Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

11058719_1462055840751011_75736833166062

தமிழனுக்கு புகழாரம் சூட்டிய சிங்கப்பூரின் தந்தை இன்று மரணம் மனவேதனையோடு அவரின் உரையிலிருந்து இதை கண்ணீரோடு வெளியிடுவதோடு மறைந்த சிங்கப்பூரின் தந்தை முன்னால் பிரதமர் லீ குவான் யூவிற்கு பிரித்தானிய ஈழத்தமிழர் படை கண்ணீர் அஞ்சலியை செலுத்துகின்றது.

”பணிந்து போக தமிழன் என்ன நனைந்த கோழியா?” – சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ உணர்ச்சிப்பெருக்கம்!

சிங்களவர்களால், தமிழர்களை ஒரு போதும் அடக்க முடியாது. அவர்கள் அடங்கிப்போகவும் மாட்டார்கள். சிங்களவர்களுக்குப்பயந்து ஓடி ஒழிந்து விடவும் மாட்டார்கள். அதிலும் யாழ்ப்பாணத்தமிழர்களை வெல்லவே முடியாது. அதனால்தான் சிங்களவர்கள், தமிழர்களை நசுக்கி ஒடுக்க முனைகின்றார்கள் எனக்குறிப்பிட்டுள்ள சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ, தமிழர்களுக்குத்தனி நாடே தீர்வாகும்! எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

“லீ குவான் யூவுடனான உரையாடல்கள்” என்ற தலைப்பில் லொஸ் ஏஞ்சல்ஸைச்சேர்ந்த பேராசிரியர் ரொம் பிளேட் நூல் ஒன்றை எழுதியுள்ளார். இந்த நூலிலேயே “சிங்கப்பூரின் நவீன சிற்பி” என்று அழைக்கப்படும் சிங்கப்பூரின் முதல் பிரதமரும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ குவான் யூ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

சிங்களவர்கள் இலங்கையில் இருந்த காலம் முதல் தமிழர்களும் இருந்து வருகின்றனர். இருப்பினும் தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் அங்கு இல்லை. இலங்கை ஒரே நாடாக இருக்கும் வரையில் மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது. இலங்கையில் தமிழர்களுக்காகப்போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இலங்கையில் இன பிரச்சினைக்குத்தீர்வு காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த குறிப்பிட்டு வருகின்றார். இதனையே எல்லோரும் ஏற்கவும், நம்பவும் வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கின்றார்.

வீழ்ந்து விடா வீரம்! மண்டியிடா மானம்!

ஈழத்தமிழர்கள் அடங்கிப்போகவும் மாட்டார்கள். சிங்களவர்களுக்குப்பயந்து ஓடவும் மாட்டார்கள். தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்திருந்தாலும் சிறுபான்மையினராகிய தமிழர்களை வெல்லும் தகுதியும் துணிச்சலும் சிங்களவர்களுக்கு நிச்சயம் இல்லை. எல்லாவற்றையும் விட யாழ்ப்பாணத்தமிழர்களை சிங்களவர்களால் நிச்சயம் ஒரு போதும் வெல்லவே முடியாது. அதனால் தான் தமிழர்களை எல்லா வழிகளிலும் நசுக்கி ஒடுக்க முனைகின்றார்கள்.

சிங்களவர்கள் முன்பும் இப்படித்தான் செய்தார்கள். இதுதான் மிகப்பெரும் ஆயுதப்போராட்டமாக வெடித்தது. இப்போதும் அதையே செய்ய முனைகின்றார்கள். ஆனால் ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் அழித்து விட முடியும் என்ற சிங்களவர்களின் எண்ணம் நிச்சயம் நிறைவேறாது.

நடந்ததும், நடப்பதும் இன அழிப்பே!

இலங்கையில் தற்போது நடந்து கொண்டிருப்பது அப்பட்டமான இன அழிப்புத்தான். இதனால் தமிழர்கள் மீண்டும் ஆயுதப்பேராட்டத்தை தொடங்குவார்களா? என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் தமிழர்கள் பொறுமையோடு நீண்ட காலம் காத்திருக்க மாட்டார்கள். சிங்களவர்களை விட தமிழர்களுக்கே அதிகளவான மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்றார்.

சிங்களவர்களால், தமிழர்களை ஒரு போதும் அடக்க முடியாது. அவர்கள் அடங்கிப்போகவும் மாட்டார்கள். சிங்களவர்களுக்குப்பயந்து ஓடி ஒழிந்து விடவும் மாட்டார்கள். அதிலும் யாழ்ப்பாணத்தமிழர்களை வெல்லவே முடியாது. அதனால்தான் சிங்களவர்கள், தமிழர்களை நசுக்கி ஒடுக்க முனைகின்றார்கள் எனக்குறிப்பிட்டுள்ள சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ, தமிழர்களுக்குத்தனி நாடே தீர்வாகும்! எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

“லீ குவான் யூவுடனான உரையாடல்கள்” என்ற தலைப்பில் லொஸ் ஏஞ்சல்ஸைச்சேர்ந்த பேராசிரியர் ரொம் பிளேட் நூல் ஒன்றை எழுதியுள்ளார். இந்த நூலிலேயே “சிங்கப்பூரின் நவீன சிற்பி” என்று அழைக்கப்படும் சிங்கப்பூரின் முதல் பிரதமரும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ குவான் யூ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

சிங்களவர்கள் இலங்கையில் இருந்த காலம் முதல் தமிழர்களும் இருந்து வருகின்றனர். இருப்பினும் தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் அங்கு இல்லை. இலங்கை ஒரே நாடாக இருக்கும் வரையில் மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது. இலங்கையில் தமிழர்களுக்காகப்போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இலங்கையில் இன பிரச்சினைக்குத்தீர்வு காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த குறிப்பிட்டு வருகின்றார். இதனையே எல்லோரும் ஏற்கவும், நம்பவும் வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கின்றார்.

வீழ்ந்து விடா வீரம்! மண்டியிடா மானம்!

ஈழத்தமிழர்கள் அடங்கிப்போகவும் மாட்டார்கள். சிங்களவர்களுக்குப்பயந்து ஓடவும் மாட்டார்கள். தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்திருந்தாலும் சிறுபான்மையினராகிய தமிழர்களை வெல்லும் தகுதியும் துணிச்சலும் சிங்களவர்களுக்கு நிச்சயம் இல்லை. எல்லாவற்றையும் விட யாழ்ப்பாணத்தமிழர்களை சிங்களவர்களால் நிச்சயம் ஒரு போதும் வெல்லவே முடியாது. அதனால் தான் தமிழர்களை எல்லா வழிகளிலும் நசுக்கி ஒடுக்க முனைகின்றார்கள்.

சிங்களவர்கள் முன்பும் இப்படித்தான் செய்தார்கள். இதுதான் மிகப்பெரும் ஆயுதப்போராட்டமாக வெடித்தது. இப்போதும் அதையே செய்ய முனைகின்றார்கள். ஆனால் ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் அழித்து விட முடியும் என்ற சிங்களவர்களின் எண்ணம் நிச்சயம் நிறைவேறாது.

நடந்ததும், நடப்பதும் இன அழிப்பே!

இலங்கையில் தற்போது நடந்து கொண்டிருப்பது அப்பட்டமான இன அழிப்புத்தான். இதனால் தமிழர்கள் மீண்டும் ஆயுதப்பேராட்டத்தை தொடங்குவார்களா? என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் தமிழர்கள் பொறுமையோடு நீண்ட காலம் காத்திருக்க மாட்டார்கள். சிங்களவர்களை விட தமிழர்களுக்கே அதிகளவான மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்றார்

11080528_10153806011374237_7163980643605

சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் "லீ குவான் யூ" பற்றி.... தெரியாத பல விடயங்களை, உங்கள் பதிவு  மூலம் அறிந்து கொண்டேன்.

யாயினி, உங்கள் தேடல்கள் அருமையானவை.

  • Replies 3.9k
  • Views 330.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யூரி ககாரின்

Yuri Gagarin

Юрий Гагарин

Yuri_Gagarin_official_portrait.jpg

யூரி அலெக்சியேவிச் ககாரின் (ரஷ்ய மொழி: Юрий Алексеевич Гагарин> மார்ச் 9. 1934 - மார்ச் 27. 1968) விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். 
 
அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் ஏப்ரல் 12. 1961 அன்று சோவியத் ஒன்றியத்தின் வஸ்டொக் - 1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.
 
யூரி ககாரின் மாஸ்கோ மாநகருக்கு மேற்கே க்ஸாட்ஸ்க் பகுதியில் உள்ள குளூஷினோ என்னும் இடத்தில் மார்ச் 9. 1934 இல் பிறந்தார். இப்பகுதி பின்னர் ககாரின் எனப் பெயரிடப்பட்டது. இவரது பெற்றோர் கூட்டு விவசாயப் பண்ணை ஒன்றில் கடமையாற்றியவர்கள். சரடோவ் உயர் தொழிநுட்பக் கல்லூரியில் தொழிற்பயிற்சி பெற்று அங்கு மென் விமான ஓட்டுநராக பகுதிநேரங்களில் பயிற்சி பெற்றார். 1955 இல் ஒரென்பூர்க் விமா ஓட்டுநர் பாடசாலையில் (Orenburg Pilot's School) இல் இணைந்து மிக்-15 போர் விமான ஓட்டுநராக பயிற்சி பெற்று வெளியேறினார். அங்கு வலென்டினா கொர்யசோவா என்பவரை சந்தித்து 1957 இல் திருமணம் புரிந்தார். அவரது முதல் பணி நோர்வே எல்லையிலுள்ள மூர்மன்ஸ்க் பகுதியில் உள்ள இராணுவ விமானத்தளத்தில் ஆரம்பமானது.
 
1960 இல் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் சோவியத் விண்வெளித் திட்டத்தில் இணந்துகொண்ட 20 விண்வெளி வீரர்களில் ஒருவரானார் யூரி. இவர்களுக்கு அங்கு உடலியல் ரீதியிலும் உளவியல் ரீதியிலும் மிகவும் கடுமையான பயிற்சி கொடுக்கப்பட்டது. கடும் பயிற்சிக்குப் பின்னர் ககாரின், கெர்மன் டீட்டோவ் ஆகிய இருவரும் விண்வெளிப் பயணத்திற்குத் தெரிவானார்கள். இவர்களில் ககாரின் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பீடத்தால் விண்வெளியில் பயணிக்கும் முதல் மனிதராக அனுப்புவதற்காகத் தெரிவு செய்யப்பட்டார்.
 
ககாரின் ஏப்ரல் 12, 1961 இல் வஸ்தோக் 3KA-2 (வஸ்தோக் 1) விண்கலத்தில் பயணித்து விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன் என்ற பெயரைப் பெற்றுக் கொண்டார். விண்கலத்தில் முதன் முதல் பூமியை ஒரு முறை வலம் வந்தார். அவரது விண்கலம் 1:48 மணி நேரம் பறந்து, பூமியைக் குவிமையப்படுத்தி நீள்வட்ட வீதியில் [Elliptical Orbit], நெடுஆரம் [Apogee] 203 மைல், குறுஆரம் [Perigee] 112 மைல் உச்சியில் சுற்றி வந்தது
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலக திரையரங்கு தினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொதுஅறிவு

NEWS PAPER
 
N-NORTH
 
E-EAST
 
W-WEST
 
S-SOUTH
 
P-PAST   
    
A-AND
 
P-PRESENT
 
E-EVENT
 
R-REPORT

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சுவாமி விபுலாநந்தர் ...

Vipulanandar.jpg

சுவாமி விபுலாநந்தர் (மார்ச் 27, 1892 - ஜூலை 19, 1947) கிழக்கிலங்கையில் பிறந்து தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியவர். இலக்கியம், சமயம், தத்துவஞானம், அறிவியல், இசை முதலிய பல துறைகளில் கற்றுத் தேர்ந்தவர்.
  • கருத்துக்கள உறவுகள்

நாளை சனிக்கிழமை...(28.03.15) இரவு, ஒரு மணித்தியாலம் மின்சாரம் சேமிக்கும் தினம்.
அதன் படி.... ஒவ்வொருவரும்  தம் வீட்டில்... மின்சாரம் இல்லாமல் வாழ வேண்டும் என்று...
ஒரு அமைப்பு சொல்லியுள்ளது. அதன் நன்மை, பாதகமான... இணைப்புக்களையும் தேடித் தாருங்களேன்... யாயினி. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Canada set to go dark for Earth Hour

image.jpg

TORONTO - Canadians will be joining people around the world tonight in turning off their lights to mark Earth Hour.

Earth Hour was started in Australia in 2007 as a way to draw attention to environmental issues like climate change.

It has grown to a worldwide event involving 162 countries.

The event has been embraced by Canadian utilities, with many devoting space on their websites to the annual event.The main organizer, the World Wildlife Fund, is asking people to turn off their lights at 8:30 p.m. local time.

B.C. Hydro, for example, noted that for Earth Hour last year British Columbians reduced the provincial electricity load by one per cent -- the equivalent of turning off about 1.4 million lights.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றிரவு வட அமெரிக்காவில் 8:30 முதல் 9:30 வரை மின்விளக்குகளை அணைத்து பங்குபற்றுங்கள்.. அடுத்த வருடம் வீட்டுச்செலவு கூடினால் அதற்கு நாம் பொறுப்பல்ல. :rolleyes::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

palm sunday ...

11062016_10153258518980407_3772127211388

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

glitter_xmas_bells.gif

christiansymbol.jpg

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனவரி

26 - உலக சுங்க தினம்

30 - உலக தொழுநோய் ஒழிப்பு தினம்

பிப்ரவரி

14 - உலக காதலர் தினம்

மார்ச்

08 - உலக பெண்கள் தினம்

15 - உலக நுகர்வோர் தினம்

20 - உலக ஊனமுற்றோர் தினம்

21 - உலக வன தினம்

22 - உலக நீர் தினம்

23 - உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்

24 - உலக காசநோய் தினம்

28 - உலக கால்நடை மருத்துவ தினம்

ஏப்ரல் 

05 - உலக கடல் தினம்

07 - உலக சுகாதார தினம்

12 - உலக வான் பயண தினம்

18 - உலக பரம்பரை தினம்

22 - உலக பூமி தினம்

30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம்

மே

01 - உலக தொழிலாளர் தினம்

03 - உலக சக்தி தினம்

08 - உலக செஞ்சிலுவை தினம்

12 - உலக செவிலியர் தினம்

14 - உலக அன்னையர் தினம்

15 - உலக குடும்ப தினம்

16 - உலக தொலைக்காட்சி தினம்

24 - உலக காமன்வெல்த் தினம்

29 - உலக தம்பதியர் தினம்

31 - உலக புகையிலை மறுப்பு தினம்

ஜீன்

04 - உலக இளம் குழந்தைகள் தினம்

05 - உலக சுற்றுப்புற தினம்

18 - உலக தந்தையர் தினம்

23 - உலக இறை வணக்க தினம்

26 - உலக போதை ஒழிப்பு தினம்

27 - உலக நீரழிவாளர் தினம்

28 - உலக ஏழைகள் தினம்

ஜீலை

01 - உலக மருத்துவர்கள் தினம்

11 - உலக மக்கள் தொகை தினம்

ஆகஸ்ட்

01 - உலக தாய்ப்பால் தினம்

03 - உலக நண்பர்கள் தினம்

06 - உலக ஹிரோஷிமா தினம்

09 - உலக நாகசாகி தினம்

18 - உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்

செப்டம்பர்

08 - உலக எழுத்தறிவு தினம்

16 - உலக ஓசோன் தினம்

18 - உலக அறிவாளர் தினம்

21 - உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்

26 - உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்

27 - உலக சுற்றுலா தினம்

அக்டோபர்

01 - உலக மூத்தோர் தினம்

02 - உலக சைவ உணவாளர் தினம்

04 - உலக விலங்குகள் தினம்

05 - உலக இயற்கைச் சூழல் தினம்

08 - உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்

09 - உலக தபால் தினம்

16 - உலக உணவு தினம்

17 - உலக வறுமை ஒழிப்பு தினம்

24 - உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்

30 - உலக சிந்தனை தினம்

நவம்பர்

18 - உலக மனநோயாளிகள் தினம்

19 - உலக குடியுரிமையாளர்கள் தினம்

26 - உலக சட்ட தினம்

டிசம்பர்

01 - உலக எய்ட்ஸ் தினம்

02 - உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்

10 - உலக மனித உரிமைகள் தினம்

14 - உலக ஆற்றல் தினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கில எழுத்துக்களின் அதிசயம்!

abcd.jpg

ஆங்கில எழுத்துக்களில் A, B, C & D எனும் நான்கு எழுத்துக்களும் ஒன்றில் தொடங்கி 99 வரையிலான எண்களுக்கான ஆங்கிலச் சொற்களில் (spellings) இடம் பெறவில்லை. முதல் முறையாக Hundred என்ற சொல்லில் D எனும் எழுத்து இடம் பெற்றிருக்கிறது.

ஆங்கில எழுத்துக்களில் A, B & C எழுத்துக்கள் ஒன்றில் தொடங்கி 999 வரையிலான எண்களுக்கான ஆங்கிலச் சொற்களில் எங்கும் இடம் பெறவில்லை. முதல் முறையாக Thousand என்ற சொல்லில் A எனும் எழுத்து இடம் பெற்றிருக்கிறது.

ஆங்கில எழுத்துக்களில் B & C எழுத்துக்கள் ஒன்றில் தொடங்கி 999,999,999 வரையிலான எண்களுக்கான ஆங்கிலச் சொற்களில் எங்கும் இடம் பெறவில்லை. முதல் முறையாக Billion என்ற சொல்லில் B எனும் எழுத்து இடம் பெற்றிருக்கிறது.

இன்னொரு சுவையான தகவல் C எனும் எழுத்து எந்த எண்ணிற்கான சொல்லிலும் இல்லை.

-கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

coconut-tree.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கத்தோடு...பதின் ஏழாவது ஆண்டில் கால் பதிக்கும் யாழுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்..இன்னும் பல்லாண்டு யாழ் எங்களோடு நிலைத்து இருக்க வேண்டுகின்றேன்.இது எனது அவா..

yarl17.jpg

congratulations-clipart-congratulations-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய காலை வணக்கம்.....

11121998_1559067391042717_1427273223_n.j

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1610103_711975615509882_1822000208_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடலில் மிதந்து வந்த ரதம்: அச்சத்தில் உறைந்த மக்கள் [ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 04:45.31 PM GMT +05:30 ] ratham_001.jpgராமநாதபுர மாவட்டத்தில் ரதம் ஒன்று கடலில் மிதந்து வந்ததால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள காரங்காடு கடற்கரை கிராமத்தில் உள்ள கடலில் மிதந்து வந்த சுமார் 3 அடி உயர ரதம் ஒன்று கரை ஒதுங்கியது.

பட்டுத் துணிகளால் சுற்றப்பட்ட ரதத்தில், மண்பானை ஒன்றும், ஜாக்கெட் ஒன்றும் இருந்தன. பார்ப்பதற்கு பில்லி சூனிய விவகாரம் போல இருந்ததால், அச்சமடைந்த அப்பகுதி மக்கள் கடற்கரையில் கூடிவிட்டனர்.

ரதத்தில் ‘நாகம்மா ரதம், புங்குடுதீவு’ என தமிழில் எழுதப்பட்டிருந்தது.

மேலும் அதில் ஒரு கைப்பேசி நம்பரும் எழுதப்பட்டிருந்தது. அந்த நம்பரை தொடர்புகொண்டபோது, மறுமுனையில் பேசிய நபர், இலங்கை புங்குடுதீவில் உள்ள நாகம்மா கோயிலில் இருந்து ரதம் விட்டோம், உங்கள் பகுதிக்கு வந்து விட்டது, அதை கடலிலேயே விட்டு விடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

இது எனது  அம்மம்மாவின் ரதம்.

அட... யாயினியின் அம்மம்மாவின் ரதம்,

இந்திய, இலங்கை கடற்படைகளின் கண்களில் படாமல், இராம நாதபுரம் வரை சென்று...

அந்த ஊர் மக்களையும் ஆச்சரியப் படுத்தி, பத்திரிகை செய்தி ஆகிவிட்டது.

நல்ல, ஆச்சரியமான செய்தி. :)

அந்த ஜக்கெற் ஏன்... அந்த ரதத்தில் வைக்கப்பட்டது யாயினி. :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மெல்லெனப்பாயும் தண்ணீர் கல்லையும் உருக்கிப் பாயும்...

இனிய காலை வணக்கம்....

10257912_622083914537428_235810399333970

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
இன்று முட்டாள்கள் தினம்....யாராச்சும் உங்களை முட்டாளாக்கினார்களா......
 
10171041_486264748144966_914645970_n.jpg

எப்படி வந்தது முட்டாள் தினம்?

ஏப்ரல் முதல் தேதி, உலகமெங்கும் முட்டாள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அன்று யாரை ஏமாற்றி 'முட்டாள்' ஆக்கினாலும், அவர்கள் கோபித் துக்கொள்ள மாட்டார்கள். முட்டாள்களுக்காக ஒரு தினம் கொண்டாடவேண்டும் என்ற யோசனையை வெளியிட்டவர் பாஸ்வெல் என்பவர்தான்!

சூரிய வழிபாட்டுக்கும் இந்த விழாக் கொண்டாட் டத்திற்கும்கூடச் சம்பந்தம் இருப்பதாகப் பழைய நூல்களிலிருந்து தெரிய வருகிறது.

ஆதி குடிகளான ஸெல்ட் சாதியினர், லியூ என்ற சூரியக் கடவுளைக் குறித்து இந்த வசந்த விழாவைக் கொண்டாடினர். இதில் முக்கிய அம்சம், ஒருவர் மற்றொருவரை ஏமாற்றிக் கிண்டல் செய்வதாகும்.

இப்படி முட்டாளாக்கப்படுபவர்களை பிரான்ஸில் 'ஏப்ரல் ஃபிஷ்(மீன்)' என்றழைக்கிறார்கள். அக்காலத்தில் ஏப்ரலுக்கு ஏப்ரல் ஆங்கில வருடப்பிறப்பு கொண்டா டப்பட்டு வந்தது. அந்த வருடப் பிறப்பன்று பிறரை முட்டாள்களாக்கிக் குதூகலமாகக் கொண்டாடி வந்தனர். ஏப்ரல் முட்டாள் விளையாட்டுக்களெல்லாம் அன்று காலை வேளையில் மட்டும்தான் செய்யப்பட வேண்டும். மாலையில் கிண்டல் செய்தால், கிண்டல் செய்பவரேதான் முட்டாள்!

இதைக் குறிப்பிடும் ஒரு கவிதை...

'மார்ச் மறைந்தது; ஏப்ரல் வந்தது. நீதான் முட்டாள்; நானில்லை!' (March has gone and April comes; you are a fool and I’m none...

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட... யாயினியின் அம்மம்மாவின் ரதம்,

இந்திய, இலங்கை கடற்படைகளின் கண்களில் படாமல், இராம நாதபுரம் வரை சென்று...

அந்த ஊர் மக்களையும் ஆச்சரியப் படுத்தி, பத்திரிகை செய்தி ஆகிவிட்டது.

நல்ல, ஆச்சரியமான செய்தி. :)

அந்த ஜக்கெற் ஏன்... அந்த ரதத்தில் வைக்கப்பட்டது யாயினி. :rolleyes:

இது தான் அந்த தேர்..
 
11128168_10204033845581719_9114071416792

இந்த ரதம் பிரச்சனைக்கு உரியவர்களது கண்ணில் படாமல் இராமேஸ்வரம் வரை சென்றது,எல்லோருக்கும் ஆச்சரியமான செய்தியாகத் தான் இருக்கிறது..மற்றபடி அந்த ரதத்தில் ஜாக்கெட் எல்லாம் வைக்கப்பட இல்லை...சீலை,சட்டை தான் வைத்து விட்டதாக சொல்கிறார்கள்..இந்திய மக்கள் சாறிசட்டையை ஜாக்கெட் என்று அழைப்பது வழமையாம்..அவ்வாறே ஆச்சியின் சாறி சட்டையையும்  ஜாக்கெட் என்று எழுதி இருக்கிறார்கள்...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதுமையாக இருக்கின்றது. :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Good morning  .... 

Have a nice day

1965500_919149218125853_3254208788039033

கனவுகளையும் கற்பனைகளையும்

நான் வெறுக்கிறேன் ,

அவை எத்தனை அழகாயினும்

நிழல்களின் ஒப்பந்தங்களை விட

நிஜங்களின் போராட்டமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.