற்றுவது குறித்தே சம்பந்தன் மோடிக்கு தெளிவுபடுத்தினார். அவர் வேறு பல விடயங்களையும் சுட்டிக்காட்டினார்.

வடபகுதியில் இராணுவத்தின் 15 அணிகள் நிறுத்தப்பட்டுள்ளன, இது அளவுக்கதிகமானது, யாழ் மாவட்டத்தின் வலிகாமத்தில் இராணுவம் நிலங்களை சுவீகரிக்கிறது, இராணுவத்தினரின் குடும்பத்தினரை தங்கவைப்பதற்காக பொதுமக்களின் 1600 ஏக்கர் காணி எடுக்கப்பட்டுள்ளது. உரிமையாளாகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள நிலையிலும் சில வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டுசென்றுள்ள போதிலும் அவர் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. என்றார்.

திட்டமிடப்பட்ட முறையில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுவதாகவும் தெரிவித்த சம்பந்தன் இராணுவத்தினருக்காக 10000 வீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. பாதுகாப்பு வலயத்திற்குள் இராணுவம் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளது, வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவுPல் 5000 சிங்கள வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமை, ஜனாதபதி அளித்த வாக்குறுதிகளுக்கு மாறாக சந்திரசிறியை மீண்டும் ஆளுநராக நியமித்தது, அவரால் வடமாகாண சபையின் நடவடிக்கைகளுக்கு ஏற்படுத்தப்படும் இடையூறுகள் என்பவற்றையும் சம்பந்தன் மோடிக்கு தெளிவுபடுத்தினார்.

அரசமைப்பின் 13 திருத்தம் குறித்தும் சுட்டிக்காட்டிய சம்பந்தன் இலங்கை ஜனாதபதி கடந்த 5 வருடங்களில் அது தொடர்பாகவும் அதற்கு அப்பால் செல்வதாகவும் அளித்த வாக்குறுதிகளை நினைவுபடுத்தினார்.

பாராளுமன்ற தெரிவிக்குழுவில் இடம்பெறததற்கான காரணத்தையும் தெளிவுபடுத்திய அவர் கிழக்கு மாகாண நிலைமைகள் குறித்தும் சுட்டிக்காட்டினார்.

சம்பந்தன் சுட்டிக்காட்டிய விடயங்கள் குறித்து தான அறிந்துள்ளதாக தெரிவித்த மோடி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனக்கு அரசமைப்பின்13 திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாகவும் அதற்கு அப்பால் செல்வதாகவும் உறுதியளித்ததாக குறிப்பிட்டார்.

இலங்கையிலுள்ள ஏனைய தமிழ் பேசும் சமூகங்களின் அரசியல் தலைவர்களுடன் பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொண்ட மோடி இலங்கை அரசாங்கத்துடன் நேரடிபேச்சுக்களை ஆரம்பிக்குமாறும் கோரினார்.

இலங்க தமிழர் விவகாரத்தை கையாள்வதற்கு விசேட பிரதிநிதி ஓருவரை நியமிக்குமாறு சம்பந்தன் விடுத்த அழைப்பை அவர் நிராகரித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111094/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் ஒரு அறுப்பும் தெரியாது.

நாம் எவ்வளவு பலமாயிருக்கிறோம்? இந்த நிலையில மோடீட்ட போய் கெஞ்சிகொண்டு நிக்கினம்.

மோடிக்கு இவை இடித்து, கேட்காத பட்சத்தில், அடித்து அல்லது உதைத்தாவது உரைச்சிருக்கவேண்டும்.

நாம் சொல்வதை கேட்காவிட்டால் மனித வெடுகுண்டை அனுப்புவோம் அல்லது சீனாவுக்கு திருமலையை கொடுப்போம் என்று மிரட்டியிருக்கவேண்டும்.

மோடி மறுத்தால் - தமிழகத்தை பிரித்து தனிநாடாக்கி, அமெரிக்காவின் வெளியுறவு கொல்கையை மாற்றி - அதன் மூலம் தனிநாடு ஈசியா காணலாம்.

புலத்தில் நாங்கெல்லாம் எதுக்கு இருக்கிறம்? நிலத்தில் ஒரு சின்ன இன்னல் என்றாலும் துவக்கை தூக்கி கொண்டு கிளம்பத்தானே?

புலத்தில் நன்கு பயிற்ற பட்ட, நன்கு ஆயுத வழங்கல் உள்ள ஆயிரமாயிரம் தமிழர் படை நிக்கும் போது இப்படி ஒரு சரணாகதி அரசியல் தேவைதானா?

இ.வ

புலம்பெயர்ஸ்

  • தொடங்கியவர்

தமிழர் விவகாரத்தை அவதானிக்க இந்தியத் தூதருக்கு அதிகாரம் வழங்க மோடி முடிவு 

 

405_content_p5.jpg

 

http://thinakkural.lk/article.php?article/ixokfbxbyj9926cb757ef40120257tlxkx53ca7301d5333de1be4e06obef0#sthash.kRGMThH7.dpuf

 

மோடி கை கட்டி பவ்யமாக இருக்கிறதை பார்த்தல் ராஜீவுக்கு கொடுத்ததோட பயந்துட்டார் போல இருக்கு....தமிழ்கூட்டமைபிட்டேயே இப்படி பம்முறவர், ராஜபக்சேயிடம் எப்படி பணிவார்? ராஜபக்ஷே இரு என்று சொன்னால் நிலத்தில் சம்மணமிட்டு வாய் பொத்தியிருப்பார்.. :)

 

2z9fpj4.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு  கூட்டம்

இப்படியே  கற்பனை செய்து

கற்பனை செய்து

 

புலம்பித்திரியவே  இருக்கு..

 

அது போராட்டகாலத்திலும் சரி

அமைதிக்காலத்திலும் சரி

 

புலிகள் இருந்தபோதும்  சரி

இல்லாதபோதும் சரி...

 

எவராவது ஒருவர் வாய்க்கு அம்பிடணும்

தற்பொழுது புலம் பெயர்ந்தவர்கள்..

 

ஆனால் அவர்களது காசு மட்டும் வேண்டும்

அதில் கைவைத்துவிடாதீர்கள்.............

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடன் நாங்கள் நூறு வீதம் இருக்கிறோம்

எனக்கு இது சரியக புரியவில்லை ...........
இந்தியாவில் மக்கள் தொகை 100 கோடியை தாண்டி வெற்றி நடை போடுகிறது.
மோடிக்கு வேண்டாத முஸ்லீம்களின் எண்ணிக்கை கூடி கொண்டே போகிறது. நாங்கள் வேறு நீங்கள் வேறு என்று ஏன் நினைகிறீர்கள்? என்று கொஞ்சத்தை இங்க ஷிப் பண்ண போகிறாரோ ? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.