Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். இந்துவின் 125ஆவது ஆண்டு விழா ஆரம்ப நிகழ்வும் விஜயதசமி நிகழ்வும்

Featured Replies

hindu%203312.jpg

 

யாழ் இந்துக் கல்லூரியில் விஜயதசமி நிகழ்வும், 125 ஆவது ஆண்டு விழாவின் ஆரம்ப நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றன. ஆரம்ப நிகழ்வாக சிவஞான வைரவப் பெருமான் ஆலயத்தில் பொங்கல் நிகழ்வுடன் 125 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம் ஆரம்பமாகியது.
 
அதனை தொடர்ந்து வைரவப் பெருமானுக்கு விசேட அபிஷேகம் நடைபெற்றது. இந்தநிகழ்வில் அதிபர், பிரதி அதிபர், உப அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து கல்லூரியின் கே.கே.எஸ் வீதி நுழைவாயில்களினூடாக பிரார்த்தனை மண்டபத்துக்கு விருந்தினர்கள் அனைவரும் அழைத்துவரப்பட்டு மங்கள விளக்கேற்றல் நிகழ்வு இடம்பெற்றது.
 
பின்னர் அங்கு விஜயதசமி நிகழ்வின் கலை நிகழ்வுகள் ஆரம்பமாகின. இந்த நிகழ்வில் அதிபர் உரையும் மாணவர்களுடைய கலைநிகழ்வுகளும் நடைபெற்றன. இந்நிகழ்வில் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்கள் அணிவிக்கப்பட்டன. அதன் பின்னர் இந்து மாமன்றத்தினால் 'நவமலர்' எனும் நூல் வெளியீடு செய்யப்பட்டது. தொடர்ந்து சிவஞான வைரவர் ஆலயத்தில் ஏடு தொடக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டு தங்கள் பிள்ளைகளுக்கு ஏட்டினை தொடக்கி வைத்தார்கள். இதன் பின்னர் வைரவப் பெருமானுக்கு விசேட பூசை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் நிகழ்வுகள் அனைத்தும் இனிதே நிறைவு பெற்றது. -
 
hindu%203313.jpg
 
hindu%203314.jpg
 
hindu%203316.jpg
 
hindu%203315.jpg
 
hindu%203318.jpg
 
hindu%203317.jpg
 
hindu%203319.jpg
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

சைவத்தின் பெயரால் இணைந்தவர்கள்,

சாதித்த சரித்திரத்தின் சின்னம் நீ...!

 

மூட நம்பிக்கைகள்.....!

முப்பத்து முக்கோடி தேவர்கள்...!

சாதீயம்....!

 

சைவத்தைப் புரிந்துகொள்ளாதவர்கள்,

சாத்திரங்களை அறிந்துகொள்ளாதவர்கள்,

விட்டுச் சென்ற எச்சங்கள்!

 

உனக்காகவே....,

ஆறுமுக நாவலனைக்கூட,

நான் போற்றிய காலங்களும் உண்டு..!

ஊரெல்லாம் திரிந்து,

'ஒரு பிடி' அரிசிக்காய் அலைந்து,

இந்து ஆசிரியர்களுக்க்காக ' ஊதியம்',

தேடியவன் அவன்...!

 

நீ இல்லாவிட்டால்...!

இன்று ஏதாவது ஒரு கடையொன்றின்,

கல்லாப்பெட்டியில் உட்கார்ந்து,

காகம் கலைத்துக்கொண்டிருப்பேன்!

 

உலகத்தின் எல்லைக் கோடுகளில்,

எனது பாதங்களைப் பதித்தவள் நீ!

 

பலரது வாழ்க்கையின்,

படிக்கல்லாக அமைந்தவள் நீ!

 

தாயின் மடியில் தவழ்ந்த நாட்கள் போல,

உனது மடியில் தவழ்ந்த நாட்கள்...,

விலை மதிப்பில்லாதவை..!

 

நூற்றி ஐம்பது ஆண்டுகளல்ல..,

நூற்றி ஐம்பது யுகங்களுக்கு...,

நீ வாழ வேண்டும்...!

 

வேதங்களின் மூலம் போல,

வித்தகியாய்.....,

உனது மூலங்களை,

உலகம் தேடும் நாள் வரை....,

நீ வாழ வேண்டும்..!

 

வாழிய பல்லாண்டு!

Edited by புங்கையூரன்

மாணவர்கள் பிரார்த்தனை மண்டபத்தில் இருக்கும்  படத்தை பார்க்க இவர்களுக்குள் ஒருவனாக அன்று நகத்தை கடித்துக்கொண்டு இருந்ததுதான் இன்றும் பசுமரத்து ஆணியாக நினைவில் நிற்கின்றது .

 

அதிபர் ,வித்தியாதரன் செவ்வேள் மூவரும் எனக்கு தெரிந்தவர்கள் நிற்கின்றார்கள் .

 

நாளை ரொறொண்டோவில் யாழ் இந்துவின் கலையரசி ,வெள்ளைமாளிகை சென்ற  பழைய மாணவன் சிவலிங்கம் சிவானந்தன் பிரதம விருந்தினர் .

 10450832_10204160255661107_4342200997831

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாலய வித்தகத்தின் வித்தகியாய் - தமிழர்

விடுதலையின் முதலாய் முகிழ்ந்தவளே நீ வாழி.

 

அன்னையின் மடி தவிழ்ந்த சேயிவன்.. சிறுமையும்.. அவள் பெருமை சேர்க்கட்டும்..!! :):icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.