Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெண்ணுறுப்பில் கட்டுப்போடுகிறார்களா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் பெற்றோர் தம் பெண் பிள்ளைகளின் பெண்ணுறுப்பில் கட்டுப்போடுகிறார்களா?

இப்படியும் நடக்கிறதா? அல்லது அதி மிஞ்சிய போதைப்பொருளின் தாக்கத்தால் உளறியவையா?

இவை லண்டனில் நடைபெற்ற புலி எதிர்ப்பு கூட்டத்தில் பேசப்பட்டவை:

"புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்ப் பெண்களின் நிலை இன்னும் மோசமாக இருக்கிறது. முடியுமானவரை பெரிய படிப்பு படிக்க வேண்டும் என்று பெண்களை உற்சாகப்படுத்தும் பெற்றோர் அதேவேகத்தில் அவர்களை அடக்கியும் வைப்பதால் முரண்பாடுகள் பிறக்கின்றன. எவ்வளவுதூரம் பெரிய படிப்புக்குப் பெண் தன்னை ஆட்படுத்துகிறாளோ அதேவிதத்தில் அவளின் அறிவும் வெளியாருடன் வரும் தொடர்புகளும் விரிகின்றன, அதனால் தனது வாழ்க்கையை எப்படி அமைக்கலாம் என்பதைப் பெண்கள் தீர்மானிக்கிறார்கள். இதை பெற்றோரால் தாங்கமுடியாதிருக்கிறது. பெற்றோருக்கு மனவருத்தம் கொடுக்க விரும்பாத காரணத்தால், தங்களுக்குப் பிடித்தவர்களைத் திருமணம் செய்து கொள்ளாமல் பல பெண்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழ்கிறார்கள், அல்லது தனக்கு விரும்பாத மனிதனைத் திருமணம் செய்துவிட்டுத் துன்பமான வாழ்க்கை வாழ்கிறார்கள். இது விவாகரத்திலும் போய் முடிந்துவிடுகிறது. மேற்கு நாட்டுக் கலாச்சாரம் தங்கள் பெண்குழந்தைகளின் 'கற்புக்கு' பங்கம் உண்டாக்கிவிடும் என்ற பயத்தில், சில ஆபிரிக்க நாடுகளில் நடப்பதுபோல், பெண் பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே அவர்களின் பெண்ணுறுப்பில் கட்டுப்போடவும் (Female genital mutilation) சில தமிழ்ப்பெற்றோர் முயற்சிப்பதாகச் சில தகவல்கள் தெரிவிக்கின்றன"

மேலதிக விபரங்களுக்கு ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் என்பரைக்கேளுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது நீஙகள் கூறியது போல் மப்பில் பேசப்பட்ட விடயமாக இருக்கலாம். அல்லது ஒட்டு மொத்த தமிழினத்தின் மீதுள்ள வெறுப்பில் சொன்ன விடயமாக இருக்கும்.

இவர்களது பேச்சைப்பார்த்தால் மேற்கத்தைய பெண்கள் ஏதோ மகிழ்ச்சியாக வாழ்ககையை கழிப்பது போல உள்ளது. இளவயதினர் (ரீன் ஏஜ்) கர்ப்பம் தரிப்பது , போதை வஸ்து பாவனை, சிகரட் மதுவுக்கு அடிமையாவது எனபனவற்றால் அல்லாடுவது இவர்களுக்கு தெரியாதா? ஏதோ தமிழ் பெண்களை பாதுக்காக்கும் பொறுப்பு இவர்களுக்கு கொடுத்தது மாதிரி பேச்சு... இவர்களின் தனிப்பட்ட மேதாவிலாசத்தை பாருங்கள் .. தெரியும் இவர்களது வண்டவாளங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்ம்ம்ம்ம்...

உவ ராஜேஸ்வரி .........(யாரும் கோடிட்ட இடத்தை நிரப்பலாம்), உதென்ன இன்னும் கதைப்பா!!!! ஆனால் தனக்கு மட்டும் கட்டுப் போட அவ தயாரில்லை!!!!! யாரும் ......!!!! அவ புறச்சிப் பொண்ணல்லோ!!!!

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த தமிழர்கள் என்போரில் நகர வாழ்க்கை வாழ்ந்தோர் கிராமிய வாழ்க்கை வாழ்ந்தோர் இரண்டும் கலந்த வாழ்க்கை வாழ்ந்தோர் என்று பல வகையினர் புலம்பெயர்ந்துள்ளனர்.

ஆனால் அவர்களின் பிள்ளைகள் என்போர் மேற்குலக நாகரிக வாழ்க்கைக்குள் வாழ வேண்டியவர்களாக உள்ளனர்.

மேற்குலக நாகரிக வாழ்க்கை என்பது ஈழத்தமிழர் பின்பற்றி வந்த கீழைத்தேச நாகரிக முறைமையிலின்றும் வேறுபட்டிருந்த காலம் ஒன்றிருந்தது. அதனால்தான் மேலைத் தேசம் கீழைத் தேசம் என்ற நாகரிகப் பாகுபாடுகள் மனிதருக்குள் முளைத்தன.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் படி நிலையில் இன்று அந்த நிலை இல்லை. நாகரிகக் கலப்பு என்பது மிக சர்வசாதாரணமாகி விட்டது.

ஆனால் சிந்தனைப் போக்குகள் மட்டும் மாறுபட்டுக் கொள்கின்றன. பெற்றோரால் தங்களை தங்கள் சிந்தனைப் போக்குகளை அணுக முடியாது என்று நினைக்கும் பிள்ளைகளும் பிள்ளைகளால் தங்கள் சிந்தனைகளை அளவிட முடியாது என்று நினைக்கும் பெற்றோரும் எங்கும் உள்ளனர்.

பிள்ளைகளும் சுதந்திரம் என்ற பதத்தை தவறான அர்த்தப்படுத்திக் கொண்டு தங்களைத் தாங்களே சீரழித்து விடுகின்றனர்.

குறிப்பாக மேற்கு நாடுகளில் உள்ள சட்டங்கள் வழங்கும் உரிமைகள் பிள்ளைகள் பெற்றோரின் சிந்தனைக்கு எதிர்பார்த்திராமல் சுயமாக சிந்தித்து செயற்பட வேண்டும் என்ற வகையினதாகவே இருக்கின்றன. ஆனால் பிள்ளைகள் அதை உணர்பவர்களாக இல்லாம சுயசிந்தனைக்கே வித்திடாதவர்களாக சமூகக் குற்றச் செயல்களைக் கூட இனங்காண முடியாதவர்களாக குற்றவாளிகளாக மாறிவருவது ஈழத்துப் பெற்றோருக்கு மட்டுமல்ல அனைத்துப் பெற்றோரையும் ஏக்கத்துள் தள்ளிவிட்டுள்ளது.

பிள்ளைகளுக்கு சுதந்திரத்துக்கு சட்டம் இயற்றும் அரசுகள் பிள்ளைகள் பள்ளிக்குப் போகாத இடத்து பெற்றோருக்குத் தண்டனை வழங்குகின்றன?

இது நிச்சயம் பெற்றோரின் சுதந்திரத்தைப் பறிப்பது போன்றதுதானே உள்ளது. பிள்ளைகள் தவறான வழிமுறையில் செல்லத் தக்க சூழலையும் உருவாக்கி சுதந்திரத்தையும் உறுதி செய்து கொண்டு பெற்றோரை நோக்கி சட்டத்தை நீட்டுதல் எந்த வகையில் நியாயமோ அந்தச் சட்டச் சமூக வல்லுனர்களுக்கே வெளிச்சம்.

மேற்குலகின் இன்றைய முக்கிய பிரச்சனை சிறுவர்களால் பெருகும் வன்முறை. சிறுவர்கள் செய்யும் குற்றங்களுக்கு தண்டனை குறைவென்பதால் அவர்கள் துணிந்து குற்றங்களைச் செய்கின்றனர். அல்லது செய்யத் தூண்டப்படுகின்றனர்.

இப்படியான நிலையில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நிலையில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளவே முனைகின்றனர். ஏதோ வளரும் வரை வளர்த்துவிடுவோம் பெற்ற கடமைக்கு பிறகு என்னவாவது செய்யட்டும் என்று அவர்களும் தங்களைப் பொறுப்புக்களில் இருந்து விடுவித்துக் கொள்கின்றனர்.

இவை மேற்குலக வழமைகள்.

பாவம் இந்த ஈழத்துப் புலம்பெயர் பெற்றோர்கள். அவர்களின் சிந்தனைப் போக்கு தாங்கள் எப்படி வளர்க்கப்பட்டோம் என்பதை ஒட்டி இருக்க பிள்ளைகளோ மேற்குலக போக்கோடு போக எங்கள் பெற்றோர் முடிவெடுக்க முடியாதவர்களாய் பல வழிகளிலும் குழம்பிப் போய் நிம்மதி தொலைத்துக் கொண்டிருக்கும் இச்சூழலில் இப்படி நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆனால் ஒன்று நிச்சயம் பெற்றோர் தடுக்கிறார்களோ இல்லையோ நிச்சயம் இன்றைய சூழலில் பிள்ளைகள் தங்களைத் தாங்களே சுதந்திரத்தின் பெயரால் சிதைத்துக் கொள்வது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

பல்கலைக்கழகங்களில் கூட 10 பேருக்கு 8 பேர் மன அழுத்தங்களுக்கு உள்ளாகி வாழ்துவரும் நிலை தோன்றி உள்ளது. இதனால் தான் என்னவோ சக மாணவ மாணவியரையே சுட்டு தன்னையும் சுட்டுக் கொன்று பழிதீர்க்கின்றனர் பிள்ளைகள்.

இதில் பெற்றோரைக் குறை சொல்ல முதல் சட்டங்கள் வகுக்கும் மூளைகளை சொல்ல வேண்டும் தீர்வுகள் தேடச் சொல்லி. பாவம் பெற்றோர்கள் பெற்ற கடனுக்காக அனுபவைக்கும் வேதனைகள் ஆயிரம் ஆயிரம். பிள்ளைகள் தான் உணர்வார்களா? சுதந்திரம் என்பது சிந்திப்பதற்கே அன்றி சிந்தனையற்று செயற்படுவதற்கு அல்ல. பிள்ளைகளே அடிப்படை மனித நேயத்தைக் கூட தொலைப்பவர்களாக நீங்கள் வளர்வதைக் காட்டினும் பிறக்காதிருப்பது மேல்.

இவ்வாறான நிகழ்வுகள் சில

ஆபிரிக்க குடம்ப நாடுகளில் நடைபெறுகிறது .

அது பல்வேறு வடிவங்களில் நடைமுறைப் படுத்த படுகின்றன .

சில நாடுகளில் விழா கோலங்கள் போலவும் ( பு. நிராட்டுவிழா)

போன்ற தோற்ற பாடுகளுடன் நடை பெறுகின்றன .

அத்தோடு தங்களது பிள்ளைகளை காமுகரிடம் இருந்து

காப்பாற்றும் நோக்கோடு அந்த பெற்ரோரால் இவ்வாறு

செய்யப் படுகிறது .

ஆனால் இங்கள் எம் தமிழ் பெண்கள்

ரெம்ப விபர மாணவர்கள் அவர்களிற்கு

இது செய்யப் படுகிறது என்பது பொய்யாக

இருக்கலாம்....???

இது திட்டமிடப்பட்ட சில தேசவிரோத

வேடர்களின் விளையாட்டு...

அவ்வாறு நடந்தாலும் கூட

இவ்வாறன நிகழ்வுகளில்

வெளிப் படையாக சொல்லி கொள்ள மாட்டார்கள் .

இது தான் உண்மையும் கூட...

எனவே இந்த கருத்தியலில் எனக்கு முரன்பாடே...

நன்றி

- வன்னி மைந்தன் -

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரித்தானியாவில் முஸ்லிம் குறிப்பாக பாக்கிஸ்தானியர்கள் மத்தியில் பெரும்பாலும் பேர்மிங்கம் லெஸ்ரர் பிரட்போட் பகுதிகளில் இது போன்ற விடயங்கள் நடை பெறுவதாகவும். அவை சட்டத்துக்கு முரணானவை என அண்மையில் பிரித்தானிய தொலைக்காட்சி விவரணம் ஒன்றில் பார்க்கக்ககூடியதாக இருந்தது. ஆனால் தமிழர்களிடம் இவ்விதம் முயல்வதாக ராஜேஸ்வரிதான் கூறியுள்ளார். ஒரு வேளை அவர்தன் பெண்ணுக்கு செய்வித்தாரோ தெரியாது. பொதுவாக புலி எதிர்ப்பாளர்களுக்கு சாதாரண தமிழ்மக்களில் அதிலும் அடிநிலையில் உள்ளவர்கள் என்போர் மீது வெறுப்பு உள்ளது. இவர்;கள்தான் புலிகளின் ஆதரவுத்தளம் என்பது அவர்களது கருத்து. எனவே சமயம் கிடைக்கும் போது அவரகளை படிப்பறிவில்லாதவர்களாக, நாகரிகமற்றவர்களாக காட்டி மகிழ்ச்சியடைகிறார்கள். ராதிகா குமாரசாமி. நிர்மலா நித்தியானந்தன், ராஜேஸ்வரி போன்றோர் இதனையே செய்துவருகிறார்கள். சமுதாயத்தில் பின்தங்கிய நிலமையிலிருந்தவர்களின் பிள்ளைகள் புலம்பெயர்ந்த நாடுகளில் கல்வியில் முன்னணிக்கு வந்து கொண்டிருப்பது இவர்களுக்கு பொறாமையாக உள்ளது. முதல் இரண்டு பேரை விட்டாலும் ராஜேஸ்வரி தான்கூட சமுதாயத்தின் அடிநிலையிலிருந்;துதான் இந்த நிலைக்கு வந்தவர் என்பதை அவர் மறந்து விடுகிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூட்டு போட்ட உள்ளாடைகள் விற்பனையில் இருக்கின்றது யாருக்கும் தெரியாது போல இருகின்றது..... எனது சீன இன நண்பர் ஒருவர் தனது நிறுவனத்தில் இதை தயாரித்து விற்கின்றார்.... விலை, இனையத்தள முகவரி தேவை என்றால்... கேளுங்கள் தருகின்றேன்.... சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளில் சந்தையில் இருக்கின்றன... அவை பாலியல் வல்லுறவுகளைத் தடுப்பதற்காக சந்தைப்படுத்தப்படுகின்றன...

அது சரி, சொல்லுபவர்கள் சொன்னால் கேட்பவர்களுக்கு என்ன அறிவு..கேட்டு போட்டு... டிஸ்கஸன் வேற...வெட்கமா இல்லை... என்னப்பா செக்ஸ் அறிவு இல்லாதவர்கள் போல பேசுகின்றீர்கள்...

சும்மா உந்த ராஜெசுவரி ஒரு புரை கழண்ட கேசு, சரத் பொன்சேகாவைக் கொல்ல புலிகள் ஒரு கர்ப்பிணியை அனுப்பிப் போட்டினம் எண்டு கத்தி கடைசியில இலங்கை அரசே அது ஒரு பொய்யான தகவல் எண்டு சொல்லிப்போட்டுது.உதுகளும் உதுகளிண்ட கதையளும்.....

உவவுக்கும் உனஸ்கோ கெதியில ஒரு பட்டத்தைக்கொடுத்து தமிழரின் பிரதினிதியா சமாதனம் அண்ணர் சொல்லுற மாதிரி அங்கீகரிச்சாலும் அங்கீகரிக்கலாம், அதுக்குத் தான் இந்தப் பேட்டியோ தெரியாது. :lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியா சங்கதி.. எனக்கு யாரையும் தெரியாது... நீங்கள் சொல்லுறத வைச்சு பார்த்தால், அவா ஒரு லூசு தான்.. இவருக்கு என்னுடைய பஞ்சாயத்து தீர்ப்பு இது தான்...

சொன்னவருக்கு இந்த கட்டைப்போட்டு....

ஒரு ஜெயில் ல இருக்கின்ற 4 ஜமைக்கன் காப்பிலியள விட்டு... எல்லாரும் ஆர்வமா படிக்கின்றீங்க... மிச்சத்தை உங்கள் மன நிலைக்கு ஏற்ற மாதிரி நினைச்சுகொள்ளுங்க..

இது என்ன கட்டு போடுற / பூட்டு போடுற கதை? ஆக என்ன நடந்தாலும் பரவாயில்லை Intercourse மட்டும் நடக்க கூடாது என்று தானே அர்த்தப்படுது? பிள்ளைகளுக்கு கட்டுப்பாடுகள் இல்லாத நிலையிலும் தவறு செய்யாத மனபக்குவத்தை தெளிவை உருவாக்குதலே அவசியம். வெறும் கட்டுப்பாடுகளால் அடக்கி ஆளப்படும் பிள்ளைகள் பல்கலைகழகங்களில் படிக்க சென்று halls of residence இல் தங்கும் போது எல்லை மீறிவிடலாமல்லவா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

“Female genital cutting (FGC) refers to amputation of any part of the female genitalia for cultural rather than medical reasons.”

Female genital Mutilation அல்லது Female genital cutting. இராஜேஸ்வரி என்பவர் தமிழ்ப்படுத்தியமாதிரி கட்டுப்போடுவது அல்லது பூட்டுப்போடுவது அல்ல. இது பெண்ணுறுப்பின் உணர்ச்சி மையமான இடத்தை குருரமான எந்தவிதமான வைத்திய தகைமையும் அற்றவர்களால் செய்யப்படும் ஒப்பரேசன்.

வெறுமனே கட்டுவது அவிழ்ப்பது என்ற மாதியில்லாமல், இதன் மூலம் ஏற்படும் பாதிப்புக்கள் நிரந்தரமானவை. ஆபிரிக்காவிலும் இசுலாமிய நாடுகளிலும் சாதாரணமாக நடைபெறும் இந்த வழக்கத்தின்; மூலம் பெண்கள் இளவயதில் உறவு வைத்துக்கொள்வதில் விருப்பம் காட்டமாட்டார்கள் எனற நம்பிக்கை நிலவுகிறது.

இத்தகைய நடைமுறையை ராஜேஸ்வரி குழுவினர் வெளிப்படையாக கண்டிக்க மாட்டார்கள். அதுவும் சுல்பிகாவையும் பவுசரையும் இலங்கையிலிருந்து வரவழைத்து நடாத்திய கூட்டத்தில் இந்த மனிதவுரிமை மீறலைக் கண்டிக்க மாட்டார்கள். மாறாக இது போன்ற நடைமுறையை புலம் பெயரந்த தமிழர்கள் பின்பற்றப் பார்க்கிறார்கள் என தமிழர்களை காட்டுமிராண்டிகளாக காட்டுவதே நோக்கமாக இருந்திருக்கும்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒரு கலாச்சார சிக்கலில் உள்ளது உண்மையே. இருந்தாலும் கொழும்பிலும் வேறு சில சிங்களப்பகுதிகளிலும் உள்ள அளவுக்கு கலாச்சார சீரழிவுகள் அல்லது பாலியல் சம்பந்தமான பிரச்சனைகள் இங்கு புலம்பெயர் தமிழரிடையே ஏற்படவில்லை என்பதே உண்மை. தமிழர்களை முழவதுமாக மேற்கததய நாகரிகத்தில் தள்ளி அவர்களிடமிருக்கும் தேச விடதலை உணர்வை முற்றிலுமாக மழுங்கடிப்பதே இந்த குழுவினர் நோக்கம். இவ்விடயத்தில் சில சர்வதேச தொண்டர் நிறுவனங்களும் (INGO) இவர்களுக்கு உதவியாக இருக்கின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதன் அண்ணா... சரியாக சொன்னீர்கள்.... நானும் ஒரு 6 வருடம் அங்க இருந்து தான் படித்தனான்....... அது எல்லை மீறுறது இல்லை....... எல்லை பாயுறது..... வந்து பார்த்தால் தெரியும்.... தமிழினி என்று பெயர்... தமிழ் தெரியாது என்று பொய்... ஏன் என்று தெரியும் தானே உங்களுக்கு எல்லாம்.... :P :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களிடம் இந்தப் பழக்கங்கள் ஆதியில் கூட இருந்ததாகக் கேள்விப்படவில்லை. சும்மா தேவையில்லாத அலம்பல்கள் மூலம் இல்லாததை இருப்பதாக நிரூபிக்கமுடியாது.

உறவுகளே

இந்தவிசயம் கிருபன் சொன்னமாதிரி எம் சமூகத்தில் இருந்த வழக்கமன்று.எமது சமூகத்திர்கு ஒரு பிபட்ட கருத்துண்டு அதாவது கற்பும் கலாச்சாரமும் பென்கலுக்கு மட்டுமெண்டு

இங்கு சகோதரிகளும் வருவதுண்டு இப்ப்டடி பச்சை பச்சையாக எழுதுவதுஇ அவர்களுக்கு ஒரு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும் இவ்வாறான் கருத்துக்கலின் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்காதது கவலையளிக்கிரது

சும்மா அவர்களே

தமிழினி தமிழினி என்றுகதைதீங்கள் ஆனால் ஆண்கள் வேலிபாய்வதை பற்றி யாராவ்து கதைத்ததுண்டா ??

ஆகா எல்ல பெண்களின் மீதும் வீனான பழிபோடுவதைவிடுத்து முற்போக்கானவராக இருக்க யோசியுங்கள்

அன்புடன்

ஈழவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.