Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் போராளி வெற்றிச்செல்வி பயங்கரவாத தடுப்புப் பிரிவால் விசாரணை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் போராளி வெற்றிச்செல்வி பயங்கரவாத தடுப்புப் பிரிவால் விசாரணை!

குளோபல்தமிழ் விசேட செய்தியாளர்

09 செப்டம்பர் 2014

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி எழுத்தாளர் வெற்றிச்செல்வி என்று அழைக்கப்படும் வேலு சந்திரகலா நேற்றைய தினம் வவுனியா பயங்கரவாத தடுப்புப் பிரிவால் அழைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தபடுத்தப்பட்டுள்ளதாக குளோபல் தமிழ் செய்தியாளர் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்ட வெற்றிச்செல்வி வெடி விபத்து ஒன்றின்போது தனது கண் ஒன்றையும் கை ஒன்றையும் இழந்தவர். மாற்று வலுவுள்ளவரான வெற்றிச்செல்வி போர் மற்றும் சமூக அவலங்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான கல்விச் செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்தி வருகின்றார்.

மன்னார் அடம்பனைச் சேர்ந்த இவர் ஓர் எழுத்தாளாவார். மாற்று வலு உள்ளவர்கள் குறித்தும் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். தனது வாழ்வாதாரத்திற்காக சுயதொழில் முயற்சிகளிலும் ஈடுபடுகின்றார்.

புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு நிலையில் தன் வாழ்க்கையை இவ்வாறு போராட்டத்துடன் தொடரும் எழுத்தாளர் வெற்றிச்செல்வி விசாரணைக்காக வவுனியா பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினாரால் அழைக்கப்பட்டுள்ளார். அங்கு நேற்றைய தினம் முழுவதும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111397/language/ta-IN/article.aspx

எமக்காகப் போராடி எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதியாகி நிற்கும் சகோதரி வெற்றிச் செல்வி பொன்ற ஏராளமான உறவுகள் எதிர்நோக்கும் தொடர்ச்சியான அடக்குமுறைகள் எப்போது தான் தொலையுமோ?

 

அதைத் தொலைப்பதற்கு வலுவாகப் போராட வேண்டிய புலத் தமிழரின் தலைமைகள் தமக்கள் முட்டி மோதி யார் பெரியவன் என்று போராடிக் கொண்டிருக்க போர் வெற்றிகள் குறித்து பெருமிதத்துடன் பெசித் திரிந்த சாதாரணமானவர்கள் நித்தியான்நாவின் ஆண்மை தொடர்பில் தம் முழுக் கவனத்தையும் செலுத்தியிருக்கும் கொடுமையை என்னென்பது?

 

இந்த நீலையும் ஒரு நாள் மாறும் என்ற வெற்று எதிர்பார்ப்பைத் தவீர வேறொன்றுமே இல்லாதவர்களாய் தாயகத் தமிழர்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே இதுக்கு இப்படி வசைபாடியும் தீர்வு தேட முடியாது.

 

இது சிங்களப் பேரினவாத அரசின் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் நடக்கும் விடயங்கள். அவற்றைக் கையாள சரியான பொறிமுறைகளை வகுக்க வேண்டியது முதலில் உள்ளூர் சமூக ஆர்வலர்களும்.. மனித உரிமை செயற்பாட்டாளர்களும்.. அரசியல்வாதிகளுமே.

 

அண்மையில்.. ஐயா விக்னேஸ்வரன் ஒரு கருத்தை முன் வைத்திருந்தார்.. இராணுவம் இங்கு புல்லுப்புடுங்கிக் கொண்டிருப்பதாக தமிழ் மக்கள் நினைக்கக் கூடாது. அவர்கள் ஒவ்வொரு தமிழனின் அசைவையும் கண்காணிக்கிறார்கள் என்று. அதேபோல்.. ஒவ்வொரு சிங்கள இராணுவத்தையும் உளவாளிகளையும் கவனிக்க தமிழர்கள்.. குறிப்பாக இளைஞர்கள்.. யுவதிகள் முன்வரனும் என்று.

 

ஆக.. தாயகத்திலும்.. இராணுவம் புல்லுப்புடுங்கிக் கொண்டு இருப்பதாக நினைக்கிறவர்கள் தான் இப்ப அதிகமாக உள்ளனர் போலும்.

 

இப்படியான முன்னாள் போராளிகளுக்கு... ஒரு சர்வதேசப் பொறிமுறையுடன் கூடிய.. கவனிப்புடன் கூடிய.. பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டால் அன்றி.. சிங்கள இராணுவ மயமாக்கம் எமது மண்ணை விட்டு அகன்றால் அன்றி.. இதற்கு தீர்வு என்பது அவ்வளவு சீக்கிரம் கிடைக்குமாப் போல இல்லை.

 

சிங்கள இராணுவ மயமாக்கலை சிங்களவனுக்கு குனிஞ்சு கிடந்து கால் கழுவி விட்டாலும்.. நிறுத்த முடியாது. அதற்கு சரியான பொறிமுறைகளுடன் கூட.. திட்டமிடல்களுடன் கூடிய.. சர்வதேச பங்களிப்புடன் கூடிய.. ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம்.

 

நித்தியானந்தாவின் ஆண்மைப் பரிசோதனை பற்றி பேசாமல் இருப்பதாலோ.. கொசிப் கதைப்பதை தவிர்த்து சோகமாக இருப்பதாகவே காட்டிக் கொள்வதால்.. அல்லது இந்தப்  போராளிகளின் துயர் மீது அக்கறை உள்ளது  போன்று எழுதித் தள்ளுவதாலோ.. கோத்தாவையோ.. சிங்களப் பேரினவாத அரசையோ எதனை நோக்கியும் நிற்பந்திக்க முடியாது. சிங்களவனின் பாதம் கழுபவர்களால் கூட.. இப்படியான போராளிகளை சமூக.. சகஜ வாழ்வுக்குள் கொண்டு வர முடியவில்லை. அவர்களால் அது முடியவும் முடியாது.

 

இதனைக் கட்டுப்படுத்தனுன்னா.. அதுக்குள்ள ஒரேவழி.. சிங்களப் படைகளின் நடவடிக்கைகளை கண்காணித்து.. ஆதாரங்களை திரட்டி.. அதனை சர்வதேச சமூகத்தின்.. மனித உரிமைகள் அமைப்பின் முன் வைத்து நியாயம் கேட்பதே அன்றி வேறில்லை. அவர்களாக.. திடகாத்திரமாக இறங்கிச் செயற்பட்டால் அன்றி.. இந்தச் சிங்களப் பேரினவாத பூதத்தின் தமிழர்கள் மீதான.. கொடுமைகளை தமிழின அழிப்பை கட்டுப்படுத்துவது அவ்வளவு சுலபமல்ல.

 

இன்றேல்.. இருக்கும் இன்னொரு மார்க்கம்.. சிங்களவனை எமது மண்ணை விட்டு மீண்டும்.. நாம் ஆயுத பலத்தால்.. துரத்த வேண்டியது. இதில் எதையாவது செய்தால் அன்றி.. சும்மா சதா தமிழனை தமிழன் பார்த்து.. திட்டிக்கிட்டு.. வசைபாடிக்கிட்டு இருந்தால்.. கோத்தா அதனை ரசிப்பாரே தவிர.. வேறு எதனையும் செய்யமாட்டார்..!!!!

 

சிங்களவன்.. பயப்பிடக் கூடியது.. இரண்டு தான் இந்த உலகில் உண்டு.

 

1. தமிழனிடம் ஆயுதம்.

 

2. தமிழனிடம் சர்வதேச ஆதரவு.

 

வேறு எதுவும் அவனை அசைக்காது. நாம் என்னதான் காட்டுக்கத்து கத்தியும் ஒரு பிரயோசனமும் இல்லை..!!! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் நெடுக்கு

அதற்கு புலம் பெயர்ந்தோரே பலத்துடனும்  பயமின்றியும் உழைக்கமுடியும் என்பதையே  அவர் சொல்கிறார்

அதைத்தான் நானும் விரும்புகின்றேன்

என்னால் முடிந்ததை  செய்கின்றேன்

ஆனால் அதைத்தடுப்பவர்களும்

அதில் மயிர் புடுங்குபவர்களையும் முதலில் திருத்தணும் அல்லது ஒதுக்கணும்

 

அதற்கு இங்கு எவரும் தயாரில்லை

இது தான் இன்றைய  தமிழரின் நிலைக்கு காரணம்

இது தொடர்ந்து அனுமதிக்கப்பட்டால்

தமிழன் கேட்க  நாதியற்று தானாகவே அழிந்து போவதை நானும் பார்ப்பேன் என்றே  தோன்றுகிறது. :(  :(  :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.