Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடும் வறட்சியினால் பாரிய சிக்கல்களை எதிர்நோக்க்கும் தமிழீழ மக்கள்!-படங்கள்

Featured Replies

கடந்த காலங்களில் மழை, வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட தமிழீழ  மக்கள் தற்போது கடுமையான வறட்சி காரணமாக பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர்.
pathivu%20eelam%20news-1.JPG
தற்போது  ஏற்பட்டுள்ள கடும் வறட்சியினால், நாளாந்த குடிநீர் தேவையை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாதவொரு துயர நிலையை தமிழீழ   மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
pathivu%20eelam%20news-2.JPG
 வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் தற்போது நிலவி வரும் வரட்சியால் பெரும்பாலான ஆறுகள், குளங்கள் மற்றும் கிணறுகள் வற்றிப்போயுள்ளன.
pathivu%20eelam%20news-3.JPG
இதனால் விவசாய நடவடிக்கைகள் மாத்திரம் அன்றி மக்களின் குடிநீர் தேவையைக் கூட பூர்த்தி செய்ய முடியாதவொரு அவல நிலை தோன்றியுள்ளது.

இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியினால் குடிநீரின்றி கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
pathivu%20eelam%20news-8.JPG
வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியினால், விவசாய நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
pathivu%20eelam%20news-9.JPG
தற்போது மாவட்டத்தின் சிறிய குளங்கள் அனைத்தும் முற்றாக வற்றியுள்ளதாகவும், நடுத்தர குளங்களில் ஓரளவு நீர் காணப்படுகின்ற போதிலும், இன்னும் சில தினங்களுக்குள் அந்த நீரும் வற்றிப்போய் விடும் என எமது  செய்தியாளர் சுட்டிக் காட்டுகின்றார்.
pathivu%20eelam%20news-4.JPG
இதேவேளை பிரதேச சபைகள் மற்றும் பிரதேச செயலகத்தினால் குடிநீர் விநியோகிக்கப்படுகின்ற போதிலும், மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாதுள்ளது.

-பதிவு இணைய சிறப்பு செய்தியாளர்-

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வரட்சிக்காரன சூழலியல் காரணிகளை வடக்கு கல்விசார் மையங்கள் கண்டறியவும்.. மக்கள் வரட்சி நிவாரணங்களை..  பெற வசதி செய்து கொடுப்பதோடு.. நீர்த்தேவையை பூர்த்தி செய்யும் வகைக்கு சம்பந்தப்பட்ட நிர்வாக அமைப்புக்கள் மக்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும்.

 

இந்தச் சூழலைப் பயன்படுத்தி.. கிணறுகளை.. குளங்களை ஆழப்படுத்தல்.. செப்பணிடுதல் பணிகளையும் மேற்கொள்ள மக்களுக்கு உதவ வேண்டும்..! சீரான நீர் வடிகால் அமைப்புக்கள் நிறுவப்படுதலும் அவசியம். நீர் சேமிப்புத் திட்டங்களை மக்கள் அமுலூக்க வழிகாட்டுதலும்.. ஊக்குவிப்பும் நல்குதல் அவசியம்.

 

கடல் நீரை நன்னீராக்கும்.. திட்டங்களை அமுலாக்க யோசிக்கலாம். இதற்கு.. வெளிநாடுகளில் இருந்து நிபுணத்துவ உதவிகளை பெற்றுக் கொள்வதும் நல்லது..!

 

இந்த வரட்சிச் சூழலை.. ஒரு மாற்றத்துக்கான சீர்ப்படுத்தலுக்கான சந்தர்ப்பமாகவும் பயன்படுத்துதல் தான்.. நிர்வாகத் திறமை என்று எடுத்துக் கொள்ள முடியும். :icon_idea:

நீண்ட கால , தூர நோக்கம் கொண்ட water management திட்டங்கள் அமுல் படுத்தும் நேரம் நெருங்கி விட்டது . யாராவது இதனை ஆராய்ந்து அறிக்கை உள்ளதா ?

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட கால , தூர நோக்கம் கொண்ட water management திட்டங்கள் அமுல் படுத்தும் நேரம் நெருங்கி விட்டது . யாராவது இதனை ஆராய்ந்து அறிக்கை உள்ளதா ?

 

 

வேண்டாம்  ராசா

அழுதிடுவன் சொல்லிப்போட்டன்.. :(  :(  :( 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.