Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலசந்திரனை கொன்ற கொலையாளியை தேடுகிறார் மஹிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் மரணத்திற்க்கு யார் காரணம் என்பது குறித்து இன்னமும் தெரியவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.


13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தத் தயார் , அத்துடன் வரும் 2015 ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகளையும் அவர் நிராகரிக்க தவறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இந்தியப் பிரதமர் சந்தித்தது குறித்து தான் சீற்றமடைந்ததாக வெளியான கருத்துக்களை நிராகரித்துள்ள ஜனாதிபதி, ஜனநாயகத்தில் எவரையும் சந்திப்பதற்கான உரிமையுள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கூட்டத் தொடரின்போது இந்தியப் பிரதமரை தான் சந்திக்க விருப்பம் கொண்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பின்போது இந்தியா எடுத்த நிலைப்பாட்டுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் யுத்த குற்றச்சாட்டுக்கள் குறித்து உள்ளூரில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் எனவே விசாரணைகளை சர்வதேச மயப்படுத்த விடமாட்டோம்.

அடுத்த மனித உரிமைகள் பேரவையில் காஷ்மீர் தொடர்பாக சர்வதேச விசாரணை அவசியம் எனத் தெரிவிக்கும் அவ்வேளை தங்களது நிலைப்பாடு என்னவாகயிருக்கும்,

இந்தியாவோ அல்லது இலங்கையோ எதுவாக இருந்தாலும் தாங்கள் வெளிநாட்டு விசாரணைகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் காணமற்போன 20 ஆயிரம் பேர் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் மரணத்திற்க்கு யார் காரணம் என்பது குறித்து இன்னமும் தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாலச்சந்திரன் விவகாரம் குறித்து விசாரணை செய்து வருவதாகவும் இராணுவம் இதனை செய்திருக்கும் எனத் தாம் கருதவில்லை என்றும் கூறியுள்ள ஜனாதிபதி, இது உண்மையா என்பது தனக்குத் தெரியவேண்டும் என்பதற்காக விசாரணை நடத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து வெளிவரும் ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=151783418611753227#sthash.l84Omw9T.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

கவனிக்க வேண்டிய விடயங்கள்:

 

  • இந்திய ஊடகத்திற்கான பேட்டி
  • காஷ்மீர் பற்றிய குறிப்பு
  • இந்தியப் பிரதமரைச் சந்தித்தல்
  • பாலச்சந்திரன் விவகாரம்

இவை எல்லாவற்றிலும் பொதுவான விடயம் இந்தியத் தொடர்பு.  :huh:  மறைமுகமாக இந்தியாவுக்கு மிரட்டல் விடும் காரியமாக இருக்கலாம். :o

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இந்தியப் பிரதமர் சந்தித்தது குறித்து தான் சீற்றமடைந்ததாக வெளியான கருத்துக்களை நிராகரித்துள்ள ஜனாதிபதி, ஜனநாயகத்தில் எவரையும் சந்திப்பதற்கான உரிமையுள்ளது.

 

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.