Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் முடிக்குரிய இளவரசனாக தன்னை அறிவிக்குமாறு மனு

Featured Replies

இலங்கையின் முடிக்குரிய இளவரசனாக தன்னை அறிவிக்குமாறு மனுத் தாக்கல்.

இலங்ககையின் முடிக்குரிய இளவரசன் என தன்னை அறிவிக்க கோரி மொனராகலை பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை அதிபர் ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு ஒன்றை நேற்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

தர்மபால திசாநாயக்க என்ற இந்த பாடசாலை அதிபர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், அரசியல் யாப்பு விவகார அமைச்சின் செயலாளர் , புத்தசான அமைச்சின் செயலாளர் மற்றும் அஸ்கிரி-மல்வத்து ,மாநாயக்க தேரர்களை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார்.

பழம் பெரும் வரலாற்று ரீதியான சன்னஸ் பத்திரத்திற்கு அமைய தான் இலங்கையின் முடிக்குரிய வம்சத்தை சேர்ந்தவர் எனவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

தமிழிழத்தின் முடிக்குரிய இளவரசன் என்னையும் அறிவிக்க வேண்டும்.

நல்லுரைச் சேர்ந்த கந்தசாமியாகிய நானே எனது பழம் பெரும் பாட்டி சொன்ன கதைகளின் படி தமிழிழத்தின் முடிக்குரிய வம்சத்தை சேர்ந்தவன்.

ஒரு முறை 24ம் சங்கிலிய மன்னன் வேட்டையாட திருநெல்வேலி காட்டிற்கு வந்திருந்தானாம். அப்போது அவனது குதிரை வேலியில் கால் தடக்கி விழவே மன்னன் மண்டையைப் போட்டானாம். அதைக் கண்ட எனது தாத்தா மன்னின் கிரிடத்துடன் எடுத்துக் கொண்டு அரண்மனைக்குச் சென்று அரசனாகிவிட்டாராம். மாதம் மும்மாரி பொழிய நாட்டை ஆண்டு வந்தாராம். பின்னர் வெள்ளையர்கள் வரவே நாட்டை விட்டு விட்டு ஓடிவிட்டாராம். எனவே அவரது பேரனாகிய நானே இந்த நாட்டை ஆளும் தகுதியுடையவன்.

- 26ம் சங்கிலி

þõ¨º «Ãºý 26 ¬õ ºí¸¢Ä¢..??? :lol::lol::lol::)

பின்னர் வெள்ளையர்கள் வரவே நாட்டை விட்டு விட்டு ஓடிவிட்டாராம். எனவே அவரது பேரனாகிய நானே இந்த நாட்டை ஆளும் தகுதியுடையவன்

அப்போ உங்க தாத்தா வரதராஜபெருமாளா?

:lol::lol:

மாதம் மும்மாரி பொழிய நாட்டை ஆண்டு வந்தாராம். .

- 26ம் சங்கிலி

அப்ப வருசத்துக்கு 36 மாரி மட்டும்தானா....??? அப்பிடி எண்டால் உங்களை எல்லாம் ஒத்துக்கொள்ள முடியாது...! :wink: :P :P

சாணக்கியன் எண்டு பேரை வச்சுக்கொண்டு பெரிசா கேக்காமல் சின்னனா என்ன ஆசை உது ஆ...??? :lol::lol::lol:

ச.செ.த (சரியாகச் சொன்னீர்கள் தல)

நான் மட்டும் இளவரசனாகட்டும்...!!!

எலிசபத் மகாராஜவாட்டம் பங்களா, கார், பணியாட்கள் என்று காலம் பூராவும் கால் மேல் கால் போட்டபடியே சாப்பிடலாம்...!!!

எந்தக்கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் அரண்மமையில நாம தான் குத்துக்கல்லாட்டம் ராஜா.

என்ன ஆட்டம் போட்டாலும் அந்தப்புரத்துக்குள்ளேயே வச்சுக்கனும்...

வெளியால பத்திரிகைகாரங்க கிட்ட மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கனும்...!!!

இதை விட வேற என்ன வேணும் கணக்குப்பிள்ளை...???

ஆ சொல்ல மறந்துட்டேன்...

உங்களையும் எனது ஆஸ்த்தான கணக்குப்பிள்ளையாக சேர்த்துக் கொள்கிறேன் இப்ப சந்தோசம் தானே...!!!

-26ம் சங்கிலி

பின்னர் வெள்ளையர்கள் வரவே நாட்டை விட்டு விட்டு ஓடிவிட்டாராம். எனவே அவரது பேரனாகிய நானே இந்த நாட்டை ஆளும் தகுதியுடையவன்

அப்போ உங்க தாத்தா வரதராஜபெருமாளா?

:lol::lol:

நிச்சயமாக இருக்க முடியாது...!!!

தாத்தா அந்நியர் வரும் போதே ஓடிட்டார்...

ஆனால் வ.பெருமாள் அந்நியரோடு சேர்ந்து அவங்களொடேயே ஓடிட்டார்.

- 26ம் சங்கிலி

அதை இதைச் சொல்லி என்ரை வாயைக் கிளறாதையுங்கோ சொல்லிப்போட்டன். எனக்கு வர்ற கோவத்துக்கு பக்கத்திலை பெண் புரசுகள் இருக்கினமெண்டும் பாக்கமாட்டன் கண்டியளே.

இதையும் பாருங்கோ:

[/url=http://www.jaffnaroyalfamily.org/]http://www.jaffnaroyalfamily.org/

Edited by Norwegian

இந்தக் கூத்தைக் கொஞ்சம் பாருங்கள்.

தன்னுடைய வம்சம் தான் ராஜ வம்சம் என இவர் உரிமை கோருகிறார்.

நல்லூரின் பட்டத்து இளவரசன் எனத் தன் படம், வம்சாவளியினரின் படம் எனப் படம் காட்டுகிறார்.

இவரிடம் கொஞ்சம் பண உதவி கேட்டால் தருவாரா என்று கேட்டுப் பார்ப்போம். ராஜா தனது நாட்டு மக்களுக்கு உதவ வேண்டியது கடமையல்லவா?

நீங்களும் இத்தளத்தைச் சென்று பார்த்து உதவி பெற்றுக்கொள்ளுங்கள்.

http://www.jaffnaroyalfamily.org

வாவ்... அது எப்படி நான் நினைத்து, தட்டச்சு செய்து கொண்டிருக்கும் பொழுதே, அதே கருத்தை நோர்வீஜியனும் சொன்னீர்கள். எனினும் 2 நிமிடத்தால் முந்திய உங்களிற்கு எனது வாழ்த்துக்கள். ஒரே விசயத்தை இருவர் ஒரே நேரத்தில் நினைத்திருக்கிறோம் என்பதை எண்ணும்பொழுது சட்டென்று மனதில் ஒருவித பய உணர்வு தோன்றுகிறது.

யாழ் களத்திற்கு நான் புதிது என்ற படியாலும், தமிழில் தட்டச்சு செய்வதில் நான் வேகம் குறைவு என்ற படியாலும் நீங்கள் இந்தத் தடவை வென்று விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

எனது கள நண்பர்களின் சில கேள்விகளுக்கு பதில்சொல்ல முடியாமல் எனது தொழில் சம்பந்தமாக நடைமுறையிலிருக்கும் இரகசிய காப்பு சத்தியப்பிரமாணம் தடையாயிருக்கிறது. மனம் வருந்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

செய்திகளைத்தருவதில் நோர்வேஜீயனுக்கு இணை யார்?

இந்தக் கூத்தைக் கொஞ்சம் பாருங்கள்.

தன்னுடைய வம்சம் தான் ராஜ வம்சம் என இவர் உரிமை கோருகிறார்.

நல்லூரின் பட்டத்து இளவரசன் எனத் தன் படம், வம்சாவளியினரின் படம் எனப் படம் காட்டுகிறார்.

இவரிடம் கொஞ்சம் பண உதவி கேட்டால் தருவாரா என்று கேட்டுப் பார்ப்போம். ராஜா தனது நாட்டு மக்களுக்கு உதவ வேண்டியது கடமையல்லவா?

நீங்களும் இத்தளத்தைச் சென்று பார்த்து உதவி பெற்றுக்கொள்ளுங்கள்.

http://www.jaffnaroyalfamily.org

No... No... No... :lol:

எனக்குப் போட்டியாக இன்னுமொருவரா... அதை நான் அனுமதிக்கவே மாட்டேன்... :shock:

நாங்கள் இரத்தம் சிந்திப் போராடும் மண்ணுக்கு ஒரு ஆங்கிலேயன் அரசனாவதா...??? :x

நீ எங்கள் குலப் பெண்களுக்கு Facial செய்து விட்டாயா...?

இல்லை போராளிகளுக்குத் தானும் Bunker வெட்டிக் கொடுத்தாயா...? :evil:

யாரங்கே.....? Hello யாரங்கே....?

எடுங்கள் என் Visa ஐ Netherlands இற்கு...

அவனை ஒரு கைபார்க்காமல் விட மாட்டேன். :twisted:

- 26ம் சங்கிலி.

Those of Royal decent were taken to Colombo and then to Goa and were given the choice of either life through conversion to Catholicism or been put to death. Some who had accepted the Church for guidance were either allowed to return to Jaffna or were interned in monasteries.

உயிருக்கஞ்சி மானத்தையும் மதத்தையும் விற்றவரா எங்கள் அரசன்?...அந்நிய தேசத்தில் விளைந்த அவரின் வழித்தோன்றல்களா எங்கள் Royal Family...?

friendship between Royal families of Southeast Asia.... they also meet at "diplomatic level" in order to improve political relations and issues within their nations. These ideals uphold that royal families can and should influence political, social and economic changes in order to unify their peoples and bring about peaceful solutions to all problems within their countries.

50 வருடத்திற்கும் மேற்பட்ட எமது இனப்பிரச்சனை வரலாற்றில் நாங்கள் உங்களை பற்றி கேள்விப்படவில்லையே.... நீங்கள் ஆற்றிய இரகசிய பங்கு பணிகள் தான் என்ன...?

Prince Remigius Kanagarajah was baptized a Catholic, but he takes part in many Hindu religious ceremonies. In this, he follows the traditions and customs of his ancestors. Even though he prefers to do things in his own way, he is aware that his position demands certain observances which are not in keeping with accepted practice in republican life.

நீங்கள் கிறிஸ்தவரா...? இந்துவா...? இல்லை இரண்டும் கெட்டானா?

He enjoys travelling, reading and taking part in sporting and social activities, such as swimming, tennis, snooker, badminton, horse-riding; and indulging in social and charitable work, besides listening to classical music, and being an amateur photographer. He also collects antiques and other rare objects d'art.

அடடா அச்சு அசலா Modern மன்னர் போலவே நடிக்கிறீங்க...?

"பிச்சை எடுத்தாராம் இராமரு அதை பிடுங்கித் தின்னாராம் அனுமாரு"

ச.செ.த (சரியாகச் சொன்னீர்கள் தல)

நான் மட்டும் இளவரசனாகட்டும்...!!!

எலிசபத் மகாராஜவாட்டம் பங்களா, கார், பணியாட்கள் என்று காலம் பூராவும் கால் மேல் கால் போட்டபடியே சாப்பிடலாம்...!!!

எந்தக்கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் அரண்மமையில நாம தான் குத்துக்கல்லாட்டம் ராஜா.

என்ன ஆட்டம் போட்டாலும் அந்தப்புரத்துக்குள்ளேயே வச்சுக்கனும்...

வெளியால பத்திரிகைகாரங்க கிட்ட மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கனும்...!!!

இதை விட வேற என்ன வேணும் கணக்குப்பிள்ளை...???

ஆ சொல்ல மறந்துட்டேன்...

உங்களையும் எனது ஆஸ்த்தான கணக்குப்பிள்ளையாக சேர்த்துக் கொள்கிறேன் இப்ப சந்தோசம் தானே...!!!

-26ம் சங்கிலி

எனக்கு கணக்கே வராது எண்டாலும் கணக்குப்பிள்ளை எண்டுட்டீங்கள்... சரி நிதித்துறை எண்டுவேற சொல்லுறீயள்... பறவாய் இல்லை அசிஸ்ரன் ஒராளைவச்சு சமாளிக்க பாக்கிறன்... :wink: :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.