Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்று முதல்வர் பதவியை இழந்ததையடுத்து, தற்போது நிதி அமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் அடுத்த முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.1186051_10152496238018579_17692583876095

  • Replies 3.9k
  • Views 330.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த மரம் பூக்கும் காய்க்காது...

 

220px-Memecylon_umbellatum_%28Ironwood%2

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து மாணவர்களுக்கும் உளம் நிறைந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

 

 

fhffhhfhfrh.jpg

 

புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் மூவர் 192 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளனர். கடந்த ஓகஸ்ட் மாதம் நடந்து முடிந்த புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்றிரவு வெளியாகின.
 

இதில் முதல் கிடைத்த தகவல்களின்டி யாழ். மாவட்டத்தில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை, சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலை, அளவெட்டி அருணேதயாக் கல்லூரியின் மாணவர்கள் மூவர் 192 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். இதேசமயம் கிளிநொச்சி மாவட்டத்தில் சேர்ந்த மூன்று மாணவர்கள் 183 புள்ளிகளை பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காயப்படுத்த பலர் இருந்தாலும்..மருந்தாக சிலர் இருப்பதனாலயே நம் வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறது..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய திங்கள் காலை  வணக்கங்கள்...! இப்போ இங்குள்ள மரம்,செடி,கொடிகள் எல்லாம் பஞ்ச வர்ணத்தில் தான் நிற்கின்றன..

 

184395_191749637525526_7751472_n.jpg?oh=

 

10685608_741673229232992_492654423179687

 

தமிழ் அழகு!

பழக எளிமை அழகு

கல்வியில் புலமை அழகு

என்றும் புதுமை அழகு

நாழும் பளமை அழகு

சொல்லில் செழுமை அழகு

கருத்தில் வலிமை அழகு

கல்விக்கு இளமை அழகு

பண்பில் முதுமை அழகு

எந்தன் தமிழே எங்கள் தமிழே..!

நீ நாளும் நாளும் அழகோ அழகு..!!

 

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளின் திறமையை பாருங்கள்...காலால் மிதித்தவனை கையால் எடுக்க வைக்கிறது...!

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பணம், ஆற்றல், திறமை இவையெல்லாம் வாழ்க்கைக்குரிய பொருள்களே அன்றி அவையே வாழ்க்கை ஆகா.

- ஜேம்ஸ் ஆலன்.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சில கேள்விகளுக்கும் வலிகளுக்கும் என்றைக்குமே விடை கிடைப்பதில்லை.ஏன் எனில் கேள்வி கேட்டவர்கள் பதில் சொல்லும் வரை நிற்பதும் இல்லை...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10653497_846088635431912_350135317323799

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரவலாய் தரப்படுகின்ற எந்த ஒரு பொருளும் என்றோ ஒரு நாள் திரும்ப பறிக்கபடுகின்றன சில வேளைகளில் அன்பு கூட...!! அன்பாக அக்கறையாக பேசி உள்ள நிலை எல்லாம் அறிந்து விட்டு நடையைக் கட்டும் மனிதர்கள் நிறையவே இவ் உலகில் உளர்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேசும் முறைகள்...

தாயிடம் - அன்பாக பேசுங்கள்..!

தந்தையுடன் - பண்பாக பேசுங்கள்..!

ஆசிரியரிடம் - அடக்கமாக பேசுங்கள்..!

துணைவியுடன் - உண்மையாக பேசுங்கள்..!

சகோதரனிடம் - அளவாக பேசுங்கள்..!

சகோதரியிடம் - பாசத்தோடு பேசுங்கள்..!

குழந்தைகளிடம் - ஆர்வத்தோடு பேசுங்கள்..!

உறவினர்களிடம் - பரிவோடு பேசுங்கள்..!

நண்பர்களிடம் - உரிமையோடு பேசுங்கள்..!

அதிகாரியிடம் - பணிவோடு பேசுங்கள்..!

வியாபாரியிடம் - கறாராக பேசுங்கள்..!

வாடிக்கையாளரிடம் - நேர்மையாக பேசுங்கள்..!

தொழிலாளரிடம் - மனிதநேயத்தோடு பேசுங்கள்..!

அரசியல்வாதியிடம் - ஜாக்கிரதையாக பேசுங்கள்..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று சர்வதேச இதய கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட நாள்"World Heart Federation".....இருதய பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை உருவாக்கும் பொருட்டு அமைக்கபட்ட கூட்டமைப்பு.

 

 

 

 

1508624_817182628315631_2670216472616282

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய காலை வணக்கம் !!!!!

 

 

1455153_10152276167691637_10064923280530

 

10568819_743108709089444_556755533819759

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் பேரை நண்பனாக வைத்திருப்பது

உனக்கு பெருமை அல்ல.

ஆயிரம் பேர் எதிர்க்கும் போது

உனக்காக அவர்களை எதிர்க்க கூடிய

நண்பன் ஒருவனை வைத்திருப்பதே

உனக்கு பெருமையாகும்!

- சுபாஷ் சந்திரபோஷ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

384172_540815819278024_1190476169_n.jpg?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

545788_472481319459314_1709682951_n.jpg?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலக மொழி பெயர்ப்பு தினம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் வல்வையைச் சேர்ந்த மாணவி யாழினி முருகதாஸ் சட்டத்துறையில் சாதனை.வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்ட செல்வி. யாழினி முருகதாஸ் தனது 23 ஆவது வயதில் லண்டனில் சட்டத்தரணியாகி [LLB(Hons), LLM] ஆகியுள்ளார்.

திரு,திருமதி முருகதாஸ் சகுந்தலா ஆகியோரின் மகளான செல்வி யாழினி நோர்வே நாட்டில் 1990 ஆம் ஆண்டு பிறந்தவர். தனது ஆரம்பப் கல்வியை நோர்வேயில் ஆரம்பித்திருந்து பின்னர் கடந்த 14 வருடங்களாக இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் வாழ்ந்து கல்விகற்று வந்திருந்தார்.

இளம் வயதிலேயே கல்வியில் மிகவும் ஆர்வம் கொண்ட செல்வி யாழினி தனது கல்லூரிப் படிப்பில் விசேட சித்திகள் பெற்றவர். சட்டத்துறை பற்றிய அதீத அக்கறையின் காரணமாக சட்டப்படிப்பைக் கையில் எடுத்து, தனது முழு நேரத்தையும் சட்டத்துறையில் செலுத்தி, தீவிரமாகப் படித்து சட்டத்துறையில் முதுகலைப் பட்டத்தையும் இளம் வயதிலேயே பெற்றிருக்கின்றார்.

பல்கலைப் படிப்பில், சட்டத்துறையை (law) யாரும் அதிகளவில் விரும்பிப்படிப்பதில்லை. காரணம் சுமைகள் கூடிய சிக்கலான துறை இதுவாகும். அதிக நேரத்தை செலவிட்டு அதிகம் படிக்கவேண்டும். ஆனால் செல்வி.யாழினி இந்தச் சுமைகள் கூடிய படிப்பை ஒரு தவமாக எண்ணி விரும்பிப் படித்திருந்தார்.

தனது நாட்களின் அதிகளவு நேரத்தை இந்த துறையில் செலவிட்ட யாழினி ஒரே தடவையில் படித்து முடித்துப் பட்டம் பெற்றது மட்டுமில்லாமல், மறு நாளே அவருக்கு லண்டனில் உள்ள பிரபல நீதிமன்றமான Croydon County Court இல் அரச சட்டத்தரணியாக பணியாற்றும் சேவையையும் பெற்றுள்ளார் என்பது இங்கு சிறப்புடன் கவனத்தில் கொள்ளத்தக்கது.

இங்கிலாந்து நாட்டில், தனது இளம் வயதில் சட்டத்தரணியாகியுள்ள செல்வி யாழினி வல்வெட்டித்துறைக்கும் இந்த வகையில் பெருமை சேர்த்துள்ளார்.

செல்வி யாழினி வல்வை ஊரிக்காட்டு பிரதேசத்தை சேர்ந்த திரு அருட்பிரகாசம், சாந்தகுணநாயகி ஆகியோரின் பேர்த்தி ஆவார். மறைந்த திரு அருட்பிரகாசம் அவர்கள் ஒரு மிகச் சகலதுறை விளையாட்டு வீரர் என்பதும் இங்கு நினைவுபடுத்திக்கொள்ளத்தக்கது.

 

16353_10154707740815637_5590863279365698

 

வாழ்த்துக்கள் ...

428677_370109669689521_1986576132_n.jpg?

 

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் யாழினி & யாயினி...! தொடருங்கள் சிறப்பாக இருக்கு...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேர்மறையான அழுத்தம் ஒன்றைக் கொடுப்பதை விட சக்தி வாய்ந்த விஷயம்  இந்த உலகில் இல்லை.ஒரு புன்னகையில் உலகளவு நம்பிக்கையும் நேர்மறைத் தன்மையும் உள்ளது...ரிச்சர்ட் எம்.டிவோஸ் வரிகளிலிருந்து.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புன்னகையும் மௌனமும் பலம் வாய்ந்த ஆயுதங்கள் புன்னகை பல பிரச்சனைகளைத் தீர்க்கும்,மௌனம் பல பிரச்சனைகள் வர விடாமல் தடுக்கும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுதும் விடையம் எத்தனை பேரைச் சென்றடைகின்றதோ தெரியவில்லை..யார் எல்லாம் யாயினி சொல்வதிலும் உண்மை இருக்கின்றது என எடுத்துக் கொள்வீர்களோ யான் அறியேன்.ஆனாலும் எழுத முயற்சிக்கின்றேன்....ஏன் எனில் பல் என்ற விடையத்தில் நானும் சற்றுக் கவனக்க குறைவாக இருந்தினால் தற்போது அவசரமாக சிகிச்சை செய்யவேண்டிய நிலைக்கு தள்ளபட்டும் இருந்தேன்..

 

அதனை விட சில,விருப்பு வெறுப்புக்கள் கூட சரியான புரிந்துணர்வு அற்ற நிலையினால் கை விட்டு போன சந்தர்ப்பங்களும் உண்டு.இவ்வாறன பிரச்சனைகளை தடுக்க வேண்டும் என்ன செய்யலாம்....... எல்லாம் பல் இன்னோரன்ன பிரச்சனைகளால் ஏற்பட்ட தாமதங்கள் என்பதை யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள்..எல்லாருக்கும் எல்லாம் சொல்லவும் முடியாது,சொன்னாலும் விளங்கிக் கொள்ளாத அவசரகாரர்களுக்கு எதை சொல்லியும் எப்போதும் விளங்காது....சரி அதை விடுவம்..விடுபட்ட விடையங்கள் விடுபட்டதாகவே போகட்டும். :(..

 

அண்மைய காலங்களில் கனேடிய மண்ணில் சேல் போடும் அளவுக்கு சில வைத்தியர்களின் தொகை உயர்ந்துள்ளது..குறிப்பாக சொல்லப் போனால் பல் வைத்தியர்கள்..94ம்,95ம் ஆண்டளவில் நம்மவர்கள் அதுவும் மருத்துவ துறை சார்ந்தவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுக்கே இருந்தார்கள்..இப்போழுது எல்லாம் அப்படி அல்ல..ஒவ்வொரு முக்கியமான சந்திகளிலும் மருத்துவ நிலையங்கள் அமைந்திருக்கும்..கடந்த பதின் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் வைத்தியர்களின் முகத்தையே பாக்காதவள்..வீட்டு உறவுகளின் தொல்லை தாங்க முடியாமல் கடந்த மாதம் ஒரு தமிழ் வைத்திய நிறுவனத்தை அணுகி குறிப்பிட்ட ஒரு வைத்தியரிடம் சந்திக்க அனுமதி பெற்றுச் சென்றால் அங்கே எனது காலம் அந்த வைத்தியர் உரிய நேரத்திற்கு வரவில்லை..அந்த வரிசையில் வேறு ஒரு பெண் பல் வைத்தியர் என்னைத் தன் நோயாளி ஆக்கிக் கொண்டார்..

 

வசூல் ராசா எம்.பி.பி.எஸ் என்றதும் கமலகாசன் நடித்த திரைப்படம் பற்றி எழுதிறன் என்று நினைத்து விடாதீர்கள்..அதன் பின்ணணி  போன்று இவர் ஒரு வசூல் ராணியாக இருப்பார் என்று நான் அறிந்திருக்கவே இல்லை....

 

முதல் தரம் பொதுவாக பார்ப்பது என்று சொல்லி தட்டிக் கொட்டி,கிண்டி சத்தி எடுக்க வைச்சு எக்ஸ்றே எடுத்து வலி கொஞ்சம் அதிகமாகவே இருந்த காரணத்தினால், முழு வைத்தியமும் செய்து முடிக்கபடாத நிலையில் எனக்கு இருந்த கவறேயும் நீ என்னாச்சும் செய் நான் போறன் என்று அந்த தரத்தோடுடையே காலியாகி விட்டது..ஒரு வருடத்திற்கு ஒரு முறை தான் பல் கிளின் பண்ணுவதற்கு தான் கவறேஜ் தருவார்கள்.மிகுதியை நீங்கள் உங்கள் கையால் தான் கட்ட வேண்டும் இன்னும் இரண்டு தரம் வர வேண்டி இருக்கும்.வரும் இரண்டு தரமும் ஊசி போட்டுத் தான் கிளின் பண்ணுவன் என்றா வைத்தியர்.

 

ஒரு தரம் 100 டொலர்கள் கோஸ்ட் பண்ணும் என்றும் சொல்லப்பட்டு விட்டது அப்போ இரண்டு தரம் வாறது என்றால் சரி 200 டொலர்ஸ் காலியாக்கப் போகினம் என மனதிற்குள் திட்டி விட்டு,பல் கிளின் பண்ணத் தானே வேணும் சரி என தலையாட்டியாச்சு...பத்து நாளைக்கு முன் மேல் வாய்ப் பற்கள்,கீழ் வாய்ப் பற்கள் என சரிபாதியாக சற்று நீக்கல் செய்யப்பட்டு கிளீன் பண்ணி முடித்து கிறடிற் கார்ட்டில் இழுத்துட்டு வந்தாச்சு..அதன் பின்னரான எனது பிரசன்னம் தான் சகாராக்காவின் "காவியத் தூது மற்றும் வேங்கையன் பூங்கொடி".

 

மிகுதி சரி பாதிப் பற்களுக்கு வைத்தியம் இன்று நடந்தது..இதை எழுதும் போது கூட கண் முன்னாடி ஏதோ நட்சத்திரங்கள் போல் அடிக்கடிவந்து போகிறது..தலை சுற்றல்..இன்றும் வழமை போன்று ஊசி தான் சரி இந்த தரத்தோடு யாயினி கப்பியாகிடுவாள் என மனதிற்குள் நினைத்துக் கொண்டு வாயைக் கொடுத்துட்டு இருந்தால் பற்களுக்கு அளவு எடுத்தார்..

மருத்துவத்தின் அடிப்படையை அரைப் பகுதியையாவது அறிந்து வைத்திருப்பவள் ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளாமல் நடப்பவள் என்ற ரீதியில் சில விடையங்களை இலகுவாக புரிந்து கொள்வேன்..கிளின் பண்ணுவதற்கும் பல் அளவு எடுப்பதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது..கடந்த தடவை கிளினிங் மட்டும் செய்தால் போதும் என்று தானே சொன்னார் என இறுதி வரை மனதை தேற்றிக் கொண்டேன்..எழுந்திருக்கும் போது உங்கள் பற்களின் வேர்களில் மற்றும் நீக்கல்கள் காரணமாக,இன்னும் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. ஆறு கிழமைகளின் பின் வாருங்கள் அதற்குரிய கோஸ்ட் பற்றியும் அந்தப் பிரச்சனைகளுக்கு என்ன வைத்தியம் செய்யலாம் என்பது பற்றியும் சொல்கிறன் என்று வாசல் வரை வந்து சொல்லி அனுப்பினார்....வசூல்ராணியின் தன் கைவரிசையை இன்னும் காட்டுவதாகவே இருக்கிறார்..நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் இப்படியானவர்களிடம் தொடர்ந்து போகலாமா விடலாமா........?? :D :D...

 

இப்படியான விடையங்கள் எல்லாருக்கும் ஒரு உதாரணமாக இருக்கும்,மற்றவர்களும் பல விடையங்களை அறிந்து கொள்ள வேண்டும்  என்பதற்காகவே இங்கே எழுதுகின்றேன்..

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரே ஒரு தமிழ் பல் வைத்தியரிடம்தான் இதுவரையில் போயிருக்கிறேன். அதுவும் இங்கு வந்த புதிதில். அதன்பிறகு வேறு ஆட்களிடம்தான் போவது.

புலம் பெயர்ந்து வந்த பல் வைத்தியர்கள்/ வைத்தியர்களிடம் ஒரு இயந்திரத்தன்மையை கண்டுள்ளேன். இது எனது அனுபவம் மட்டுமே..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

இன்றய நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்...

 

 

399685_474738459226641_1540010065_n.jpg?

சர்வதேச முதியோர் தினம்.01.10.2014.

 

534416_474783129222174_2132637077_n.jpg?

 

குடும்பத்தை சுமந்த குருத்தோலைகள்-அன்று.

ஆயிரம் கவலைகளை சுமக்கும் காவோலைகளாய் இன்று...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

66198_543437755682497_856908969_n.jpg?oh

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.