Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆயிரக் கணக்காண இசைப் பிரியாக்களுக்காக நாம் பேசுவோம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரக் கணக்காண இசைப் பிரியாக்களுக்காக நாம் பேசுவோம்:-" சுனிலாவுக்கான நிமால்க்காவின் நினைவுப் பேருரை தமிழ் ஆக்கம் - ரஜீபன்:-

Nimalka%20New_CI.jpg

தங்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறை குறித்து பேசமுடியாத நிலையில் உள்ள, மௌனமாக்கப்பட்ட ஆயிரக் கணக்கானவர்களுக்காக இசைப்பிரியாவிற்க்கு நிகழ்ந்த கொடுரமான வன்முறை குறித்து நாங்கள் பேசுவோம்.

ஜனாதிபதியும் அரசியல் தலைவர்களும் அவர்களுடைய குடும்பத்தவர்களும் மனித உரிமைகளையும் மனித உரிமை பாதுகாவலர்களையும் தங்களுடைய இருப்பிற்கும் அதிகாரத்திற்கும் அச்சுறுத்தலாக கருதுகின்றனர்.

நாங்கள் தனிப்பட்ட மனித உரிமை செயற்பட்டாளர்கள் என்ற வகையிலும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் சமூகம் என்ற அடிப்படையிலும் சுனிலா அபயசேகரவின் இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளோம். தற்கால சவால்களை எதிர்கொள்வதற்காக நாங்கள் போரடிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் சுனிலாவின் பலம் ஆளுமை என்பன எங்களுக்கு அவசியமாகவுள்ளது.

சுனிலா அழகான வாழ்வை வாழ்ந்தார், அதேவேளை அவர் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டார், அவரது பணியும் வாழ்வும் ஓரு பயணமே, இந்த பயணத்தில் அவர் மிக கடினமான ஆபத்தான முடிவுகளை எடுத்தார். மிக தொலைவிலிருந்து அவரை உணரமுயன்றவர்களால் அவரை புரிந்துகொண்டிருக்க முடியாது. பலர்அவரை அவரது அரசியல் கருத்துக்களுக்காகவும்,  வாழ்க்கை தெரிவுகளுக்காகவும் அவரை வெறுத்தனர். அவரது துணிச்சல் அச்சமற்ற தயக்கமற்ற கருத்துக்களுக்காகவும் சிலர் அவரை வெறுத்தனர்.

1970களின் முற்போக்கு சிந்தனை அவரை உருவாக்கியது, அதே காலத்தின் ஜே.வி.பி கொள்கைகளில் அவர் ஆழமாக மூழ்கியிருந்தார், இலங்கையின் வர்க்கப் போராட்டமென்பது- பெண்ணியவாதம், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகள் போன்றவற்றை உள்வாங்குமாறு சவாலை எதிர்நோக்கியிருந்தது.

தற்காலத்தில் எம்மீதான விமர்சனங்களை முன்வைப்பவர்கள் எம்மை மேற்குலகின் நவதாராளவாத கொள்கையை பின்பற்றுவதாக குற்றம் சாட்டினாலும்,அவர்கள் உண்மையில் இலங்கையின் மனித உரிமை அமைப்புகளும்,சுனிலா போன்றவர்களும் உருவாவதற்க்கு காரணமாகயிருந்த வரலாற்று பின்ணனியை புரிந்துகொள்ளவில்லை.

1989இல் உருவான பாசிச வலதுசாரி தேசபிரேமி சிந்தனய  அமைப்பின் செயற்பாடுகளே நாம் செயற்பட்டுக்கொண்டிருந்த பாதையை மாற்றின, மனித உரிமை பணிகளை நோக்கி எங்களை நகர்த்தின, சுனிலாவுடன் தனிப்பட்ட ரீதியில் உரையாடிய வேளைகளில் இது மகளிர் உரிமைகள் தொடர்பான எங்களது செயற்பாடுகளைபாதித்து விட்டது என நான் வருத்தப்படுவதுண்டு.

அக்காலப்பகுதியில் தென்பகுதியில் பெருமளவானவர்கள் காணமற்போனதும், முற்போக்கு மற்றும் இடதுசாரி செயற்பாட்டாளர்கள் காணமற்போகக் கூடிய அபாயம் நிலவியதாலும் புதிய கூட்டுக்களை உருவாக்க வேண்டிய தேவை காணப்பட்டது.

சுனிலா காணமற்போனவர்களின் விவகாரங்களில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டார், அன்னையர் முன்;னணியுடன் முழுமையாக இணைந்து செயற்பட்டார்,

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்க்கு சுனிலா அபயசேகரவை நினைவிருக்குமென நான் எதிர்பார்க்கிறேன்-அவ்வேளைகளில் இடம்பெற்ற மனித உரிமை மாநாடுகளில் முன்னணியில் நின்றவர் இளம் மகிந்த- காணமற்போனவர்களுக்கு நீதி கிடைப்பதற்காக எந்த பிசாசிடமும் செல்வேன் என அவ்வேளை அவர் குறிப்பிட்டார். 

இளம் மகிந்த பின்னர் பாதை மாறினார்-சுனிலா தனது இறுதி மூச்சுவரை அதேபாதையில் பயணித்தார்.

இந்த கதை மிக நீளமானதாக காணப்படலாம், ஆனால் மனித உரிமை மீறல்கள் மீது கவனம் திரும்புவதற்க்கும், உள்ளுர் முயற்ச்சிகளை பலப்படுத்தவும் அவர் போரடிய விதம் நன்கு அறியப்பட்ட ஒன்றாகும்.அனுபவமுள்ள மனித உரிமை பாதுகாவலர் என்ற வகையில் அவர் மனித உரிமை பாதுகாவலர்களை பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்பட்டார். 1980 களில் அவரே நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை காணப்பட்டது.

சுனிலாவும் அவரை போன்ற பலரும் மேற்கொண்ட முயற்ச்சிகள் காரணமாக மனித உரிமை பணியாளாகளின் பணிகள் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

மனித உரிமை பாதுகாவலர்களின் முயற்சிகளே இறுதியில் அவர்களை பாதுகாப்பது  குறித்த பிரகடனமொன்று ஐ.நாவில் வெளியாக காரணமாகியது.

இதற்கான முயற்சிகள் 1984 இல் ஆரம்பமாகின-1998 இல் ஐ.நா இதற்கான பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது. பல அரசார்பற்ற அமைப்புகளும், சில அரசாங்கங்களும் இணைந்து மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக மனித உரிமை பாதுகாவலர்களை பாதுகாப்பது குறித்த பிரகடம் வலுவானதாகவும்,பயனள்ளதாகவும், யதார்த்த பூர்வமானதாகவும் காணப்பட்டது.

குறிப்பிட்ட பிரகடனம் அரசாங்கங்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் நோக்கியதாக மாத்திரம் காணப்படவில்லை- சகல தரப்பினருக்கும் பொதுவானதாக அது காணப்பட்டது- மனித உரிமை பாதுகாவலர்களை பாதுகாக்க வேண்டிய கடமை எங்கள் அனைவருக்குமுள்ளது .எங்கள் அனைவரையும் உள்ளடக்கிய உலாகளாவிய மனித உரிமை இயக்கமொன்றுள்ளது.

மனித உரிமை பாதுகாவலர்களை பாதுகாப்பதற்கான பிரகடனமொன்றை நிறைவேற்றியுள்ளதன் மூலமாக ஐ.நா இந்த விடயத்தில் பாரியளவில் முன்னோக்கி பாய்ந்துள்ளது. மனித உரிமை பாதுகாவலர்களின்  செயற்பாடுகளுக்கு அது மிகுந்த முக்கியத்துவத்தை அளிக்கின்றது என்பதும் தெளிவான விடயம்.

அதேபோன்று மனித உரிமை பணியாளர்களை பாதுகாக்கவேண்டிய பிரதான பொறுப்பு அரசாங்கங்களுக்கு உள்ளது என்பதும் தெளிவான விடயம்- இது ஐ.நா பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சகல அரசாங்கங்களும் குறிப்பாக இலங்கை அரசாங்கம் இது தொடர்பான தனது கடப்பாட்டை நிறைவேற்றச் செய்வதற்க்கும்-மனித உரிமை பாதுகாவலர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கச் செய்வதற்க்கும் நாங்கள் இணைந்து பாடுபடவேண்டியுள்ளது.

 குறிப்பிட்ட பிரகடனம் எந்த ஒரு நாட்டையும் கட்டுப்படுத்தும் ஆவணமல்ல,எனினும் நாடுகளை கட்டுப்படுத்தும் ஏனைய பிரகடனங்கள் போன்றவற்றில் அடங்கியுள்ள பல விடயங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. ஐ.சி.சிபி.ஆர். போன்றவை-

மேலும் இந்த பிரகடனத்தை ஐ.நாவின் பொதுச்சபையே ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் காரணமாக இதனை நடைமுறைப்படுத்தவேண்டிய உறுதியான கடப்பாடு எமது அரசாங்கங்களுக்குள்ளது. ஆபிரிக்க ஐரோப்பிய ஒன்றியங்கள் இந்த விடயத்தில்  புதிய கொள்கை ஆவணங்களையே உருவாக்கியுள்ளன.

குறிப்பிட்ட பிரகடனம் மனித உரிமை பாதுகாவலர்களை பாதுகாப்பதற்காக அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பலவற்றை தெளிவுபடுத்தி உள்ளது. இதன் அடிப்படையில் மனித உரிமை பாதுகாவலர்களுக்கு அவர்கள் அமைதியான வழியில் செயற்படுவதை உறுதிப்படுத்துவதற்கான கடப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளது.

2012 இல் அரச அமைச்சர் ஒருவர் நிமல்கா பெனாண்டோ மற்றும் சுனந்த தேசப்பிரியவின் கைகால்களை முறிப்பேன் என்றார். அது ஐ.நா. அமைப்பிற்கு ஆதரவாக செயற்படுவதற்காக பழிவாங்கப் படுவோர் குறித்த செயலாளர் நாயகத்தின் ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மனித உரிமைப் பணியாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை விடுக்கும் நபர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என இன்றுவரை ஐ.நா. சுட்டிக் காட்டி வருகிறது. 

இது எங்கள் இறைமை மீதான ஓர் ஆக்கிரமிப்பா? ஏன் ஐ.நா. இந்த விடயங்களை மிகத் தீவிரமாக எடுக்கிறது.? ஐ.நா. இன் பிரகடனத்தில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பே அதற்குக் காரணம்.

அரச மற்றும் அரச சாராதவர்களால் ஏற்படுத்தப்படும் வன்முறைகளில் இருந்து மனித உரிமை பாதுகாவலர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என தெரிவிக்கப்படுகிறது. ஐ.சி.சி.பி.ஆர். இன் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு அரசாங்கத்தினதும் தனிப்பட்ட கடமை என தெரிவிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையிலேயே அரசாங்கத்திற்கு அந்தப் பொறுப்பு வழங்கப் பட்டுள்ளது.

இதே வேளை இந்தப் பிரகடனத்தில் குறிக்கப்பட்டுள்ள உரிமைகள் மீறப்படும் இடத்து அது குறித்து விசாரணை செய்து தண்டனை வழங்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கே இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இன்னும் தெளிவாக சொன்னால்; மனித உரிமை பாதுகாவலர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து சட்ட, நீதி, மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய முக்கிய பொறுப்பு அரசாங்கத்திற்கே உள்ளது.

உதாரணத்திற்கு ஓகஸ்ட் 4ம் திகதி எங்களுடைய கூட்டம் மஞ்சள் உடை அணிந்த அரசு சாராத செயற்பாட்டாளர்கள் என வர்ணிக்கக் கூடிய குழு ஒன்றினால் குழப்பப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து அமைதியான முறையில் கூடிய, அமைதியான ஒன்றுகூடலுக்கான எங்கள் உரிமையை மறுத்த அந்தக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது.

இதே வேளை யூலை 31 ஆம் திகதி அரசு சார்பற்ற அமைப்புகளின் செயலகத்தின் செயலாளர் நாயகத்தால் விடுக்கப்பட்ட உத்தரவை நாங்கள் ஏற்க மறுத்ததும் மிகச் சரியான நடவடிக்கையே. இது அமைதியான முறையில் செயற்படும் எங்கள் உரிமையை மீறும் ஒரு நடவடிக்கையாகும்.

இலங்கையிலும் தென்னாசியாவிலும் சமீபத்தில் இடம்பெற்றுள்ள நிகழ்வுகளும் மனித உரிமை சமூகத்திற்கு மிக ஆபத்தான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளன. இதன் காரணமாக மனித உரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை மதிக்க வேண்டியது குறித்த உறுதியான அர்ப்பணிப்பை கோரிநிற்க வேண்டி உள்ளது.

எனினும் துரதிஸ்டவசமாக மனித உரிமை பாதுகாவலர்களை பாதுகாப்பது குறித்த ஐ.நா. பிரகடனத்தின் அடிப்படை அம்சங்கள் அனைத்தையும் இலங்கை மீறி உள்ளது. இலங்கையில் ஆட்சியில் உள்ளவர்களால் ஜனநாயகம் ஒவ்வொரு நிமிடமும் கண்மூடித் தனமாக கொலை செய்யப்படுகிறது. பாதுகாப்புச் செயலகத்தின் ஒரு கருவியாக இயங்கும் சட்ட ரீதியான அந்தஸ்து அற்ற அரசு சார்பற்ற அமைப்புகளுக்கான செயலகம் சிவில் சமூகங்களின் நியாயபூர்வமான செயற்பாடுகளை சட்ட ர்Pதியற்றது என தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மனித உரிமை பாதுகாவலர்களின் பாதுகாப்பு என்பது மிகப் பாரிய விடயமாக மாறி உள்ளது.

இதேவேளை அரச சாராத செயற்பாட்டாளர்களால் மனித உரிமை பார்காலர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய n பாறுப்பும் அரசாங்கத்திற்கு உள்ளது. உதாரணம் பொதுபலசேன.

இவ்வாறு அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்காவிட்டால் அரசாங்கம் தனது கடமையை மீறிவிட்டதாகவே கருதப்படும். மேலும் அரசாங்கத்தின் உத்தரவின் கீழ் மூன்றாம் தரப்பால் முன்னெடுக்கப்படும் வன்முறைகளும் அரசே பொறுப்புக் கூற வேண்டும்.

இந்த விடயம் இலங்கையைப் பொறுத்த வரையில் மிக முக்கியத்துவம் பெறுகிறது. வடபகுதியில் இடம்பெற்றுள்ள அனேகமான சம்பவங்களுக்கு இனம் தெரியாதவர்களே காரணம். உதாரணத்திற்கு சில வருடங்களுக்கு முன்னர் பெண்கள் மீது தாக்குதல் நடத்திய கிறீஸ் மனிதர்கள். இதே போன்று வட பகுதியின் இடம்பெயர்ந்தோரின் பல கூட்டங்கள் பேரணிகளை இனம் தெரியாத குழுக்கள் தாக்கி தடுத்துள்ளன.

இலங்கை நிலவரம்

துரதிஸ்டவசமாக எமது நாட்டில் எவரும் சர்வதேச சட்டங்கள் குறித்து அக்கறை கொள்வதில்லை. ஐக்கிய நாடுகள் சபைக்கு அடிப்படையான கொள்கைகளை காற்றில் பறக்க விட்டுள்ள நாம் அதே வேளை தொடர்ந்தும் அந்த அமைப்பில் அங்கம் வகித்து வருகின்றோம்.

1978இன் அரசியல்யாப்பு நடைமுறைக்கு வந்த பின்னர் சகல அரசாங்கங்களும் நிறைவேற்ற அதிகாரத்தை பயன்படுத்தி மனித உரிமை அமைப்புகளையும் மாற்றுக் கருத்துக்களையும் நசுக்கிவந்துள்ளன. அரசமைப்பின் 18 வது திருத்தத்திற்க்கு பின்னர் இந்த நடவடிக்கைகள் மிகத்தீவிரமாகியுள்ளன.

ஜனாதிபதியும் அரசியல் தலைவர்களும் அவர்களுடைய குடும்பத்தவர்களும் மனித உரிமைகளையும் மனித உரிமை பாதுகாவலர்களையும் தங்களுடைய இருப்பிற்கும் அதிகாரத்திற்கும் அச்சுறுத்தலாக கருதுகின்றனர். 

எம்மால் அவர்கள் மீது கொடுக்கப்பட்டுள்ள அழுத்தங்களை நான் குறைத்து மதிப்பிட மாட்டேன். ஏனெனில் இதற்காகவே நாங்கள் போராடுகிறோம்.

நாங்கள் தண்டைனையின்பிடியில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு எதிராகவும் நீதியின் ஆட்சிக்காகவும் நீதித்துறையின் சுதந்திரத்திற்காகவும் குரல் கொடுக்கிறோம். ஏனெனில் இவையே ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண்களாக உள்ளன.

பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அவர்களுடைய நீதிக்கான போராட்டத்திற்கு உதவுகிறோம். அவர்கள் எல்.எல்.ஆர்.சி. , ஐ.சி.ஆர்.சி., ஜெனிவா என நீண்ட பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

ஐ.நா. இன் உறுப்பு நாடாக உள்ள எமது நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் உள்ளுரில் எங்களுக்கு நீதி கிடைக்காவிட்டால் சர்வதேசத்தை நாடும் உரிமை எங்களுக்கு உள்ளது.

நாங்கள் நடுநிலைமையுடனும் சுதந்திரமாகவும் செயற்பட வேண்டும். நாங்கள் பேசுவது விமர்சிப்பது அரசாங்கத்தினதும் அரசியல்வாதிகளினதும் நடவடிக்கைகளுக்கு சவால் விடுவது போன்ற விடயங்களில்  சுதந்திரமாக  சுயாதீனமாக  உள்ளோம்.

இவ்;வாறான செயற்பாடுகள் எதிர்க்கட்சியாகவுள்ளவர்களுடன் தொடர்புகொள்ள ,இணைந்துசெயற்பட வேண்டிய நிலையை உருவாக்குகிறது.1989 இல் காணமற்போனோர் குறித்து செயற்பட்டவேளை சிறிலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து செயற்பட்டோம்,

இன்றுசெயற்பட மறுத்துள்ள அரசாங்கம், ஊழல் நிர்வாகம்,அரசியல்மயப்படுத்தப்பட்ட நீதித்துறை போன்ற முக்கிய விடயங்களில் இன்று எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்படுகிறோம்.

நாங்கள் துன்புறுத்தப் படுவதற்க்கும், துஸ் பிரயோகப் படுத்தப்படுவதற்க்கும், ஊடகங்களில் துரோகிகள் என முத்திரை குத்தப்படுவதற்க்கும் அழிக்கபட வேண்டியவர்கள் என தெரிவிக்கப்படுவதற்க்கும் இதுவே முக்கிய காரணம்.(ஐ.டிஎன்.)

வானெலிகளின் நேரடி ஒலிபரப்புகளின் போது எங்களை எப்படி கொல்லலாம் என்பது குறித்து நேயர்களிடம் கருத்து கேட்க்கப்படுகின்றது.  நாங்கள் இது குறித்து கேள்விஎழுப்பினால் இதுகுறித்த ஆவணங்கள் எங்களிடம் இல்லை என்கின்றனர். ஆதாரங்கள் இல்லாமல் உள்ளுர் தீர்வுகளை காண்பது என்பது கூட கடினமாகிவருகிறது.

மனித உரிமை பணியாளர்ளுக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபடுபவர்களின் அளவு அதிகரிப்பது போன்று, அவர்களை இலக்குவைக்கும் முறைகளும் நவீனமானவையாகவும் அதிக ஆபத்தானவையாகவும் மாறி வருகின்றன. ருக்கிபெர்ணாண்டோவும், அருட்தந்தை பிரவீணும்கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த விதம் இந்த அச்சுறுத்தலின் விதத்தை புலப்படுத்துகிறது. அவர்களுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளை சுமத்தாமலேயே அவர்களை மௌனமாக்கியுள்ளனர்.

அரச அனுசரைனையுடன் இயங்கும், சுதந்திரமாக செயற்படும,;அரசால் சகித்துக்கொள்ளப்படும் ஆயுத குழுக்கள், மற்றும் மததீவிரவாத சக்திகள்,இராணுவம் மற்றும்பாதுகாப்பு படையின் ஏனைய பிரிவினரின் நடவடிக்கைகள் மனித உரிமை பாதுகாவலர்களின் செயற்பாடுகளுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இலங்கையில் மாறியுள்ளன. அவை நேரடியாகவும் மறைமுகமாகவும் எமது பணிகளை பாதிக்கின்றன.

இந்த சக்திகள் அடிப்பைட உரிமைகளை மதிக்காமல் தங்களது நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அனுமதியளிக்கபட்டுள்ளதே நாம் இன்று இலங்கையில் எதிர்கொள்ளும் மிகபெரும் சவாலாகும்.

ஐக்கிய நாடுகள் விசாரணைகுழு தனது விசாரணைகளை ஆரம்பித்துள்ள இந்த தருணத்தில் பாதுகாப்பு செயலாளருடன் தொடர்புகொண்ட படியே மூன்றாவது கதை ஒன்று உருவாகியுள்ளது- நாங்கள் சிவில் அதிகாரிகளுடனே பேசவேண்டும்; ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளுடன் அல்ல-

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களின் துயரங்களிற்க்கு அவமரியாதை செய்யும் முயற்சியே இது. சர்வதேச சமூகத்தின் கவனத்தை திசைதிருப்ப மேற் கொள்ளப்படும் நடவடிக்கையே இதுவாகும.

எங்களை பொறுத்தவரை எம்மிடம் ஒரேயொரு கதையேயுள்ளது-அது பாதிக்கப்பட்டவர்களின் கதை- எந்த ஆணைக்குழு முன்னிலையிலும் அவர்களது கண்ணீரையும் துயரத்தையும்,வலியையும், மாத்திரம் நாங்கள் எடுத்துச்செல்வோம்.

நாங்கள் அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் சிறையில் மரணம் நிகழ்ந்தது என்பதை வெளிப்படுத்தும் போது- நிமலருபன் மற்றும் டில்ரோக்சானின் கரங்களை புனிதமானவையாக எங்களுக்குள் இறுகபற்றிக்கொள்வோம்.

தங்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறை குறித்து பேசமுடியாத நிலையில் உள்ள, மௌனமாக்கப்பட்ட ஆயிரக் கணக்கானவர்களுக்காக இசைப்பிரியாவிற்க்கு நிகழ்ந்த கொடுரமான வன்முறை குறித்து நாங்கள் பேசுவோம், சுனிலா அபயசேகரவின் பாதையை பின்பற்றி நாங்கள் கெப்பிட்டிக்கொலாவைக்கு சென்று அந்த மக்களின் தேவைகள் குறித்து மாத்திரம் பேசுவோம். அரசாங்கம்அவர்களை  தனது அரசியல் தேவைக்கான பகடைக்காய பயன்படுத்துகின்றது.

யுத்தக் குற்றமிழைத்தவர்களை  வன்முறைகளுக்கு காரணமானவர்களை அதற்க்கு காரணமான தனிநபர்களை கண்டுபிடித்து பொறுப்புகூறச்செய்வது எனக்கும் சுனிலாவிற்க்கும் முக்கியமான விடயம்.

இவ்வாறான வன்முறைகளை நியாயப்படுத்தும் கட்டமைப்புகளை கண்டுபிடித்து அகற்றுவதும் முக்கியமானது.

இலங்கையிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் உள்ள அரசாங்கங்கள் நீதிக்கான எமது போராட்டங்களை குறிப்பாக மகளிர் உரிமை- தனிப்பட்ட விடயங்களாக, அரசியலற்றவையாக, அர்த்தமற்றதாக்க அனுமதிக்க முடியாது.

சுனிலா உலகம் முழுவதுமுள்ள பெண்களை இன்னொரு வரலாற்றை எழுத முன்வருமாறு அழைத்தார், ஆதிக்கத்தை எதிர்க்கும் வரலாறு, புறக்கணிக்கப்பட்டவர்களின் வரலாறு,

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleID/111494/Default.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.