Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பலரும், தங்களது சூழ்நிலை சரியில்லை என்றே குறைப்பட்டுக் கொள்கிறார்கள். வெற்றியாளர்களோ எழுந்து, தங்களுக்கான சூழ்நிலையைத் தேடுகிறார்கள்; அத்தகைய சூழ்நிலை கிடைக்கவில்லையெனில், அவர்களே உருவாக்குகிறார்கள்.
»»» ஜார்ஜ் பெர்னாட் ஷா ~ பிறந்த தினம் இன்று (ஜூலை 26,1856)

#GoodMorning 1f642.png

 

  • Replies 3.9k
  • Views 331.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: sky, ocean, cloud, outdoor, nature and water
July 26, 2017
ஜூலை 26 – சர்வதேச சதுப்பு நிலக் காடுகள் தினம்

கடற்கரையோரங்களிலும் ஆறுகள் கடலுடன் கலக்கும் முகத்துவாரங்களிலும், உப்பங்கழிகளை அடுத்துள்ள சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடிய ஒருவகைத் தாவரக் கூட்டங்களே சதுப்பு நிலக் காடுகள்│கண்டல் காடுகள் (Mangroves) என்றழைக்கப்படுகின்றன. 

கண்டல் காடுகள் வெப்பமும் மழையும் உள்ள நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றன. கரையோர கண்டல் காடுகள், மழைக்காடுகளுக்கு சமமானவையாகும். இவை தாவரங்கள், மற்றும் உயிரின பல்வகைகளின் வாழிடமாக விளங்குவதுடன் உள்ளூர் சமூகங்களின் வாழ்வாதாரத்திற்கும் உதவிபுரிகின்றன. அத்துடன் மண்ணரிப்பு, புயல், சுனாமி போன்ற இயற்கையழிவு சேதங்களிலிருந்து கரையோரங்களை பாதுகாக்கின்ற தடுப்பரண்களாகவும் கண்டல் காடுகள் விளங்குகின்றன.

கண்டல் காடுகளுக்கு பிரதான அச்சுறுத்தலாக இறால் பண்ணைகள் விளங்குகின்றன. உலகில், கடந்த 20 ஆண்டுகளில் 35% ஆன கண்டல் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கரையோரங்களை அண்மித்த கண்டல் காடுகள் அழிக்கப்பட்டு வர்த்தக நோக்கிலான இறால் குழிகள் அமைப்படுகின்றன. குறிப்பாக பிரேசில், கொலம்பியா, ஈக்குவடோர், ஹொண்டூராஸ், கெளதமாலா, மெஸிக்கோ, பங்களாதேஷ், இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், மலேசியா, மியன்மார், கென்யா, நைஜீரியா, ஜேர்மனி, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் முன்னிலை வகிக்கின்றன.

கரையோர சுற்றுச் சூழலுக்கு பாரியளவில் நன்மை வகிக்கின்ற கண்டல் காடுகளைப் பாதுகாக்க வேண்டியது எம் எல்லோரினதும் தலையாய கடமையாகும்.

(படம் – யாழ்ப்பாணக் கரையோர கண்டல் காடுகள்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆல்ஃபிரட் மார்ஷல் பிரிட்டன் பொருளாதார நிபுணர்

பிரிட்டனைச் சேர்ந்த பொருளாதார நிபுணரும் மரபுசார் பொருளாதார சிந்தனையை உருவாக்கியவருமான ஆல்ஃபிரட் மார்ஷல் (Alfred Marshall) பிறந்த தினம் இன்று (ஜூலை 26). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜில் பிறந்தார் (1842). தந்தை வங்கி ஊழியர். ஆரம்பக் கல்வி முடித்ததும், கேம்பிரிட்ஜ் செயின்ட் ஜான்ஸ் கல்லூரி யில் தனக்குப் பிடித்த கணிதம் மற்றும் அறிவியல் பயின்றார்.

l கல்லூரியில் படித்தபோது உளவியல் ரீதியாக சில பிரச்சினைகளை எதிர்கொண்டதால் தத்துவப் படிப்புக்கு மாறினார். மாறாநிலை வாதம் குறித்து ஆர்வம் கொண்டார். இதுதான், பொருளாதாரம் குறித்து பயில்வதற்கான தூண்டுதலாக அமைந்தது. தாராளவாதம், சோசலிசம், தொழிற்சங்கங்கள், பெண் கல்வி, வறுமை மற்றும் முன்னேற்றம் ஆகிய விஷயங்களில் ஆர்வம் காட்டினார்.

l 1868-ல் கேம்பிரிட்ஜ் செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் தார்மீக அறிவியல் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். 1875-ல் அமெரிக்காவில் நடைபெற்ற வர்த்தகப் பாதுகாப்பு ஆய்வில் கலந்து கொண்டார். அமெரிக்கா சென்று கட்டணக் கட்டுப்பாடுகளால் எழும் தாக்கத்தை அளவிடும் ஆய்வுகளில் ஈடுபட்டார்

l இங்கிலாந்து திரும்பியவுடன் கேம்பிரிட்ஜில் அரசியல் பொருளியல் பாடத்தை மேம்படுத்துவதில் தீவிர முனைப்புடன் ஈடுபட்டார். 1885-ல் அரசியல் பொருளியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். ஒரு சில ஆண்டுகளில் நாட்டிலேயே மிகச் சிறந்த பொருளியல் நிபுணராக உயர்ந்தார்.

| ஹென்றி சிட்க்விக், பெஞ்சமின் ஜோவெட் உள்ளிட்ட தனது சம காலத்திய சிந்தனையாளர்கள் பலருடன் இணைந்து, ‘கேம்ப்ரிட்ஜ் ஸ்கூல்’ என்ற கல்வி நிறுவனத்தைத் தொடங்கினார். பொருளாதாரம் குறித்த தனது சிந்தனைகளை 1881-ல் ஒரு நூலாக எழுதத் தொடங்கினார். உலகப் புகழ்பெற்ற ‘பிரின்சிபல்ஸ் ஆஃப் எகனாமிக்ஸ்’ என்ற இவரது நூல் 1890-ல் வெளியானது.

l பல்வேறு பொருளியல் நிலைப்பாடுகளில் (வாங்குபவர் - விற்பவர், உற்பத்தியாளர் -நுகர்வோர், சேமிப்பாளர் - முதலீட்டாளர், முதலாளி - தொழிலாளி) மனிதன் மேற்கொள்ளும் பணிகளை ஆராய்வதே பொருளாதாரப் பாடம் என இவர் வரையறுத்தார். பொருளாதாரம் குறித்த இவரது விளக்கம் நலப் (வெல்ஃபேர்) பொருளாதாரம் எனப்பட்டது.

l பல தலைமுறைகளாக இவரது பிரின்சிபல்ஸ் ஆஃப் எகனாமிக்ஸ் நூல் பொருளாதார மாணவர்களுக்கான பாடப் புத்தகமாக உள்ளது. பொருளாதாரம் கற்றுக்கொடுக்கும் முறையில் இது ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இந்த நூலில் கூறப்பட்டுள்ள பல கருத்துக்கள் இவரது அசலான சிந்தனையில் தோன்றியவை.

l ‘தி எகனாமிக்ஸ் ஆஃப் இண்டஸ்ட்ரி’, ‘எலிமன்ட்ஸ் ஆஃப் எகனாமிக்ஸ் இண்டஸ்ட்ரி’, ‘இண்டஸ்ட்ரி அண்ட் டிரேட்’, ‘மணி, கிரெடிட் அண்ட் காமர்ஸ்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதினார். 1890-ல் ‘பிரிட்டிஷ் எகனாமிக்ஸ் அசோசியேஷன்’ என்ற அமைப்பை உருவாக்கினார். பிறகு அது ராயல் எகனாமிக்ஸ் சொசைட்டியாக மாறியது.

l விலை நிர்ணயம், தங்கம், வெள்ளி, சர்வதேச வர்த்தகம் ஆகியன தொடர்பான அரசாங்க கொள்கைகளில் இவர் கருத்துக்கு பெரும் செல்வாக்கு இருந்தது. பிரிட்டனின் பொருளாதார சிந்தனையை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார்.

l டிமான்ட் - சப்ளை வரைபடம், மார்ஜினல் யுடிலிட்டி உள்ளிட்ட பல கருத்துருக்களை மேம்படுத்தினார். புதிய மரபுசார் (நியு கிளாசிக்கல்) பொருளாதார சிந்தனையை உருவாக்கியோரில் முக்கியமானவராகக் கருதப்படும் ஆல்ஃபிரட் மார்ஷல், 1924-ம் ஆண்டு 82-வது வயதில் மறைந்தார்.

Image may contain: 1 person, smoking
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் யாயினி.நல்ல அரிய தகவல்களை அறிய முடிகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தவரை மீண்டும் பார்க்க வைத்த பாடல் இது ஈழத்து ஆலயங்கள் பலவற்றின் வானவெளி காட்சிகளுடன் உருவாகிய பாடல் இது..

 · 
 
20108810_1515747728447593_5483532523742953472_n.jpg?oh=79e12fd46d74a327a78d0c37d88f286d&oe=5A363B4E
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழகொழிரும் நல்லை எங்கள் பூமியிலே ஆரம்பிக்க போகிறது உலகமே எதிர் பார்க்கும் உற்சவம்.. 2017 நாளை காலை 28.07.2017 முதல் நல்லூரானின் சேவை உலகம் எங்கும் இவ்வருடமும் நல்லூரான் சிறப்பாக இயங்க கந்தனருளை வேண்டி நிற்போம்

 · 
Image may contain: night, sky and outdoor

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

#விண்ணுலோகதேவர்கள் வாழ்த்தி வணங்கும்;
#பூலோகமானுடர்கள் போற்றி வணங்கும்;
#_புண்ணியம்பதி_நல்லையம்பதியானுக்கு நாளை கொடி
(துவஜாரோகணம்)

ஏவிளம்பி வருட மகோற்சவ சிறப்பிதழ் 

உலகெலாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம் வல்ல பரம்பொருளான முருகப்பெருமான் தம்மை நினைத்து உள்ளமுருகி வணங்கி வாழும் அடியார்களுக்கு அருள்பாலிக்கும் புண்ணியக்ஷத்திரம் நல்லூர்க் கந்த சுவாமி கோயில்.
வரலாற்றுப் பிரசித்திபெற்ற நல்லூர்க் கந்தசுவாமி கோயில் கொடியேற்ற நாள் இம் மாதம். வானளாவ உயர்ந்த அழகான இராஜகோபுரங்களுடன் நல்லூரிலே அமைந்திருக்கின்ற இந்த முருகப் பெருமான் ஆலயம் மிகவும் கீர்த்தி பெற்ற மூர்த்தி இருக்கும் புனித ஸ்தலமாகும்.

இந்த எல்லையில்லாக் கருணைமிக்க தொல்லை வினை தீர்க்கும் நல்லையம்பதிக் கந்தனுக்கு
ஏவிளம்பி வருட மஹோற்சவம் (28.07.2017) வெள்ளிக்கிழமை காலை பத்து மணிக்கு துவஜாரோகணம் எனும் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. 
கொடியேற்றதினத்தன்று சிவப்பு நிறத்திலே வரும் சிங்கார வேலனின் அழகு, வார்த்தைகளால் சொல்ல முடியாது. கருணையே வடி வான கந்தப் பெருமானின் வேல் அருள்புரியும் அழகுடன் அலங்காரமாக நடுநாயகமாக வர ஒருபக்கம் அன்பு அண்ணன் விநாயகப் பெருமானும் மற்றப் பக்கம் அருட் சக்திகளான வள்ளியும்,தேவசேனாவுடன் அழகாக வரும் அற்புதமான அருட் காட்சி பக்தி பூர்வமானது.

“எந்நாளும் நல்லூரை வலம் வந்து வணங்கினால் இடர்களெல்லாம் போமே” என்றபடி நல்லூரிலே வருடாந்த மஹோற்சவ காலத்தில் முருகனை வணங்குவதற்காக அடியார்கள் கூட்டம் அலைமோதும் பக்தி நிறைந்த காட்சி அருள்மயமானது.

வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனாகிய தமிழ்க் கடவுள் முருகன் விரும்பியுறையும் இடம் இந்த நல்லையம்பதியாகும். 
இருபத்தைந்து நாள்கள் நடைபெறுகின்ற இம்மஹோற்சவத்திலே ஒவ்வாரு நாளும் விதவிதமான அலங்காரத்துடன் வெவ்வேறு அழகிய வாகனங்களில் முருகப்பெருமான் திருவீதி வலம் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். அழகன் முருகன் அலங்காரப் பிரியன். இந்த நல்லூரிலே எழுந்தருளி வீற்றிருந்து அடியார்களும் பெருமானாக அழகெல்லாம் சேர்ந்து ஓருரு எடுத் தாற்போன்று அலங்காரமாக வரும் முருகன் கருணை மிகு கந்தப் பெருமானாவான்.

இலங்கையிலே எத்தனையோ முருகன் ஆலயங்கள் இருந்தும் இந்த நல்லூர்ப்பதியிலே மட்டும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதன் காரணம் என்ன? அடியார் கூட்டம் முண்டி யடித்துக்கொண்டு அலைமோதுவதன் மர்மம் என்ன? அது மூலஸ்தானத்திலே வீற்றிருக்கும் வேற்பெருமானின் திருவருளேதான்.

இன்னகாரியம் எனக்கு நிறைவேற்றித் தரவேண்டும் என்று பக்திபூர்வமாக நேர்த்தி வைத்து உள்ளன்போடு வணங்கினால் அந்தக் காரியம் எவ்வித தடங்கலுமின்றி நிச்சயமாக நிறைவேறிவிடும் கந்தப் பெருமானைக் கைதொழுதால் எந்தக் காரியமும் நிறைவேறும் என்ற பரிபூரணமான நம்பிக்கையே காரணமாகும்.

தொல்லை வினை தீர்த்து வைக்கும் கந்தன் கருணைக்கு நிகரே இல்லை. நம்பியோரை ஒருபோதும் கைவிட மாட்டான் “நல்லூரான் திருவடியை நான் நினைத்த மாத்திரத்தில் எல்லாம் மறப்பேனடி கிளியே இரவு பகல் காணேனடி” என்று யோகர் சுவாமிகள் பாடியுள்ளார் “பஞ்சம் படை வந்தாலும் பாரெல்லாம் வெந்தாலும் ஆறுமுகன் தஞ்சமடி” என்ற வரிகளில் எவ்வளவு உண்மை பொதிந்திருக்கிறது பார்த்தீர்களா? செல்வச் சந்நிதியிலே இருக்கும் முருகனுக்கு அன்னதானக் கந்தன் என்று பெயர். கதிர்காமத்திலே உள்ள இறைவனுக்கு அருட் கந்தன் என்று பெயர். அதுபோன்று இன்று கொடியேற்றம் காணும் நல்லைக் கந்தனுக்கு அலங்காரக் கந்தன் என்று பெயர். வீதியுலாவரும் கந்தனின் பேரழகு காணக் கண்கோடி வேண்டும். “சேலார் வயற்பொழில் செங்கோடனைச் சென்று கண்டு தொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே” என்று பாடுகின்றார் அருணகிரிநாதர். இது முழுக்க முழுக்க உண்மையாகும். நல்லூரிலே தினமும் முருகன் வீதியுலா வரும் அழகுக் காட்சி வர்ணிக்க முடியாதது. நேரில் வந்து பார்த்தால்தான் அந்த அழகின் தாற்பரியம் புரியும். அவ்வளவு கொள்ளை அழகு முருகனின் திருவிழாக் காட்சிகள்.

பத்தாம் திருவிழா மஞ்சம் முதலாக பூச்சப்பறம், கைலாச வாகனம், தங்கரதம், தேர், தீர்த்தம், திருக்கல்யாணம் நிகழும் பூங்காவனம் என்று ஒவ்வொரு விழாவும் அற்புதமானவை. இந்தத் திருவிழாக்களைப் பார்ப்பதற்காக நாட்டின் நாலாபக்கங்களிலிருந்தும் இந்த நல்லூரை நோக்கி அடியார்கூட்டம் படையெடுத்து வரும். அதிகாலை நான்கு மணிக்கே அடியார்கள் வருவதற்கு ஆரம்பித்து விடுவார்கள். நல்லூர்ப்பதியே விழாக்கோலம் பூண்டு காணப்படும். “முருகனுக்கு அரோஹரா! கந்தனுக்கு அரோஹரா! என்று வாய் உரக்கச் சொல்லிய வண்ணம் அடியார் கூட்டம் அங்கப் பிரதட்சணம் செய்யும் திருவருள் நிறைந்த பக்திபூர்வமான காட்சியை வேறெங்குமே காணமுடியாதது. பெண் அடியார்கள் விழுந்து விழுந்து கும்பிட்ட வண்ணம் அடியளிக்கும் நிகழ்வும் பக்திபூர்வமானதே.

தேர், தீர்த்தம், பூங்காவனம் இம் மூன்று திருவிழா நாள்களுமே அடியார் கூட்டம் அலைமோதும் நாள்களாகும். தினமும் முன்னே மங்கள தவில் நாதஸ்வர இசை முழங்க. அடியவர்கள் பக்திப்பரவசத்துடன் சூழ்ந்துவர. பஜனைக் கோஷ்டிகள் முருகன் புகழ் பாடி வர இடம்பெறும் இனிய நல் விழாப் பொலிவு வர்ணனையில் எழுத்தில் அடங்காது.

ஸ்ரீ சங்கபோதி புவனேகபாகுவினால் அமைக்கப்பட்ட இந்த ஆலயத்தில் வாசலில் ஒரு அழகிய இராஜகோபுரமும் இருமருங்கும் மணிக்கோபுரங்களும் அணிசெய்கின்றன. தெற்கு வாசல் மற்றும் வடக்கு வாசலில் இரு பெரிய இராஜகோபுரம் வானளாவ உயர்ந்து காட்சியளிக்கின்றது. ஆலயத்தின் நான்கு வீதிகளும் நடமாடுவதற்கேற்ற வகையில் துப்புரவான வெண்மணல் பரப்பப்பட்டுள்ளது. வழிபாட்டுக்கு வரும் அடியார்கள் முருகனைத் தரிசிப் பதற்கு வசதியாக எல்லா இடங்களிலும் தொண்டர்கள் நின்று சேவை செய்த வண்ணம் இருப்பர். ஆலய உள் வீதி, வெளி வீதி இரண்டிலும் சன நெருக்கடி ஏற்படாமல் இத்தொண்டர்கள் செய்யும் அரிய சேவை மகத்தானது.

முருகப் பெருமானுடைய பேரருட் கருணையைப் பெற்றுக் கொள்வதற்காக இந்த ஆலயத்தில் ஆறு காலப் பூசை நிகழ்த்தப்படுகின்றது. இந்தப் பூசையைப் பார்ப்பதற்கு அடியார்கள் முன்னேறுவது ஓர் அலாதியான காட்சி. இப்படியான முருகனின் திருவிழாப் பவனி காண்பது கிடைத்தற்கரிய பேறாகும். 
திருவிழா காண கந்தன் அடியார்கள் திரண்டு வருகின்றனர். முத்தமிழால் வைதாரையும் வாழ வைக்கும் கலியுக வரதன் முருகனின் அருள்பெற்று வாழ அவனருளையே நாடி நிற்போமா!
மகோற்சவகாலத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் எமது தளங்களின் ஊடாக கண்டு முருகப்பெருமானது அருளினை வேண்டிநிற்கலாம்.

Image may contain: one or more people, sky and outdoor
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இனிய காலை வணக்கம்..!!!
No automatic alt text available.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் . அக்டோபர் 15,1931-யூலை27.2015.
 
இதுதான் கலாமின் முழுப் பெயர். அக்டோபர் 15,1931-ல் ராமேஸ்வரத்தில் பிறந்தார். தந்தை ஜெயுனுல்லாபுதீன், தாய் ஆஷியம்மா. தந்தையார் படகு கட்டும் தொழில் செய்துவந்தார். கலாம் படிக்கும் காலத்தில் செய்தித்தாள் போட்டும், புளியங்கொட்டை விற்றும் வீட்டுக்கு உதவினார். நேர்மையான பண்பை தன் அப்பாவிடம் இருந்து பெற்றதாகச் சிலாகிப்பார் கலாம்.

உயர்நிலைக் கல்வியை முடித்த பின், திருச்சியில் ஒரு கல்லூரியில் இயற்பியல் துறையில் பயின்றார். எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியில் ஏரோனாடிக்கல் பொறியியல் துறையில் இடம் கிடைத்து, பணம் கட்ட முடியாமல் இருந்தபொழுது இவரின் சகோதரிதான் நகைகளைக் கொடுத்து படிக்க அனுப்பினார். கல்லூரி வந்த சில நாட்களிலேயே, தொழிலில் ஏற்பட்ட பாதிப்பில் அப்பா, திரும்ப ஊருக்கு வரச்சொல்லியதால் தன் புத்தகங்களை எடைக்குப் போட்டுப் பணம் திரட்டப்போன இடத்தில் புத்தகங்களை வாங்காமல் பணத்தை மட்டும் கொடுத்து மேலே படிக்கச் சொன்ன பேப்பர்காரரை இன்னமும் நன்றியோடு குறிப்பிடுவார் கலாம்.

கல்லூரியில் உணவுச் செலவை குறைக்கச் சைவத்துக்கு மாறினார். அதுவே இப்போதும் தொடர்கிறது. பொறியியல் கல்வியை முடித்ததும் விமானி ஆகவே ஆசைப்பட்டார். ஆனால், ஓர் இடம் பின்தங்கி வாய்ப்பை இழந்தார். கண்ணீரோடு நின்றவரை சுவாமி சிவானந்தரின் ”இதைவிடப் பெரிதான ஒன்றுக்காக நீ அனுப்பப்பட்டு இருக்கிறாய்” என்ற வரிகள் உத்வேகப்படுத்தின.

விக்ரம் சாராபாயின் ஊக்கத்தில் இந்திய விண்வெளிக் கழகத்தில் இணைந்தார். அங்கேதான் முதல் சுதேசி விண்கலமான எஸ்.எல்.வியை உருவாக்கினார். அதைத் தொடர்ந்து ரோகினி, திரிசூல், ப்ரித்வி, ஆகாஷ் என இந்தியாவின் விஞ்ஞான வலிமையை உலகுக்கு உரக்கச் சொல்லும் ஏவுகணைகளை உருவாக்கி ‘இந்தியாவின் ஏவுகணைத் தொழில்நுட்பத் தந்தை’ என அழைக்கப்பட்டார்.

புத்தகங்கள் வாசிப்பதில் ஆர்வம் அதிகம்.திருக்குறள், குரான் எப்பொழுதும் உடன் இருக்கும். எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாடல்கள் பிடிக்கும். வீணை வாசிக்கவும் கற்றுக்கொண்டார்.

பிடித்த நிறம் கருநீலம். ஆடைகள் அதே நிறத்தில் இருக்கும். எளிமையான ஆடைகளையே அணிவார். எஸ்.எல்.வி-3 வெற்றிக்குப் பிறகு இந்திரா காந்தி, கலாமைச் சந்திக்க நினைத்தார். அப்பொழுது ”என்னிடம் நல்ல ஆடைகளே இல்லையே” எனக் கலாம் சொல்ல, ”வெற்றி என்கிற அழகான ஆடையை அணிந்து இருக்கிறீர்கள்!’ என மூத்த விஞ்ஞானி சதீஷ் தவான் சொன்னார்.

இந்தியா முழுக்க மாணவர்களைச் சந்திப்பதிலும் பாடம் நடத்துவதிலும் தன் நேரத்தை செலவழித்து வந்தார். தன்னிடம் அற்புதமான ஒரு கேள்வி கேட்டதற்காகத் தமிழ்நாட்டு சுட்டி ஒருவரை டெல்லி வரை அழைத்து மரியாதை செய்தார்.

ஜனாதிபதியாக இருந்தபோது, ராஷ்ட்ரபதி பவனில் இருக்கும் மொகல் தோட்டத்தை மக்கள் பார்வைக்குத் திறந்துவிட்டார். தன் பதவி ஏற்பு விழாவுக்குச் சுட்டிகளை வரவழைத்தார். பதவிக் காலம் முடிந்து வெளியேறும்போது எந்தப் பரிசுப் பொருளையும் எடுத்து செல்லவில்லை. இரண்டே சூட்கேஸ்களில் அவரின் அத்தனை உடமைகளும் அடங்கிவிட்டன. தன் உறவினர்கள் டெல்லி வந்து தங்கியபோதுது அதற்கான செலவை ஜனாதிபதி மாளிகை கணக்கில் வைக்காமல் தானே செலுத்தினார்.

இந்தியாவின் உயரிய கௌரவமாகக் கருதப்படும் பாரத ரத்னா விருது பெற்றவர். ஹைதராபாத் நிம்ஸ் மருத்துவமனையில் கிலோ கணக்கில் செயற்கை கால்களை அணிந்துகொண்டு இருந்த சுட்டிகளுக்கு வெறும் நானூறு கிராம் எடையில் செயற்கை கால்களை வடிவமைத்துத் தந்தார்.

தான் எழுதிய அக்னிச் சிறகுகள் நூலில் ”என் கதை என்னோடு முடிந்துவிடும். உலக வழக்கப்படி எனக்கு எந்தப் பரம்பரை சொத்தும் இல்லை. நான் எதையும் சம்பாதிக்கவில்லை. எதையும் கட்டிவைக்கவில்லை, என்னை மற்றவர்கள் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என நான் விரும்பவில்லை. என் கதையால் சில ஆத்மாக்களாவது உத்வேகம் பெறக்கூடும் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

- பூ.கொ.சரவணன்

Image may contain: 1 person

என் மறைவை விடுமுறையாக கொண்டாட வேண்டாம், என்மீது அன்பு கொண்டால் மேலும் ஒருநாள் சேர்ந்து உழையுங்கள்.
-ஏ.பி.ஜே.அப்துல்கலாம்
"DONT DECLARE HOLIDAY ON MY DEATH, INSTEAD WORK AN EXTRA DAY, IF U LOVE ME"
- DR. APJ ABDUL KALAAM....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
 
No automatic alt text available.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி 
ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருந்திருவிழா நாளை (28) முற்பகல் 10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்தும் 25 தினங்கள் காலை மாலை உற்சவங்களாக இடம்பெறவுள்ள இவ்வாலயப் பெருந்திருவிழாவில் பத்தாம் திருவிழாவான அடுத்த மாதம் 06ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 05 மணிக்கு மஞ்சத் திருவிழாவும், 12ம் திகதி திங்கட்கிழமை இரவு 07 மணிக்கு அருணகிரிநாதர் உற்சவமும், 15ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 07 மணிக்குச் சூர்யோற்சவமும், அதேதினம் மாலை 05 மணிக்கு கார்த்திகை உற்சவமும் நடைபெறவுள்ளது.

மேலும்,16 ம் திகதி புதன்கிழமை காலை- 07 மணிக்குச் சந்தான கோபாலர் உற்சவமும், அதே தினம் மாலை 05 மணிக்கு கைலாசவாகன உற்சவமும், 17ம் திகதி வியாழக்கிழமை காலை07 மணிக்கு கஜவல்லி மஹாவல்லி உற்சவமும், அதேதினம் மாலை 05 மணிக்கு வேல்விமான(தங்கரதம்) உற்சவமும், 18ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 07 மணிக்குத் தண்டாயுதபாணி உற்சவமும், அதேதினம் மாலை 05 மணிக்கு ஒருமுகத் திருவிழாவும், 23 ம் திருவிழாவான 19 ம் திகதி சனிக்கிழமை மாலை 05 மணிக்குச் சப்பறத் திருவிழாவும், 20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 07 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் 21ம் திகதி காலை 07 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.

Image may contain: plant, tree and outdoor
Image may contain: sky, tree, outdoor and nature
 
பாலபிரசன்னா பூந்தோட்டம் வவுனியா
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

British Columbia மாகாண உச்சநீதிமன்றம் MV Ocean Lady கப்பல் மூலம் கனடாவை வந்தடைந்த நான்கு இலங்கையர்கள் மனித கடத்தல்காரர்கள் இல்லை என தீர்ப்பளித்துள்ளது 

A British Columbia Supreme Court judge has found four Sri Lankan men not guilty of human smuggling.

 · 
safe_image.php?d=AQBRTC4ysazktZwP&w=476&
Four men accused of smuggling dozens of Tamil migrants to Canada eight years ago have been acquitted.
BC.CTVNEWS.CA
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணைந்து பணியாற்றியதாக Ontario PC கட்சியின் Scarborough Centre தொகுதியின் வேட்பாளர் தேனுஷா பரணி தனது வேட்பாளர் கேள்வி மற்றும் ஒப்பந்ததில் (PC Party's "Candidate Questionnaire and Agreement) கூறியுள்ளதை Toronto காவல்துறை மறுத்துள்ளது.

Toronto Police Service is dispute Thenusha Parani, Ontario Progressive Conservative candidate's (Scarborough Centre) claim of volunteer work with force. Insp. James Mackrell, TPS 41 Division, said there is no record of Parani doing any such volunteer work with the station or the liaison committee.

Thesiyam
Toronto காவல்துறையில் தன்னார்வத் தொண்டராக இணைந்து பணியாற்றியதாக Ontario PC கட்சியின் Scarborough Centre தொகுதியின் வேட்பாளர் தேனுஷா பரணி தனது வேட்பாளர் கேள்வி ...
safe_image.php?d=AQBOEts_FGrIYJBv&w=526&
Toronto Police officers are questioning the extent of the volunteer work that the Progressive Conservative candidate for Scarborough Centre says she did with…
CBC.CA
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1.day.
#கொடியேறும் நல்லை கந்தன்! 28,07,2017
Image may contain: one or more people, sky and outdoor
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 

நல்லையம்பதியானின் 281வது மகோற்சவம் இன்று (28.07.2017) காலை 10.00 மணிக்கு.

Image may contain: one or more people, crowd and indoor
20505036_1531568223532210_6670675348511784960_n.jpg?oh=9eddb193558eba8ecf9e438b26745727&oe=5A07F3A1
 

நல்லூர்
கொடியேற்றம்.2017

 · 
Image may contain: one or more people, people standing, sky, cloud and outdoor
Image may contain: one or more people, night and outdoor
Image may contain: 1 person, indoor

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

Image may contain: 2 people, crowd and indoor
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
கொடியேற்றம்- 28.07.2017
Albums
கொடியேற்றம்- 28.07.2017
Nalluran.com
20431382_1531986603490372_47137102198317
 
20376178_1531986566823709_83694786908894
 
20376150_1531985970157102_91306068455914
 
20476113_1531987340156965_19649229914271
 
20476502_1531986763490356_48099569478502
 
20374296_1531986570157042_59524498222609
 
20374319_1531985950157104_13814605858714
 
20374409_1531986096823756_62619847470781
 
20431655_1531985910157108_30327506373488
 
20294149_1531987733490259_21694184727140
 
20479818_1531986703490362_69661315046718
 
20294046_1531986126823753_19100302322263
 
20374753_1531986916823674_72688516269729
 
20293023_1531986133490419_24052673087978
 
20374231_1531986920157007_38359881516690
 
20294325_1531986760157023_34283842042809
 
20292988_1531986790157020_87071323036361
 
20476210_1531987050156994_49705210458644
 
20294364_1531987426823623_38921498656164
 
20374539_1531986186823747_89927071358267
 
20431727_1531986956823670_73244815963126
 
20294320_1531987216823644_89642851701436
Like · Comment
20431256_1531987306823635_77506501721578
 
20374752_1531986313490401_34046887919454
 
20430025_1531986260157073_67861910467663
 
20429784_1531987036823662_32345252842433
 
20476088_1531986263490406_65684922139004
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச புலிகள் தினம் July 29 : World Tiger Day.

உலகில் இந்தியா, நேபாளம், வங்கதேசம், சீனா உள்ளிட்ட 13 ஆசிய நாடுகளின் காடுகளில் புலிகள் உயிர்வாழ்கின்றன. கடந்த 1900ம் ஆண்டில், உலகில் லட்சம் புலிகள் இருந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
19ம் நூற்றாண்டில், இந்தியாவில் 37 ஆயிரம் புலிகள் இருந்ததாகவும், 1969ல், புலிகள் எண்ணிக்கை 2,500 ஆக குறைந்துவிட்டதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, புலிகள் கணக்கெடுப்பு நடக்கிறது. இதன்படி 2011ம் ஆண்டில், 1706 புலிகள் உள்ளதாக தெரியவந்தது. கடந்த 2006ல் இருந்த எண்ணிக்கையைவிட 296 புலிகள் அதிகமாகியுள்ளன.
வங்கப்புலி, மலேயப்புலி, சுமத்ரா (இந்தோனேசியா) புலி, சைபீரியன் புலி, தென் சீனப்புலி என, பல வகை புலிகள் உள்ளன. புலியின் மீதுள்ள கோடுகள் ஒவ்வொன்றுக்கும் வித்தியாசப்படும். அதன் எலும்பு, பற்கள், நகம், தோல் என அனைத்து உறுப்புகளும் மருத்துவ குணம் கொண்டவையாக கருதப்படுகிறது.
சீனாவில், இவற்றைக் கொண்டு நாட்டு மருந்தும் தயாரிக்கின்றனர். மத்திய அரசு 1970ல், புலி வேட்டைக்கு தடை விதித்து சட்டம் இயற்றியது. இந்தியாவில், புலிகளுக்கான முதல் சரணாலயம், உத்தரப்பிரதேசம் நைனிடால் மாவட்டத்தில், 1973ம் ஆண்டு, ஏப்.,1ல் துவக்கப்பட்டது. இந்த ஆண்டு, மார்ச் 15ல், சத்தியமங்கலம் வனப்பகுதி, புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில், மொத்தம் 43 சரணாலயங்கள் உள்ளன.
உலகளவில் கடந்த நூறு ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையில் 97 சதவீதம் அழிந்து விட்டன. அதாவது ஒரு லட்சம் புலிகளில், தற்போது வெறும் 3,200 புலிகள் மட்டுமே வாழ்கின்றன. உலகில் புலிகளின் இயற்கை வாழ்விடங்களில், 93 சதவீதம் அழிக்கப்பட்டு, அது விவசாய நிலங்களாகவும், குடியிருப்புகளாகவும் மாறி விட்டது.
புலிகள் மற்றும் யானைகளுக்கு சர்வதேச சந்தையில் நல்ல மதிப்பினால், பல ஆண்டுகளாக மனிதர்கள் புலிகளை சட்ட விரோதமாக வேட்டையாடி வந்தனர். இதன் காரணமாக புலிகள் எண்ணிக்கை குறைந்தது. மேலும் காடுகளில் ஏற்படும் தீ விபத்து, காட்டாற்று வெள்ளம் காரணமாகவும் புலிகள் அழிகின்றன.
உலகிலேயே இந்திய வங்கதேச எல்லையில் உள்ள சுந்தரவனக்காடுளில் தான், புலிகள் அதிகளவில் வாழ்கின்றன. இவ்வகை புலிகள் பெங்காலி புலிகள் என அழைக்கப்படுகின்றன.
இருப்பினும் இப்பகுதியில் வெப்பமயமாதல் காரணமாக கடல் நீர்மட்டம் உயரும் ஆபத்து உள்ளதால், இங்கு வாழும் புலிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

நட்பென்றால் நாம் என்போம்

No automatic alt text available.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லையம்பதியானின் 281வது மகோற்சவத்தின் #2ம்_நாள்_மாலை_உற்சவம் இன்று (29.07.2017) மாலை 4.45 மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டபப்பூஜைத் தொடர்ந்து எம்பெருமான் வீதி வலம் வந்த காட்சி

 ·
20517897_1532900200065679_5865725802099769344_n.jpg?oh=937662034686319c77176ea85c7fc135&oe=5A05844A
 
02 ம் நாள் மாலை உற்சவம் (29/07/2017)
Albums
02 ம் நாள் மாலை உற்சவம் (29/07/2017)
படங்கள்- Sübãńğaň Kš
20430107_1532723623416670_70334443369573
 
20525735_1532724856749880_25841981897633
 
20431514_1532724766749889_71661566476846
 
20375923_1532722776750088_22398363399836
 
20375916_1532722783416754_18429889225404
 
20431203_1532725350083164_91131004604622
 
20429951_1532725000083199_18329452625294
 
20294555_1532723360083363_47393447617616
 
20429739_1532722696750096_84793105078911
 
20525397_1532724170083282_69336589463327
 
20375908_1532725100083189_60378470020085
 
20431289_1532722916750074_87301356238033
 
20294496_1532722796750086_55286560291939
 
20476446_1532723956749970_63700753913542
 
20476160_1532724426749923_52913956408732
 
20374459_1532723840083315_68573453640990
 
20376152_1532724590083240_36940822602098
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லையம்பதியானின் 281வது மகோற்சவத்தின் #3ம்_நாள்_மாலை_உற்சவம் இன்று (30.07.2017) மாலை 04.45 மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டபப்பூஜைத் தொடர்ந்து எம்பெருமான் வீதி வலம் வந்த காட்சி...

 
No automatic alt text available.
Image may contain: 9 people, people standing and outdoorImage may contain: 1 person, night, crowd and indoor
 
03ம் திருவிழா- 30.07.2017
20429592_1533729616649404_44028618941596
 
20429840_1533729269982772_42748205410997
 
20525302_1533729629982736_17357568327517
 
20376095_1533730063316026_78558631819147
 
20429791_1533729689982730_38662413195656
 
20476255_1533730103316022_62476505249047
 
20431409_1533730116649354_35642671155104
 
20476131_1533729826649383_23165419320501
 
20476205_1533730599982639_65230150109255
 
20476315_1533731119982587_23130011348647
 
20375998_1533731429982556_13095563029424
 
20431660_1533731456649220_35364929079460
 
20479622_1533731433315889_10127565849866
 
20604167_1533731106649255_19169603443550
 
20476385_1533729159982783_10870118902161
 
20376142_1533730619982637_52225114196478
 
20429923_1533730613315971_88970984278552
 
20479503_1533729103316122_91835907807908 ·Comment
7
20476152_1533729219982777_68979130877232

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: one or more people, text, outdoor and nature
Loganathan Kanapathipillai

ஜூலை 31 ⇨ உலக வனஇலாகா அதிகாரிகள் தினம்

தமது கடமையின்போது உயிரிழந்த மற்றும் காயமடைந்த வனஇலாகா அதிகாரிகளினை நினைவுகூர்ந்தும், உலகத்தின் இயற்கையினையும், கலாசார மரபுரிமை இடங்களினையும் பாதுகாப்பதில் பாடுபடுகின்ற அதிகாரிகளினையும் கெளரவிக்கும்முகமாகவும் உலக வனஇலாகா அதிகாரிகள் தினம் கொண்டாடப்படுகின்றது.

தமது கடமையின் போது பல்வேறுவிதமான இயற்கை இடர்கள், பயங்கரமான விலங்குகளின் தாக்குதல்கள் மற்றும் மிருகங்களைக் கொல்லும் கொள்ளையர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் குற்றவாளிகள் ஆகியோரின் அச்சுறுத்தல்கள் இவர்களின் கடமைக்கு பிரதான தடைகளாகும்.

சர்வதேச வனஇலாகா அதிகாரிகள் கூட்டமைப்பானது 1992ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டதன் 15ம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு 2007ம் ஆண்டு முதல் உலக வனஇலாகா அதிகாரிகள் தினமானது கொண்டாடப்படுகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆகஸ்ட் 1: உலக சாரணர் தினம் இன்று.
உலகளாவிய ரீதியிலான சாரணர்களும், சாரணியத்தின் இலட்சியங்களையும், நோக்கங்களையும் நினைவுகூரும் தினமாக உலக சாரணர் தினம் உலகெங்கும் கடைப் பிடிக்கப்படுகிறது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஆகஸ்ட் 1.உலக தாய்ப்பால் தினம் இன்று.

தாய்ப்பாலில் குழந்தைக்கு வேண்டிய அனைத்து சத்துப் பொருட்களும் சரியான விகிதத்தில் உள்ளன. மூளை வளர்ச்சி சரியாக அமைய மிகத் தேவையான புரதங்கள்,
அத்தியாவசிய கொழுப்புச் சத்துகள் தாய்ப்பாலில் மட்டுமே உள்ளன.
தாய்ப்பால் இயற்கையிலேயே சரியான சீதோஜ்ண நிலையில் உடனுக்குடன் புதிதாகக் கிடைக்கும் உணவு.
உற்பத்தி செய்யப்படாத உணவுப் பொருள் என்பதால் எவ்வித மாசிற்கும் இடமில்லை. மாறாக கிருமிகளைக் கொல்லும் பொருட்களைத் தன்னகத்தே உடையது.
தாய்ப்பாலில் உள்ள கொழுப்பு அமிலங்கள் மற்றும் சில பொருட்களின் அற்புதக் கலவை குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் மரணத்தைக் குறைக்க உலக நாடுகள் முனைந்து செயல்படுகின்றன. குழந்தை பிறந்த முதல்
2 ஆண்டுகள் உடல், மன, மூளை வளர்ச்சி அதிவேகமாக இருக்கும். இப்பருவத்தில் குழந்தையின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு ஏதேனும் தடை ஏற்பட்டால் வாழ்நாள் முழுதும் சீராக்க முடியாத பாதிப்பை ஏற்படுத்தும். வளர்ச்சிக்கு உறுதுணையாக
தாய்ப்பால் அளிப்பது தாய்மார்களின் கடமை.
தாய்ப்பால் கொடுப்பது காலம் காலமாகப் பெண்கள் இயற்கையாகவே செய்து வந்த பணி. சமீப காலத்தில் தாய்ப்பால் அளிப்பது பெருமளவில் குறைந்து வருகிறது.
தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் தாய்ப்பால் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
6 மாதங்களுக்காவது தாய் பாலூட்ட வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். பிறகு தாய் அல்லது குழந்தை ஆகிய இருவரில் ஒருவர் வேண்டாம் எனத் தீர்மானிக்கும் வரை குழந்தைக்குத் தாய்ப்பால் தேவை. தாய் தன் மார்போடணைத்துப் பாலூட்டுகையில் தொப்புள் கொடிக்குப் பிறகு மறுபடி ஒரு பிணைப்பு உடல் ரீதியாக ஏற்படுகிறது.
குழந்தை மனநல மருத்துவர் விஷ்வநாதன், "இயற்கையாகக் கிடைக்கக் கூடியது தாய்ப்பால். இதற்கு மாற்று எதுவுமே இல்லை, அதில் உள்ள வெண்மையான திரவப் பொருளே குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கிறது, இவை எல்லாவற்றையும் விட குழந்தைக்கும் தாய்க்கும் உளவியல் ரீதியாக ஒரு இமோஷனல் அட்டாச்மென்ட்
ஏற்படுகிறது. பாலூட்டும் சமயத்தில் பெண்கள் தேவையற்ற மாத்திரைகள் உட்கொள்வது
தவறு, இது குழந்தைகளைப் பாதிக்கும்' என்கிறார்.
தாய்ப்பாலின் மகத்துவத்தைப் பற்றி டாக்டர் அன்புக்கரசி "பிறந்த குழந்தைக்கு தேவைப்படும் போதெல்லாம் உடனடியாக, சுத்தமானதாக, சுகாதாரமாக, சரியான சீதோஜ்ண நிலையில் கிடைப்பது தாய்ப்பால். தாய்ப்பாலில் தேவையான தண்ணீர், சத்து
வைட்டமின்கள், மலம் இளக்கி ஆகியன இருப்பதால் குழந்தைகளுக்கு வயிறு உபாதை தவிர்க்கப்படுகிறது. 4 மாதம் முதல் 5 மாதத்திற்கு தாய்ப்பாலை விடச் சிறந்த உணவு கிடையாது.
எந்தக் குழந்தை அப்படி வளர்கிறதோ, அந்தக் குழந்தை காது சம்பந்தப்பட்ட நோய்க்கிருமிகளில் இருந்தும், வயிற்றுப் போக்கிலிருந்தும் காப்பாற்றப்படுகிறது.
நெடுங்காலப் பயன்கள் என்னவென்றால் தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் ஆஷ்துமா, அலர்ஜி, குழந்தையிலேயே எடை பருமன், குழந்தைப் பருவப் புற்றுநோய் இவற்றின் அபாயத்திலிருந்து Kரளவு தவிர்க்கப்படுகின்றன. 4 மாதத்திற்குத் தாய்ப்பால்
அருந்தும் குழந்தை, குழந்தைப் பருவ நீரிழிவு வியாதியிலிருந்து காப்பாற்றப்படுகிறது.
குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள் பின்னால் இரத்த அழுத்த நோயிலிருந்தும் காப்பாற்றப்படுகின்றன. தாயின் இரத்தத்தில் உள்ள ஆக்ஸிடோ சின்
என்கின்ற ஹார்மோன் பாசத்தையும் பந்தத்தையும் வளர்க்கிறது. இத்தனை பலன்கள் இருக்கும் தாய்ப்பாலை குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள்ளேயே கொடுப்பது நன்மை
பயக்கும்' என்கிறார்.
ஆம். இந்த ஆண்டு உலக தாய்ப்பால் தினத்தை ஒட்டி வெளியிடப்பட்டுள்ள செய்தி என்னவெனில் "முதலாம் மணியிலேயே பாலூட்ட ஆரம்பித்து ஒரு மில்லியன் குழந்தைகளைக் காப்போம்! (பட்ங் 1ள்ற் ஏர்ன்ழ் - நஹஷ்ங் ஞய்ங் ஙண்ப்ப்ண்ர்ய் க்ஷஹக்ஷண்ங்ள்!)'
என்பதே.
இந்த அவசர உலகத்தில் குழந்தை பெற்றுக்கொள்வதென்பது பல்வேறு காரணிகளையும்
சிந்தித்துத் தீர்மானிப்பதாக இருக்கிறது. அதில் குழந்தைப் பராமரிப்பும் ஒன்று. கடந்த காலங்களில் குழந்தைக்குத் தாய்ப்பால் இயல்பாக கிடைக்கும் உணவாக இருந்தது. இன்றைய காலகட்டத்தில் - அதிலும் குறிப்பாக பணிபுரியும் தாயாக இருப்பின்,
தாய்ப்பாலா அல்லது புட்டிப்பாலா என்று மனத்தில் ஒரு பட்டி மன்றம் போட்டு முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள். ஐரோப்பாவில், இங்கிலாந்தில் தான்
மிகக் குறைவாக தாய்ப்பாலூட்டுகின்றனர். அமெரிக்கா முழுவதும் தாய்ப்பாலூட்டுவதை ஊக்குவிக்க பல அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் பாடுபடுகின்றன. டெக்சாஷ் மாகாணத்தில் பாலூட்டுவதற்காக தாய்மார்களுக்கு வசதிகள் ஏற்படுத்தித்
தரவேண்டுமெனச் சட்டம் உள்ளது.
உலக தொழிலாளர் நிறுவனமானது வேலை நாட்களில்
பாலூட்டும் தாய்களுக்கு ஒரு முறையோ இரு முறையோ அரை மணி நேரம் பாலூட்டும் நேரமாக
அங்கீகரித்துள்ளது. பல இளந்தாய்கள் அலுவலகத்தில் பாலூட்ட சரியான இடம் இல்லாததால்
நிறுத்திவிடுகின்றனர். மேல் நாடுகளில் அரசு சாராத தொண்டு நிறுவனங்கள், மகப் பேறடைந்த பெண்களுக்கு வசதிகள் செய்து தரும் பணியமர்த்துநர்களுக்கு பரிசு கொடுக்கிறது, 2 மாதக் குழந்தையின் தாயான, அரசு சாரா தொண்டு நிறுவனத்தில் திட்ட இயக்குநராகப் பணியாற்றும் இளம் தாய் வனஜா சொல்கிறார்:
"பணிபுரியும் பெண்களுக்கு குழந்தைக்குப் பாலூட்டும் நேரம் கிடைப்பதில் சிரமம் இருக்கிறது. இக்காலத்தில் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களிலும், அமைப்பு சாரா
நிறுவனங்களிலும் (ஞழ்ஞ்ஹய்ண்ள்ங்க் ஹய்க் மய்ர்ழ்ஞ்ஹய்ண்ள்ங்க் நங்ஸ்ரீற்ர்ழ்)
குறைந்தபட்சம் 3 மாதம் மகப்பேறு விடுப்பு அளிக்கின்றர். தினக்கூலி அடிப்படையில்
பணிபுரியும் பெண்களுக்கு விடுப்பு கிடைப்பதில்லை. அவர்கள் குழந்தை பிறந்து ஒரு
மாதத்திற்குள்ளாகவே மீண்டும் பணிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். பொதுவாக
அலுவலகங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கென இடவசதி செய்யப்பட வேண்டும்.
அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு அவ்வப்போது குழந்தைகளை எடுத்து
வருவதற்கோ வீட்டிற்குச் செல்வதற்கோ பணிஅமர்த்துநர்கள் அனுமதி அளிக்கவேண்டும்.
வெகு தூரத்திலிருந்து அலுவலகம் வரும் பெண்களுக்கு இதுகூட சாத்தியப்படாது. ஆனால் இப்படிப்பட்ட பெண்களுக்கு குறைந்தபட்ச விடுப்புக்குப் பிறகு தேவைப்படும் காலம் வரை சம்பளமில்லாத விடுப்பு அளிக்கலாம். மீண்டும் அதே வேலையில் அமர்த்த
உத்தரவாதம் அளிக்கவேண்டும். இவ்வாறு செய்கையில் தாய்மார்கள் குழந்தைகளை ஒரு
வருடத்திற்காவது வீட்டிலிருந்து கவனிப்பார்கள்' தாய்ப்பாலூட்டுவதை கணவன், குடும்பத்தினர், பணியமர்த்துநர் மற்றும் சமுதாயம் ஊக்குவிக்க வேண்டும். தாய், நினைத்த இடத்தில் குழந்தைக்குப் பாலூட்டுவதை, குழந்தையைப் பராமரிக்கும் எந்த
ஒருசெயலைப் போலவே அங்கீகரிக்க வேண்டும். ஒரு சாதாரணப் பார்வை கூட அசௌகரிய
உணர்வை ஏற்படுத்தக் கூடும். அதன் காரணமாக, தாய் பாலூட்டுவது தடைபடலாம்.
மேல்நாட்டில் தாய்ப்பால் வங்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரத்த தானத்தைப் போல தாய்ப்பால் தானமும் உயிர் காக்கும் செயலாகக் கருதப்படுகிறது. சேமிக்கப்பட்ட
தாய்ப்பால் அநாதைக் குழந்தைகளுக்கும், எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் வழங்கப்படுகிறது. அமுதமான தாய்ப்பால் கொடுப்பதில்
பின்பற்றப்படும் தவறான நடைமுறைகளும் உள்ளன. உதாரணமாக, தாய்ப்பால் புகட்டுவதைத்
தாமதமாகத் தொடங்குகின்றனர்.
சிலர், தாய்ப்பால் அளித்தால் அழகு கெட்டுவிடும்
என்ற தவறான எண்ணம் கொண்டிருக்கின்றனர். பாசத்தோடு புகட்டாமல் கடமைக்குச்
செய்பவர்கள் உள்ளனர். பிறர் சொல் கேட்டு தாய்ப்பால் அளிப்பதை நிறுத்துகின்றனர். குழந்தைக்கு தாய்ப்பால் எவ்வளவு முக்கியமோ, பாலூட்டும் செயலானது, தாய்க்கும் முக்கியமானது. தாய்ப்பால் ஊட்டாத பெண்களுக்கு மார்பு மற்றும் கர்ப்பப் பை
புற்றுநோய் வரும் அபாயம் உள்ளது. பாலூட்டும் தாய் அடுத்த கர்ப்பத்தைத் தள்ளிப் போடுகிறாள்.
ஒரு தாய் குழந்தைக்குப் பாலூட்டுவதென்பது அக்குழந்தையின் நலத்திற்காக மட்டுமல்ல. தனது குழந்தையை தானே போஷித்து வளர்ப்பதில் பெருமை
அடைகிறாள். ஒரு நாள் பாலூட்டுவதில் குழந்தையின் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுகிறது, நோய் எதிர்க்கும் சக்தி கூடுகிறது. குழந்தையும் தாயும்
சேர்ந்தே அளப்பரிய நன்மை பெறுகின்றனர்.
நம் கலாசாரத்தில் தாய்ப்பால் ஊட்டலுக்கு தொன்றுதொட்டே சரியான இடம் கொடுக்கப்
பட்டுள்ளதை இலக்கியங்களில் இருந்தும் காயங்களில் இருந்தும் அறியலாம். புட்டிப் பால் என்பது நாகரிக காலத்தின் இடைச் செருகலே. தாய் பாலை மட்டுமா ஊட்டுகிறாள்? பாலோடு வாஞ்சையையும் பாசத்தையும் மட்டுமல்ல. பண்பையும் சேர்த்தல்லவா
ஊட்டுகிறாள்?

No automatic alt text available.
 
 
 

உலக தாய்ப்பால் தினம் இன்று.

ஆரோக்கியமான மனித குலத்தின் தலைமுறைகளை உறுதிப்படுத்தும் அம்மாமாரை ஞாபகப்படுத்திக்கொண்டே அவர்கள் தம் இரத்தத்தைப் பாலாக்கி எம்மை வளர்க்கும் அமுத சுரபியான தாய்ப்பாலையும் நினைந்து வணங்கிப் போற்றுவோம்.

குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, நோயற்ற ஆரோக்கியமான அடுத்த சமுதாயத்தை உருவாக்க, பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்கும் நோக்கோடு ஆண்டுதோறும் நினைவுபடுத்தப்படும் ஒரு நாள் இது.

No automatic alt text available.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
04ம் திருவிழா- 31.07.2017
20620880_1534954713193561_87105801088848
 
20620751_1534954129860286_33286737129569
 
20597318_1534955176526848_10510706637623
 
20431663_1534954946526871_12228396799997
 
20431636_1534954183193614_91779759511619
 
20525759_1534954889860210_23880458859216
 
20476305_1534955313193501_90472374976157
 
20525656_1534955903193442_50267234700555
 
20620851_1534955663193466_48275667702717
 
20431650_1534955896526776_81681095362976
 
20526197_1534955296526836_61819558142581
 
20620880_1534956046526761_75052527751285
 
20476580_1534956183193414_67160597250850
 
20431405_1534956169860082_16893877982239
 
20245670_1534956739860025_56981626964380
 
20431297_1534957399859959_40739817533535
 
20479467_1534954306526935_73375139699020
 
20431201_1534956729860026_56523989575221
 
20431393_1534956899860009_40076691242385
 
20479691_1534957073193325_88954941300288
 
20597371_1534954526526913_50958343245244
 
20621347_1534954536526912_42253791434558
 
20525867_1534957423193290_32822246666072
Like · Commen9
20479996_1534956436526722_31783584718553
 
20525508_1534957276526638_67717138010890
 
5ம் நாள் காலை உற்சவம்
நல்லையம்பதியானின் 281வது மகோற்சவத்தின் #5ம்_நாள்_காலை_உற்சவம் இன்று (01.08.2017) பகல் 10.15 மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டபப்பூஜைத் தொடர்ந்து எம்பெருமான் வீதி வலம் வந்த காட்சி...
20526132_1535042439851455_81208005787603
 
20525386_1535042446518121_28512177019052
Like · Comment
20476139_1535042473184785_67582706806249
 
20526165_1535042476518118_71211896924186
 
20476314_1535042516518114_71174494064989
 
By.nalluran.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.