Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
 
முல்லைத்தீவு செம்மலை மகாவித்தியாலய விளையாட்டுப் போட்டியின் இல்ல அலங்காரம்.........
 · 
Image may contain: outdoor
  • Replies 3.9k
  • Views 331.9k
  • Created
  • Last Reply
3 hours ago, யாயினி said:
 
 
முல்லைத்தீவு செம்மலை மகாவித்தியாலய விளையாட்டுப் போட்டியின் இல்ல அலங்காரம்.........
 · 
Image may contain: outdoor

 

பல சிந்தனைகளை தோற்றுவிக்கின்றது...

மௌனம் அலறுவதுபோல் ஒரு உணர்வு !!! 

இணைப்பிற்கு நன்றிகள்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
hrs · 
 
 
Image may contain: one or more people and text
  • கருத்துக்கள உறவுகள்

அசத்துறீங்கள் சகோதரி. கீப் இட் அப்.....!  tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Feb04,2018

Image may contain: text and outdoor
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, யாயினி said:

Feb04,2018

Image may contain: text and outdoor

ஆரம்பத்தில் இவர் சுதந்திரமாகவே இருந்தார்.இப்போதும் அப்படியே இருக்கிறார் என்றால் சந்தேகமே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2010 ஆண்டின் பின்னர் 2018 ல் அதிக பனிப்பொழிவு எனப் பேசப்படுகிறது.(பரிஸ்-பிரான்ஸ்)
 
Image may contain: tree, snow, sky, plant, outdoor and nature
Image may contain: snow, tree, plant, bridge, outdoor and nature
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
Paris
Image may contain: plant, snow, tree, outdoor and nature
  • கருத்துக்கள உறவுகள்

பாரிஸ் பக்கம் பார்வை வீ சியதற்கு நன்றி சகோதரி.....!  tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் தமிழர்களை மிரட்டிய பிரிகேடியருக்கு மீண்டும் பதவி வழங்கினார் இலங்கை ஜனாதிபதி.

Image may contain: 2 people, people standing
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Life in Canada....let it snow....

Image may contain: tree, snow, sky, outdoor and natureநேற்று
இன்று
நாளையென தொடர்ச்சியாக நடக்கிறது.
Image may contain: snow, car, tree and outdoor
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று மகாசிவராத்தரி
13/ 02/2018

Image may contain: சிறீ சிறீஸ்கந்தராஜா
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலக வானொலி தினம் (World Radio Day) ஆண்டுதோறும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி அதாவது இன்று கொண்டாடப்படுகின்றது.13.02.2018

இந்த நாளை ஐ.நா.வின் கல்வி , அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ ) ஆண்டு தோறும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதியை உலக வானொலி தினமாக கடைபிடிக்கிறது. ஆயினும் கடந்த 2011 ஆம் ஆண்டு ஐ.நா. 36 ஆவது பொதுச்சபை கூட்டத்தில் முதன்முதலாக ஸ்பெயின் , நவம்பர் 3 ஆம் திகதியை உலக வானொலி தினமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியது. அதன் பின்னர் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதியை உலக வானொலி தினமாக யுனெஸ்கோ அறிவித்தது.

வானொலி ஒலிபரப்புச் சேவையை கொண்டாடவும், பல நாட்டு வானொலியாளர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும், ஒலிபரப்புச் சம்பந்தமான முடிவெடுப்பாளர்களை வானொலிகள் மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாறிக் கொள்வதனை ஊக்குவிப்பதற்கும் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

Image may contain: one or more people
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலக வானொலி நாள்(World Radio Day)

No automatic alt text available.
Image may contain: 1 person, closeup
Image may contain: 1 person, sitting
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
Image may contain: cat
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
Image may contain: 1 person, smiling, standing and outdoor
No automatic alt text available.
Thesiyam 

தேசிய புதிய ஜனநாயகக் கட்சியின் (NDP) துணை தவிசாளராக (Vice President) தாட்ஷா நவநீதன் இன்று தெரிவாகியுள்ளார்.

NDP கட்சியின் மாநாடு இந்த வார விடுமுறையில் ஒட்டாவாவில் நடைபெறுகின்றது. இதில் கட்சியின் தலைமைத்துவப் பொறுப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் துணைத் தவிசாளராக தாட்ஷா நவநீதன் தெரிவாகியுள்ளார். முதல் தடவையாக தமிழர் ஒருவர் தேசிய அரசியல் கட்சியொன்றின் தலைமைத்துவத்திற்குத் தெரிவாகியுள்ளமை சிறப்பம்சமாகும். 

தாட்ஷா நலநீதன், ரொறன்ரோ நகரசபை உறுப்பினர் நீதன் சானின் துணைவியாராவார். நீதன் சான் முன்னர் ஒன்றார்யோ மாகாண புதிய ஜனநாயகக் கட்சியின் தவிசாளராகப் (President) பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெப்ரவரி 21 - உலக தாய்மொழி தினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ஆழ்ந்த அனுதாபங்கள்!
Image may contain: 1 person
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீதேவி

 

Sri-Devi

ஸ்ரீதேவி இந்திய திரைபடத் துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார்.1967 ஆம் ஆண்டு ‘கந்தன் கருணை’ என்ற தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர், பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ படத்தின் மூலம் பிரபலமான இவர், இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தன்னுடைய நடிப்புத் திறமையினால் அனைவருடைய மனதிலும் நீங்கா இடம் பிடித்த ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி கீழே காண்போம்.

பிறப்பு: ஆகஸ்ட் 13, 1963

பிறப்பிடம்: சிவகாசி, தமிழ்நாடு (இந்தியா)  

பணி: திரைப்பட நடிகை 

நாட்டுரிமை: இந்தியா 

பிறப்பு:

ஸ்ரீதேவி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் விருதுநகர் மாவட்டதிலுள்ள சிவகாசியில் ஆகஸ்ட் 13, 1963 ஆம் ஆண்டு பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை:

ஸ்ரீதேவி தனது தந்தையை “லம்ஹே” திரைப்பட படப்பிடிப்பின் போதும் மற்றும் தாயை “ஜூடாய்” படப்பிடிப்பின்போதும் இழந்தார். அவருடைய பெற்றோர்களை இளம் பருவத்திலேயே இழந்ததால், சமுதாயத்தில் பல பிரச்சனைகளை சந்திக்கவேண்டியதாயிற்று. 1986 மற்றும் 1987 ஆம் ஆண்டுகளில் ஸ்ரீதேவியையும், பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியையும் இணைத்து ஒரு சில வதந்திகள் பரவியது. ஆனால், மிதுன் சக்ரவர்த்தி அவரது மனைவி யோகிதா பாலியை விவாகரத்து செய்யவில்லை என்ற முடிவுக்கு வரவே அந்த பிரச்சனையும் அத்துடன் மறைந்தும்போனது. பின்னர், ஜூன் 2, 1996 ஆம் ஆண்டு ஸ்ரீதேவிக்கும், திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூருக்கும் திருமணம் நடைபெற்றது. ஸ்ரீதேவிக்கு, ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். அவருடைய திருமணத்திற்கு பிறகு, அவருடைய மைத்துனனான(கணவனுடன் பிறந்த) அனில் கபூருடன் நிறைய படங்கள் நடித்துள்ளார்.

திரைப்பட வாழ்க்கை:

தமிழ் நாட்டில் பிறந்து இந்திய திரைப்படத்துறையில் புகழ்பெற்று விளங்கிய ஸ்ரீதேவி,1967-ல் ‘கந்தன் கருணை’ என்ற தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.கதாநாயகியாக இவர் நடித்த முதல் திரைப்படம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1976ல் வெளிவந்த ‘மூன்று முடிச்சு’.ஆரம்ப காலத்தில் கமலஹாசன், ரஜினிகாந்த் போன்றவர்களுடன் பல திரைப்படங்களில் நடித்த இவர், பின்னர் மலையாளத் திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். ‘ஆலிங்கனம்’, ‘குட்டவும் சிக்க்ஷையும்’, ‘ஆத்யபாடம்’, ‘ஆ நிமிஷம்’ போன்றவை ஸ்ரீதேவியின் சிறந்த மலையாளத் திரைப்படங்கள் ஆகும்.

இந்தி திரை உலகில் ஸ்ரீதேவி:

1978 ஆம் ஆண்டு ஸ்ரீதேவிஇந்தி திரைப்படங்களில் அறிமுகமானார். ஆனால், இவர் நடித்த முதல் இந்தி திரைப்படமான “சோல்வா சாவன்” துரதிருஷ்டவசமாக வெற்றி பெறவில்லை. பின்னர், இவருடைய இரண்டாவது படமான “ஹிம்மத்வாலா” ஒரு பெரும் வெற்றியை தேடித்தந்ததோடு மட்டுமல்லாமல், இந்தி திரைப்படஉலகில் ஒரு நட்சத்திர அந்தஸ்தையும் பெற்றுத்தந்தது. அதன் பிறகு, அவருடைய “சத்மா” திரைப்படம் பெரும் புகழையும், பாராட்டுகளையும் தேடித்தந்தது.1980ஆம் ஆண்டு காலகட்டங்களில், இவர் ஒரு சிறந்த நடிகையென்று அனைவராலும் பாராட்டப்பெற்றார்.பின்னர், “சாந்தினி” திரைப்படம் பெரும் வெற்றியை தேடித்தந்தது மட்டுமல்லாமல், கோலிவுட்டில் அதிக சம்பளம் பெரும் நடிகைகளில் இவரும் ஒருவரென்ற அந்தஸ்தையும் தந்தது.

பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய மூன்றாம் பிறை:

பாலுமகேந்திராவின் இயக்கத்தில் 1983ஆம் ஆண்டு வெளிவந்த “மூன்றாம் பிறை” திரைப்படம், திரைப்பட உலகில் பல சாதனைகளைப்பெற்றது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் கமலுடன் மனநிலை பாதித்த ஒரு பெண்ணாக ஸ்ரீதேவி நடித்திருந்தார். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி, அனைவரையும் வியக்கவைத்தது மட்டுமல்லாமல், திரைப்பட உலகில் ஒரு புதிய பரிணாமத்தையும் ஏற்படுத்தியது எனவும் கூறலாம்.

திருமண வாழ்க்கைக்குப் பிறகு:

போனி கபூரை திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவைவிட்டு விலகியிருந்த ஸ்ரீதேவி, ஆறு ஆண்டுகள் கழித்து ஒன்றிரண்டு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். பின்னர் 14 ஆண்டுகளுக்கு பிறகு “இங்கிலீஷ் விங்கிலிஷ்” திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரைப்படத் துறையில் கால்பதித்தார். இப்படம் தமிழிலும், இந்தியிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டு 2012 ஆம் அண்டு அக்டோபர் 5ஆம் தேதி வெளியிடப்பட்டது. பிறகு தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

பத்மஸ்ரீ விருது:

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிபடுத்திய ஸ்ரீதேவிக்கு,2013 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று மத்திய அரசால் “பத்மஸ்ரீ” விருது வழங்கப்பட்டது.

விருதுகள்:

  • ‘பிலிம்பேர் விருது (தெற்கு)’–‘மீண்டும் கோகிலா’ என்ற தமிழ் படத்திற்காக வழங்கப்பட்டது.
  • சிறந்த நடிகைக்கான ‘பிலிம்பேர் விருது’,“சால்பாஸ்” திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
  • சிறந்த நடிகைக்கான ‘பிலிம்பேர் விருது’,“லம்ஹே” திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
  • ‘பிலிம்பேர் விருது’,“க்ஷன க்ஷனம்” என்ற தெலுங்கு படத்திற்காக வழங்கப்பட்டது.

மற்ற விருதுகள்: 

  • ‘நந்தி விருது’,“க்ஷன க்ஷனம்” என்ற தெலுங்கு படத்திற்காகவழங்கப்பட்டது.
  • “MAMI விருது” இந்தி சினிமாவில் இவருடைய சிறந்த பங்களிப்பிற்காகவழங்கப்பட்டது.
  • “வம்சி ஆர்ட்ஸ் தியேட்டர்  இன்டர்நேஷனல்”மூலமாக ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ கிடைத்தது.
  • ‘டொராண்டோ’ சிறந்த நடிகைக்கான விருதினை“தேவராகம்” படத்திற்காக வழங்கியது.

ஸ்ரீதேவியின் முக்கிய படைப்புகள்:

தமிழ்:

  • நம் நாடு (1969)
  • குமார சம்பவம் (1969)
  • மூன்று முடிச்சு (1976)
  • காயத்ரி (1977)
  • கவிக்குயில் (1977)
  • மனிதரில் இத்தனை நிறங்களா (1978)
  • முடிசூடா மன்னன் (1978)
  • பைலட் பிரேம்நாத் (1978)
  • மூன்றாம் பிறை (1983)

மலையாளம்:

  • குமார சம்பவம் (1969), முதல் மலையாள திரைப்படம்.
  • ஸ்வப்னங்கள் (1970)
  • பூம்பட்டா (1971)
  • தீர்த யாத்ரா (1972)
  • ஆசீர்வாதம் (1976)
  • அந்தர்தனம் (1977)
  • வேளாம்பல் (1977)
  • அவளுடே ராவுகள் (1978)
  • அம்மே நாராயணா (1984)
  • தேவராகம் (1996)

தெலுங்கு 

  • பங்காறக்க (1977)
  • எற்ற குலாபிழு (1978) (சிகப்பு ரோஜாக்கள்(தமிழ்) டப்பிங்)
  • கார்திகா தீபம் (1979)
  • வேட்டகாடு (1979)
  • அத்தகாடு (1980)
  • சுட்டளுன்னாரு ஜாகர்த்த (1980)
  • தேவ்டு இட்ச்சினா கொடுக்கு(1980)
  • கரான தொங்க (1980)
  • கக்க்ஷா (1980)
  • மாமா அல்லுல்லா சவால் (1980)

இந்தி (பாலிவுட்)

  • ஹிம்மத்தவாலா  (1983) 
  • ஜஸ்டிஸ் சௌத்ரி (1983) 
  • கலாக்கார் (1983) 
  • சத்மா (1983) 
  • இன்கிலாப் (1984) 
  • ஜாக் உட்டா இன்சான் (1984) 
  • நயா கதம் (1984) 
  • மக்சத் (1984) 
  • தோபா (1984) 
  • பலிதான் (1985) 
  • மாஸ்டர்ஜி (1985) 
  • சர்ஃபரோஷ் (1985)
  • பகவான் தாதா (1986) 
  • தர்ம அதிகாரி (1986) 
  • நகினா (1986) 
  • ஜான்பாஸ் (1986)(cameo) 
  • கர்ம (1986) 
  • சுஹாகன் (1986) 
  • ஔலாத் (1987) 
  • மிஸ்டர் இந்தியா (1987) 
  • சால்பாஸ் (1989) 
  • சாந்தினி (1989) 
  • பந்ஜாரன் (1991)
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துப் பெண்களுக்கும் #மகளிர்தினவாழ்த்துக்கள்!!

No automatic alt text available.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் தின வரலாறு!
மார்ச்-8, 1857 - அன்று முதல் உலகமெங்கும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தினம் மார்ச் மாதம் 8 -ம் தேதி கொண்டாடப்படுகிறது.
ஆனால், அது வந்த வரலாற்றை சற்று பின்னோக்கி பார்ப்போம். வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள், தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர் என்றால், அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றியே இந்த மகளிர் தினமாகும். இந்த உலக மகளிர் தினம் கொண்டாடுவதற்கு காரணமான‌ போராட்டத்திற்கான வெற்றிகள் அவ்வளவு எளிதாக கிட்டவில்லை. ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள்தான் இது.
1910-ம் ஆண்டு பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் உலகின் பல நாடுளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துகொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டினார். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜெர்மனி நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கிளாரா செர்கினே, ஒரு தீர்மானத்தை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினார். அந்த தீர்மானத்தின் முக்கிய சாரம்சமாக மார்ச் மாதம் 8-ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால், அந்த தீர்மானம் நிறைவேறாமல் போனது. இதற்கிடையில், 1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்டரா கேலன்ரா கலந்து கொண்டார். அவர்தான் உலக மகளிர் தினத்தை ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.
மார்ச் 8-ம் தேதிக்கும், மகளிருக்கும் என்ன சம்பந்தம் என்று உழைக்கும் கீழ்த்தட்டு பெண் வர்க்கமே அறிந்துகொள்ளாத தினமாகத்தான் இந்த பெண்கள் தினம் இன்று இருக்கிறது. 1789-ம் ஆண்டு ஜூன் 14-ம்‌ தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கைகளை முன் வைத்து, பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்த சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கு ஏற்ற ஊதியம், எட்டுமணி நேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்.
1907-ல் தொடக்கம். 1909-ல் அமெரிக்காவில் நடைபெற்ற முதல் தேசிய மகளிர் தினம், 1910-ல் இரண்டாவது தேசிய பெண்கள் மாநாடு, 1911-ல் அமெரிக்க மற்றும் ஐரோப்பாவில் நடைபெற்ற தேசிய மகளிர் தினம், 1912-ல் Bread and roses வாசகம், 1914-1916-ல் ரஷ்யா பெண்களுக்கான போராட்டம், 1917-ல் ரஷ்யாவில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்ட மகளிர் தினம், 1945 தனி பெண்ணுக்கான உரிமை, உலக பெண்களுக்கான உரிமையாக மாற்றப்பட்ட வருடம். 1975-1977 சர்வதேச மகளிர் தினமாக அறிவிக்கப்பட்டது. 2014-ல் 100-க்கு மேற்பட்ட நாடுகளில் தேசிய மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.சமீப காலமாகத்தான் இந்தியாவில் மகளிர் தின கொண்டாட்டங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் யாயினி உங்களுக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.