Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்திரிகாவுக்கு ஆதரவளிக்க கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் பச்சைக்கொடி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிகாவுக்கு ஆதரவளிக்க கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் பச்சைக்கொடி! 

[sunday 2014-10-05 08:00]
chandrika-kumarathunge-150.jpg

ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க போட்டியிட்டால், அவருக்கு ஆதரவளிக்கத் தயார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பச்சைக்கொடி காண்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் இரண்டு தரப்பிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. சிறுபான்மை மக்களின் ஆதரவினை பெற்றுக் கொள்ளக் கூடிய பொது வேட்பாளராக சந்திரிகா அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

   

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முயற்சிகளில் ரணில் விக்ரமசிங்கவைப் போன்றே சந்திரிகாவும் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவரை ஆதரவளிக்குமா என்பது சந்தேகமே எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, மூன்றாம் தவணைக்காக போட்டியிடுவதில் சந்திரிகாவும் சட்டச் சிக்கல்களை எதிர்நோக்க நேரிடலாம் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=118071&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி சந்திரிகா தேர்தலில் போட்டியிட்டு, கூட்டமைப்பும், முஸ்லீம் காங்கிரசும் ஆதரவு செய்தால் வெற்றி என்பது ஐம்பதுக்கு ஐம்பதே.

  • கருத்துக்கள உறவுகள்

நவாலிப் படுகொலை.. மடு தேவாலயப்படுகொலை.. நாகர்கோவில் பள்ளிக்கூட சிறுமிகள் படுகொலை.. புதுக்குடியிருப்பு படுகொலை.. செம்மணி படுகொலைகள்.. புதைகுழிகள்.. தொடர்பில் சந்திரிக்காவை முதலில் போர்க்குற்றவாளியாக அறிவித்துவிட்டு கூட்டமைப்பு அவருக்கு ஆதரவு நல்கட்டும்..!!

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பு அக்கறை காட்டத் தேவையில்லை.அது எமக்கான தேர்தல் அல்ல.சென்ற முறை இன்னொரு போர்க்குற்றவாளியான சரத் பொன்சேகாவை ஆதரித்துக் கண்டது அவமானம்தான்.ஒரு போர்க்குற்றவாளியை எதிர்க்க இன்னுமொரு போர்க் குற்றவாளியை ஆதரிப்பது எந்த வகையில் நியாயம்?அப்படி என்றால் கடந்த காலங்களில் கூட்டமைப்பைச் சேர்ந்த தலைவர்கள்(அப்பொழுது கூட்டமைப்பு உருவாக்கப்படவில்லை)சந்திரிகாவை ஆதரித்து இருக்க வேண்டும்.விரும்பினால் தமிழர் தரப்பில் தனியான வேட்பாளரை நிறுத்தி மதமிழ் மக்களின் வாக்குகள் சிங்களவர்களுக்கப் போகாமல் செய்யலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.