Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1902982_478679525608400_8911680072507372

  • Replies 3.9k
  • Views 330.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1794533_762397470460737_5151258312968831

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1621906_716934558340362_929158112_n.jpg?

வணக்கம் யாயினி

உங்கள் திரியில் மிகவும் நல்ல புதிய விடயங்களை எடுத்து வருவது, உங்கள் திரியை தேடி வாசிக்க வைக்கின்றது.  உங்கள் தேடல் தொடர்வதோடு எமக்கும் பல புதிய விடயங்கள் அறிய முடிகின்றது. நன்றியோடு உங்கள் இந்த நல்ல சேவைக்கு பாராட்டுக்கள் யாயினி!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் யாயினி

உங்கள் திரியில் மிகவும் நல்ல புதிய விடயங்களை எடுத்து வருவது, உங்கள் திரியை தேடி வாசிக்க வைக்கின்றது.  உங்கள் தேடல் தொடர்வதோடு எமக்கும் பல புதிய விடயங்கள் அறிய முடிகின்றது. நன்றியோடு உங்கள் இந்த நல்ல சேவைக்கு பாராட்டுக்கள் யாயினி!!

 

வணக்கம் தமிழினியக்கா.

உங்கள் வருகைக்கும்,கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

சங்ககால மலர்கள்.

அ வரிசை

1.அடும்பு அல்லது அடம்பு (Beach Morning Glory / Goat's Foot; Ipomoea pes-caprae) என்பது ஒருவகையான படரும் கொடி ஆகும். இது கடற்கரையிலும் வறண்ட மணல் மேட்டிலும் படர்ந்து வளரும். சங்க இலக்கியங்களின் பல பாடல்களில் நெய்தல் நிலத்திலே விளைவதை குறித்துள்ளனர்.

220px-Ipomoea_pes-caprae_2.JPG

 

2. அதிரல்:250px-Derris_scandens_Blanco1.232-croppe

அ.வரிசை

 

3.அவரை:220px-Beans%2C_flat-beans_in_plant.JPG

 

 

4.அனிச்சை அல்லது அனிச்சம்:220px-Anagallis_arvensis_2.jpg

 

 

5.ஆத்தி 220px-Starr_061223-2727_Bauhinia_x_blake

 

 

சங்ககால மலர்கள் (2)

 

6.ஆம்பல்:250px-Wei%C3%9Fe_Seerose_8_Juni_2003.JPG

 

7.ஆரம்: 220px-Santalum_album_-_K%C3%B6hler%E2%80

 

8.ஆவிரை என்பது இக்காலத்தில் ஆவாரம்பூ என வழங்கப்படுகிறது:250px-A_Cassia_auriculata_shrub.jpg

 

9.இருள்நாறி (இருள்வாசி அல்லது இருவாச்சி) என வழங்கப்பட்ட பூவைக் குறிஞ்சிப்பாட்டு நள்ளிருள்நாறி என விளக்குகிறது:220px-Millingtonia_hortensis_flower.jpg

 

10.இலவம் :222px-Tree_ILAVU.jpg

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய காலை வணக்கம் உறவுகளே.....இன்று நவராத்திரி ஆரம்பம்.

 

 

285598_483251338375353_2010957030_n.jpg?

 

557599_480727231961097_1669233758_n.jpg?

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சகலகலாவல்லி மாலை (SAKALAKALA VALLI MAALAI)

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1525696_973341396024659_1972568734767243

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10302161_10202953244606636_3895086142559

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10314771_764872400213244_918887711697470

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பக்கத்தில் வரும் அத்தனை இணைப்புக்களும் அருமை.

தொடருங்கள் யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பக்கத்தில் வரும் அத்தனை இணைப்புக்களும் அருமை.

தொடருங்கள் யாயினி

 

 கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அறுகம் புல்

 

அறுகம்புல்லுக்கு ஆயுள் முடிவு என்பதே இல்லை.காய்ந்து தீய்ந்து மண்ணோடு மக்கிப் போயிருக்கும் சில துளி மழை விழுந்தால் மறுபடியும் பசுமையோடுசிலிர்த்தெழுந்து முழைக்கும்.

மெய்ஞான லட்சியங்கள் அறுகம்புல்லைப் போன்றவை.அவை மக்கினாலும் மடிந்து போகாது.தருணம் பார்த்து மீண்டும் முழைக்கும் வெற்றி பெறும் வரை ஓய்ந்தும் போகாது.

 

 

 

படித்ததை பகிர்கிறேன்.

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அறுகம்புல் தாவர வர்க்கத்தில் மிகவும் பழைமையான வகையைச் சேர்ந்தது. காலம்காலமாக அது பல்வேறு வளர்ச்சிப் படிகளைக் கடக்கின்றது என்றும் கூறலாம். அறுகம்புல் கடும் வரட்சியைத் தாங்கக் கூடியது. இதன் அமோக வளர்ச்சிக்கு புல்லின் வேர்களில் சிறிதளவு ஈரலிப்பு இருந்தால் போதும். ஆடு, மாடு, குதிரை, முயல், மான் போன்றவற்றிற்கு இது உகந்த உணவாகும். வரிக்குதிரைகள் புல்மேயும் சந்தர்ப்பங்களில் அறுகம் புல்லை தேடி மேயும் இயல்புடையது. குதிரைகள் மின்னல் வேகத்தில் விரைவாக ஒடுவதற்கும் அவற்றின் வலிமை, ஆற்றல் என்பனவற்றை அளிப்பது அறுகம்புல்தான் என்று கூறினாலும் மிகையாகாது. காட்டுப்பன்றிகள் அறுகம்புல்லின் வேர்களை உண்பதற்காகத் தான் தோட்ட மண்ணில் நீண்ட குழிகளை அவற்றின் மூக்கால் தோண்டி விடுகின்றன என்பது கண்கூடு.

ஏலவே அறுகம் புல்லின் முக்கியத்துவம் விலங்குகளுக்கு இன்றியமையாத தொன்றாகும் எனவும் கொள்ளலாம். சர்ப்பங்களின் பரம எதிரியான கீரி பாம்புடன் சமர் புரிந்து அதற்கு காயங்களை ஏற்படுத்தியும் விடுகின்றது.

சண்டையின் போது பாம்பின் இரத்தம் கீரிப்பிள்ளையின் வாயில் படுவதற்கு நிறைய சந்தர்ப்பம் உண்டாகின்றது. சமர் நிறை வடைந்ததும் சர்ப்பத்தின் உயிர் ஊசலாடும் நிலையில் கீரி உடனடியாகவே அறுகம் புல்லைத் தேடி ஓடுகின்றது. அப்புல்லைப் போதுமான அளவு புசித்தபின் அதன் மேல் விழுந்து ஆசை தீர உருண்டு புரள்கின்றது.

வீட்டு விலங்குகளான பூனை, நாய் போன்றவை கூட சில நேரங்களில் அறுகம்புல்லை பெரும் சிரமத்தின் மத்தியில் தெரிவு செய்தபின் அதனை மென்று தின்ற பின் கல்சியம், பொஸ்பரஸ், பொட்டாஷ், என்ஃபிரி வடிசாறு என்பன குருதியில் கலந்ததும் கக்கி விடுகின்றன. இதனை நாம் சாதாரணமாக அவதானிக்கக் கூடியதாகவுமுள்ளது. பிராணிகளுக்கு துரதிஷ்ட வசமாக அறுகம்புல் கிடைக்காத பட்சத்தில் அறுகம்புல் வகையைச் சேர்ந்த பிறபுற்கள் கைகொடுத்து உதவுகின்றன. வீட்டுக் கோழிகள் கூட அறுகம்புல்லை உண்ணாமல் கீரை வகைகளை முக்கியமாக பசளி, பொன்னாங்கானி போன்றவற்றை கொத்தி தின்று விடுகின்றன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய காலை வணக்கங்கள்.

 

382124_511874275513059_125314247_n.jpg?o


உன்னால் சாதிக்க முடியாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒரு போதும் எண்ணாதே!விவேகானந்தர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

54879_414300758603745_1023213017_o.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.

- தந்தை பெரியார்

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒருபார்வை….!

17வது ஆசிய விளையாட்டு போட்டிகள் (ஆசியாட்) தென்கொரியாவின் இன்சொன் நகரில் கடந்த செப்டெம்பர் 19-ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகின. 16 தினங்கள் நீடிக்கும் இப்போட்டிகளில் ஆசிய ஒலிம்பிக் பேரவையில் அங்கம் வகிக்கும் 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 13,000 வீர, வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 17வது ஆசிய விளையாட்டு விழாவில் 36 வகையான விளையாட்டுப் போட்டிகளில் 439 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

1986 (சியோல்), 2002 (பூசான்) ஆகிய ஆசிய விளையாட்டுப் போட்டிகளைத் தொடர்ந்து மூன்றாவது தடவையாக (2014 இன்சொன்) தனது சொந்த மண்ணில் தென்கொரியா ஆசிய விளையாட்டுப் போட்டிகளை அரங்கேற்றுகின்றது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் (1958 டோக்கியோ) தங்கப்பதக்கம் வென்ற முதல் இலங்கை வீரர் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் ஆவார். இவர் உயரம் பாய்தல் போட்டியில் (2.03மீற்றர்) தங்கப்பதக்கத்தினை வெற்றிகொண்டு சாதனை படைத்தார்.

10703524_860897067256943_267770544729917

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆள் காட்டி குருவி பற்றிய தகவல்கள்

ஆங்கிலத்தில் இதை லேப்விங் (Lapwing)என்று அழைப்பார்கள். நம் நாட்டில் இரண்டு வகையான லேப்விங்களைக் காணலாம். இவை எல்லோ வேட்டில்ட் லேப்விங் (Yellow wattled Lapwing) ரெட் வேட்டில்ட் லேப்விங் (Red wattled Lapwing) என்பவை ஆகும். வேட்டில் என்பது இப்பறவையின் அலகு ஆரம்பிக்கும் இடத்தில் தலையின் இரு பக்கங்களிலும் காணப்படும் தோல் போன்ற ஒரு உறுப்பாகும். இதன் நிறத்தை வைத்துதான் இந்த இரண்டு பெயர்கள்.

ஆள் காட்டிக் குருவிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பது மரக் கிளிகளிலோ அல்லது மரப் பொந்துகளிலோ கூடு கட்டி அல்ல, தரையில் தான். தரையில் கூடு என்றவுடன் ஏதோ தேன் சிட்டு, தையல்காரக் குருவி, தூக்கணாங்குருவி போல நன்றாகக் கூடு கட்டியிருக்கும் என்று நினைக்காதீர்கள். தரிசல் நிலங்கள், வயல் வெளிகள், ஆறு குளங்களில் நீர் வற்றிய இடங்கள் இவற்றில் சிறிய கற்கள் பலவற்றை ஒரு குழிவான தட்டு போல சேகரித்து அவற்றின் நடுவே முட்டை இடும்.

இக்குருவி இடும் புள்ளிகள் கொண்ட முட்டைகளின் நிறம் சற்று ஆச்சரியம் அளிக்கக் கூடியது. சுற்றுப்புர நிலத்தின் நிறத்திற்க்கு ஏற்ப செம்மண் கலரிலோ ஸ்லேட் கலரிலோ இவை இருக்கும். அப்படி இருந்தால் தானே எதிரிகளின் கண்களில் இம்முட்டைகள் சட்டென்று தென்படாது ?

பறவைகளின் முட்டைக்கு ஓடு உண்டாவதோ அந்த ஓட்டிற்கு நிறம் தீர்மானிக்கப் படுவதோ முட்டைகள் ஜனன உருப்பிலிருந்து கிளம்பிக் கீழ் இறங்கி வெளிவரும்போது கடைசியாக நிகழும் ஒரு சம்பவமாம். இந்தப் பறவைகளுக்கு கூடு இருக்கும் நிலத்தின் நிறத்தைக் கண்டறிந்து அதற்கேற்ப முட்டையின் நிறத்தை மாற்றும் சக்தி இருக்க வேண்டும்.

ஆள்காட்டிக் குருவி தனது முட்டைகளை எப்படி மிகக் கவனமாக காப்பாற்றிக் கொள்கின்றன என்று பாருங்கள்.

ஓரு பறவை அடைகாத்துக் கொண்டிருக்கும் போது மற்றொரு பறவை சற்றே உயரமான இடத்தில் நின்று கொண்டிருக்கும். ஆடு மாடுகளோ, மனிதர்களோ தரையில் உள்ள முட்டைகளை நோக்கி நடந்தால், காவல் காக்கும் பறவை, “கிரக்...கிரக்...” என அபாய ஒலி எழுப்பும். உடனே அடைகாத்துக் கொண்டிருக்கும் பறவை எழுந்திருக்காமல் குனிந்தபடியே சிறு தூரம் நடந்து சென்று பின் இரு பறவைகளுமாக ஆகாயத்தில் கிளம்பி கூட்டை நோக்கி நடப்பவரை / நடப்பதை விமானம் தாக்குவது போலத் (dive bombing) தாக்குதல் நடத்தும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அறிஞர் அண்ணா பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

அறிஞர் அண்ணா அமெரிக்க நாட்டின் யேல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள மாணவர்களிடம் உரையாடினார். உரையாடலின் இடையே ஒரு மாணவர் எழுந்து ‘தாங்கள் ஆங்கிலத்திலும் வல்லவர் என்று தெரியும். ஆங்கில எழுத்துகளான ‘A,B,C,D’ ஆகிய நான்கு எழுத்துகளும் வராத நூறு வார்த்தைகளைக் கூற முடியுமா?’ எனக் கேட்டார். உடனடியாக விடையளித்தார் அறிஞர் அண்ணா. வியப்பாக இருக்கிறதா? ஒன்று முதல் தொண்ணூற்று ஒன்பது வரையிலான எண்களை ஆங்கிலத்தில் சொன்னார் அவர். நூற்றை ஆங்கிலத்தில் சொன்னால் அதில் ’D’ என்னும் எழுத்து வந்து விடும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த போது ‘STOP’ எனக் கூறி நிறைவு செய்தார். இதற்கும் மேல் அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் ஓர் தமிழ் தேசியவாதி , தமிழ் அறிஞர். ஆகவே தாய்மொழி தமிழைத் தவிர்த்து / சிதைத்து ஆங்கிலப் புலமையுள்ளவராக வர முடியும் என்பது ஒரு கனவு என்பதை புரிந்து கொள்வார்களா?

ஒரு முறை நேரு தமிழகம் வந்திருந்த போது பள்ளிக்கூடம் ஒன்றிற்குச் சென்று உரையாற்றினார். நேரு ஆங்கிலத்தில் உரையாற்ற, மொழிபெயர்ப்பாளர் அதைத் தமிழில் மொழிபெயர்த்தார். ஒரு கட்டத்தில் நேரு, ‘வேறு யாராவது மொழிபெயர்க்கிறீர்களா?’ எனக் கேட்டார். அப்போது அங்கிருந்த பள்ளி மாணவர்களில் ஒருவன் எழுந்து சென்று அவருடைய பேச்சை மொழிபெயர்த்தான். அம்மாணவன் தான் பின் நாளில் அறிஞர் அண்ணா!

ஒருமுறை அறிஞர் அண்ணாவிடம் ‘பிகாசு’(Because) என்னும் ஆங்கிலச்சொல் மூன்றுமுறை வருமாறு ஓர் ஆங்கிலச் சொற்றொடர் கூறுமாறு கேட்டார்கள். உடனடியாக அண்ணா சொன்னார் – “No sentence ends with because because ‘Because’ is a conjunction”

அறிஞர் அண்ணாவைப் பார்க்க இங்கிலாந்தைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் வந்திருந்தார். அச்செய்தியாளர் ‘அறிஞர் அண்ணா ஆங்கிலத்திலும் உலகச் செய்திகளிலும் வல்லவர் இல்லை; பன்னாட்டு அவை(‘UNO’) பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது’ என்னும் எண்ணம் கொண்டிருந்தார். அண்ணாவை எப்படியாவது கேள்வியில் மடக்கி விட வேண்டும் என எண்ணிப் “பன்னாட்டு அவையைப் பற்றித் தங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். அவ்வினாவிற்கு அண்ணா அளித்த விடையில் அச்செய்தியாளர் கொண்டிருந்த இறுமாப்பு அடியோடு தகர்ந்தது. என்ன சொன்னார் அண்ணா என்கிறீர்களா?

“ஐ நோ யுனோ. ஐ நோ யு நோ யுனோ. பட் யு டோன்ட் நோ ஐ நோ யுனோ.”

(“I know UNO. I know – you know UNO. But you don’t know I know UNO” )

இதற்கும் மேல் அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் ஓர் தமிழ் தேசியவாதி , தமிழ் அறிஞர். ஆகவே தாய்மொழி தமிழைத் தவிர்த்து / சிதைத்து ஆங்கிலப் புலமையுள்ளவராக வர முடியும் என்பது ஒரு கனவு என்பதை புரிந்து கொள்வார்களா?

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10574226_494932280643247_211657899190707

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படித்ததில் பிடித்த கவிவரிகள்.....

பலவீனமான சிநேகிதமென்றால்

பார்த்து நடந்து கொள்ளுங்கள் ஏனெனில்

சிநேகிதம் பிரியும்போது

செத்து போய்விடும் வாழ்க்கை

சிரிக்க சிரிக்க பேசும் நட்போடு

சிந்திக்க சிந்திக்க பேசும் நட்பும்

கலவையாகி கையில் கிடைத்தால்

கடவுள் கொடுத்து வரத்திற்கு ஈடு ஏது?

என் கண்ணில் நீர் வந்தால்

உன் நக கண்ணிலும் அழுகை வர

என் கண்ணை உன் விரல் துடைக்கும்போது

உன் நக கண்ணும் நகைக்கும் அதுதான் நட்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.